சிரிப்பு சிரிப்பா வருது சிங்கப்பூர பார்த்தா?

வழிகாட்டியாய் வாழ்ந்த வாழும் (குல) தெய்வத்திற்கு என்ன பெயர் இடுவீர்கள்?

வழிகாட்டியாய் வாழ்ந்த வாழும் (குல) தெய்வத்திற்கு என்ன பெயர் இடுவீர்கள்?

மரியாதை ரொம்ப வச்சுருக்க ஐயாமாரு எல்லாத்துக்ம்ம்ம் கந்தசாமியோட வணக்கமுங்க.

நம்மல பத்தி சொல்றதுக்கு பெருசா ஏதுமில்லங்க. எங்க ஐயா மேல போய்ச் சேர்ந்தப்பயிருந்து யாராவது ஒரு ஐயாவுக்கு கடித எழுதறதான் என்னோட பொழப்புங்க. அது போய்ச் சேராட்டாலும் கவல படுறதேயில்லங்க.

எந்த ஐயாவுக்குன்னு கேட்ராதீக.

கொய்யா மாதிரி தமிழ்நாட்டுல நெறய பேரு இன்னமும் தொங்கிக்கிட்டே இருக்குறதால என்னால இப்டி பொதுவாத்தான் கடுதாசி எழுத முடியும்.

நேத்திக்கு முந்தா நாளு நம்ம மணியாரம்பட்டி மாரியப்பன் நம்ம வீட்டுக்கு வந்து தொலச்சுட்டான். வந்தவன் சும்மா வராம தேடி வந்து கொடுத்த ரெண்டு சிங்கப்பூர் செண்டு பாட்டிலும் நாலு சோப்பு கட்டியையும் பார்த்து எங்க ஆத்தா போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

தமிழர்கள் சிங்கமாய் வாழும் நாடு. மத்ததெல்லாம் கூட தங்கம் தான்.

தமிழர்கள் சிங்கமாய் வாழும் நாடு. மத்ததெல்லாம் கூட தங்கம் தான்.

பொழய்க்க துப்புல்லமா இங்க சுத்திக்கிட்டுருக்க. புள்ளய பாரு. ஆத்தா மேல பாசத்துல எத்தன மணக்குது.

போகும் போது அவன போட்டுரலாம்ன்னு நெனச்சேன்.

அத்தனையும் பொறுமையா வாங்கிக்றத தவிர எனக்கு வேறு வழியில்ல.

ஊருக்குள்ள சும்மாவே சுத்திக்கிட்டுருக்கிற என்னப் பார்த்து வேறு எப்படி தான் எங்க ஆத்தா அவ அம்ப காட்டமுடியும்?

வீட்டுக்குள்ள இருந்த சில்லுவண்டெல்லாம் கக்கூசுக்குள்ள போனாக்கூட புஸ் புஸ்ன்னு அடிச்சு விளையாடற அவன் கொடுத்துட்டு போன செண்டு புட்டி ஒரு கொடுமைன்னா அதைவிட எங்காத்தா அக்கிரமத்துக்குன்னு அந்த சோப்பு வாசத்துக்கு முச்சூடும் குளிச்சுக்கிட்டு இருக்ற கொடுமய பாக்க முடியாம அவன் கொடுத்து போன கத்தை காகிதங்களை தூக்கிட்டு படிச்ச பள்ளிக்கூடம் பக்கம் வந்து தொலஞ்சுட்டேன்.

மகன் தந்தைக்காற்றும் உதவி

மகன் தந்தைக்காற்றும் உதவி


திட்டிக்கிட்டே வந்து ஆத்தா தூங்கனத்துக்கு அப்றம் தான் படிச்சேன்.

பேய் படம் பாக்ற மாதிரியே பயம் வந்துருச்சு. உயிரு ஒடம்புல இருக்கான்னு கிள்ளி பாத்தா வலிக்குது.

என்ன கொடும மாதவா?

அங்கு அரசியல் தலவரெல்லாம் ஊழல் செய்ய மாட்டாங்ளா? அரசாங்க வேல மாதிரியே அத்தன அமச்சரும் அடுத்த ஆளுக்கு வழி கொடுத்து வௌிய இருந்து வழி நடத்துவாங்களாம். (!)

நம்புற மாதிரியாயிருக்கு.

டூப்பு விட கத்துக்கொடுத்த நம்லக்கிட்ட ஏதாவது நக்கல் கிக்கல் பண்ராங்களோ?

படிக்க படிக்க பக்கத்து ஊரு ஆளும் பண்ட்ருட்டியும் குமுட்டிக்கிட்டு வந்ததுச்சு.

பொழைக்க தெரியாத பயலுகளாக இருப்பாக போல. பொண்டாட்டி புள்ள குட்டிக ஒன்னும் சொல்லிக்காட்ட மாட்டாங்களோ? போத்தீஸ் விளம்பரமெல்லாம் அங்க காட்ட மாட்டாங்களோ?

எத்தண தத்துவத்த படிச்சுருக்கேன். இந்த தத்துவத்தை படிக்கிறப்ப எனக்கே சிரிப்பு சிரிப்பா வருது.

அதுவும் ஐயா, மூத்த ஐயா லீ குவான் யூ (Mr. Lee Kuan Yew) சொல்லியிருக்ற பாக்ற போது

” மக்களின் காசுக்கு ஆசைப்படாத அளவுக்கு செல்வத்தை அரசே அளித்து விட்டால்…… அதிகாரத்தில் இருப்பவர்கள் வௌியே கைநீட்ட மாட்டார்கள் ……”

எதிர்க்கட்சியும் எதிரிகட்சியுமே இல்லாம மொத்த பாச்சகயித்த பாசக்கயிறாக வைத்து ஆட்சி செய்து விட்டு போன ஐயா சொல்லி போட்டு வச்ச சூத்திரமாம்.

என்ன கொடுமையாடா இது?

அரவணைக்க ஒரு அரசியும், ஆசைக்கு ஒரு உரசியும் இருந்தாலும் எங்காளுகளுக்கு ராத்திரி தூக்கமே வரமாட்டுது. கோயமுத்தூர்ல் மில்லும் கொடைக்கானல்ல தோட்டமும் இருந்தாலும் இன்னமும் சென்னையில வீட்டு மணை வேனும்ன்னு தொங்கிட்டுருக்காக.

அப்றமென்ன? கை, காலு கூட வாலையும் நீட்டிக்கிட்டு தான் இருக்காக.

சிங்கப்பூர் பிரதமர்க்கு இன்னக்கு சம்பள வருசத்துக்கு நம்மூரு காசுக்கு ஒரு கோடியாம். அபபறம் அமச்சரு, எம்பிக்கெல்லாம் 8,85 ஆயிரம் ரூபாயாம்.

அமெரிக்கா அதிபர விட அதிகமா வாங்கினாலும் இந்த வருசம் அறுபது சதவிகிதம் ஒசத்தப்போராங்களாம்.

என்னத்தச் சொல்றது. என்ன தான் இருந்தாலும் எங்கவூரு சென்னை வார்டு கவுன்சிலர் ஒரு வருஷத்ல சம்பாறிக்கிறத விட கம்பி தான். அப்றமென்ன ரோட்ல கொட்ட ஒரு காசு. அத எடுக்க ஒரு காசு. வீடு கட்டுனா ஒரு காசு. கட்டாம இடமா இருந்தா பங்கு போட்டதுல ஒரு காசு.

இங்க ஐயாவும் மகனும் என்னன்னமோ பண்ணித்தான் பாக்குறாக. பய புள்ள கருத்தா இருக்றதால கணக்ல புலியா இருக்றாக. விடுங்க புத்தியிருக்றவங்க பொழச்சுட்டு போகட்டும். ரொம்ப பே………னா ஆளுக வீட்டுக்கு வந்துறப் போறாக.

” நாம் வளர்ச்சியில் தன்னிறைவடைந்து விட்டோமா என்பது நம் ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில் தான் உள்ளது. நாம் இப்படியே வளர்ந்த நாடாகவா பிறந்தோம்? நாம் 10,15 ஆண்டுகள் தொடர்ந்து பொதுத் தொண்டு ஆற்றக்கூடிய இள ரத்தத்தைத்தான் தேர்வு செய்து வருகிறோம். அதனால் இதுவரை இந்த நாட்டுக்காக குருதி சிந்தி உழைத்த மூத்த தலைவர்களை அவமதிப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

அதற்கு ஒரே வாழும் எடுத்துக்காட்டு, நம்முடைய தேசத் தந்தையும், முன்னாள் பிரதமரும் ஆன லீ குவான் யூ.

1990 ம் ஆண்டு முதல் இன்று வரை நம்முடைய கட்சிக்கு அரசியல் ஆரோசகராகவே விளங்குகிறார். சிங்கப்பூரில் நிலையான ஆட்சியை நிலை நிறுத்தி நம் வருங்காலத்தை மேலும் வளப்படுத்த முடியுமா என்பதற்கு உங்களிடமே நீங்கள் நான்கு கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள்.

எந்த மாதிரியான அரசு நமக்கு வேண்டும்?

எந்த மாதிரியான மக்களுக்காக இந்த ஆட்சியை நாம் நடத்த வேண்டும்?

அவ்வாறு அமையும் ஆட்சியினை நாம் எவ்வாறு வளப்படுத்த முடியும்?

அரசு மற்றும் பொதுத் துறையில் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு நாம் எதன் அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும்?

இந்தியாவை போன்ற ஒரு அரசாங்கத்தை வழக்கமான அரசு (?) என்று தான் நான் அழைப்பேன். இப்படிப்பட்ட அரசு பெரிதும் மாற்ற மின்றி இயங்கும் தன்மை கொண்டது. இதன் அரசு துறை அதிகாரிகளின் சம்பளம் பொரும்பாலும் தனியார் நிறுவனங்களைவிட மிகவும் குறைவாகவே இருக்கும்.

அப்படிப்பட்ட அரசியலில் மனிதருள் மாணிக்கமாக (?) சில தலைவர்கள் தோன்றினாலும், சிறந்த குழுக்களை அமைக்கத் தவறுவதால், ஒரு கலைடாஸ்கோப்பில் காண்பது போல் அடுத்தடுத்து ஆட்சி முறையில் குழப்பங்களே எஞ்ச நிற்கின்றன.

எத்தனை நாடுகளில் ஒரு அமைச்சரே திறனாற்றல் அறிந்து பதவி விலக முன் வருகிறார்கள். (?)

67 வயதான சட்டத்துறை அமைச்சர் ஜெயகுமார், தன்னுடைய அரசியல் வாரிசாக ஒரு சட்டக் கல்லூரி மாணவர்தான் வரவேண்டும் என்கிறார். அது அவருடைய அரசியல் தொலைநோக்குப் பார்வையக் காட்டுகிறது.

தற்போதையை சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியன் லூங்க் (Mr.Lee Hsien Loong) ( திருமிகு ஐயா லீ குவான் யூ அவர்களின் புதல்வர்)

ஐயாமாரே,

இந்தக்கடிதத்த முடிக்கிறதுக்கு முன்னால, நம்மள போல மைக் எடுத்து அடுச்சுகாம அவரு எடுத்து வச்ச சப பேச்சு தான் மேல சொன்னது.

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போய் ஏடு எடுத்து பாக்கனும். அடுத்த ஜென்மத்துல ஐயா ரெண்டு பேரும் இந்தியவுல வந்து பொறக்குறதுக்கு வாய்ப்புருக்கான்னு கேக்கனும்.

ஆனா போறதுக்கு காசு வச்சுருக்ற ஆத்தா சுருக்கு பை தான் தெரியமாட்டுது?

எந்த அந்நியன் இங்கு வந்து வௌிச்சத்தை தரப்போகின்றானோ?

எந்த அந்நியன் இங்கு வந்து வௌிச்சத்தை தரப்போகின்றானோ?

7 responses to “சிரிப்பு சிரிப்பா வருது சிங்கப்பூர பார்த்தா?

  1. பின்னூட்டப் பிதாமகி துளசி கோபால் மறு மொழி இட்டிருக்கிறாரே – பலே பலே – சுந்தர் கூறிய பலாப்பழம் ஆரஞ்சு ந்ல்ல உதாரணம் – இருப்பினும் நாமும் திருந்தலாம்-

  2. சிங்கபூரு ரொம்ப ரொம்ப சின்ன ஊரு, …. நம்மூரு,( நம்நாடு ) பலா பழம் மாதிரி, அதை , ஆரஞ்சு கூட நிறுத்திப் பார்க்க முடியாது… இருந்தாலும் உங்க ஆதங்கம் புரியுது, நமக்கும் நல வழி கிடைக்காமலா போய் விடும்

  3. தற்போதைய சூழ்நிலையில் புதிய மத்திய மாநில அரசாங்கம் மக்கள் நலனில் அதிக அக்கறை செலுத்துவது கண்கூடு. ஆனால் இழந்த இழப்புகள் அதிகம் என்பதால் எல்லாமே கடலில் கரைத்த பெருங்காயமாக வாசம் இன்னமும் நம் மூக்கு கிட்ட வரமாட்டுது. பட்டுக்கிடந்த வீட்டு துளசி செடியும் இப்போது தான் துளிர்த்து வருகின்றது.

  4. Jothig:

    ஆசையை கிளப்பிட்டீங்க.

    திருப்பூர் கொடுத்த சவுக்கடியே இன்னும் தாங்க முடியல. இதுல சிங்கப்பூர் ரோத்தாங் வேற ? விட்டு விடுங்கள் தேவியர்கள் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கு?

    என்னை பொருத்த வரைக்கும் “தல” இது நமது நாடு என்று கை நீட்டாமல் மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக இருந்தால் போதும் இன்னும் 44 ஆண்டுகளில் சிங்கை மாதிரி ஆகலாம். எனக்கு நம்பிக்கையில்லை.
    நாம் இதுவரை வந்திருக்கும் மற்றும் போய்கொண்டிருக்கும் வழி திரும்ப வழியில்லா தடத்தில் போய்கொண்டிருப்பது போலவே எனக்கு தோனுகிறது.
    சிங்கையில் அமைச்சர்கள் ஆவதும் தெரியாது போவதும் தெரியாது.நடைமுறைகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஓரளவு புரிபடலாம்.டிவி/செய்திதாளில் ஏதாவது ஒரு புது ஆளின் பெயர் அடிபட்டால் அதில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
    ஒன்று தெரியுமா? இப்போதே அடுத்த அதற்கு அடுத்த பிரதம மந்திரியை வலை போட்டு தேட ஆரம்பித்துவிட்டார்கள்.
    சீக்கிரம் உங்க கடிதத்தை அனுப்புங்க,நாளை தேசியதின உரையில் உங்கள் பெயரை பிரதம மந்திரி சொன்னாலும் சொல்வார். 🙂

  5. முதல்லே சட்டம் ஒழுங்கு என்றது எல்லோருக்கும் சமமா இருக்கணும். அப்பத் தானே எல்லாம் சரியாகுமுன்னு நானும் ஒரு ஓரமா உக்காந்து ரொம்பநாளாக் கூவிக்கினு இருக்கேன்.

    இங்கே இந்தியாவில் சட்டத்தை ஆளுக்கேத்தமாதிரி வளைக்குறாங்க பாருங்க…… அங்கேதான் எல்லா நாசமும் ஆரம்பிக்குது.

    ஜனநாயகம், சுதந்திரமுன்னு முழங்கிக்கிட்டு அடிப்படை ஒழுக்கம், நாகரிகம், சுத்தம் எல்லாத்தையும் ‘கோட்டை’ விட்டுட்டுருக்காங்க(-:

வடுவூர் குமார் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி