Monthly Archives: ஓகஸ்ட் 2009

ராஜ ரகஸ்யங்கள்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் பதிவு தொடர்ச்சி இரண்டு

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டார்கள் என்று நமக்கு கற்பித்த அத்தனை பாடபுத்தகங்களும் ஏன் அவர்கள் நம்மை அவர்களுடைய ஆளுமைக்குள் கொண்டு வந்தார்கள் என்பதைப் பற்றி மறந்து கூட மூச்சு விடவில்லை. காரணம் அத்தனை அசிங்கங்களைப் பற்றி சொல்லி வளர்ந்து கொண்டுருக்கும் இளைய சமூகத்தை அவர்களின் நல்ல சிந்தனைகளில் விஷம் கலந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணமாக இருந்து இருக்கலாம்.

அத்தனையும் வௌிப்படையாக சொல்லிவிட்டால் இங்கு பலருடைய சிலைகள் பெறக்கூடிய மரியாதை கூட இன்று கிடைக்காமல் போய் விடும் என்ற அச்சமாகவும் இருந்து இருக்கலாம்.

ஆங்கிலேயர்கள் ஆள்வதற்காகவா உள்ளே வந்தார்கள்?

கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத இந்தியாவைப்பற்றி தவறான புரிதல்கள் இன்று வரையிலும் உண்டு. அதுவும் உள்ளே வரும் வரைக்கும் தான். உள்ளே வந்து விட்டால் தரிக்க வந்த ஆலயம் போல் நினைத்து ஆத்ம திருப்தியோடு மறுபடியும் உள்ளே வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு அரசங்கம், ஒரு அதிகார வர்க்கம் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்துமே இயல்பாகவே இந்த புனித பூமி பெற்றுள்ளது.

எத்தனையோ வேறுபாடுகள். எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள். மகிழ்ச்சியான அம்பானி ஒரு பக்கம். அன்றாடம் பானி பூரி விற்று ஜீவனம் நடத்துபவர் ஒரு பக்கம்.

கப்பல் கேப்டன் திரு. வில்லியம்ஸ் ஹாக்கின்ஸ் ( ஆகஸ்டு 24 1600) உள்ளே வந்த போது அவர் நினைத்து வந்த அத்தனை எண்ணங்களும் தவிடு பொடியானது. காய்த்து தொங்கும் லவங்கமும் ஏலமும், கூழாங்கற்கள் போல் எங்கு பார்த்தாலும் சிதறிக்கிடக்கும் வைரம், மாணிக்கம், வைடூரியமும், மாணிக்கத்தையும் பயன்படுத்த தெரியாமல் பரிதாபமாய் வாழ்ந்து கொண்டுருக்கும் மனிதர்கள் நிறைந்த பூமி தான் இந்தியா.

வாய்ப்பு கிடைத்தால் அள்ளிக் கொண்டு போகவும், வசதியிருந்தால் வாணிப தொடர்பும் உருவாக்கிக் கொள்ள உள்ளே வந்தவரை அடித்த வெயில் அவரது தோலை கிள்ளி கிள்ளி கிச்சு கிச்சு மூட்டியது.

அத்தனை சோகத்தையும் உள்ளே அடக்கி வைத்துக்கொண்டு ஆக்ரா போய்ச் சேர்ந்து ஆண்டு கொண்டுருந்த மன்னர் ஜஹாங்கீர் அரண்மனையை அடைந்த போது வாங்கி வந்த மேல் மூச்சு கீழ் மூச்சை விட்டு மூர்ச்சையாகி விழுந்து விடும் சூழ்நிலை.

காரணம் பத்து தோட்டா தரணிகள் சேர்ந்து இருபது ஷங்கர் பட செட்டிங் போல் பார்த்த ஆடம்பர மாளிகையை பார்த்து மயங்கி விழுந்தவரை காப்பாற்றிய அந்த அந்தப்புர பேரழகிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். காரணம் மன்னர் வரவேற்று அழகியுடன் அந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தவுடன் தான் மறுநாள் சுயநினைவுக்கு வந்தார் போலும்.

தங்களுடைய கிரேட் பிரிட்டன் மாட்சிமை தாங்கிய மன்னர் செல்வத்தை விட ஜஹாங்கிரின் செல்வ வளமையும் ஆளுமையும் பார்த்த கேப்டன் தங்களுடைய நாடு கீழான பிரிட்டனாக இருந்ததை பார்த்த போது என்ன நினைத்து இருக்க முடியும். நல்ல வேளை புத்தி பேதலித்து பரலோகம் போகாமல் செய்த அந்த அந்தப்புர அழகி செய்த சமூக சேவையால் தான் அன்று அவரால் தொடங்கப்பட்ட நிகழ்வு தான் இந்திய சரித்திரத்தின் வேறு ஒரு இனிய தொடக்கம்.

ஒரு வேளை திரு. வில்லியம்ஸ் உயிர் பிழைக்காமல் போயிருந்தால், கப்பல் பயணமார்க்கமாக அத்தனை தூரம் பயணித்து வந்தததை விட, இந்தியாவிற்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று அடைய நவீன வசதிகள் இல்லாத அந்த நாட்களில் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் நினைத்துருந்தாலும் அனுப்ப நினைக்கும் வேறொரு கேப்டன் வந்து சேர வேண்டிய காலத்தை நினைத்துப்பாருங்கள்

250 வருடங்களாக ஆட்சி புரிந்ததாக சொல்லப்படும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வேறு எந்த புதிய நபர்களும் உதவி செய்ய வேண்டியதாக இருக்கவில்லை என்பது தான் மிகப்பெரிய ஆச்சரியம். காரணம் நம்மவர்களின் ஓற்றுமை அந்த அளவிற்கு அவர்களுக்கு அம்சமாய் ஒத்துழைத்து அவர்களை உயர்வடைய வைத்தது.

சேரவே மாட்டோம். சேர்ந்தாலும் ஒற்றமையாய் இருக்க மாட்டோம். சமாதானமாய் இருப்பதாக நடித்தாலும் சந்தர்ப்பங்கள் வரும் போது காட்டிக்கொடுக்க தயங்க மாட்டோம். மொழி, இனம், வாழ்விடங்கள் வேறு வேறாக இருந்தாலும் ஏற்றத்திற்கான எங்கள் பங்களிப்பு இப்படித்தான் இருக்கும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வாழ்ந்த மன்னர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன், நிலச்சுவான் என்று எச்சமும் சொச்சமும் எல்லோருமே வாழ்ந்த புண்ணிய வாழ்க்கையால் இந்திய மொத்தமும் அவர்கள் ஆளுமைக்குள் மிக எளிதாய் காலமே வழங்கி விட்டது.

இந்த இடத்தில் இன்று வரையில் முடியாமல் நீண்டு கொண்டுருக்கும் இலங்கை பிரச்சனைகள் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

உள்ளே வந்த ஆங்கிலேயர்களுக்கு ஒரே நோக்கம் தான். வாணிபம். அதுவும் விறால் இறால் மீன் அல்ல. சுறா கொழுத்த திமிங்கில லாபம். அது மட்டுமே. இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் “அம்பானி” லாபம்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ள அடித்துக்கொள்ள பஞ்சாயத்து பன்னி பன்னி கடைசியில் பன்றிக்கூட்டத்தை மேய்க்கும் மேய்ப்பராக மாறத்தொடங்கி விட்டனர். வைத்திருந்த நவீன வசதிகள் ஒரு பக்கம் உதவியது என்றால் மறுபக்கம் அவர்கள் விரும்பி கொடுக்கும் பட்டங்களை வாங்கிக்கொண்டு தலைகுணிந்து சேவகம் செய்ய காத்துருந்தவர்களின் கூட்டம் மறுபுறம்.

வேறென்ன வேண்டும். ராஜபாட்டை தொடங்கியது. ராஜ்யங்கள் மொத்தமும் அவர்களின் ஆளுமைக்குள் வந்து விழத்தொடங்கியது

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள்

கட்டுப்பாட்டை மீறியதாக கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்று ஒவ்வொரு கட்சியும் கட்டம் கட்டப்படும் போது அது வெறும் செய்தியாகத்தான் நாம் படித்து விட்டு மறந்து விடுகிறோம்?

ஆனால் எந்தக் கட்டுப்பாடு? மீறியதால் கட்சிக்கும் நாட்டுக்கும் என்ன பாதிப்பு வந்தது என்பதை தொடர்ந்து படிக்க நமக்கு அவஸ்யம் இருக்காது என்பதாலே பல விஷயங்கள் நம்முடைய பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதாய் இருந்து விடுகின்றது.

வட்டம், மாவட்டம் என்றால் அது ஒரு சிறிய பிரச்சனை. பெரும்பாலும் பணத்தின் அடிப்படையிலும், கிளர்ந்து எழுந்த ஈகோ அடிப்படையிலும் இருக்கும். அதுவே ஒரு தேசிய கட்சியின் முக்கியத் தலைவருக்கு அது நேரும் பட்சத்தில் ஊடகத்தால் ஊதி பெரிதாக்குவதும் பாதிக்கப்பட்டவரின் ஊதுகுழலாகவும் மாறி விடும் போது, அவரின் தனிப்பட்ட வளர்ச்சியை இந்திய சரித்திரத்தில் கறையாக, களங்கமாக சில சமயம் கண்ணீர் வடிக்கக்கூடிய காட்சியாகவும் மாற்றிவிடுகின்றது.

மீண்டும் பாகிஸ்தான் தந்தை திரு.ஜின்னா அவர்கள் உயிர்த்து எழுந்துள்ளார். காரணம் திரு. ஜஸ்வந்த் சிங்.

திரு. அத்வானி அவர்கள் அன்று பாகிஸ்தானில் ஆற்றிய பெருமை உரைக்கும் இவருக்கும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? இத்தனை உழைப்பும் அர்பணிப்பும் ஒரு கால் கடுதாசியில் கரைக்கப்பட்டு விடுமா? புத்தகம் தான் காரணம் என்றால் அத்தனை பெரிய புத்தகத்தை படிக்கவே பத்து மணி நேரமாவது வேண்டுமே? சரியா? தவறா என்று உணர்வாளர்கள் உணர்ந்து கூட்டும் கூட்டங்கள் குறைந்தது இரண்டு மணி நேர விவாதமாகவும் இருக்க வேண்டுமே?

அப்படியென்னறால் வேறு என்னவாக இருக்க முடியும்?

இந்த நிகழ்ச்சிதான் எனக்கு இந்தியா சுதந்திரம் வாங்கிய போது முன்னும் பின்னும் நடந்த நிகழ்ச்சிகளையும், பங்கெடுத்த தலைவர்களையும், பரிதவித்த மக்களையும், இழந்த சொத்துக்கள், வலி நிறைந்த வாழ்க்கை அத்தனையும் யோசிக்க வைத்து பரணில் உள்ள புத்தகத்தை துலாவ வைத்தது.

என்னுடைய நோக்கம் எவரையும் பற்றிய தனிப்பட்ட விமர்சனம் அல்ல. என்னுடைய ஆதங்கம் எல்லாம் இந்தியாவின் குறிப்பிட்ட கால கட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை குறிப்பாக சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளை சுய சுத்தியோடு ஆத்ம திருப்தியோடு மறைக்கப்படாத அந்த எல்லா நிகழ்ச்சிகளையும் யாருமே தந்து விடவில்லை என்ற ஆதங்கத்தால் பதிவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நம்முடைய நாட்டின் பாதி விஷயங்களை உண்மையாகவே உணர வேண்டுமென்றால் வௌிநாட்டில் இருந்து வந்து எழுதியவர்களால் தான் நாம் உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ள முடியும்.

அவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் பெரும்பாலும் உண்மை இருக்கும். அந்தந்த கால கட்டத்தில் நம்மவர்களால் எழுதப்பட்ட நிகழ்வுகள் நூறு சதவிகிதம் உண்மையிருந்தால் இருந்தால் இன்று திரு. ஜஸ்வந்த சிங்கின் சர்ச்சை புத்தகம் சக்கை போடு போடாது?

அவர் புத்தகத்தின் அடிநாதமே பாகிஸ்தான் பிரிந்த காரணம் திரு.ஜின்னா அவர்களை விட திரு. நேரு அவர்களுக்கும் திரு. பட்டேல் அவர்களுக்கும் உண்டு என்பதே.

அவர்கள் காலத்தில் பிறக்காத நாம், இவர்களைப்பற்றி அவவ்போது வௌிவந்து கொண்டுருக்கும் இது போன்ற சர்ச்சை புத்தகத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? இவர்கள் சொல்வதை மட்டும் தான் நம்ப வேண்டுமா?

அவரவரின் பார்வையில் சுய சார்பு சிந்தனையோடு வௌிவந்த அத்தனை சரித்திர எச்சத்தை வைத்து தான் படித்தும் பாதுகாத்தும் கொண்டுருக்கிறோம். எழும் சந்தேகத்தை, எந்தக் கேள்வியையும் நாம் ஆசிரியர்களிடம் கேட்டு விட முடியாது. கல்வி திட்டத்தைப் போலவே நம்முடைய தனிப்பட்ட கல்வி வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் திரு. தார்க்ஷியா என்ற புனைபெயரில் எழுதிய எழுத்தாளர் என்பவர் எழுதப்பட்ட புத்தகத்தை அந்த புனித மனிதர் எழுதிய ” இந்திய விடுதலையின் இறுதி நாட்கள் ” தமிழ் கூறும் நல் உலகத்தில் எத்தனை பேர்கள் படித்து இருப்போம்?

திரைப்படத்தின் ஒரே ரீல் மட்டும் நீங்கள் பார்த்து விட்டு அந்தப்படத்தின் மொத்த கதையையும், சாகசத்தையும், வலிமையையும் உங்களால் உணர்ந்து விட முடியுமா?

மொத்த சுதந்திரம் பெற்ற கதையும் தெரிந்தால் தான், பெறுவதற்கு முன், பெற்ற போது நடந்த திரை மறைவு நிகழ்ச்சிகள், பிரிவினை காரணங்கள், பிரிந்த போது நடந்த வர்ணிக்கவே முடியாத சோகங்கள் என அத்தனையும் தெரிந்தால் மட்டுமே இன்று உயிர்த்த திரு. ஜின்னா அவர்களின் தரம் பற்றியும் மொத்த தலைவர்களின் தராதரம் பற்றியும் புரிந்து கொள்ள முடியும்.

எந்த சுய சார்பும் இல்லாமல், ஐயோ இது அழுக்கு. இதையெல்லாம் வௌியே சொல்லி ஏன் மானத்தை வாங்க வேண்டும். மறைக்கப்பட்டது மறக்கப்பட்டதாக இருந்து விடட்டுமே என்று பயந்து கொண்டு அவர் மட்டும் எழுதாமல் இருந்தால் எது நிஜமான சுதந்திரம்? நாம் பாடத்தில் படித்த விசயங்கள் போலத்தான் இந்த புனித சுதந்திரம் கிடைத்ததா? ஏன் பாகிஸ்தான் என்ற நாடு தோன்றியது? பாகிஸ்தான் தோன்றியதற்கு திரு. ஜின்னா மட்டும் தான் காரணமா? நாம் நேசமாய் இருக்கும் தேசத்தலைவர்கள் அத்தனை பேரும் அதற்குரியரியவர்கள் தானா? ஒரு வேளை பாகிஸ்தான் என்ற நாடு தோன்றாமல் இருந்தால் நம்முடைய பாதி வழித்தோன்றல்களின் பரிதாப மரணங்கள் ஏன் இன்னமும் எல்லைகளில் நடந்து கொண்டுருக்காதே? என்பதன் போன்ற பல உண்மையான அர்த்தமே தெரியாமல் போயிருக்கும்?

திரு. தார்க்ஷியா அவர்கள் எந்த கால கட்டத்தில் எந்த பத்ரிக்கையில் எழுதினார் என்பதோ அவரின் சுய விபரங்கள் குறித்தோ அதிகம் இல்லை. ஆனால் வௌிவந்த முதல் பதிப்பு ஆண்டு 1994, அலைகள் வௌியீட்டாளர்களால் 353 பக்கங்கள் கொண்ட (கோடம்பாக்கம், சென்னை) தமிழ்நாடு அரசின் பரிசையும் பெற்ற நூல் இது.

கீதை,பைபிள்,குரான் போன்ற அனைவருமே மதிக்கக்கூடிய பொக்கிஷங்களை எனக்குத் தெரிந்தவரையில் யாருமே விமர்சனப் பார்வையில் பார்த்தது இல்லை. படிக்கும் யாருமே அதனுடன் ஒன்றிப்போய் அவரவர் பார்வையில் அதன் மொத்த பரவசத்தையும் பகிர முடியா விட்டாலும் அவர் அவருக்குண்டான தகுதிகளுடன் அதை படைத்து மகிழ்வார்கள்.

அதற்கு சமமான இந்த நூலை சில பதிவுகளாக தருவதே என் நோக்கம். காரணம் திரை உலகம், அரசியல், ஆன்மிகம், நிழல் உலகத்தைப் போலவே நமக்குத் தெரியாத வலி நிறைந்த கறைகள் அதிகமான சுதந்திர பெற்ற நிகழ்வுகளை அந்த உலகத்தை பகிர்ந்து கொள்ள தயாராய் இருப்பவர்கள் பின் தொடருங்கள்………………..

ஒரு வேளை இன்று வாழ்ந்து கொண்டுருக்கும் உங்கள் ஆதர்ஷண தலைவர் குறித்தோ, அவர்கள் மீது நீங்கள் வைத்துருக்கும் தனிப்பட்ட அபிப்ராயங்களோ, இன்று வார்டு கவுன்சிலர் கூட வசதியாய் வாழ்ந்து கொண்டுருப்பதை பார்த்துக்கொண்டுருக்கும் நீங்கள் இந்த பதிவை முழுமையாகத் தொடர்ந்தால் இத்தனை அவஸ்த்தைகளுடன் பெற்ற சுதந்திரம் தந்த ஜனநாயக சுவாச காற்று குறித்து உங்கள் சிந்தனையில் வேறு சில வித்யாச எண்ணங்கள் உருவாக்கக் கூடும்?

கனவுகள் + உழைப்பு = தீக்குளிப்பு

நட்டநசியில் அலறிய தொலைபேசியில் மொத்த குடும்பத்தின் அலறல் அத்தனையும் கேட்டது.

அண்ணா கிளம்பி வாங்கண்ணா. மொத்தமாய் எரிஞ்சு போறதுக்குள்ள வந்து காப்பாத்துங்கண்ணா?

நண்பரின் மனைவி அழைத்த போது புரிந்து விட்டது.  வாகனத்தை வௌியேற்றி மொத்த விசையில் பறந்து வீட்டை அடைந்த போது தான் புரிந்தது நீட்டிக்கொண்டுருந்த பக்க ஸ்டேண்டை எடுக்காத விபரிதம். எங்கேயாவது தட்டி இருந்தால் தலை கூட மிஞ்சி இருக்காது.

மொத்த குடும்பமும் இறப்பு வீட்டு சோகத்தில் இருந்தது.  அறைக்குள் தொடர்ச்சியாக கதவு தட்டப்பட்டுக்கொண்டுருக்கும் சத்தம் கேட்டுக்கொண்டுருந்தது.  ஜன்னலை மட்டும் திறந்து பார்த்த போது நண்பர் உடம்பு முழுவதும் நனைந்து வெறியாய் கத்திக்கொண்டுருந்தார். அழுது கொண்டுருக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த முடியாமல் பூட்டிய கதவை இறுக பற்றியிருந்தார் நண்பரின் மனைவி.

கதவை திறக்க முற்பட்ட போது கையெடுத்து கும்பிட்டார்.  நான் பார்த்துக்கிறேன் என்று கண்களால் சைகை காட்டி விட்டு உள்ளே சென்றேன்.

நண்பர் என்னைக் கண்டதும் சிறு குழந்தை போல் கேவ ஆரம்பித்தார்.

எந்த உணர்ச்சியையும் நான் காட்டிக்கொள்ள வில்லை.  போட்டுருந்த ஆடைகளை களைந்து மாற்றச் சொல்லிவிட்டு அமைதிபடுத்தி வௌியே அழைத்து வந்த போது சற்று ஆசுவாசமானவர் மறுபடியும் அழத் தொடங்கிய போது என்னுடைய ஆத்திரத்தில் விட்ட ஒரு அறையில் மீண்டும் அமைதியாய் விட்டார்.

தர்மராஜ்.

பெயருக்கேற்றமாதிரி தர்மத்தின் ராஜ தலைவன் தான்.  எந்த சந்தேகமும் இல்லை.  பணிபுரிந்த நிறுவனத்தில் இக்கட்டான நேரத்தில் வேலை கேட்டு உள்ளே வந்தவர்.  எப்போது வேலை பார்த்துக்கொண்டுருந்த உற்பத்தி பிரிவுக்கான ஒப்பந்தக்காரர் அவசர நேரத்திலும் ஓய்வு எடுக்க வேண்டும் வீம்பாய் கிளம்பி விட்டதால் மொத்த உற்பத்தியும் அந்த பகல் பொழுதில் ஸ்தம்பித்து நின்றது.

இரவுக்குள் பெட்டிகளை ஏற்ற வில்லை நிர்வாகியின் நிதானமற்ற இரவுகள் என்னுடைய பதவியை பறித்துவிடும்.  ஆபத்தை உணர்ந்தவன் அவசரமாய் மாற்று ஏற்பாடுகளை பார்த்துக்கொண்டுருந்த போது ஒப்பந்த பணி ஏதும் உள்ளதா என்று உள்ளே வந்த போது எரிச்சலாய் இருந்தது.

மனதில் ஒரு நப்பாசை.

புயலாய் வீசிக்கொண்டுருந்த அந்த பகல் பொழுதை தன்னுடைய திறமையால் புனிதமாய் மாற்றிய அந்த தர்மராஜ் அன்று முதல் என்னுடைய ஆஸ்தான நபராகிப் போனதில் ஆச்சரியம் இல்லை.

ஆய்த்த ஆடை உற்பத்தி பிரிவு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான உள் ஒப்பந்தகாரர்களால் பணிகள் நடக்கும். பாதிக்கும் மேற்பட்ட நிறுவனத்தில் உள்ள பழக்கமான விஷயம் தான் என்றாலும் மொத்த நிர்வாகத்தையும் தன்னுடைய கைகளில் வைத்துக்கொள்ளும் பரம அவஸ்த்தைகளை முக்கிய நிறுவனங்கள் மட்டுமே வைத்துருக்கும்.

வைத்துருக்கும் அத்தனை நிறுவனங்களும் அரசாங்கத்தின் அத்தனை விதிகளை கடை பிடித்தாகி வேண்டிய கட்டாயம்.

ஓப்பந்தக்காரர் என்றால் தனித் தனி உலகம் போல் ஒவ்வொன்றும் சம்மந்தம் இல்லாமல் வருடம் முழுக்க ஒழுங்காய் உருண்டு கொண்டுருக்கும். அடம் பிடித்துக்கொண்டுருந்த தையல் பிரிவு தர்மராஜ் உள்ளே வந்ததும் தரமாய் மாறத் தொடங்கியது.

காலை எட்டு மணி என்றால் அரை மணி முன்னதாக உள்ளே இருப்பார். முடியும் போது அரை மணி நேரம் கழித்து தான் வௌியே செல்வார்.  உள்ளே போக வேண்டிய அவஸ்யமே இருக்காது.  அத்தனை கணக்கும் புள்ளிவிபர பட்டியலாய் தாளில் வந்து நம் மேஜையில் சிரிக்கும்.

வந்தவர் உழைப்போடு உள்ளே உள்ள நிர்வாக சீர்கேடுகளையும் கண்டு கொண்டு வழங்கிய ஆலோசனைகள் நியாயமாகவே தெரியத் தெரிய அவருக்கு வேண்டிய அத்தனை நபர்களும் உள்ளே அதிகமாக தெரிய ஆரம்பித்தனர்.  எல்லா நிர்வாகமும் அவருடைய ஆட்களால் நிரம்பி வழியே அத்தனை ஒப்பந்தமும் ஒழுங்கான பாதையில் சரியான நேரத்தில் பயணப்பட்டுக்கொண்டுருந்தது.

நல்ல நிறுவன நிர்வாகிகள் இது போன்ற சமயங்களில் சற்று அதிக பயமாய் இருப்பார்கள்.  காரணம் ஒரு நபர் ஆளுகை தவறுதலாக திருப்பப்படும் அபாயம் உண்டு என்பதால்.  ஆனால் நிர்வாகி எச்சரித்த போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  கட்டி வைத்துள்ள கயிற்றுக்குள் இருக்கும் மாடு எப்படி கவுத்த விட முடியும் என்ற நம்பிக்கை.

வீணாக்கவும் இல்லை. தைக்கும் பிரிவில் இருந்த தர்மராஜ், கொண்டு வந்த ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு பிரிவில் இருக்கும் மற்றவர்களும் சேர்ந்து உண்டானது ஐவர் கூட்டணி.

மொத்த ஐந்து பேருமே ஒரே நேரத்தில் உள்ளே வருவார்கள்.  இரண்டு சைக்கிளில் உள்ளே வருபவர்கள் ஒரே வருடத்தில் ஐந்து வாகனத்தில் வந்து இறங்கும் அளவிற்கு வசதியை பெற்றது ஆச்சரியம் இல்லை வாழ இடம் வாங்கியது கட்டிய வீடுகள் என்று ஒற்றுமையாய் உணர்வாய் வாழ்ந்த அவர்கள் பார்த்து எனக்கே சற்று பொறாமையாகத்தான் இருந்தது.

மது,மாது, ? தொழிலாளர் வர்க்கத்தில் அவர்கள் அத்தனையிலும் அந்நியமாய் தெரிந்த போது அவர்களின் கண்ணியம் என் கண்களுக்கு கருத்தாய் தெரிந்தது.  உள்ளே வந்து விட்டால் ஓயாத பம்பரம் தான்.  வௌியே தான் நட்பு. உள்ளே பரம எதிரி போல் பரபரத்துக்கொண்டுருப்பார்கள்.

பரமன் சிரித்துக்கொண்டான்.  பக்கங்கள் திரும்பப்பட்டது.

இரவு கணக்கு பார்த்துக்கொண்டுருந்த போது பவ்யமாய் ஒருவர் தலை மட்டும் அறைக்குள் வந்து எட்டிபார்க்க வௌியே தெரிந்த கண்ணாடி வழியே மற்ற நான்கு தலைகள் கவிழ்ந்து தொங்கிக்கொண்டுருந்து.  ஏதோ பேச வேண்டும் போலிருக்கிறது. என்னவாக இருக்கும்? மிஞ்சிப் போனால் முன் தொகை கேட்பார்கள். நினைத்துக் கொண்டு உள்ளே வரவழைத்தேன்.

“ஐந்து பேரும் நிற்கலாம் என்று நினைக்கிறோம்

விளக்கமாய் கேட்ட போது தான் புரிந்தது. தனியாக தொழில் தொடங்கும் ஆசை புரிந்தது. எனக்கொன்று ஆட்சேபணையில்லை. ஆனால் மொத்த உற்பத்தியும் அவர்களை சார்ந்து இருக்கிறதே? பிரச்சனைகள் இல்லாதவரையில் நிர்வாகி எப்போதும் வார இறுதி ஒரு நாள் மட்டுமே உள்ளே வருவார். பிரச்சனை என்றால் மொத்த நாளும் உள்ளே வந்து குடிவந்து இருந்து விடுவாரே?

அச்சத்தில் அவசரமாய் கேட்டேன்.

பயப்படாதீங்க. நாங்களே நல்ல நபர்களாக பார்த்து அமர்த்தி விட்டு உங்களுக்கு திருப்தி வரும் மட்டும் உள்ளே இருந்து ஒத்துழைப்பு தருகிறோம். நீங்கள் சொன்ன பிறகு நாங்கள் வௌியேறுகிறோம்?

மறுக்கவா முடியும்?

அவர்கள் அழைப்பின் பேரின் ஆசிர்வாதத்துடன் குத்துவிளக்கு ஏற்றிவிட்டு குதுகலமாய் திரும்பி வந்து மறந்து விட்டேன். என்னுடைய வாழ்க்கை உள்ளே இழுத்துக்கொண்டே இருக்கும் போது அவர்கள் அவவ்போது உள்ளே வருவார்கள். வாங்கிய வாகனம், வாங்கப்போகும் இடங்கள் என்று பட்டியல் இட்டு பல ஆலோசனை கேட்பார்கள்.

அந்த நாள் வரையில் அவர்கள் செய்த புண்ணியம் நேரிடைய ஏற்றுமதிக்கோ, உள்ளுர் ஒப்பந்தம் என்ற பெயரிலோ ஏதும் செய்யாமல் தைக்க வேண்டிய எண்ணிக்கையான ஒப்பந்த முறையிலேயே ஓட்டிக்கொண்டுருந்தது. நிறுவனத்தில் வெட்டி வைத்துருப்பார்கள். தேவையான சமாச்சாரங்கள் தந்த விட மொத்த தைத்த கூலி சனிக்கிழமை பணமாய் வந்து விடும். மறுநாள் கணக்கு பார்க்கும் போது உதிரி தனியாய் நிற்கும். உடனே பொருளாய் இடமாய் மாறிவிடும்.

நல்ல காற்று அடிக்கும் எல்லாமே நறுமணமாகத்தான் தெரியும்? சூறைக் காற்று அடிக்கும் போது?

மறுமுறை வந்த போது குறிப்பிட்ட நிறுவனம் பெயர் சொல்லி அங்கு ஒப்பந்த அடிப்படையில் நாங்களே முதல் போட்டு செய்யப்போகிறோம் என்ற போது எனக்கு பக் என்றது. நிறுவனத்தின் தரம் தெரிந்தவன் என்ற முறையில். நாம் ஒன்றும் சொல்ல முடியாது. சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோ நிலையில் இருப்பதாக தெரியவில்லை.

முடிக்காமலே இழுத்துக்கொண்டு சென்ற மொத்த ஒப்பந்த கணக்கும் மூன்று வருடங்கள்  (?)  முடிந்த போது தரவேண்டிய தொகையைான இரண்டு கோடிகளும், கேடித்தனமாக கணக்கில் இண்டு இடுக்கில் சிக்கிக்கொண்ட எலி போல்?

ஐவர் கூட்டணி ஒருவராகி மாறி, இனி உள்ளே வைக்க நகை ஏதும் இல்லை என்ற சூழ்நிலையில் தன்னையே எறித்துக்கொள்ளும் சூழ்நிலையில்.

அமைச்சர்களை வரவேற்கும் அதிகாரம் பெற்றவர்கள், மற்றவர்களின் பணத்தில் எந்த மானத்தை காப்பாற்ற முடியும்?

பய வரிசை பத்து

1. முந்தைய தலைமுறைகளை விட மேம்பட்ட முன்னேற்றத்தை எல்லா துறைகளிலும் இன்றைய இளையர் கூட்டம் பாலின பாரபட்சம் இல்லாமல் வெற்றியடைந்து இருக்கிறார்கள். பாராட்டக்கூடியது என்றாலும் சமீப ஊடக செய்திகளிலும் உருவாகும் அனைத்து பிரச்சனைகளான குற்றங்களிலும் மிக அதிகமாக பதின்ம வயதினரும், மாணவ சமுதாயமும் ஈடுபடுவதாக காட்டும் படங்களில் கூட பயமில்லாமல் பல் இளித்துக்கொண்டுருப்பது ஏன்?

2. மேம்பட்ட சுதந்திரம் வேண்டும், மேலான 33 சதவிகிதமும் வேண்டும் என்று மார் தட்டும் பெண்கள் கூட்டத்தில் அதிகமான காலாவதியான கன்னியர் கூட்டம், மாண்புகளை புறக்கணிக்கும் உடைகளும், மனதிற்குள்ளே மறுக வைக்கும் கலாச்சார சீரழிவு ஊடக தொடர்களை இத்தனை ஆர்வமாக ஆதரிப்பது ஏன்?

3. மண் பயனுற வேண்டும், கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாகி கரை சேர்ப்பேன், உண்மை நேர்மை துணிவு, உண்மையின் உரைகல், உலகத் தமிழர்களுக்கான ஒரே ஊடகம், முந்தித் தந்து முன்னேறிக் கொண்டுருப்பது, அத்தனை வயதுக்கு மொத்தமான ஒரே இதழ் போன்ற அத்தனை செய்தி சாதனங்களும் உண்மையான அக்கறையுடன் சிறப்பாய் முன்னெடுத்து செல்ல முயன்று முடங்கி கிடக்கும் எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற ஏராளமான சமூக அக்கறை உள்ளவர்களை ஆதரிக்காமல் இருப்பது ஏன்?

4. அத்தனை ஆயிரம் கோடிகள் அங்கு ஸ்விஸ் வங்கியில் முடக்கப்பட்டு இந்திய பொருளாதராம் மொத்தமும் மூச்சு முட்டிக்கொண்டுருப்பது நன்றாக தெரிந்த போதிலும் மீட்பதற்கான பேச்சு வார்த்தையே வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்குவோம் என்று எதார்த்தமாக சொல்கிறாரே இது யாருக்கு உணர்த்தும் அறிகுறி? மொத்த ஊடகமும் அமைதி காப்பது ஏன்?

5. மதம் தாண்டி மனிதம் மட்டுமே பார்க்கக்கூடிய நல்ல பல லட்ச மனிதர்களை பெற்றுள்ளது எல்லா மதங்களுமே என்றாலும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட இடங்களில் நடக்கும் போது அத்தனை மனிதர்களும் அதை முன்னெடுத்து செல்பவர்களை அடக்காமல் இருப்பது ஏன்? சார்ந்தவர்களை பார்க்காமல் மொத்தத்தையுமே சார்பாக பார்ப்பது ஏன்?

6. கணக்கற்ற சொத்துக்கள் சேர்த்து இருந்த போதிலும் அமைதியாய் வாழ சகிப்புத்தன்மையை அதிகம் பெற்ற இந்தியனான இருப்பது கூட தவறு இல்லை. இருபது வருடங்கள் இருந்த போதிலும் தேர்தல் வந்ததும் மட்டும் கட்சி மாறியவர்களைக் கூட கணக்கில் கொள்ளாமல் அவர்கள் நமக்கு நல்லது தான் செய்வார்கள் என்று அதீத நம்பிக்கை கொள்வது ஏன்?

7. ஓழுக்கம் உயிரினும் ஓம்மப்படும் என்பது போய் ஓழுக்கமாய் வாழ்ந்து ஓட்டையாண்டி ஆகி விடாதே என்ற அளவிற்கு ஓழுங்கீனம் மட்டும் சேர்த்து தரும் சொத்துக்கள் வைத்து அளிக்கும் சமூக அங்கிகாரம் ஏன்?

8. பட்டங்கள் வாங்கினால் தம்மை பல்லாக்கில் வைத்து தாங்குவான் என்று பலவற்றையும் இழந்து தகுதிக்கு மீறிய இடத்தில், புண்ணிய ஆத்மாக்களுக்கு மொத்த சொத்தில் ஒரு பங்கை நன்கொடை கட்டணமாக செலுத்த முன்வருவது ஏன்?

9. விண்னை முட்டும் விலைவாசி உயர்வு, விளங்கிக் கொள்ள முடியாத குறீயீடு சமாச்சாரங்கள் என்ற போதிலும் விருந்தோம்பல் முக்கியம் என்று கடன் வாங்கி கணக்கற்ற ஆடம்பரத்தில் கண்களை உறுத்தும் காட்சியாய் நடத்தும் ஆரம்பர திருமணங்கள் ஏன்?

10. முன்னேறி விட்டோம் என்ற வாக்குறுதிகளும், முன்னேறிக் கொண்டுருக்கிறோம் என்ற செய்திகளும் படித்துக் கொண்டுருக்கும் நான் பருப்பு வகைகள் இல்லாத பக்குவமான உன் சமையல் திறமை ருசிக்க ஆசை என்றால் இல்லத்தரசி இனிமையான முகத்தை மாற்றி விடுகிறாளே ஏன்?

நக்கீரன் கோபாலின் இருண்ட பக்கங்கள்

மூதறிஞர், கர்மவீரர், பேரறிஞர் போன்ற பட்டங்களைத் தொடர்ந்து கலைஞர், புரட்சித்தலைவர் வரை பட்டங்களை பெற்றவர்கள் அனைவருமே அவர்களின் தனிப்பட்ட ஆளுமையால் இன்று வரையிலும் அந்த காரணப்பெயர்கள் தமிழகத்தில் கலங்கரை விளக்கப் பெயர்களாகத்தான் காட்சி அளித்துக்கொண்டுருக்கிறது.

ஆனால் நீங்கள் தேர்ந்தெடுத்த துறைக்கு தேவையான புராணப் பெயரே உங்கள் வாழ்க்கையின் கௌவரப் பெயராய் மாறி உள்ளதைப் பார்க்கும் போது

சூறாவளிகளைக் கடந்து சூழ்நிலையை தனது வசமாக்கியவர்களுக்கு வாழ்க்கை வழங்கிய கொடையாகத்தான் தெரிகின்றது.

வணக்கம் திரு. நக்கீரன் கோபால் அவர்களே.

தூங்க வேண்டிய முழு இரவும் ஒரு புத்தகம் ஒருவரை ஆக்கிரமித்து தூங்கா இரவாக்க முடியுமா?

கதவு மூடப்பட்டு இருந்தும் நடுஇரவில் கூட படபடப்பாய் பயத்துடன் படிக்க முடியுமா?

புத்தகத்தின் 470 பக்கங்களையும் படித்து முடிந்ததும், ஒவ்வொரு ஓட்டையும் தனது தெய்வக்கடமைகள் போல் அளித்து விட்டு தெருவில் இன்று வரையில் ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களைப் பற்றி யோசிக்க வைக்க முடியுமா?

அத்தனையும் தந்த ஆச்சரிய புத்தகம் தான் உங்கள் “சேலஞ்”.

லண்டன் வானொலி அறிவிப்பாளரைப் போல எனக்கும் சற்று நெருடலாகத்தான் இருந்தது.

அதென்ன தமிழ்திரைப்படத்திற்கு ஆங்கிலப் பெயர் போல நீங்களும் ஆங்கிலத்தில் பெயர் வைத்து இருக்கிறீர்களே என்று?  ஆனால் இந்தப் பெயரை விட வேறு எந்தப் பெயர்களும் இந்தப் புத்தகத்திற்கு பொருத்தமாகவா இருந்து விடப்போகின்றது?

புலனாய்வு இதழியல் என்ற இரட்டை வார்த்தைகள் மூலமாகத்தான் அன்று கொடிகட்டி பரந்த பாகவதர்களின் சாம்ராஜ்யம் முதல் இன்று அசைக்க முடியா பெரும்பான்மை பெற்றவர்களின் சரித்திரம் வரைக்கும் சுருக்கி தரித்திர சாவு வரைக்கும் கொண்டு வரமுடிந்துள்ளது.

ஆட்சியில் ஏறுவதற்கு முதல் நாள் வரைக்கும் எடுபிடியாக வாழ்ந்தவர்கள் கூட ஏறிய பின்பு ஏற்றமான மகாராஜாக்கள் வாழ்க்கை பெறுவது நமது இந்திய ஜனநாயகத்தில் பெரிய ஆச்சரியம் இல்லை தான்.

ஆனால் அவர்களின் ஆசைகள் அதிகமாக அதிகமாகத்தான் அவர்களின் அருவருப்பான முகமும் அடிவருடிகளின் கொடூரமும் உங்களைப் போன்ற இதழியலில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு பல இன்னல்களை உருவாக்கி விடுகின்றது.

இஷடப்பட்டு கஷடப்பட்டால் எளிதான முன்னேற்றம் உண்டு.

எத்தனை இலகுவான வார்த்தைகள். ஆனால் வாழ்ந்தவனுக்குத்தானே புரியும்? கஷடங்களா? இல்லை கடைசி நேரத்தில் சாவா? என்று.

எழுதும் இன்னமும் கூட எனக்கு படபடப்பு, பயமும் அடங்கவில்லை. பொழுது புலர்ந்தாலே பூர்ண கும்ப மரியாதையுடன் எம தர்மன் வாசலில் ஒவ்வொரு நாளும் காத்துருந்து வணக்கம் சொன்னால் எப்படியிருக்கும்?

அதுவும் பதினைந்து ஆண்டுகள் மட்டுமே கொண்டுள்ள விஷயங்களே இத்தனை விவகாரமாக இருந்தால் நக்கீரன் பத்திரிக்கை தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் எதில் முழித்து நீங்கள் தினமும் திருஷடி கழித்துக்கொண்டுருப்பீர்கள்?

அருப்புக்கோட்டையில் பிறந்து, அரிசிக்கடையில் தவழ்ந்து அடித்து வந்த சென்னை பாத்திரக்கடையில் உருண்டு உருண்டு கடைசியில் வலம்புரித் தாய் தத்தெடுத்து ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை என்ற உங்கள் வீரம் வியக்க வைக்கின்றது?

போராட்டம் என்பது இங்கு யாருக்குத்தான் இல்லை. சென்னைக்குள் நுழைந்து நெருக்கியடிக்கும் வீடுகளுக்குள் தனிமரமாய் நின்று ஜெயிப்பது கூட பிரச்சனையில்லை. ஆனால் அத்தனை கூவ நாற்றத்தையும் பொறுத்துக்கொண்டு ஆளுமையாக “என் திறமை இது தான் என்று பறைசாற்றும் அளவிற்கு பயணிக்கும் பல லட்சம் பேர்களில் சில நூறு பேர்களால் மட்டும் தானே முகம் காட்ட முடிகின்றது.

நிருபர்கள் என்றாலே வினியோகிக்கும் கவர்களை கச்சிதமாக பெற்றுக்கொண்டு கவர் ஸ்டோரி எழுதுபவர்கள் என்று பல பேர்கள் நிணைத்துக்கொண்டுருக்கிறார்கள். ஆனால் கதிரை, சண்முக சுந்தரம் பாடுகளைப் பார்க்கும் போது, கட்டிய பொண்டாட்டியும் பெத்த ஒரு பிள்ளையும் போதும்? கண்மாய் கரை மண் வெட்டியாவது பிழைத்துக்கொள்வோம் என்று தான் பின்னோக்கி வந்து விடுவார்கள்.

அழைப்பு விடுக்கும் அத்தனை போராட்டங்களுக்கும் அம்சமான அலங்காரங்களுடன் அலங்கார பதுமை போல் கை அசைத்து வெற்றிச் சின்னம் காட்டும் அரசியல் தலைவர்களைப் பார்த்த எனக்கு மிகுந்த ஆச்சரியம் உங்களின் அர்பணிப்பு உணர்வு.

எண்பது கிலோ மீட்டர் தானே என்று எம்பி ஓடிவிடாமல் முதல் ஆளாய் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உறுப்புகள் உடைக்கப்பட்டுருந்த நிருபரை பார்க்க ஆஜர் ஆனது முதல் ஆச்சரியம்.

கேட்கும் கோடிகள் தந்து விடுவதாக சொன்ன கேடிகளை புறக்கணித்து கேள்வி ஞானத்தையே வைத்து மொத்த வாழ்க்கையையும் வேள்வி போல் நெருப்பாற்றில் நீந்தி வந்து சேலஞ் செய்துருப்பது மொத்த ஆச்சரியம்.

விலகி வந்த போதும் கூட உங்களின் துலாக்கோல் முட்கள் கடைசி வரையிலும் மாறவே இல்லை. ஐந்தாம் படைகள், ஓட்டுண்ணிகள் என்று ஏராளமாய் இடற வைத்தாலும் எப்படை தோற்கின் இப்படை வெல்லும் என்ற உங்களின் போராட்ட குணமே மொத்த சட்ட மேதைகளும், சட்ட மாணவர்களும் கடைசிவரைக்கும் உங்களை ராஜகோபால் வெர்சஸ் தமிழ்நாடு அரசு என்ற அச்சிடப்பட்ட உண்மை பாடங்களை படித்தால் தானே கோர்ட் படியே மிதிக்க முடியும்.

எந்தப் இதழியல் பட்டயங்களும் வாங்காத உங்களிடம், உங்களுக்கு, உங்களுக்காகவே வழங்கப்பட்ட தீர்ப்புகளை படித்துதான் சட்டப் பட்டங்களே வாங்க முடியும் என்றால் இதை விட சிறப்பு எந்த மனிதன் தன் வாழ்நாளில் அடைந்து விடமுடியும்?

அரசாங்கத்தின் கடைநிலை ஊழியனுக்கு மகனாக பிறந்து, அவர் முன்னால் கண்களை கசக்கிக்கொண்டு நிற்காமல் 40,000 வைத்தே இந்த உண்மை, உறுதி, துணிவு சாம்ராஜ்யத்தை எழுப்பி இருக்கிறீர்கள் என்றால் அன்று நாலு லட்சம் இருந்து இருந்தால் உண்மையின் உரைகல்லாக தினந்தோறும் காலையில் உரத்துக் கூறி இருப்பீர்களோ?

நிருபருக்கு உற்சாக பானத்தாலும், சிறுநீராலும் அபிஷேகம் செய்து சித்ரவதை செய்தவர் திருச்செந்தூர் ஆண்டவருக்கு அருகில் இருந்து அவரை கவனிக்கும் கண்ணியமான தலைமைப் பொறுப்பில் அமர்த்தபடுகிறார் என்றால் இதை விட காமெடி ஜனநாயகம் வேறு எங்கு காண முடியும்?

பிறந்த ராஜஸ்தான் பாலை வன மண்ணாக இருந்தாலும் கண்ணியமான அந்த காவல் துறை அதிகாரி போல் இன்னமும் பல பேர்கள் வாழ்வதால் தானே கெட்டுப் போன கல்லீரல் கூட தன் கடமையைச் செய்து கொண்டுருக்கிறது?

இருபது வருடங்களாக படித்த எத்தனையோ புத்தகங்கள் எத்தனையோ உணர்வுகள் தந்த போதிலும் இந்த சேலஞ் தந்த அனுபவம் இனி வேறு ஏதாவது தருமா? இத்தனைக்கும் கல்லூரி பருவம் முதல் கண்ட காட்சிகள் தான். தொடராக படித்தது தான். பங்கு எடுத்த அத்தனை ஜனநாயக சார்பாளர்களையும் அருகில் இருந்து பார்த்த பாக்கியமானவன் தான். ஆனால் மொத்தமான பூக்களையும் மாலையாக கோர்த்து முகர்ந்து பார்த்த போது பரவசத்தை விட அதிக பயமே வந்தது.

உங்களின் மீசையைப் பார்த்தே ஓதுங்கிய பெண்களை மீறி உங்களிடம் மனைவியாக வந்தவர், உங்களின் தின போராட்ட வாழ்க்கையை பொறுப்பாக ஏற்றுக்கொண்டதால் தான் இன்று இத்தனை நறுவுசான நறுமண வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறீர்களோ?

மனைவியாக வாய்த்தவர் அப்பா வீட்டுக்கு மறுவீடு விஷேசத்திற்காக செல்பவர்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் தினந்தோறும் நீங்கள் வாழ்ந்து கொண்டுருந்த மறு உலகத்தை பார்த்து பார்த்து பாய்ந்து ஓதுங்கிய பதுங்கு குழிகள் இலங்கைப் பெண்களை விட அதிகமானது தான்.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுப்பதற்கு ஆறெழு மாதங்களக்கு முன்னாலே அவர்களின் அத்தனை வளர்ப்பு ஜாதகங்களை அலசிப் பார்க்கும் அந்த பத்திரிக்கை ஆசிரியர்களை நம்மூர் அரசியல் ஆசான்களின் நதிமூலத்தை அலசச் சொன்னால் எத்தனை சிறப்பு இதழகள் போட வேண்டும். அதில் எத்தனை வீரப்பன்கள், ஆட்டோ சங்கர் வருவார்கள்?

அத்தனை விஷயங்களையும் உண்மையாய் துணிவாய் உறுதியாய் உலகுக்கு எடுத்து வைத்தீர்கள்? இந்த இலங்கை கன்னிதீவு கதையை எந்த ரூபத்தில் எங்களிடம் கொண்டு வந்து சேர்த்து முடிக்கப் போகிறீர்கள்?

உங்கள் “சேலஞ்” புத்தகத்திற்கு எத்தனையோ கணவான்கள் கண்ணியவான்கள் மதிப்புரை தந்து இருந்தாலும் இதயத்தை திறந்து அளித்த பத்ரிக்கைப் போல் வேறு எவரும் இந்தப் புத்தகத்தின் சிறப்பை வேறு வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.

“உண்மை பேசியால் அரிச்சந்திரின் மயானம் வரைக்கும் போய் வெட்டியான் வேலை பார்த்ததாக படிக்கும் போது அய்யோ என்று இருக்கும். அந்த அடிப்படையில் இந்த “சேலஞ்” பத்து அரிச்சந்திர புராணத்திற்கு சமம் “.

என்னைப் போன்றவர்களுக்கு ஒரே ஒரு வருத்தம். நான்கு காசு பார்த்ததுமே தனது அகந்தை வாழ்க்கையை அட்டகாசமாக சுயம்பு வாழ்க்கையாக சுயசரிதமாக தரும் சுத்தமான உண்மைத் தமிழர்களை பெற்றது இந்த புண்ணிய தமிழகம். உங்களைப் போன்றவர்களின் இருண்ட தொழில் வாழ்க்கை போல உங்களின் உண்மை சுயசரிதத்தை படிக்க முடிந்தால் பல இருண்ட மனங்களில் ஏற்ற வைத்த சேலஞ் 2 விளக்காக இருக்க முடியும்?

நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு, ஆட்சியாளர்களுக்கு, அதிகாரவர்க்கத்திற்கு, அடிவருடிகளுக்கு, அலையும் தாதாகளுக்கு என அத்தனை பேருக்கும் உங்களைக் கண்டால் பயம். ஆனால் அத்தனையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் அந்த அனுமன் காமராஜ் கண்டால் எங்களைப் போன்றவர்களுக்கு எக்கச்சக்கமான உற்சாகம்.

உங்கள் வாழ்க்கை முடிந்து மரணம் அருகில் சம்பவித்தாலும் கூட வாங்கும் கவர் பற்றிய கவர் ஸ்டோரி அடுத்த நக்கீரன் பதிப்பில் வருகின்றதா என்று பரிதவிப்போடு பார்த்து தான் இந்த அதிகார வர்க்கம் அடுத்த வாரத்தை வரவேற்கும். அப்போது தானே உங்கள் இதழ் கடைகளில் கிடைக்கும்.

நட்புடன்

தேவியர் இல்லம். திருப்பூர்.

25.08.2009

பிரபல்யமாக வேண்டும் என்பவர்களுக்கு மட்டும்

ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் போன்ற பலரின் சரித்திரங்களையும், அவர்களுடைய நூல்களையும் படித்தேன். எனக்கு ஓர் உத்வேகம் வந்து உள்ளது. மற்றவர்களில் இருந்து வேறு பட்டு சமூகத்தில் என் பெயரையையும் பதிந்து விட்டுப் போக ஆசையாக இருக்கிறது.

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

சமூகத்தில் மாபெரும் மனிதராக வேண்டும் என்று நினைப்பதே சிறுமையான மனோநிலை.

அற்பமாக உணர்பவர்கள் தான் வித்தியாசமாகத் தங்களைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று முனைவார்கள். சிறப்பானவராகவோ, பெருமைக்கு உரியவராகவோ ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அவசியமே இல்லை.

மற்றவர்கள் உங்களைக் கவனிக்க வேண்டும் என்று எதற்காக நினைக்கிறீர்கள்?

மற்றவர்களின் கவனத்தை கவர்ந்தவராக மாறவா ஆசை? இல்லை என்னை மற்றவர்கள் போற்றும் அளவு நடக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?

வாழ்க்கையில் எதை நோக்கினாலும் “நான் என்ன ஆவேன்? எனக்கு என்ன கிடைக்கும்? என்ற கணக்குகளை நீக்கிவிட்டு வாழ்ந்து பாருங்கள். உங்கள் திறனை 100 சதவிகிதம் முழுமையாகப் பயன்படுத்திச் செயல்படுங்கள். உங்களுக்கான ஆதாயங்களைப் பற்றிய கவனம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அமைந்து விட்டாலே நீங்கள் பெருமைக்கு உரியவராகிவிடுவீர்கள்.

தவிர ஒருவர் வாழும் நாட்கள் சரித்திரத்தில் எந்தக் கட்டத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருக்கான பெருமையும் மாறும்.

திரு மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்ற நபர் இந்தத் தேசத்துக்கு மிகத் தேவையாக இருந்த போது கிடைத்ததால் தான் மகாத்மா காந்தி ஆனார்.

மகாத்மா என்றால், மிகச் சிறந்த உயிர் என்று அர்த்தம்.

இன்றைய காலகட்டத்தில் அவர் அரசியலுக்கு வந்தால், மற்றவர்களோடு தாக்குப்பிடிப்பாரா…… யோசியுங்கள்?

அவர் வாழ்ந்த கால கட்டத்திலும் தான் பெருமைக்கு உரியவராக அறியப்பட வேண்டும் என்ற முனைப்புடனா செயல்பட்டாா? இல்லை தன் தனிப்பட்ட தேவைகளைப் பின்தள்ளி வைத்துவிட்டு, தேசத்துக்கு எது தேவையானதோ, அதற்கு அவர் முக்கியத்துவம் தந்தார்.

அதனால் திரு. காந்தியடிகள் பெருமை பெற்றார்.

உங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற ஆதாயக் கணக்கை நீக்கிவிட்டு உங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையைக் கவனியுங்கள். தானாகவே உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் கவனிப்பீர்கள். தேவையானதைச் செய்வதற்கு உங்கள் திறமையை இன்னும் எப்படி மேலோங்கச் செய்யலாம் என்று யோசிப்பீர்கள். திறமைகளைக் கூர் தீட்டிக் கொளவீர்கள்.

எனக்கு என்ன கிடைக்கும் என்ற கணக்கு விலகியவுடன் நீங்கள் பிரசாசிக்கத் துவங்கி விடுவீர்கள்.

உங்களுக்கு எந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும், எந்த அளவுக்கு மதிப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உங்கள் திறனைப் பொறுத்து தான் அமையும். தேசத்தில் உயர்ந்தவராக நீங்கள் அறியப்படலாம் அல்லது உங்கள் ஊரில் பெருமைமிக்கவராக மாறலாம். உங்கள் தெருவில் கவனிக்கபடுவராக இருக்கலாம். எதுவும் இல்லாமல், உங்கள் வீட்டளவில் மட்டுமே நீங்கள் சிறப்பானவராக மதிக்கப்படலாம்.

அதனால் என்ன?

மற்றவர்கள் உங்களை மகாத்மாக என்று அழைக்கட்டும். அழைக்காமல் போகட்டும். அது பொருட்டல்ல.

உங்கள் அளவில் நீங்கள் மகாத்மாவாக, பிரபல்ய மனிதனாக உணர்வீர்கள்.

உள் உணர்ந்தவைகள், வாழ்க்கைப் பாதை உன்னதமாக இருந்து விடுமா? என்பதில் உங்களுக்கு இன்னும் ஏதும் சந்தேகம் உண்டா?

*************ஆன்மீகத்தை பசுமையாக மேல் நோக்கி கொண்டு வந்து கொண்டுருக்கும் திருமிகு. ஜக்கி வாசுதேவ் அவர்களின் எண்ணச் சிதறலில் இருந்து……………………………………………………………………………

” ஓரு வி.ஐ.பி. யின் அந்தரங்க ரகஸ்யங்கள் “

நீங்கள் விரும்பும் விரும்பாத அத்தனை முக்கிய நபர்களின் ரகஸ்யங்களும் விரைவில் வௌியே வந்து விடக்கூடிய அபாயமணி சத்தம் கேட்கிறது?

சரியான நபருக்கு பொருத்தமான பதவி என்பது நம்முடைய இந்திய ஜனநாயகம் அளித்த முதல் நபர் முன்னாள் ஜனாதிபதி திருமிகு ஐயா அப்துல் கலாம் அவர்கள்.

இரண்டாவது திரு நந்தன் எம். நிலகேனி. இன்போஸிஸ் கணிணி தொழில் நிர்வாகி.

பாரதப்பிரதமர் திரு. மன்மோகன் சிங்கின் தனிப்பட்ட அக்கறையின் காரணமாக உருவாகிக்கொண்டுருக்கும் இ கார்டு அல்லது மின் அட்டை திட்டத்தின் தலைமை நிர்வாகியாக கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன்.

தொடர வேண்டிய அத்தனை துறைகளையும் தொடர்பில் கொண்டு பணியாற்ற வேண்டிய பரம அவஸ்த்தை வேலை இது. தொடங்கிய போதும் இன்னமும் எந்த விஷயங்களும் வௌியே வந்து விடவில்லை?

இறுதியாக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர் போல் அந்த அட்டை நம்மை அடையக்கூடிய யோகம் இருக்குமேயானால்?

கந்தசாமி கனவில் வைத்துள்ளவைகள் நனவானால் நூற்றியோரு சிதறுதேங்காய்?

விவசாயம்

இந்தியாவின் முதுகு தண்டுவடமே இன்று காந்தி தாத்தாவின் தள்ளுபடி பத்து ரூபாய் துண்டாக சுருங்கி விடப்போகின்றதோ என்ற அச்சம் தவிர்க்க

மொத்த நில வரைபடங்களையும் உற்று நோக்கி உள் வாங்கும் கருவிகளால் கணக்கெடுத்து சேமித்து வைத்து விட்டாலே பாதி பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும். இணைத்த இந்திய மொத்தமும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வர தட்ப வெப்ப நிலை, தானிய மகசூல், குறீயீட்டில் குதித்தாடும் விலையரசியை விரும்பும் அரசியாக வாங்குவர்களுக்கும் விற்பவர்களும் கொண்டு வர முடியுமே?

2. கல்வி

அந்தந்த மாநில வளர்ச்சி என்பது வௌியாகும் ஒவ்வொரு வருட தேர்ச்சி சதவிகித குறியீடு என்பதாக படம் காட்டிக்கொண்டுருப்பதை விட

விருது பெற்ற பள்ளிகளையும், மதிய விருந்து மட்டும் சாப்பிடும் பள்ளிக்கூடங்களையும் மொத்தமாய் ஒரே நேர்கோட்டில் கொண்டு வர,

வராந்திர, மாதாந்திர வளர்ச்சிகளை கொண்டு வந்து இறுதியில் வேறு வழியே தெரியாமல் கழுதை மேய்க்க போவோர்களையும், கையெழுத்து மட்டும் போட்டு கணக்காக சம்பளம் வாங்கிக்கொண்டுருக்கும் கண்ணியவான்களையும் கணக்கு பார்க்க உதவுமே?

3. போக்குவரத்து

வளர்ச்சிகளுக்கு அத்தனை உரமாய் இருக்கும் இந்த போக்குவரத்தில், நாமக்கலில் ஏற்றிய முட்டை சென்று அடைய வேண்டிய பஞ்சாப் மாநிலத்திற்குள் உள்ளே நுழையும் போதே வௌிவந்த குஞ்சுகள் அனைத்தும் கோழியாக கூவத்தொடங்கும் அளவிற்கு, நீட்டிய அத்தனை அதிகார வர்க்க கூண்டுக்கிளிகள் அணைவரையும் சிறகொடிந்த கிளியாக்க, ஓய்வறியா கைகள் உறக்கமறியா கண்கள் கடைசியில் சந்திக்கும் விபத்தை தடுக்க?

ஏற்றும் இடத்திலே உறுதிபடுத்தப்பட்ட ஆவணங்களையும் மொத்த சரக்குகளின் விபரபட்டியல்களை இணைப்புக்கோட்டில் கொண்டு வந்தாலே, முத்திரையிடப்பட்ட சரக்குகளுடன் உத்திரவாதமான அட்டைகளுடன் பயணிப்பவர்களை ஏன் அட்டைப் பூச்சிகள் உறிஞ்சப் போகின்றது. அவர்கள் ஏன் விலைவாசி உயர்வுக்கு மூலகாரணமாக இருக்க போகிறார்கள்? பயணிப்பது பார்சலா இல்லை வெடிகுண்டுகளா என்று ஏன் பரிசோதிப்பவர்கள் பதட்டப்படபோகிறார்கள்?

4. வேலை வாய்ப்பு

பதிந்து வைக்கும் அட்டைகள் வீணாகும் அரசின் செலவீனமாக வீட்டின் பரணில் பத்திரப்படுத்தி வைத்துருக்கும் அந்த அட்டைக்குறீயீட்டை

திறமையால் வந்தவர்கள் போக எச்சமும் சொச்சமும் ஊனமாய் பிறந்து உறுப்புகள் இழந்து சவாலாய் வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு போக ” கால் காசு என்றால் கவர்மெண்டு வேல ” என்று வரதட்சணை பணத்திற்காக தொங்கிக்கொண்டுருப்பவர்களை தொடர்ந்து வரும் சுய முன்னேற்ற வாய்ப்புகளை வகைகளை காட்டி தொல்லையில் இருந்து விடுவித்து, அவர்களை மாற்றி திருடனாக மாறாமல் இருக்க உதவலாமே?

5. வருமானம்

வசூலிக்காமலே போய்க்கொண்டுருக்கும் வங்கி கடன்கள், வராத கடன்கள் என்று நம்மை கண்களை கட்டும் பட்ஜெட் கடன்கள், வரிக்குள் வராமலேயே அத்தனையும் வாழ்க்கை வசதிகளாய் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் கடனே என்று பான் எண் வைத்துருந்தாலும்

சற்று மேம்பட்ட வசதிகளுடன் அடிப்படையில் அம்சமான வியாபாரிகளைக் கொண்ட மளிகைக்கடை முதல் அட்டகாசமான அடுக்கு மாடிகள் கொண்டு ஆட்சி புரியும் வர்த்தக பிரம்மாக்கள் வரையிலும் மொத்த விற்பனைகளையும் மொத்த கொள்முதல்களையும் வழங்கப்பட்ட அட்டை மூலம் என்று மட்டுமே அவசரப்படுத்தினால் அத்தனை பேர்களின் நதி மூலம் ரிஷி மூலமும் தெரிந்து விடுமே. என்ன ஒன்று அடுத்த நாள் தலைப்புச் செய்தியாக கிடைத்துக் கொண்டுருக்கும் ” வருமான வரியில் சிக்கிய பிரமுகர் ” படிக்காத வருத்தம் மட்டும் மிஞ்சும்.

6. இலவசம்

வளர்ந்து விட்டதாக சொல்லிக்கொண்டுருக்கும் வாழும் ஜனநாயக நாட்டில் வாக்குச் சீட்டுக்கு கையெந்தும் கஞ்சிக்கு வழியில்லாத மக்களின் அறியாமை கூட பெரிதாக தோன்றவில்லை? சேர வேண்டிய சரியான இலவசங்கள் தகுதியான நபர்களுக்குத் தான் போய்ச் சேர்கின்றதா என்பதை உறுதிபடுத்த?

ஒவ்வொரு தாலூகா கீழ் வரும் அனைத்து கிராமங்களில் ஆறாத ரணங்களுடனும் அடிப்படை வசதிகளையே இன்று வரையில் பெறாமல் அலைந்து கொண்டுருப்பவர்களை மொத்த வசதிகளுடன் தராதரம் பார்த்து உறுதிபடுத்தப்பட்ட இறுதியான புகைப்பட அடையாளங்கள் ஒன்று மட்டும் போதுமே? மான்யங்கள் என்பது மன்னர் பரம்பரையோடு போனதாக ஆகி விடுமே?

7. ஜனநாயக உரிமை

வாக்களிக்காத குடிமகன்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகள் என்ற வௌிநாட்டுச் சட்டம் கூட வேண்டாம். பார்க்க முடியாத படங்களையும் தொடர்களை மொத்தமாக பார்க்க வாக்களிக்க மறந்து உள்ளே இருப்பவர்களை துறத்த முயற்சிப்பதோடு

திருமங்கல தேர்தல் செலவை விட கூடும் போலிருக்கே என்ற அச்சம் வேண்டாம் ஆள வேண்டும் என்று ஆசைபடுவர்களுக்கு? பூத்தில் வந்து சீட்டு கொடுக்க வேண்டியவர்களுக்கு வெத்திலை பாக்கு வைத்து அழைக்க வேண்டாம்? வருடா வருடம் நீக்கியும் திருத்தியும் படுகின்ற அரசாங்க ஊழியர்களின் அவஸ்த்தைகள் கூட வேண்டாம். மொத்தத்திற்கும் வருடா வருடம் எகிறிக்கொண்டுருக்கும் தேர்தல் பட்ஜெட் பார்த்து பயப்படாமல் இருக்கலாமே?

8. உள்ளே வௌியே

உலகத்தில் ஒவ்வொரு நாட்டு கடவுச்சீட்டுக்கும் ஒரு மதிப்பு உண்டு. அதனால் தான் என்னவோ எத்தனை கடுமையான சட்டங்கள் வந்து கொண்டுருந்தாலும் மூட முடியாத கடையை வைத்துள்ள கள்ள மார்க்கெட் கடவுச்சீட்டு பாவாத்மாக்களை மட்டும் இன்று வரையில் எந்த அச்சுறுத்தல் வளையத்திற்குள்ளும் கொண்டு வரமுடியவில்லை.

இந்தியாவில் எத்தனையோ அதிசயங்கள் உண்டு. அத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உள்ளே வந்து விட்டால் போதும் பாகிஸ்தான் நாட்டுக் காரரும் அவர் விரும்பக்கூடிய எந்த பங்களிப்பையும் தந்து விட முடியும்?

விரும்பாவிட்டாலும் பங்ளாதேஷ் காரரும் கூட வாக்காளர் அட்டை பெற்று குடிமகனாக மாறி விட முடியும்?

அனாமதேயதாக கணக்கில் எடுத்துக்கொண்டு அருணாசல பிரதேசத்தையும் சீனாவால் அங்குள்ள அத்தனை குடிமகனையும் தனது குடிமகனாக நினைத்துக் கொள்ள முடியும்?

தொகை அதிகம். இனங்கள் இதை விட அதிகம். மொழியும் வித்யாசமான வாழ்விடங்கள் அத்தனையும் விட மிகுந்த தொல்லை?

எல்லாமே சரி தான்.

மொத்த அரசு தனியார் ஊழியர்கள், அங்கீகரிகப்பட்ட அனைத்து தொழிற்கூட பணியாளர்கள், எல்லா நிலையிலும் உள்ள பள்ளி கல்லூரிகள், வாகனங்கள் வைத்துருப்போர், வசதிகளுடனும் மட்டும் வாழ்ந்து கொண்டுருப்போர்களை ஒரே அட்டைக் கணக்கில் கொண்டு வந்தாலே பாதிக்கு மேற்பட்ட கூட்டலில் வந்து விட மாட்டார்களா?

சொச்சமாய் உள்ளவர்களை தரம் பிரித்தாலே பாதிக்கு மேற்பட்டவர்கள் பக்கத்து நாட்டுக்குள் ஓடி ஒளிந்து விட மாட்டார்களா?

எச்சமாய் மிஞ்சுபவர்கள் என்ன சமூக குற்றங்களை செய்து விட முடியும்? அவர்களின் அவர்களின் அன்றாட ஜீவனத்துக்கே ஜீவன் இல்லாத பாடுகளுடன் வாழ்ந்து கொண்டுருப்பவர்களால்?

நாமும் நம் குழந்தைகளும் வளர வேண்டுமனால் பொய் சொல்லி விற்கும் “காம்ப்ளான்” போதுமானதாக இருக்கட்டும்?

நாட்டின் நல்ல வளர்ச்சிக்கு?

ஒரே ஒரு முறை மிகப்பெரிய அனைத்து அந்தரங்க ரகஸ்யங்களையும் சேமிக்கும் செலவீனம். அதுவே அத்தனை இனங்களையும் தலைமுறை தாண்டியும் வார்ப்பாக வளர்த்தெடுத்து முன்னெடுத்து செல்லும் முக்கிய ஆவணம்.

மொத்தத்திலும் ஒரே ஒரு பிரச்சனை?

எல்லோருடைய ரகஸ்யங்களையும் காக்கக்கூடிய இடத்துக்கு வரக்கூடிய “தல” தறுதலயாய் இருந்துவிடக்கூடாது.