Daily Archives: ஜூலை31, 2009

விளம்பரம் வியாபாரிகளுக்கு மட்டுமே , வீரனுக்கு அல்ல?

விடியலின் முடிவா.  வீரனாக்கவதற்கு பயிற்சியா

விடியலின் முடிவா. வீரனாக்கவதற்கு பயிற்சியா

புறமுதுகிட்டு ஓடச் செய்தாய்
பூரித்துப் போனேன்.
பொழுது புலர்ந்து விடும் – உன்
புதுமை நிர்வாகம் உலகறியச் செய்யும்.

காத்திருந்த கணங்கள்
அனைத்தும்
தொடர்கதையாகி
விடுகதையையும் சேர்த்து
விட்டுச்சென்றுள்ளது?

திசையெல்லாம்
கூடிய ஆதரவில்
திசை திரும்பாமலே
பயணித்தாய்.

சேர, சோழ, பாண்டிய
கதைகள்
பழங்கதையாகி
தேசமெங்கும்
தேசியத் தலைவரானாய்.

நல்லவரா? கெட்டவரா?
நாள்தோறும்
முண்டியத்த
நாக்குகளுக்கு மட்டுமே
தெரிந்ததால்
நகைப்பாய், நகைச்சுவையாய்
நாள்தோறும்
தலைப்புச் செய்தியானாய்?

உன் ஓழுக்கம் குறித்து – இங்கு
அக்கறையில்லை.
ஊடக விற்பனையில் – நீ
உரத்துச் சொன்ன
அத்தனையும்
உலகறியாது?

கஞ்சி மட்டுமே மிஞ்சியது

கஞ்சி மட்டுமே மிஞ்சியது

உதிரம் கொடுத்து
உள்ளே புதைந்தவர்கள்
உறவை விடுத்து
உணர்வாய் கலந்தவர்கள்
அந்தரத்தில் மிதக்கும் – அந்த
ஆத்மாக்கள் சொல்லும்
ஒரு நாள்.

நீயே இல்லாவிட்டாலும்?

புழுத்துப் போன வசைபாடுகள் – உன்
திசைகளை மாற்றிக்கொண்டேயிருந்தது.

வந்தவர், போனவர்
பார்த்தவர், பார்க்காதவர்
அத்தனையும்
கட்டுரையாய் அச்சில் வர
அச்சமே வந்தது.

தன்னை நிறுத்த – நீ
விதைத்த விதையை
வினையாக்கி விட்டார்கள்.

அறுப்பவர் யாருமின்றி – இன்று
அனைவரையும் அனாதையாக்கி
முள்கம்பிகளை மட்டுமே
முகவரியாயுள்ளது?

உண்மைக்கும் – உன்
ஒழுக்கத்திற்கும்
ஒரு நாள் செய்தி வரும்.?

உலகம் பார்க்க விரும்பும்
மாவீரன் தினமாக.