விதியோடு விளையாடு

விதியோடு விளையாடு
புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (48)
 மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள் (5)

தாத்தா நீங்க கையை கட்டியபடி வாயையையும் கட்டிக்கொண்டு பேசாம வக்கில் தொழிலையையும் பார்த்துருந்தால் இன்றைக்கு உங்களுடைய வழித்தோன்றல்கள் சந்தோசமாக இருந்துருப்பாங்க.  ஆனா நாங்க இப்படி வாழ்ந்துருப்பமான்னு தெரியாது? மகாத்மா காந்தியை கொலை செய்த முதல் முயற்சி முற்றிலும் தோல்வி. தோல்வி என்றால் கூட பரவாயில்லை. கூட்டத்தில் ஒருவன் மதன்லால் பாவா காவல் துறையினரிடம் பிடிபட்டு விட்டான். மற்ற ஆறு பேர்களும் மறைந்து விட்டனர். மதன்லாலை விசாரித்த அதிகாரிகள் அப்போதைய டெல்லி டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.டபிள்யூ.மெஹ்ராவுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்று மெஹ்ராவுக்கு கடுமையான ஜுரம். படுக்கையில் இருந்தார். அவர் முழுமூச்சுடன் இந்த விஷயத்தில் இறங்க தீர்மானித்தார்.

 ஆனால் அவர் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து முட்டுக்கட்டை உருவானது. அப்போதைய டெல்லி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜெ.சஞ்சீவி ஒரு அரசியல் சார்புள்ள அதிகாரி. “நான் ரிடையர் ஆவதற்குள் என் காரில் கொடி பறக்க வேண்டும் ” என்று பெரும்முயற்சிக்கு (?) பிறகு இந்த பதவியை பெற்றவர். ஆனால் எந்த பொறுப்பையும் முறைப்படி செய்யாமல் எல்லாவற்றையும் தனக்கு கீழே உள்ள மெஹ்ராவிடம் ஒப்படைத்து விட்டு அலங்கார பதவி போல் அற்புதமாக வாழ்ந்தவர்.
ஆனால் மெஹ்ரா மனதிற்குள் ஆச்சரியக்குறி, கேள்விக்குறி இருந்தபோதிலும் அத்தனையும் மீறி தினந்தோறு காந்தியின் பிரார்த்தனை நடக்கும் பிர்லா மாளிகைக்கு சென்று முடிந்தவரையிலும் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டார். அதே மறுநாள் காந்தியை சந்தித்து, கலவர மக்கள் கோபம், கட்டுக்கடங்காத கூட்டம், தனிப்பட்ட இயக்கங்களின் வெறி எல்லாவற்றையும் மேம்போக்காக சொல்லி “பாதுகாப்பை அதிகரிக்க எண்ணுகிறேன் ” என்றார் காந்திஜிக்கு கோபம் வந்து விட்டது. ” எனது பிரார்த்தனை கூட்டத்திற்க்கு காவல்துறை பாதுகாப்பா? கோயில்களில் நீங்கள் பாதுகாப்புக்கு காவல்துறை அனுப்புவீர்களா? என்றார்.
“பாபுஜி, கோயில்களில் குண்டு வீசுவதற்கு எவரும் இருப்பதில்லையே ” என்றார் மெஹ்ரா ” நான் இதற்கு ஒப்புக்கொள்ள முடியாது. என் பேச்சை மீறி நீங்கள் ஏதாவது செய்தால் நான் டெல்லியை விட்டு சென்றுவிடுவேன். உங்கள் மீது புகார் செய்வேன் ” பொருமித்தீர்த்துவிட்டார் காந்திஜி “பாபுஜி, உங்கள் அனுமதி இல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன். ஆனால் தினந்தோறும் நான் இங்கு வருவதற்கு நீங்கள் எனக்கு அனுமதி தரவேண்டும் ” ” தனிப்பட்ட மனிதர் என்ற முறையில் நீங்கள் வரலாம். ஆனால் சீருடையில் அல்ல ” என்றார் காந்தி.
 விதியோடு விளையாடு? தினந்தோறும் வந்து கலந்து கொண்டார்.

சட்டைப்பையில் வைத்திருக்கும் கைத்துப்பாக்கியில் அவரின் விரல்கள் தயார் நிலையில் இருந்தது. துப்பாக்கி சுடுவதில் மகா கெட்டிகாரரும் கூட. மேலும் காந்திஜிக்கு கொடுத்த வாக்கை மீறி 35 திறமையான காவலர்களை சாதரண உடையில் தினந்தோறும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார். மிகக்குறைவான கால அவகாசத்தில் கூட நாதுராம் கோட்ஸே, நண்பன் ஆப்தே அவர்களை கண்டு பிடித்து கைது செய்து இருக்கமுடியும். “நான் பார்த்துக்கொள்கிறேன் ” என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சஞ்சீவீ செய்ய வேண்டியதெல்லாம் பம்பாய் போலீஸை அழைத்து, பத்திரிக்கையின் பெயரையும், ஆசிரியரை, நண்பர்களையும் சொல்லி இருந்தாலே போதுமானது. ஆனால் அவ்வாறு செய்யாமல் இரண்டு காவலர்களை பம்பாய்க்கு அனுப்பி வைத்தார்.

சென்றவர்கள் கொண்டு செல்ல வேண்டிய எந்த முக்கியமான கோப்புகளையும் எடுத்துச் செல்லவில்லை(?). மேலும் இது குறித்து துப்பறியும் பிரிவு டெபுடி கமிஷனர் நகர்வாலாவிடம் அவர்கள் தெரிவிக்கவில்லை. பம்பாய் காவல்துறை அதிகாரிக்கு (ஜிம்மி நகர்வாலா) மொத்தமும் ஆச்சரியமாய் இருந்தது. வந்த இரு காவலர்களில் ஒருவர் சீக்கியர். மேலும் அவர்கள் அன்றைய பம்பாய் தீவிரவாதி என்று கருதப்பட்ட சீக்கியர் ஹோட்டலில் தங்கியிருந்ததும் அவருக்கு பிடிக்கவில்லை. ஒன்றும் சொல்லாமல் அவர்கள் இருவரையும் டெல்லிக்கு திருப்பி அனுப்பி விட்டார்.

பம்பாய் திரும்பி அந்த இரண்டு காவலர்களும் “முறைப்படி” அத்தனை விஷயங்களையும் தெரிவித்து விட்டோம் என்றனர். மதன்லால் இரண்டாம் நாள் வாக்குமூலத்தில் (54 பக்கம்) அத்தனையும் படம் வரைந்து பாகம் குறித்து கொடுத்து விட்டான். ஆனால் அதிகாரி சஞ்சீவி தானும் ஆர்வம் காட்டாமல், ஆர்வம் காட்ட வந்த மற்றொரு மூத்த அதிகாரியையும் அடக்கி விட்டார். மற்றொரு அதிகாரி பூனா குற்றப்பிரிவின் டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் யு.எச்.ராணா என்பவர்.

குற்றவாளிகள் அனைவருமே அவரது எல்லைக்குட்பட்டவர்கள். ஆனால் அவரோ கிடைத்த விபரங்கள் எல்லாவற்றையும் எவரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் பூனாவிற்கு சுற்று வழியில் செல்லும் (மிக மெதுவாக) பாசஞ்சர் ரயிலில் ஏறி 48 மணி நேரம் கழித்து பூனா வந்தடைந்தார். பம்பாய் டெபுடி கமிஷனர் நகர்வாலா தன்னுடைய தீவிரமான நடவடிக்கையின் காரணமாக விஷ்ணு கார்க்கரேயைப் பற்றிய விவரம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாட்கே என்பவனும் இதில் சம்மந்தம் உள்ளவன் என்பதை புரிந்து கொண்டார். இந்த இடத்தில் ஒரு ஆச்சரிய விதியின் திருவிளையாடல்?
 மொத்த விபரங்களை எடுத்துக்கொண்டு கார்கே வீட்டுக்கு சென்றபோது ” 20 நாட்களுக்கு முன் வௌியே சென்றவன் இன்னமும் வரவில்லை ” என்றனர் அருகில் இருந்தவர்கள். ஆனால் அதிகாரிகள் வந்து போன மறுநாள் கார்கே வீட்டுக்கு வந்தவன், முன் கதவை பூட்டி விட்டு பின்புற அறையில் எப்போதும் போல இருந்து கொண்டு புல்லட் புரூப் சட்டையை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தான். ஆனால் அதற்குப்பிறகு ஒரு தடவை கூட எந்த அதிகாரியும் கார்கே வீட்டுக்கு மறுபடியும் வந்து சோதிக்கவில்லை(?).

ஆயுதங்கள் சோதனையின் போது கார்கே வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி சேதாய்க்கு குறிப்பு கோப்பு சென்றது. அதைப்பார்த்து “ஏன் இன்னமும் கார்கே கைது செய்யப்படவில்லை ” என்று அவர் அனுப்பிய கோப்பு வெற்றிகரமாக பல துறைகள் வாயிலாக கடந்து ஆமாம் இருபது நாட்கள் கடந்து சம்மந்தப்பட்ட துறைக்கு வந்தது(?)

“மதன்லால் பாவா வாக்குமூலப்படி இந்து மகாசபைத் தலைவர் வீர் சாவர்க்கரே இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. அவரைக் கைது செய்ய அனுமதி கொடுங்கள் ” என்று நகர்வாலா, மொரார்ஜி தேசாய் அவர்களிடம் கேட்டார். “உனக்கென்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா? மாகாணம் முழுவதும் தீப்பற்றி எரிவதை நீ பார்க்க விரும்புகிறாயா? ” என்று கோபத்துடன் கேட்டார் மொரார்ஜி தேசாய்.

 பெரும்புதூர் பொட்டல்காட்டில் கிடைக்காத குறிப்புகளைக் கொண்டே முன்னாள் அதிகாரி கார்த்திகேயன் ஒரு கள்ளிக்காட்டு இதிகாசமே படைக்கமுடிந்த தனி மனித ஆளுமைப்பண்பு கொண்ட புனித பூமியான இந்த இந்தியாவில், காட்டு மலரை நுகர முடியாத அல்லது நெருங்க முடியாத அதிகார வர்க்கமும் கொண்ட புதிரான பூமியும் இது தான்.
Advertisements

6 responses to “விதியோடு விளையாடு

 1. ஜோதிஜி. தேவியர் இல்லம்.

  யாரைக் குற்றம் சொல்ல ? தெரியவில்லை.

  விதியின் விளையாட்டு?

 2. ஜோதிஜி. தேவியர் இல்லம்.

  எனக்குத் தெரியவில்லை பிரபாகர்? ஏன் இந்தப் பிரச்சனை இத்தனை நாளும் இல்லாமல் உருவானது? எப்போதும் போலத் தான் தட்டிக்கொண்டுருந்தேன்.
  வீரம் விளைஞ்ச மண் க்கு பிறகு அத்தனை என்னுடைய வீரமும் வடிய வைத்து விட்டது. கொலை கொலையாய் காரணமாம் உண்மையிலேயே என்னை கொலை செய்து விட்டது. ஆனால் மொத்தத்தில் விதியோடு விளையாட்டு காட்டி நண்பர் உணர்த்தியதை போல எழுத்துக்களும் உணர்த்தி விட்டது தான் உண்மை. ஒரே காரணம் பீடர் மூலம் தொடர்ந்து கொண்டுருக்கும் கூட்டம் பயமுறுத்திக்கொண்டுருப்பதால், வந்து இணையும் நட்புக்கூட்டமும் நிதானிக்க வைத்து விட்டது. இவர்கள் விரும்பும் அளவிற்காவது நான் தகுதியானவனாக வளர்த்துக்கொள்ள இனியாவது முயற்சிக்க வேண்டும்.

 3. ஜோதிஜி. தேவியர் இல்லம்.

  உங்களுக்காவது உங்கள் மாமா காந்தியைப்பற்றி சொல்லியிருந்தார். ஆனால் நான் காந்தி படத்துக்கு பள்ளியில் இருந்து அழைத்துச் சென்ற போது வெள்ளை ரோஜா பார்த்து அடி வாங்கியவன். அதற்கு மேலும் ஐந்து பத்து மதிப்பெண்களுக்கு படித்த காந்தி கொள்கைகள். இது தான் நிதர்சனம். வெட்கப்படவில்லை. ஆனால் அவரை உணர்வதற்கு எடுத்துக் கொண்ட காலம் தான் சற்று அதிகம். வீர் சாவர்க்கர், நேதாஜி, காந்திஜி மூன்று திசைகள், மூன்று கொள்கைகள், மூன்று வழிமுறைகள். ஆனால் மூன்று பேருமே நாம் அனைவருமே நாலாம்தர மக்களைப்போல எதிர்காலத்தில் வாழ்ந்து விடக்கூடாது என்பதாக அவர்கள் வாழ்ந்து முடிந்த வாழ்க்கை எனக்கு உணர்த்துவதாக தெரிகிறது. அதே போல் அவர்கள் மூவரின் இறப்பும் மூன்று விசயங்களை உணர்த்துகிறது?

 4. இவ்வளவு நடந்திருக்கிறதா முதல் கொலை முயற்சிக்கு அடுத்து ?. மிக நுட்பமான நானறியாத தகவல்கள். காந்தி கொலையில் காந்தியே சம்மந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரின் பிடிவாதம், அவருக்கு உண்டான பாதுகாப்பை குறைத்திருக்கிறது. அரசின் எல்லா மட்டங்களிலும் தவறு நடந்திருக்கிறது. பெரும்புதூரிலும் பாதுகாப்பை அலட்சியப்படுத்துதல் நடந்தது. யாரைக் குற்றம் சொல்ல ? தெரியவில்லை.

 5. தொழில்நுட்ப கோளாறுகள் சரியாகிவிட்டனவா?

  பிரபாகர்.

 6. அய்யா,

  தொழில்நுட்பக் கோளாறுகள் சரியாகிவிட்டன என எண்ணுகிறேன்.

  எந்த ஒரு மனிதன் என்னை கொள்வதற்கு தன்னையே தியாகம் செய்ய நினைக்கிறானோ அப்போதே என்னை காப்பாற்ற இயலாது… ஒரு அமெரிக்க ஜனாதிபதி சொன்னது.

  காந்தியும் வெளுத்ததெல்லாம் பால் என நம்பி, சுயநலம் சிறிதும் இல்லா மனிதராய் இருந்து அரசியல்வாதியாய் இல்லாமல் இருந்துவிட்டார்.

  என் மாமா காந்தியின் மரணத்தை பற்றி சொல்ல கேட்டிருக்கிறேன், ஆனால் இவ்வளவு தெளிவாய் இப்போதுதான் படிக்கிறேன். நன்றி அய்யா.

  பிரபாகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s