Category Archives: இலங்கை

வெளிச்சம்

அச்சத்தை உருவாக்கி பிழைப்பு நடத்தும் மனிதர்களையும், வெளியே கை ஏந்திக்கொண்டு பிழைக்க வழியில்லாமல் வாழும் மனிதர்களையும் தான் ஆதங்கமாய் பார்க்க வைக்கின்றது. இந்த இரண்டு மனிதர்களைப் பற்றியும், சமூகத்தில் உள்ள இடைவெளியையும் இன்று வரைக்கும் எனக்கு அடையாளம் காட்டிக்கொண்டுருப்பவர்கள் வால்பையன், வினவு தளங்கள்.

வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு 7வது நாள் படிக்க சொடுக்க

கரும்புலி

வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு 6வது நாள் படிக்க சொடுக்க

இதுவும் கடந்து போகும்

நான் வாழ்ந்த சமூக வாழ்க்கை முழுவதும் கரடுமுரடாகத் தான் இருந்து இருக்கிறது. இன்று வரையிலும் சமதள பயணம் அமைந்ததே இல்லை. எதிர்பார்த்ததும் இல்லை. குடும்பத்தினர்க்கு இதில் எந்த சம்மந்தமும் இல்லை. முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவந்த குஞ்சு போல் வெளி உலகத்தை அளந்து பார்த்து விடவேண்டுமென்று அலைந்து திரிந்து பெற்ற சுய அனுபவங்கள்.

எட்ட முடியுமா? என்ற யோசிக்கும் போது கிடைத்த மேடுகளும், நம்முடைய திட்டமிடுதல் தவறாக போய்விடாது என்று எண்ணிக்கொள்ளும் சமயங்களில் இயல்பாகவே பள்ளமும் என்றும் கொண்டு போய் சேர்த்து விட்டுள்ளது, வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் உருவான மாற்றங்கள் இன்று வரையிலும் ஏதோ ஒரு உருவத்தை உருவமாக்கிக்கொண்டே இருக்கிறது. இரண்டுபடிகள் கூட தொடர்ந்து ஏற அனுமதித்ததே இல்லை. ஒவ்வொரு சமயத்திலும் ஒரு படிக்கான வாய்ப்புகள் தான் இன்றைய வசதிகளை உருவாக்கி தந்துள்ளது.

திருப்பூர் ஆய்த்த ஆடைகள் ஏற்றுமதிக்கான பணி மற்றும் சொந்த ஏற்றுமதி நிறுவன தொழில் வாழ்க்கைக்கான ஏற்றத்தாழ்வில் கற்றுக்கொண்டது அத்தனையும் என்னைச் சார்ந்த சின்ன வட்டத்திற்குள் முடிந்து போனது. ஆனால் 2009 மே மாதம் இறுதியில் எந்த நோக்கமும் இல்லாமல் அல்லது தெரியாமல் இந்த வலை உலகத்திற்குள் நுழைந்து ஜுன் 3 தட்டுத்தடுமாறி வலையின் தொழில் நுட்பத்தை முழுமையாக தெரிந்து கொள்ளத் தெரியாமலே “சித்தம் போக்கு சிவன் போக்கு ” என்னைப் பற்றி யோசிக்க உருவானது இந்த எழுத்துப் பயணம். எழுதத் தொடங்கி இன்று முழுமையாக முதல் வருடம் நிறைவுக்கு வருகிறது.

இருக்கும் இரட்டைக்குழந்தைகள் போலவே தளமும் இரண்டாக அமைந்து விட்டது. வேர்ட்ப்ரஸ் ல் எழுதத் தொடங்கி அடுத்த நான்கு மாதங்களில் இடுகை என்ற அமைப்பு உருவானது. அதனைத் தொடர்ந்து இன்று வரைக்கும் பலவிதங்களிலும் உறுதுணையாய் உற்ற தோழனாய் பல விதங்களிலும் இந்த இடுகையை உலகம் முழுக்க சென்றடைய இன்று வரைக்கும் உழைத்துக் கொண்டு உதவிக்கொண்டுருப்பவர்களுக்கும் நன்றி. இன்று வரையிலும் நேரிடையாக மறைமுகமாக பலர் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

மனதளவில், சொந்த வாழ்க்கை அளவிற்கு நெருங்கியவர்கள் அத்தனை பேர்களும், கடமையாக மிக தூரத்தில் இருந்து உரையாடி என்னை உற்சாகப்படுத்தியவர்கள், தொடக்கம் முதல் ஒவ்வொரு சமயத்திலும் உள்ளே வந்து என்னை எனக்கே புரியவைத்தவர்கள், என்று நீண்ட பட்டியல் உண்டு.

நடை,பாவனை,நோக்கம்,விருப்பம் எதுவும் தெரியாமல், மனதில் தோன்றியவற்றை எழுத கிடைத்த முதல் விமர்சனம் போல் என்னுள் தொடங்கி, திருப்பூரைத் தொடர்ந்து நாடு தாண்டி ஈழம் வரைக்கும் தொடர முடிந்தது.

10 மாதங்கள். 198 தலைப்புகள் எழுதி இந்த தலைப்பு 199.

தேவியர் இல்லம் திருப்பூர்

தேவியர் இல்லம் திருப்பூர்

வாசிப்பு அனுபவமும் வாழ்ந்த வாழ்க்கைப் பாடங்களும் எழுத அதிக உதவியாய் இருந்ததைப் போலவே ஒவ்வொரு தரமான விமர்சனங்களும் ஒழுங்கான பாதையை உருவாக்க காரணமாக இருந்தது. மீள் பதிவு என்று இம்சிக்காமல் நீள் பதிவு என்ற அவஸ்த்தையை மாற்றிக்கொள்ள முடிந்தது. எத்தனை புத்திசாலித்தனம் காட்டினாலும் படிப்பவர்களுக்கு புரிய வேண்டும். மொத்தத்தில் எளிமை நடை வேண்டும். அதை உணர எனக்கு 40 தலைப்புகள் தேவைப்பட்டது. தவறுகள் அதிகமாக செய்யும் போது தரமான பாதைகள் இயல்பாகவே தோன்றும். உணர்ந்து கொள்ள வேண்டியது நமது கடமை. உணர்த்தியவர்களுக்கு நன்றி.

ஓட்டுக்கள், விமர்சனம், படிப்பவர்கள், வருகையாளர்கள், உள்வாங்கிக் கொண்டவர்களின் தாக்கம்,தரவரிசைப்பட்டியல் என்று எல்லாவகையிலும் வாழ்வில் முதல் முறையாக நூறு சதவிகிதம் அதிக மனநிறைவு அளித்த விசயம் கடந்த பத்து மாத எழுத்துக்கள். வாழ்வில் உருவாகும் ஒவ்வொரு நெருக்கடியான சூழ்நிலையும் நம்மிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டு வந்து விடுகிறது. நாமே உணராமல் வாழ்ந்து கொண்டுருந்த போதிலும்??

பள்ளிப் பருவம் முதல் படித்த எத்தனையோ எழுத்தாளர்களின் எழுத்துக்கள், பார்த்த பலரின் வாழ்க்கையில் வழி தவறிய பாதைகள் உருவாக்கியவைகள் என்று பார்த்து வந்தவனுக்கு எத்தனை சிந்தனைகளை உருவாக்கியதோ அதே போல் இரண்டு தளத்திலும் இதுவரையிலும் எழுதிய எதுவும் வீணாகிப் போய்விடவில்லை, படிப்பவர்கள் “வெறுக்கக்கூடிய” வகையிலும் எதையும் எழுதிவிடவில்லை. இன்று வரையிலும் பழைய தலைப்புகள் வரைக்கும் எப்படியே தேடி கண்டுபிடித்து உள்ளே வந்து கொண்டுருப்பவர்களுக்கும், தொடர்ந்து தங்கள் விமர்சனம் மூலம் ஊக்கமளித்த உள்ளங்களுக்கும் நன்றி.

தேவியர் இல்லம்

நன்றி

2002 முதல் ஏற்றுமதி நிறுவன பணிக்கான சமயத்திலும், வீட்டில் இருந்த கணிணி மூலம் கண்ட வலை உலகம் என்பது முழுக்க முழுக்க ஆய்த்த ஆடை ஏற்றுமதிக்கான தொழிலுக்காகவே இருந்தது. இப்படி ஒரு மாய உலகம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டதே 2007 இறுதியில் மட்டுமே. ஆனால் அன்று வலைதளத்தில் வேறு எதையோ அவசரமாய் தேடிய போது கண்ணில் தெரிந்த தமிழ் மணம் குறித்து முழுமையாக தெரியாமல் எப்போது போல அந்நியச் செலவாணி வாழ்க்கை உள்ளே இழுத்து வைத்து இருந்தது. தமிழ் வலை உலக வாசிப்பு என்பது தனியாக ஏற்றுமதி தொழிலில் கால் ஊன்றிய பிறகு அமெரிக்காவின் வீழ்ச்சி படிப்படியாக ஒவ்வொரு தொழிலையும் தாக்க, இறுதியில் கரணம் தப்பிய நேரமான 2009 மே மாதம். தொடர்ந்து ஓடி வந்து கொண்டுந்த பண வாழ்க்கை மாறி கிடைத்த ஓய்வும் மனம் சார்ந்த வாழ்க்கையும் அறிமுகமானது. எழுதவும் முடியும் என்று உள்மனம் சொன்னது.

என்னுடைய எழுத்துக்கள் மற்றவர்களுக்கு என்ன தாக்கத்தை உருவாக்கியதோ ? ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்ள வேண்டிய அத்தனை சகிப்புத்தன்மையை வளர்த்து நிதான போக்கை உருவாக்கி இருக்கிறது. ஆழ்ந்த யோசனைகளும், விவேகமும் சேர்ந்து இன்று முழுமையான அமைதியான மனிதனாக மாற்றியுள்ளது. எழுதுவதற்கு முன்பு இருந்த வாசிப்பு அனுபவமும், எழுதத் தொடங்கிய பிறகு உண்டான வாசிப்பும் மொத்தமும் வெவ்வேறாக இருக்கிறது. புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழர்களுக்கும், பணி நிமித்தமாக வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும்,  இந்த தமிழ் வலை உலகமென்பது வரம். ஆனால் புத்தகங்களை மட்டும் வாசிக்க விருப்புவர்களும் இது ஒரு இம்சை.  காரணம் வெகு நேரம் படிக்க முடியாத அவஸ்த்தை. தினசரி,வார,மாத இதழ்கள் கிடைக்கும் இடங்களில் வாழ்க்கை அமைந்தவர்களுக்கு இந்த வலை உலகத்தில் அத்தனை ஈர்ப்பு இருக்காது. ஆனால் எந்த வகையில் பார்த்தாலும் இந்த வலையின் வீச்சு என்பது வெகுஜன ஊடகங்கள் எட்டிப் பார்க்க முடியாத காடு மலை கடல் தாண்டி பயணிக்கக்கூடிய சக்தி வாய்ந்த அதி உன்னதமான ஊடகம் இது. உணர்ந்து எழுதுபவர்கள் “பாக்யவான்கள்”

முள்ளிவாய்க்கால் போரின் இறுதியில் எழுதத் தொடங்கிய போது ஈழம் குறித்து தெரிந்தது எல்லாமே வெகுஜன ஊடகத்தின் பரபரப்பு செய்திகள் மூலம் மட்டுமே. இதற்குள் நாம் நுழைந்து எழுதுவோம் என்று பெரிய ஆசைகள் இல்லாதவனுக்கு இயல்பாக அந்த வாய்ப்பு உருவானது. நான் தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட விசயங்கள் மற்றவர்களுக்கும் தேவையாய் இருக்கலாம் என்று தொடர்ந்த ஈழம் தொடர்பான விசயங்கள் முழுமையற்றதாக இருந்தாலும் சம காலத்தில் வந்த புத்தகங்களும் சொல்லாத பல விசயங்களை குறிப்புகள் போல உணர்த்த முடிந்தது. பல விதங்களிலும் புத்தக ஒத்துழைப்புக்கு தானாகவே வீடு தேடி வந்து உதவிய திரு. இராஜராஜன் (வனம்) திரு. தோழர் அவர்களுக்கும் என்றென்றும் கடமைபட்டுள்ளேன்.

தொடக்கத்தில் நண்பர்கள் சுட்டிக்காட்டிய கவனமான பாதையில் கண் வைத்து இருந்த காரணத்தால் பரபரப்பு இல்லாத அமைதியாக தொடர முடிந்தது. குறிப்பிட்ட சமயத்தில் படிப்பவர்களில் 30 சதவிகித புலம் பெயர்ந்தவர்களின் வருகையும் கிடைத்த ஆதரவுகளும் என்றும் மனதில் நிற்கக்கூடியது. நம்பிக்கை தான் வாழ்க்கை. அதை மட்டுமே நம்பி எழுதியவனுக்கு நாரசாரமான விமர்சனங்கள் இல்லாமல் பலரும் உரையாடிய போது உருவாக்கிய தாக்கத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.

பிரபாகரன் என்ற ஆளுமையை மட்டும் மையப் பொருளாக வைத்து பரபரப்பு படபடப்பு என்கிற ரீதியில் விற்றுத் தீர்த்த புத்தகங்கள் போல் அல்லாமல் ஈழம் என்பதன் மூலம் எங்கிருந்து தொடங்கியது? தமிழீழம் என்பதன் அவஸ்யம் என்ன? என்று எழுதி முடித்து நண்பர்கள் கையில் கொடுத்துள்ள தமிழீழம் என்பது பிரபாகரன் கதையா? என்ற தலைப்பில் நான் கோர்த்துள்ள விசயங்கள் முழுக்க முழுக்க இலங்கையின் உள்ள சமூக வாழ்க்கையையும், 1949 க்கு முன் இலங்கையின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த மக்களின் மனோ பாவங்களையும் அதிக அளவில் நிறைவாய் விவரித்துள்ளேன். மொத்தமாக இலங்கை என்ற தீவு உருவான உண்மையான வரலாற்று நிகழ்வுகள் முதல் 2009 வரைக்கும் வரிசையாக கதம்பமாக ஆவணமாக ஏற்றுக்கொள்ளத் தக்க கையில் முடிந்து வரையிலும் முயற்சித்துள்ளேன்.

ஈழம் தொடர்பாக ஒவ்வொரு புத்தகமும் வெளி வரும் போது வலைதளத்தில் பார்த்த காரசாரமான விமர்சனத்திற்குள் இதை அடக்க முடியாதபடி இனவாதம் என்பது எங்கிருந்து ஏன் தொடங்கியது? என்ற நோக்கத்தில் தெளிவாக புரிந்துணர்வை உருவாக்க முயற்சித்துள்ளேன்.

இன்று வரையிலும் வலை உலக தொழில் நுட்பம் குறித்தும் இதன் சென்றடையும் வீச்சும் அதிகம் தெரியாதவனுக்கு அநேகம் பேர்கள் உதவியதைப் போலவே என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்த எழுத்தின் மூலம் மட்டும் அறிமுகமானவர்கள் நிறைய உதவிகளைச் செய்துள்ளார்கள். புத்தகம் என்பது வணிகம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதால் இன்றைய சூழ்நிலையில் முடிந்து போனதாக நினைத்துக்கொண்டுருக்கும் ஈழம் தொடர்பான விசயங்கள் அத்தனையும் கேலிக்கும் கேள்விக்கும் உரியதாய் மாறியுள்ளது? ஈழத்திற்குள் வாழ்ந்தவர்கள் பெற்ற அத்தனை அனுபவத்தை அந்த புத்தகம் படிப்பவர்களுக்கு உருவாக்கக்கூடும்.

இந்திய சுதந்திரம் குறித்து எழுதிய போதெல்லாம் பலர் கேட்ட புத்தகமாக வெளிவரவேண்டும் என்ற பெரிய ஆசையின் அக்கறையை பயந்து கொண்டு தூர நின்று பார்த்ததோடு சரி. காரணம் நம் திறமை நமக்குத் தெரியும்? ஆனால் இப்போது இந்த ஈழம் தொடர்பான புத்தகம் மட்டும் வர வேண்டிய அவஸ்ய காரணங்களை யோசித்துப் பார்த்தால் இந்த பேரழிவு நிச்சயம் ஏதோ ஒரு சமயத்தில் இங்கும் வரலாம். உலகில் எங்கும் உருவாகலாம்? ஒற்றுமையில்லாத இனத்திற்கு, மானிட அக்கறையில்லாத வாழ்விற்கு நாம் கொடுக்கப் போகும் பரிசு அது. சர்வதேச அரசியல் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் என்பது அதன் ஆக்டோபஸ் கரங்களை எங்கு விரிக்கும்? எப்போது தொடங்கும்? எவ்வாறு முடிக்கும்? என்பது வெகுஜன மக்களுக்குத் தெரியாது.

என்னுடைய எழுத்துக்களை ஆதரித்து தனிப்பட்ட முறையில் உரையாடிக்கொண்டுருப்பவர்களுக்கும், விமர்சனம் மற்றும் தங்களுடைய எழுத்துக்களுடன் இணைத்துக்கொண்டு கடத்திய கருத்துரையாளர்களுக்கும் எந்த வார்த்தையில் இங்கு எழுதிவைத்தாலும் நன்றியை தீர்க்க முடியாது. இடுகை உலக எந்த வட்டத்திற்குள்ளும் சிக்காமல் வந்தவனுக்கு வழிமொழிந்த வாழ்த்துரைத்தவர்களுக்கும் நன்றி.

ஏதோ ஒரு சமயத்தில் நிச்சயம் இறந்து விடத் தான் போகின்றோம். நாம் விட்டுச் செல்வது குடும்பத்திற்கான நலன் என்பதோடு சமூகத்திற்கான பங்களிப்பு என்பதான ஏதோ ஒன்றை அவரவருக்கு தெரிந்து வரையில், முடிந்த வரையிலும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இடுகைக்காக நீங்கள் உழைத்து உழைப்பு ஊருக்கு பயன்படுகிறதோ இல்லையோ உங்கள் வாரிசுகளுக்கு ஒரு காலத்தில் பயன்படக்கூடும். தலைமுறை இடைவெளியினால் விலகிப் போன விசயங்கள் உங்களைப் பற்றி உங்கள் எழுத்துக்கள் மூலம் நீங்கள் இல்லாத போதும் கூட புரியவைக்கக்கூடும். ஒவ்வொரு எழுத்தாளர்களின் தாக்கமும் என்னை வளர்த்தது. இன்று வரையிலும் எத்தனையோ பேர்கள் வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கையையும் அவர்கள் தான் அர்த்தப்படுத்திக் கொண்டுருக்கிறார்கள். பரபரப்புக்காக எழுதப்படும் அணர்த்தங்களை தவிர்த்துப் பார்த்தால் இந்த இடுகையென்பது உணர்ந்தவர்களுக்கு வாழ்நாள் பொக்கிஷம்.

ஈழத்தை அரசியல் பகடைக்காய் போல் தங்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்திக்கொண்டுருப்பவர்கள் மத்தியில் தன்னாலான அத்தனை தனிப்பட்ட நல்ல விசயங்களை மொழி,இனம்,மதம்,ஜாதி சார்பில்லாமல் உதவிக் கொண்டுருப்பவர்கள் அறிமுகமானது என்னுடைய எழுத்தின் வலிமை.

எத்தனை புத்தகங்கள் ஈழம் தொடர்பாக படித்தாலும் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு சிறிய இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. இன்று வரையிலும் வந்து கொண்டுருக்கின்ற அத்தனை விசயங்களிலும் அந்த இடைவெளி கவனமாக பாதுகாத்துக்கொண்டே தான் பயணிக்கிறது. இதுவே மிகுந்த ஆச்சரியமாய் இந்த தேடலை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் படித்த நூற்றுக்கணக்கான புத்தகங்கள் படித்து முடித்த போது என் மனதில் பல வித எண்ணங்களை உருவாக்கியது. அதனாலேயே நான் புத்தகத்திற்காக எழுதப்பட்ட வாசகங்கள் இப்போது இந்த சமயத்தில் என் மனதில் வந்து நிற்கின்றது. அதுவே மிகச் சரியானது என்று இன்னமும் என் உள் மனம் உரத்துச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.

இது தமிழர் என்றொரு இனத்தின் கதையோ, அவர்களின் கண்ணீர் வரலாற்றுச் சுவடுகள் மட்டுமல்ல. சர்வதேச சமூகத்தில், தங்களது அரசியல் வெற்றிக்காக, ஆளுமையை நிலை நாட்டுவதற்காக ஒவ்வொருவரும் எத்தனை தூரம் பயணிப்பார்கள் என்பதை நாம் உணர்வதற்காக தங்கள் வாழ்க்கையை இழந்து உலகத்திற்கென்று வாழ்ந்து காட்டிய இனம் தான் இலங்கையில் வாழ்ந்த தமிழினம்.

ஈழப்போராட்டம் என்பது இறுதியில் இன அழிப்பு போராட்டமாக மாறி ஒரு வருடத்தை கடந்து விட்டது. இன்னமும் பல கேள்விகள் என் மனதில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது.

புலிகள் புத்தர்கள் அல்ல. பெளத்த மதத்தை பின்பற்றுகிறோம் என்ற இலங்கை ஆட்சியாளர்களும் புனிதமானவர்கள் அல்ல. இப்போது பிரபாகரன் மறைந்து இருக்கிறார் அல்லது வீரமரணம் அடைந்து விட்டார் ஏதோ ஒன்று. புலிகளால் தான் வெகுஜன இலங்கை மக்களுக்கு இத்தனை துன்பங்கள் என்று இன்று உருவான “தைரியத்தை” வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டுருப்பவர்கள் ஒன்றை மட்டும் ஏன் எழுத மாட்டேன் என்கிறார்கள் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுருக்கின்றேன்.

புலிகள் இல்லை. பிரபாகரன் சர்வாதிகாரம் இல்லை. இப்போது இலங்கை முழுவதும் தமிழர்கள் விரும்பிய சுதந்திர ஜனநாயகம் தழைத்தோங்கி விட்டதா? ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கான உரிமையை, மாநில சுயாட்சியை, சம உரிமையை வழங்கி விட்டார்களா? ஓப்பாரி மூலம் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிய விசயங்களுக்கான தீர்வு அடிப்படைத் தமிழர்களுக்கு கிடைத்து விட்டதா? ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை நேரிடையாக கடைசி கட்ட பரபரப்புகளை காசாக்கிய கணவான்களின் சேவை மனப்பான்மை இன்று ஏன் அமைதியாக இருக்கிறது?

எங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற விடாமல் புலிகள் குரல்வளையை நெறித்துக் கொண்டுருந்தார்கள். உயிருக்கு பயந்து வாழ்ந்து கொண்டுருந்தோம்? என்று சொன்ன அத்தனை ஜனநாயகவாதிகளும் இப்போது ஒரே அணியில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை செய்கின்றார்களா? அவர்கள் அப்படி நிற்க முடியாததற்கு காரணங்கள் என்ன? ஒரு நூற்றாண்டு காலம் பெற்ற பாடங்கள் கூட ஏன் கற்றுக்கொடுக்கவில்லை?

இப்போது விரும்பிய ஜனநாயகம் கிடைத்து விட்டது. விரும்பிய வாழ்க்கையை எஞ்சியுள்ள தமிழர்களுக்கு அளிக்க முடியாமல் இன்னமும் ” தடுப்புக்குள்” வைத்திருக்கும் உங்கள் மக்கள் சேவையின் பலமும் பலவீனமும் இப்பொழுதாவது உங்களுக்கு புரிகிறதா தலையாட்டி சாமிகளே??????

காட்டிக்கொடுத்தவரும், சிங்களனுக்கு காலை பிடித்து சேவகம் செய்து கொண்டுருப்பவர்களும் இன்று தமிழர்களின் அரசியல் சார்பாளர்கள். அப்பாவி மக்களுக்கு யார் சார்பாளர்கள்?

தங்கள் வாழ்க்கையை காத்து அருளும் என்று அவதார உருவங்களை மட்டுமே நம்பி வாழ்ந்த அப்பாவிகள் இன்றும் என்றும் இனி ஈழத்தில் குனிந்தே வாழ வேண்டிய கூடார வாசிகள். ஜெயித்தது சிங்கள அரசியல் அல்ல. தமிழர்களுக்கு தெரியாத அரசியலும்.

புரியாத தமிழனின் குணாதிசியங்களை கீழே சொடுக்கி படித்து விட்டு மறந்து விடுவோம். இதுவும் கடந்து போகும்…………………………….

நாம் தமிழர்.

தேவியர் இல்லம். திருப்பூர்.

03.06.2010 (முதல் வருடம்)

சிவராசன் சுபா கூட்டணி அதிரடிப்படை இறுதிக்கட்டம்

http://deviyar-illam.blogspot.com/2010/03/blog-post_20.html

ஸ்ரீபெரும்புதூர் முதல் பெங்களூர் வரைக்கும்

http://deviyar-illam.blogspot.com/2010/03/blog-post_19.html

நாகபட்டிணம் டெல்லி வழி இராமேஸ்வரம்

http://deviyar-illam.blogspot.com/2010/03/blog-post_18.html

சிவராசன் வலைபின்னல்

http://deviyar-illam.blogspot.com/2010/03/blog-post_17.html