விடியும் வரை காத்திரு

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (42)

நல்ல சுகவாசி. எந்த நோக்கமும் இல்லாமல் தான் உண்டு தன்னுடைய களிப்பு ராஜ்யம் உண்டு என்று வாழ்ந்தவர் தான் காஷ்மீர் மன்னர் ஹரிசிங். உடல் என்பது மண்ணில் போய்விடும். போவதற்குள் இந்த உடம்புக்கு தேவைப்படும் அத்தனை சுகத்தையும் அளித்து விட வேண்டும் என்பதில் அத்தனை ஆர்வமாய் அக்கறையாய் வாழ்ந்தார். துர்கா பூஜை நடந்து கொண்டு இருக்கும் போது இருளில் மூழ்கியதைக் கண்டு தான் தான் மனதில் கண்டுகொண்டுருந்த கனவில் இருந்து விழித்து நிஜ உலகத்துக்கு வந்தார்.

கலவரத்தை உருவாக்குவதற்காக உள்ளே நுழைந்த பத்தான்கள் வெறித்தனமான கூச்சலுடன் முதன் முதலில் மஹிரா மின் உற்பத்தி நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து முன்னேறிக்கொண்டுருந்தார்கள். தகர்க்கப்பட்ட அடுத்த நொடியில் ஷ்ரீநகர் வரையிலான பிரதேசங்கள் இருளில் மூழ்கின. பாகிஸ்தான் எல்லையிலிருந்து லடாக் வரையிலும் சீன எல்லை வரையிலும் எல்லா விளக்குகளும் அணைந்து போயின.

அன்றிரவே (1947 அக்டோபர் 24) ஜீலம் நதி பாலத்தின் வழியாக லாரிகளிலும், டிரக் மூலமாகவும் காஷ்மீர் மாநிலத்திற்குள் உள்ளே பிரவேசித்தனர். ஷ்ரீநகர் உள்ளே வர 20 கிலோ மீட்டர் வரைக்கும் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் இடையில் பார்த்த அத்தனை அலுவலகங்களையும் உடைத்து முன்னேறிக்கொண்டுருந்தனர். தலைமை தாங்கி வந்த தலைவனுக்கு (சைரப் ஹயாத்கான்) மிகுந்த சந்தோஷம். நாளை காலை மன்னரின் “படுக்கையறை” யில் நுழைந்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டுருந்தவன் அருகில் இருந்த ஒருவரையும் காணாமல் திடுக்கிட்டு விட்டான்.

காரணம் அவனுடைய தலைமையில் வந்த அத்தனை பத்தான்களும் அருகில் இருந்த நகருக்குள் (முசாபர்பாத்) புகுந்து கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டனர். அத்துடன் அவர்களின் தனிப்பட்ட திறமையான கற்பழிப்பு. அந்த சிறுநகரமே அமளிதுமுளி.

ஆனால் இந்த இடத்தில் தான் விதியின் திருவிளையாடலை நாம் கவனிக்க வேண்டும்.

திட்டப்படி வந்த மொத்த கூட்டமும் காலையில் மன்னர் மாளிகையில் உள்ளே புகுந்து இருந்தால் ஒரு வேளை அன்றே இன்றைய இந்திய காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைந்து இருந்து இருக்கக்கூடும்.

மற்றொரு ஆச்சரியம். பத்தான்கள் உள்ளே நுழைந்து 48 மணிநேரம் கழித்து இந்தியாவின் தலைமை பீடத்துக்கு தகவல் கிடைத்தது. இதிலும் விதியின் ஆச்சரியம்?

அப்போது இந்திய ராணுவத்தின் உதவித் தலைமைத் தளபதியும் (லெப்டினென்ட் ஜெனரல் ராப் லாக் ஹார்ட்) பாகிஸ்தான் தலைமை தளபதி (சாண்ட் ஹர்ஸ்ட்) ராணுவ கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.

இருவரும் பறிமாறிக்கொண்ட விஷயங்கள் மவுண்ட்பேட்டன் பிரபு மூலமாக பிரதமர் நேருவுக்கு வந்து சேர்ந்தது. அவர்கள் இருவரின் நோக்கம் ராஜ துரோகம் என்ற நிலைமைக்குள் வந்தாலும் வளரத்துடிக்கும் இரண்டு சகோதர்களுக்கிடையே விரோதம் எதுவும் வளர்ந்து விடக்கூடாது என்ற ஒரே நல்ல எண்ணம். தலைவர்களுக்கு இல்லாத எண்ணம்.

மவுண்ட் பேட்டன் உத்தரவின்படி மன்னர் ஹரிசிங்கை சென்று பார்த்தவர்கள் மூன்று பேர்கள்.

வி.பி.மேனன். இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சாம் மானெக்ஷா மற்றொருவர் விமான படையின் உயர் அதிகாரி.

பல மணிநேர பேச்சு வார்த்தைக்கு பிறகு ஹரிசிங் இணைய ஒப்புதல் தெரிவித்துவிட்டு செய்த உடனடி நடவடிக்கை என்ன தெரியுமா? முடிந்த வரைக்கும் அத்தனை செல்வங்களையும் பல டிரக் மூலம் ஜம்முவில் உள்ள மற்றொரு மாளிகைக்கு கொண்டு போய் சேர்த்தது. அவருக்கு புரிந்து விட்டது. எல்லாமே கை மீறி விட்டது.

ஒப்புதல் கிடைத்ததே தவிர மன்னரிடம் இருந்து முறையான கையெழுத்துப் போட்ட பத்திரம் கைக்கு வரவேண்டும். காரணம் மன்னர் தன்னுடைய 17 மணி நேர பயணத்துக்குப் பிறகு கொண்டு போன அத்தனை செல்வங்களையும் மற்றொரு மாளிகையான ஜம்முவில் நுழைந்து தன்னுடைய பாதுகாப்பான அறைக்கு உள்ளே சென்றார். காலம் முழுமையும் காமத்துக்கு ஒப்படைத்த மன்னர் உள்ளே உறங்கச் சென்ற போது தன்னுடைய உதவியாளரிடம் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா?

“காலையில் டெல்லியில் இருந்து வி.பி.மேனன் வந்தால் என்னை எழுப்பு. இல்லாவிட்டால் தூக்கத்திலேயே என்னை சுட்டுக்கொன்று விடு “.

காரணம் இந்தியா இந்த சமயத்தில் உதவாவிட்டால் தன்னுடைய நிலைமை என்ன ஆகும் என்று ஏற்கனவே உணர்ந்து வைத்துருந்தார். மன்னர் குறிப்பிட்டு சொல்லியிருந்த அந்த நேரத்திற்குள் விபி மேனன் போய் கையெழுத்து வாங்கி வர, ஒப்புதல் பெற்ற துணிவுடன் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பத்தான்களை ஒட்ட நறுக்க இறங்கியது.

தொடக்கத்தில் இந்திய ராணுவம் பெற்ற வெற்றி எதிர்பாரதது. காரணம் வந்த பத்தான்கள் அத்தனை பேரும் கொள்ளை அடித்து முடித்தவுடன் கண்களுக்கு தென்பட்ட கன்னியாஸ்திரி ஆலயத்துக்குள் புகுந்தனர். அத்தனை வௌிநாட்டு பெண்களை நாசம் செய்தனர். மொத்தத்தில் வந்த நோக்கமே அவர்கள் மண்டையில் உரைக்கவில்லை. இதற்கிடையில் ஜின்னா அத்தனையும் பார்த்து விட்டு, அதிக கோபத்துடன் இராணுவ வீரர்களை பத்தான்கள் போல் வேடமிட்டு உள்ளே இறக்கி விட பல மாதங்கள் போர் நீண்டது. ஐக்கிய நாட்டு (1948) தலையீட்டின் பேரில் கடைசியில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. போர் முடிவுக்கு வந்த போது காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவிடமும், மேலே ஜில்ஜிட்டைச் சுற்றியுள்ள வடக்குப் பகுதிகள் பாகிஸ்தானிடமும் இருந்தன.

மன்மத மன்னர். நோக்கமில்லா வாழ்க்கை. தீர்க்கமில்லா சிந்தனைகள். துன்பங்கள் என்றாலும் மழுங்கிப் போன மரமண்டைக்குள் ஏறாத ஏராளமான காரணங்கள். காமம் என்பதை வாழ்க்கை தத்துவமாக கொண்டவர் காலனிடம் தன் உயிரை தானமாக கொடுக்க முன்வந்தவர். காரணம் பயம். சிக்கினால் சிதைத்து விடுவார்கள். அன்று புள்ளி. தொடங்கி வைத்த மன்னர் இன்று இல்லை.

ஆனால் விடியல் வராமல் தொடர்ந்து கொண்டுருக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கிடைக்கும்?

இத்துடன் இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது என்று நீங்கள் நினைத்தால் அய்யோ பாவம். ?

அப்படி என்றால் மகாத்மா காந்தியடிகள் இயற்கையாகத் தானே இறந்து போயிருக்க வேண்டும். ஏன் சுட்டுக்கொன்றார்கள்????????

காமம் தின்ற உடம்பு என்பதால் கரையான்கள் தான் வெறுக்குமா? மிதமிஞ்சி அனுபவித்த சந்தோஷம் தலைவனுக்கு. ஆனால் மாண்டவர்கள்?

தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625

http://deviyar-illam.blogspot.com/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s