இருட்டில் தொடங்கிய அசிங்கங்கள்

இருட்டில் தொடங்கிய அசிங்கங்கள்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (41)

குழந்தைகளுக்கு வாழும் காலத்திலும் சரி, வாழ்ந்த காலத்திற்குப் பிறகு மாமா என்றழைக்கப்பட்ட நேருவின் சொந்த பூமி காஷ்மீர். ஆனால் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பக்கூடிய பூமி காஷ்மீர். அல்ல சொர்க்க பூமி. குறிப்பாக அன்று வாழ்ந்த அத்தனை வௌ்ளையர்களும் சிம்லாவைப் போல காஷ்மீர் மேல் அத்தனை அலாதிப் பிரியம். இங்கு வர்ணனைகள் தேவையில்லை. காரணம் இப்போது நாம் பள்ளத்தாக்கில் பயணத்தை தொடங்கப் போகிறோம்.

எப்படி இருந்தாலும் பெரும்பான்மை முஸ்லீம் மக்களின் அடிப்படையில் காஷ்மீர் என்பது பாகிஸ்தான் உடன் இணைந்து விடும் என்று கனவில் வைத்து இருந்த ஜின்னாவுக்கு அன்று ஆண்டு கொண்டுருந்த இந்து மன்னர் ஹரிசிங் “உள்ளே நுழைய அனுமதி இல்லை ” என்றதும் முகம் ஜிவுஜிவு என்று ஆகிப்போனது.

அதிக சுய கௌரவம் பார்க்கும் ஜின்னாவைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் அவரைவிட அவருடைய அடிப்பொடிகள் துள்ளிக்கொண்டு இருந்தார்கள். மானம் போச்சு, மரியாதையெல்லாம் போச்சு என்று மைக் செட் போட்டு கத்தி தீர்க்காத குறைதான். செப்டம்பர் மாத இறுதியில் (லாகூர்) லியாகத் அலிகான் முக்கிய நபர்களைக் கொண்டு ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அலசப்பட்ட ஒரே விஷயம். மன்னர் ஹரிசிங்கை கவிழ்த்து விட்டு உடனடியாக பாகிஸ்தான் உடன் காஷ்மீரை இணைத்துவிட வேண்டும்.

உள்நாட்டுப் போரை தூண்டுதல், இராணுவ கலவரம், மக்களை தூண்டுதல் என்று ஏராளமான விஷயங்களை யோசித்து கடைசியில் சரியென பட்டது தான் உள்ளே மலைவாசிகளாக (பத்தான்கள்) வாழ்ந்து கொண்டுருப்பவர்களை தூண்டி விட்டு உள்ளே அனுப்புவது. காரணம் இது தான் எளிதில் சாத்யமாகக்கூடியதும் கூட. அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கத் தேவையில்லை. பணம் மட்டும் போதும். முரட்டுப் புத்தியில் முழுக்க முழுக்க மூர்க்கத்தனம். படிப்பறிவு என்பதே இல்லாத அவர்களின் மொத்த நோக்கமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இன்னும் பல.

ஏற்கனவே பேசி வைத்த மாதிரி இது “புனிதப் போர் ” என்று அவர்களிடம் பரப்பியாகிவிட்டது. தேவையான ஆயுதங்கள் ஒரே இடத்தில் குவித்து வைத்தாகி விட்டது. ஆனால் அன்றைய வடமேற்கு எல்லைப்புற கவர்னர்க்கு (சர்.ஜார்ஜ் கன்னிங்காம்) சில நாட்களாக ஒரே குழப்பம். ” ஏன் இந்த மலை ஜாதி மக்கள் அல்லாஹு அக்பர் என்று கத்திக்கொண்டு அதிகமாக நடமாடிக்கொண்டு இருக்கிறார்களே ” என்று.

காரணம் அங்கு இருந்த அன்றைய வௌ்ளை அதிகாரிகளுக்கு தெரிந்து விடக்கூடாது என்று மேலிட உத்தரவு. அதற்கும் காரணம் இருக்கிறது. அன்றைய பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரியும், இந்திய ராணுவ உயர் அதிகாரியும் ஒரே வகுப்புத் தோழர்கள். ராணுவ கோட்பாடுகள் என்னதான் சொல்லிக் கொடுத்து இருந்தாலும் வௌியே வந்து விட்டால் சிக்கல் தான். எனவே தான் கவனமாக காய் நகர்த்தப்பட்டது.

அன்றைய பாகிஸ்தான் ராணுவ தளபதி (ஜெனரல் பிராங்க் மெஸர்விக்) அவசரமாக இங்கிலாந்து கிளம்பிக்கொண்டு இருந்தார். காரணம் முதல் முறையாக வாங்கப்பட்ட ஆயுத கொள்முதல் இன்னமும் வந்து சேராத காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு. அவர் அன்றைய பாகிஸ்தான் பிரதமர் லியகாத் அலிகானிடம் வந்த தகவலின் அடிப்படையில் கேட்ட போது ஒரேடியாக மறுத்தார் லியகாத் அலிகான்.

1947 அக்டோபர் மாதம் எப்போதும் போல கொண்டாடப்படும் துர்கா பூஜையை தன்னுடைய தர்பாரில் இருந்து மன்னர் ஹரிசிங் உற்சாகப் பெருக்குடன் ரசித்துக்கொண்டுருந்தார். நன்றாக கவனிக்க பயபக்தியுடன் அல்ல. காரணம் 1847 ஆம் ஆண்டு அன்றைய பணத்தின் மதிப்பின்படி (அறுபது லட்சம் ரூபாய்) வௌ்ளையர்களிடம் இருந்து மன்னர் ஹரிசிங்கின் முப்பாட்டனார் வாங்கியிருந்தார். அன்று முதல் வம்ச பராம்பரியமாக ஜெகஜோதியாக இந்த துர்கா பூஜை நடந்து கொண்டுருக்கிறது.

மற்றொரு வகையில் மன்னருக்கு மட்டில்லா மகிழ்ச்சி. படேல், மவுண்ட் பேட்டன் பிரபு, ஜின்னா எல்லோருக்கும் தண்ணி காட்டியாகிவிட்டது. இனிமேல் எவரும் நம்மிடம் வந்து இணைத்து விடு என்று சொல்லப் போவது இல்லை. எப்போதும் போல நாம் தனியான ராஜ்ஜியம் தான் என்று சந்தோஷமாக இருந்தார்.

இங்கு பூஜை நடந்து கொண்டுருக்கும் போது 70 கிலோ மீட்டர் தொலைவில் மலை ஜாதி பத்தான் கூட்டம் ஆர்ப்பாட்டத்தோடு உள்ளே நுழைந்து கொண்டுருந்தது.

அவர்கள் முதலில் நுழைந்தது ஜீலம் நதிக்கரையின் அருகே பல விதமாக எந்திரங்கள் இருந்த கட்டிடத்திற்குள். அந்த எந்திரங்கள் எதற்காக பயன்படுத்துப்படுகிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. உள்ளே நுழைந்து சில நிமிடங்களில் அத்தனை பேர்களையும் அடித்து துவைத்துப் போட்டார்கள். வேறென்ன? அத்தனை எந்திரங்களும் அடித்து உடைக்கப்பட்டன. இறுதியில் மொத்த கட்டிடத்தையும் வெடிகுண்டு வைத்து தூளாக்கினார்கள்.

இதை உடைக்க வேண்டும், அடிக்க வேண்டும் என்று எந்த உத்திரவும் அவர்களுக்கு கொடுக்க வேண்டியது இல்லை. ஏன்அப்படி ஒரு தேவையே இல்லை. காரணம் அவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்கள் அப்படிப்பட்டது. பின்னால் வரப்போகும் அத்தியாயங்களில் அவர்களின் குணாதிசியங்கள் புரிந்தால் உங்களுக்கு வேறு சில வௌிச்ச சிந்தனைகளும், அவர்களின் வெறிச் சிந்தனைகளும் புரிபடும். ஆமாம் சுதந்திரம் வாங்கி இன்று 63 ம் ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டுருந்தாலும் எத்தனையோ பிரச்சனைகள் என்ற போதிலும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களும் தங்களுக்கு பிடித்த விரும்பி அத்தனை விஷயங்களையும் ஓரளவிற்கேனும் அனுபவித்து சந்தோஷமாய்த் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதில் எந்த எள்ளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அன்று (1947) முதல் நேற்று வரையிலும் அந்த காஷ்மீர் மக்களின் துயரம் என்பது நீண்டு கொண்டேதான் போய்க்கொண்டேயிருக்கிறது.

அரசாங்கம் மாறும். அதிகாரிகள் மாறுவார்கள். ஆனால் உயிர் இழப்பவர்களும், உறுப்புக்கள் இழப்பவர்களும், அனாதை ஆக்கப்படும் குழந்தைகளும் இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தான் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த காஷ்மீர் பிரச்சனை தொடக்க நிலை குறித்து தெரிந்தால் தான் இன்றைய பிரச்சனையில் ஆணிவேர் மொத்தமும் புரியும்.

ஈகோவில் ஆரம்பித்தது. வெறியில் தொடர்ந்தது. விரல் அசைவில் நடந்தது. ஆனால் வீணாய் போனது அத்தனையும் அப்பாவி சராசரி சம்மந்தம் இல்லாம மக்களின் மொத்த வாழ்க்கை தான்.

இன்று வரையிலும்?

அவர்கள் அடித்து நொறுக்கப்பட்ட, குண்டு வைத்து தகர்க்கப்பட்ட எந்திரங்கள் ஒரு முடிவுக்கு வந்த போது மன்னர் அரண்மணை வௌிச்சம் மறைந்து இருளில் மூழ்கியது. ஆமாம் காரணம் மொத்த மின்சார உற்பத்தியும் வழங்கிக்கொண்டுருந்த மஹீரா மின் உற்பத்தி நிலையம் அது.

வெறிக்கு தெரியாது பாதை. மொத்த முதலீடும் அது மட்டுமே. ஆனால் இரத்தம் வடிந்த கொழுத்த லாபம்.

தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625

http://deviyar-illam.blogspot.com/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s