ஒழுக்கமானவன் ஆனால் உயிரை பறித்தவன்

நாதுராம் கோட்ஸே ஒரு பார்வை?
மகாத்மா காந்தி வாழ்க்கை-கொள்கை-இறப்பு சில உண்மைகள் (2)
புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (45)

நாதுராம் வினாயக கோட்ஸே பிற்காலத்தில் உலகப் புகழ் பெற்ற ஒரு தலைவரை சுட்டுக் கொல்லும் கொலைகாரனகாக மாறப் போகிறான் என்பதற்கு ஒரு அடையாளமும் இருந்திருக்கவில்லை.

நல்ல குடும்பத்தில் பிறந்தவன், நல்லவன், பெற்றோருக்கு அடங்கிய பிள்ளை. எந்த வம்பு தும்புக்கும் போகாதவன். அடிக்கடி காபி (?)குடிக்கும் பழக்கத்தை தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் மேல் படிப்புக்கு செல்ல முடியாமல் பல வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்தி, கிறிஸ்துவ மிஷினரி மூலம் தையல் வேலைக்கான பயிற்சி பெற்று கடைசி வரை அந்த தையல் தொழில் செய்து வந்தவன்.

ஆனால் சிறு வயது அரசியல் என்பது அவனுக்கு ஒரு சுவாரசியமான விஷயம். மகாத்மா காந்தியின் கொள்கையினால் கவரப்பட்டு 1937ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றவன். ஆனால் சிறையிலிருந்து வௌியே வந்தவுடன் அவனது மொத்த சிந்தனையிலும் மாற்றம் உருவானது. வீர் சாவர்க்கர் பேச்சைக் கேட்டு, கிரகித்து தன்னை ஒரு தகுதியான அரசியல் பார்வையாளனாக, நோக்கராக மாற்றிக்கொண்டான்.

அதுவும் மிக குறுகிய கால கட்டத்திற்குள். ஆனால் முட்டாள் தனமான பாமரத்தனமாக தொண்டன் அல்ல. எது குறித்தும் தீர்மானமான கொள்கை இருந்தது. தான் எப்போதும் படிக்கும் ஸ்லோகங்கள் போல வீர் சாவர்க்கரின் பேச்சை அத்தனை அட்சரம் சுத்தமாக உள்வாங்கி வைத்து இருந்தான். வெகு விரைவிலேயே நல்ல எழுத்தாளனாக, ஆவேசமான பேச்சாளனாக உருவாகியிருந்தான்.

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தான் சந்தித்த நாராயண ஆப்தே என்ற நண்பன் மூலம் வீர் சாவர்க்கரின் உள்வட்டத்தில் நுழைந்து ” தி அக்ரானி ” என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார்கள். கோட்சே தான் ஆசிரியர்.
1947ல் இந்திய பிரிவினையை எதிர்த்து வீர் சாவர்க்கரைத் தலைவராகக் கொண்ட இந்து மகாசபை (1947 ஜுலை 3) கறுப்பு தினமாக அனுசரித்து வௌியிடப்பட்ட மிகத் தீவிரமான கட்டுரைகளால் அன்றைய இடைக்கால பம்பாய் சர்க்காரால் பத்திரிக்கையை தடை செய்யப்பட்டது. ஆனால் அதிகார வர்க்கத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ் தீவிர ஆதரவாளர்களால் இந்த பத்திரிக்கை “ஹிந்து ராஷ்டிரா” என்கிற பெயரில் பத்தே (?) நாட்களில் மீண்டும் வௌிவந்தது. இந்த பத்திரிக்கைக்காக சொந்தமாக அச்சகம் வைத்துக்கொள்ள வீர் சாவர்ககர் அன்றைய தினம் 15,000 கொடுத்து உதவினார்.

கோட்சே சுத்தமான பிரம்மச்சாரி. சிறந்த பழக்கவழக்கங்களைக் கொண்ட நேர்மையான மனிதன். ஆனால் பத்திரிக்கையின் பதிப்பாளரான நாராயண ஆப்தேவோ மது, மாது,விருந்து,கேளிக்கை போன்ற அத்தனை சகவாசங்களையும் ஒருங்கே பெற்றவன்.

தான் ஆசிரியராக தொடங்கிய பத்திரிக்கையின் தொடக்க விழாவில் வந்து கலந்து கொண்ட அத்தனை பேர்களிலும் மிக முக்கியமான மற்றொரு நண்பன் விஷ்ணு கார்கே. அஹமத் நகரில் லாட்ஜ் என்று குடியிருப்பு வளாகம் வைத்திருந்த உரிமையாளர். விஷ்ணு கையில் வைத்திருந்த மற்றொரு நபர் மதன்லால் பாவா என்ற 20 வயது இளைஞன். பாகிஸ்தான் பிரிவினையின் போது உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்தவன். முஸ்லீம்களை விஷம் போல் வெறுத்தவன். அன்றைய நாட்களில் அஹமத் நகரில் நடந்த ஒரு முஸ்லீம் ஊர்வலத்தில் வெடிகுண்டு வீசிவிட்டு வந்தவனை விஷ்ணு கார்கே அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வந்தான்.

புதிய அச்சகத்தின் தொடக்க விழாவுக்கு வந்தவர்கள் மத்தியில் கோட்சே பேசினான்.

” என் பிணத்தின் மீதுதான் இந்தியப் பிரிவினை நடைபெறும் என்றார் காந்திஜி. இப்போது பிரிவினை ஏற்பட்டு விட்டது. ஆனால் காந்தி இன்னமும் உயிரோடு தானே இருக்கிறார். துன்பங்களை கொடுமைகளை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் தான் உண்மையிலேயே வெற்றியாளர்கள் என்கிறார். இது என்ன கொடுமை? பாதிக்கப்பட்டவர்களில் என் அன்னையும் ஒருவராக இருக்கலாமே? எதற்காக பொறுத்துக்கொள்ள வேண்டும்? “

” எனது தாய் நாடு கூறு போடப்பட்டு விட்டது. பினம் தின்னிக் கழுகுகள் போன்ற பேய்கள் ஹிந்துப் பெண்களின் மாமிசத்தைக் கிழித்து அவர்களது கற்பைச் சூறையாடுகின்றன. திறந்த வௌி மைதானங்களில் இவையெல்லாம் நடக்கின்றது. காங்கிரஸ் பேடிகள் மௌனமாக இந்தக் கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களது ஆன்மீகத் தலைவரான காந்தி, “பொறுத்துக்கொள்ளுங்கள்” என்கிறார். எத்தனை காலத்திற்கு நாம் இப்படி பொறுத்துப் பொறுத்து வாழ்வது?”

” எல்லாவற்றையும் ஒத்திவைத்து விட்டு அல்லது அடியோடு உதறிவிட்டு ஒரே ஒரு வேலையில் நாம் இனிக் கவனம் செலுத்த வேண்டும். ஹைதராபாத்தில் கொரில்லாப் போர் நடத்தி நிஜாம் மன்னரைக் கொல்வது, ஜின்னா சாகிப் ஜெனிவாவுக்கு வந்தால் அங்கே சென்று அவரை தீர்த்துக் கட்டுவது இவையெல்லாம் இப்போது எனக்கு முக்கியமில்லா இரண்டாம் தர விஷயங்களாகத் தோன்றுகிறது. இப்போது நமது ஒரே இலட்சியம் காந்தியைக் கொல்லுவதுதான். ஆப்தே அதற்கான ஏற்பாடுகளை நாம் இன்றே ஆரம்பிக்க வேண்டும். இதில் தாமதம் என்பதே கூடாது ” என்றான் கோட்ஸே.

” ஆம் நீ கூறுவது தான் சரி. உடனே செய்வோம் என்றான் நாராயண ஆப்தே.
உங்கள் திட்டங்கள் அத்தனையும் திகட்டி விட்டன. திருத்தி எழுத வேண்டிய தீர்ப்புகளுக்காக காத்திருக்கும் மக்கள் அதற்குள் திருந்திவிட்டால் நீங்கள் திண்டாடிவிட மாட்டீர்களா?

Advertisements

15 responses to “ஒழுக்கமானவன் ஆனால் உயிரை பறித்தவன்

 1. ஜோதிஜி. தேவியர் இல்லம்.

  நன்றி ராபின். திருப்பூர் மணி

 2. ஜோதிஜி. தேவியர் இல்லம்.

  செவி மடுக்கலைன்னு வைங்க. இங்கு தினமும் செவிட்டுல அறை விடுவதற்கு ஒரு நாயகன் உட்கார்ந்து வாச்சு பண்றாரு? என்ன செய்யுறது? திருந்தனுங்றது என் விதி. திருத்தனுங்றது அவரோட விதி?

 3. படிப்பதற்கு சிறிது கடினமாக இருந்தாலும், தகவல்களுக்காக அதை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். என் கோரிக்கைகளுக்கு செவிமடுத்ததற்கு நன்றி. அதனால் உங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருந்துகிறேன்.

 4. திருப்பூர் மணி Tirupur mani

  நல்ல தகவல்!

 5. //கிறிஸ்துவ மிஷினரி மூலம் தையல் வேலைக்கான பயிற்சி பெற்று கடைசி வரை அந்த தையல் தொழில் செய்து வந்தவன்.// – புதிய தகவல்!

 6. ஜோதிஜி. தேவியர் இல்லம்.
 7. ஜோதிஜி. தேவியர் இல்லம்.

  செந்தில் உங்கள் வலைதளத்தில் இன்று நீண்ட நேரம் இருக்க வாய்ப்பு அமைந்தது. அத்தனையும் பொருள் பொதிந்த அர்த்தமான வார்த்தைகள். விகடனில் பணிபுரிகிறீர்களா? வலை தளத்தின் மேம்பட்ட தொழில் நுட்பம் என்னை திணறடிக்க வைத்துவிட்டது. விமர்சனம் என்பது எவ்வாறு உங்களிடம் வரும்? நுட்பமும் பயமுறுத்துகிறது. உங்களின் உழைப்பும் வியக்க வைக்கிறது. நன்றி செந்தில்.

 8. ஜோதிஜி. தேவியர் இல்லம்.

  பொறுமையாக தேவையான நேரம் எடுத்துக்கொண்டு எழுதுங்க…

  பொருள் பொதிந்த அர்த்தமான வார்த்தைகள்.

 9. ச.செந்தில்வேலன்(09021262991581433028)

  ஜோதிஜி. 62 ஆண்டுகளுக்கு முன் நடந்த விசயங்களைக் கண் முன் நிறுத்துகிறது உங்கள் கட்டுரை. தொடருங்கள். நன்றி.

 10. நிகழ்காலத்தில்...

  \\நீண்ட நாட்களாக மனதில் உறுத்திக்கொண்டுருந்த இலங்கை குறித்த நீண்ட தொடர் ஓட்டம் கவனத்தில் அனுதினமும் ஆட்சி செலுத்திக்கொண்டுருப்பதால் மேலும் அது பெரிய சிக்கலான சமாச்சாரங்கள் என்பதால் மிகக் கவனமாக ஒரு புதிய பாதையில் உங்களுக்கு அறிமுகப்படுத்த முயற்சித்துக்கொண்டுருக்கின்றேன்.\\

  எதிர்பார்க்கிறேன் நண்பரே..

  பொறுமையாக தேவையான நேரம் எடுத்துக்கொண்டு எழுதுங்க…

  அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கட்டுரை நன்றாக அமைய..

  அப்புறம் டெம்ளேட் நன்றாக உள்ளது :))

 11. ஜோதிஜி. தேவியர் இல்லம்.

  திருப்பூர் போன்ற இடங்களில் மின்தடை என்பது எத்தனை கொடுமையானது என்பது நாகாவுக்கு தெரியும். படம் என்பது எத்தனையோ கோப்பில் உள்ளது. ஆனால் அதற்கான நேரத்தில் செலவழித்தால் அது மேலும் மேலும் சிக்கலில் தான் என்னைக்கொண்டு போய் விடுகிறது.

  நாகாவும் சுந்தரும் என்னை திருத்த வேண்டும் என்று எத்தனையோ முயற்சித்தார்கள். காரணம் தினந்தோறும் ஒன்று தேவைதானா என்று.

  மின்அஞ்சல் வசதி அதற்காக எடுத்துக்கொள்ளும் நேரத்தைக்கூட நான் அவகாசம் கொடுக்க மறுப்பதால் ஏராளமான விஷயங்கள் நாகாவிற்கு என்னால் தினந்தோறும் பிரச்சனைகள்.

  நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். நீங்கள் விமர்சித்த இந்த கோட்ஸே எழுதியே 25 நாட்கள் ஆகிவிட்டது. அதை இடுகையில் மாட்டும் போது அல்லது நான் மாட்டியதை நாகா சரியான முறையில் கொண்டு செல்லும் போது இது போன்ற தொழில் நுட்ப கோளாறு உருவாகி விடுகின்றது.

  உண்மை. நான் விரும்பக்கூடிய சில தளங்கள் இந்த பாரா பத்தி பிரிக்காத கொடுமையில் ஏற்கனவே நீண்ட நேரம் கணிணியில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருப்பவனுக்கு மேலும் கண்களை கெஞ்ச வைக்கின்றது.

  நீண்ட நாட்களாக மனதில் உறுத்திக்கொண்டுருந்த இலங்கை குறித்த நீண்ட தொடர் ஓட்டம் கவனத்தில் அனுதினமும் ஆட்சி செலுத்திக்கொண்டுருப்பதால் மேலும் அது பெரிய சிக்கலான சமாச்சாரங்கள் என்பதால் மிகக் கவனமாக ஒரு புதிய பாதையில் உங்களுக்கு அறிமுகப்படுத்த முயற்சித்துக்கொண்டுருக்கின்றேன்.

  சகிப்புத்தன்மையில் எத்தனையோ விஷயங்களை பொறுத்துக்கொண்டு வாழும் இந்தியர் நீங்கள். என்னையும் பொறுத்து மன்னியுங்கள் நண்பரே.

 12. கோட்ஸ்சே பற்றி முதல் முறையாக படிக்கிறேன். அருகிலிருந்தது போல இருந்தது.

  சில வேண்டுகோள்கள், நீங்கள் செவிகொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

  1. கோட்ஸ்சே படத்தை இணைத்திருக்கலாம். படிக்கும் போது படத்தை பார்த்து படித்தால் அதன் வீரியம் அதிகமாகும்.

  2. நீங்கள், எழுத்துக்களை சிறு சிறு பத்திகளாக பிரித்து எழுதினால், படிப்பவர்களுக்கு மேலும் எளிதாக அமையும்.

 13. ஜோதிஜி. தேவியர் இல்லம்.

  ஒரு முறை நாகாவை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி பிரபாகர்.

 14. //பொறுத்துக்கொள்ளுங்கள்//

  இன்றும் கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எவ்வளவுதான் பொறுத்துக்கொள்வது? எதிர்ப்பினை காட்டினால்தானே வரும் விளைவின் வீச்சத்தியாவது குறைக்கலாம்.

  அருமை சார். வரலாற்று நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்துகிறீர்கள்.

  பிரபாகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s