மன்மத மன்னரின் ஆட்டமும் மாறாத பிரச்சனைகளும்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (40)

ஆமாம். இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

சுதந்திர இந்தியா முடிவுக்கு வந்துள்ளதே தவிர முழுமை அடையவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்தனை சமஸ்தானங்களையும் ஒரே பழக்கூடையில் போட்டு இருந்தாலும் இன்று வரையிலும் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டுருக்கும் காஷ்மீர் மட்டும் இன்னமும் சேரவில்லை.

ஆமாம் மன்னர் ஹரிசிங்.

ஏற்கனவே மன்மத மன்னர்களையும், மகா உழைப்பாளி மன்னர்களையும் பார்த்தவர்கள் தான் நாம். ஆனால் வேறு வழியே தெரியவில்லை. இந்த “சூடான மன்னர் ” குறித்து முழுமையாக தெரிந்தால் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டுருக்கும் நம்முடைய காஷ்மீர் பிரச்சனையின் நதி மூலம் ரிஷி மூலத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். கண்களை “மூடிக்கொண்டு” படித்தாலும் பரவாயில்லை?

இவர் சாதாரண ஆசாமி அல்ல. பூகோள அமைப்பில் இந்தியா, சீனா, தீபெத், பாகிஸ்தான் ஆகிய நடுவில் உலகின் மிக அழகிய, காட்சிகள் நிரம்பிய பரந்த காஷ்மீர் மாநிலத்தின் பரம்பரை இந்துமகாராஜா ஹரிசிங். பலவீனமான, பல பலவீனங்களுக்கு அடிமையான மன்னர் இவர்.

ஒரு முறை லண்டனிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் திருமணமான வௌ்ளைகார அழகி ஒருத்தியுடன் இவர் சல்லபத்தில் ஈடுபட்டிருந்த போது, அந்த அழகியின் கணவன் என்று கூறிக் கொண்டு வந்த ஒருவன் இவரிடம் ஏராளமான பணத்தைப் பறித்துச் சென்றான். அதன் பிறகு மற்றொருவன் வந்து “நான் தான் அவளது உண்மையான கணவன். அந்தப் பணம் நியாயமாக எனக்குத்தான் சேர வேண்டும் ” என்று அவரிடம் மல்லுக்கு நின்றான். அவர் அப்போது கையில் இருந்த எல்லா பணத்தையும் அவனிடம் கொடுத்து சமரம் செய்து கொண்டார். கடைசியில் அவர்கள் எவருக்குமே எந்த விதமான உறவும் இல்லை என்பதும், இவருடைய பலவீனம் தெரிந்து போடப்பட்ட நாடகம் என்று தெரிந்தது.

உறக்கத்திலிருப்பது போன்ற முகத்துடனும் அரைக் கண் மூடிய பார்வையுடனும் காரோட்டிக் கொண்டுருந்த இந்த மனிதருக்கு பெரிய முகம். தாடை முடிவடையும் இடமே தெரியவில்லை. முகவாய்(க்டி)யில் மூன்று முகவாய் இருப்பது போல வட்ட வட்டமாக சதை அமைப்பு. அவரது ருசிகளும் காமக்களியாட்டங்களும் உலகப் பிரசித்தப் பெற்றவை. மிஸ்டர் “எ” என்று குறிப்பிட்டு இவரைப் பற்றி எழுதாத ஆங்கிலப் பத்திரிக்கைகள் அன்று வெகு குறைவு.

இத்தனை விஸ்தாரமாக இந்த கவுச்சி மன்னரை விவரிக்க காரணம் தனி மனித ஒழுக்கமற்ற குணாசியங்கள் போலவே, கொள்கைகளும்.?

பாகிஸ்தான் என்ற பெயர் உருவாகக் காரணமான ரஹமத் அலி உருவாக்கிய (இணைக்க வேண்டிய) வரிசையில் காஷ்மீரும் இருந்தது.

முரண்டு பிடித்துக்கொண்டுருக்கும் மன்னரிடம் மவுண்ட் பேட்டன் பிரபு அன்பாக எடுத்துரைத்தார்.

‘ 90 சதவிகிதம் முஸ்லீம் மக்கள் வாழ்ந்து கொண்டுருக்கும் காஷ்மீரை நீங்கள் விரும்பினால் பாகிஸ்தானுடன் இணைத்துக்கொள்ளலாம். அல்லது உங்கள் விருப்பம் இந்தியா என்றாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை. மொத்தத்தில் இரண்டு வழிகளை நீங்கள் ஒன்றை தேர்ந்தெடுத்து ஆக வேண்டும். ‘

நீங்கள் மறுக்க முடியாது.

நினைவில் கொள்ளுங்கள் மன்னர்களின் தனிப்பட்ட அதிர்ஷ்டத்தை. ஹைதரபாத் நிஜாம் மன்னரின் சமஸ்தானத்தில் வாழ்ந்த மொத்தத்தில் அதிகமானோர் இந்து மக்கள். இங்கு முஸ்லீம்கள் (?).

மன்னர் உறுதியாக இருந்தார்

“இல்லை. நான் எப்போதும் போல சுதந்திரமாகவே இருக்க விரும்புகிறேன். இரண்டு பக்கமும் என்னால் சேர முடியாது “.

மறுபடியும் விருந்தினர் மாளிகையில் இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு சந்திக்க முயற்சித்த போது வந்த பதில் என்ன தெரியுமா? ” மன்னருக்கு வயிற்று வலி. இப்போது அவர் யாரையும் சந்திக்க முடியாது “.

அன்று அவருக்கு உருவாகிய வலி எதனால்(?) உருவாகியதோ தெரியவில்லை. ஆனால் அதன் தொடர்ச்சியாக உருவாக்கிய வலி இன்று வரையிலும் விட்ட மாதிரி இல்லை.

காரணம் இந்தியாவில் அன்று மொத்தமாய் இருந்த 565 சமஸ்தானங்களில் 560 இந்தியாவுடனும் மீதி 5 பாகிஸ்தானுடனும் சேர்ந்து கொண்டன. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் எந்த சமஸ்தான மன்னர்களும் தன்னுடைய குடிமக்களை கேட்டு விட்டு யாருடன் இணையலாம் என்று முடிவு எடுக்கவில்லை. அவர்களுடைய தனிப்பட்ட லாப நட்ட கணக்குகளை வைத்து தான் அத்தனை இணைப்பும் நடந்தது. ஆனால் பின்னால் பிரச்சனைகள் அதிகமாக உருவாக உருவாக காஷ்மீர் என்பதை எந்த நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று முயற்சி நடந்தது. காரணம் முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழ்ந்து கொண்டுருப்பதால் அவர்கள் அனைவருமே பாகிஸ்தான் நாட்டுடன் தான் இணைய வேண்டும் என்று சொல்வார்கள் என்ற நம்பிக்கைகளின் அடிப்படையில்.

ஆனால் நடந்த கொடுமையோ வேறு?

நேரிடைய நடவடிக்கை என்று ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தன்னுடைய பங்களிப்புகளை வழங்கிய ஜின்னா சாகிப் பாகிஸ்தானின் தந்தையாக பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, அவருக்குள் அரித்து தின்று கொண்டுருந்த காச நோய் அவரிடம் ஓய்வை கெஞ்சி கேட்டுக்கொண்டுருந்தது.

காஷ்மீரில் தங்கி ஓய்வெடுக்க விரும்பி அனுப்பிய தன்னுடைய உதவியாளர் ( கர்னல் வில்லியம்ஸ்) வந்து சொன்ன செய்தி ஏற்கனவே இறுகிய முகத்தைப் பெற்ற ஜின்னா சாகிப் மேலும் இறுகியது.

“ஜின்னா சாகிப் ஒரு சுற்றுலாப்பயணி என்கிற முறையில் கூட காஷ்மீர் மண்ணில் காலடி வைப்பதை நான் அனுமதிக்க மாட்டேன் ” மன்னர் ஹரிசிங் கூறிய வார்த்தைகள் எந்த நோக்கத்தில் எந்த சூழ்நிலையில் சொன்னாரோ தெரியவில்லை?

நீங்களும் நானும் தீப்பெட்டி வாங்கினால் கூட அரசாங்கத்துக்கு சேரும் வரி சமாச்சாரங்களில் பாதிக்கும் அதிகமான பணத்தைக் கொண்டு போய் அந்த அழகிய பள்ளத்தாக்கில் கொண்டு போய் கொட்ட வேண்டி இருக்கிறது. பள்ளத்தாக்கு என்பதால் தான் என்னவோ இராணுவ வீரர்களும் வீட்டுக்கு உயிருடன் திரும்ப முடியவில்லை.

ஆனால் அந்த வார்த்தைகளினால் உருவான பிரச்சனைகள் தான் இன்று வரையிலும் பல தலைகளையும், காவு வாங்கிக்கொண்டு இருக்கிறது. குனக்குன்று சர்தாரி வரைக்கும் பேச்சு வார்த்தைகள் இன்று வரையிலும் நீண்டு கொண்டுருக்கும் இன்றைய காஷ்மீர் பிரச்சனை.

நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்.

அறம், பொருள் என்று அத்தனை அதிகாரங்களும் கொடுத்த தமிழ்க்கடவுள் திருவள்ளுவர் எந்த நோக்கத்தில் இன்பத்தை கடைசியாக படைத்தாரோ? ஆனால் இன்று வரைக்கும் கடைசி தான் முதன்மையாக? முக்கிய பிரச்சனைகள் அத்தனைக்கும் காரணமாக அமைந்து இருப்பதன் ஆச்சரியம்?

தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625

புதிய பாதை http://deviyar-illam.blogspot.com/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s