விடியாத இரவுகள்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி 37

இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 என்பதை கடைசி வரை மாற்ற வேண்டும் என்று மவுண்ட் பேட்டன் பிரபு நினைக்கவே இல்லை. பஞ்சாப் கலவரம் ஒரு பக்கம். இடம் பெயர்ந்து அதிகரித்துக் கொண்டுருக்கும் அகதிகளின் கூட்டம் ஒரு பக்கம். சிந்தனை முழுக்க ஆயாசமும், அயர்ச்சியும் இருந்த போதிலும் அன்றைய தினம் உலகம் முழுக்க இருந்து வந்த அத்தனை பத்திரிக்கையாளர்களும் கூடி இருந்தனர்.

அந்த நிமிடம் வரையிலும் சுதந்திரம் என்பது உறுதி என்பது மட்டும் தெரியும். ஆனால் தேதி எதுவும் யாருக்கும் தெரியாது.

ஏன் மவுண்ட் பேட்டன் மனதில் கூட நினைத்தது இல்லை. அப்போது தான் காந்திக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார்.

காரணம் எங்கு கலவரம் அதிகமாக இருக்கும் என்று தன்னுடைய கணிப்பில் வைத்திருந்த மவுண்ட் பேட்டன் பிரபு, அதிசயமாக இரு மத மக்களையும் தன்னுடைய பிரார்த்தனை என்ற மாயத்தில், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்திக்கொண்டு அவருடைய தங்கிய இடத்திற்கு (ஹைதரி ஹவுஸ்) வந்த கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி லட்சத்தை (ஆகஸ்ட் 15) தொட்டு கல்கத்தாவை அமைதி பூங்காவாக மாற்றி இருந்தார்.

மவுண்ட் பேட்டன் பிரபு எழுதிய கடிதத்தின் சுருக்கம்.

” பஞ்சாப் மாநிலத்திற்கு 50,000 வீரர்களை அத்தனை விதமான ஆயுதங்களுடனும் அனுப்பிய போதும் அங்கு எதுவும் என்னால் செய்ய முடியாமல் திகைத்துப் போய் நிற்கிறேன். முன்னாள் ராணுவத் தலைவர் என்ற முறையிலும், வைஸ்ராய் என்கிற முறையிலும் எனது “ஒரு மனித” ராணுவத்திற்குத் தலை வணங்குகிறேன். பணிவுடன் கூறப்படும் எனது பாராட்டுக்களை ஏற்றுக் கொள்ளுங்கள் “.

மலத்தையும், கற்களையும் கொண்டு காந்தியே உள்ளே வராதே என்று விரட்டிய மக்கள் அத்தனை பேரும் அவரிடம் போய் ” எங்கள் உயிரை, உடமையை காப்பாற்றிய தெய்வம் நீங்கள் ” என்றனர்.

ஏன் ஆகஸ்ட் 15 தேதியை மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய சுதந்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார்?

கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் “இந்தியாவிற்கு சுதந்திரம் உறுதி என்று தெரிகிறது? ஆனால் முறைப்படி தேதியை இதுவரையிலும் நீங்கள் கூறவில்லையே? ” என்று கேட்டனர்.

அப்போது தான் மவுண்ட் பேட்டன் பிரபு மனதில் தோன்றிய எண்ணம்.

ஏழரை லட்சம் கொண்ட ஜப்பான் ராணுவத்தினர் சராணகதியை ஏற்றுக்கொண்ட தினம் ஆகஸ்ட் 15 என்ற சிந்தனை மனதில் வந்து போனது. தயக்கமில்லாமல் “இந்தியாவிற்கு சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 என்று முறைப்படி அறிவித்தார்.

உலகம் முழுக்க பரவி விட்டது. ஆனால் இந்தியாவிற்குள் பெரிய கொந்தளிப்பு. ஆமாம் அன்றைய தினத்தில் எல்லா வகை மக்களிடத்திலும் நீக்கமற நிறைந்து இருந்த ஜாதகம், அதன் தொடர்பான அறிஞர்கள், விற்பனர்கள் மொத்தமும் கூக்குரலிட்டனர்.

குறிப்பாக கல்கத்தாவில் மிகப் புகழ் பெற்ற ஸ்வாமி மதனானந்தா என்பவர் அத்தனை கிரகங்களையும் வைத்து ஒரு வரைபடம் தயாரித்து சாதக பாதக அம்சங்களை குறிப்பிட்டு மவுண்ட் பேட்டன் பிரபுக்கு அனுப்பி வைத்தார். மொத்தமும் அனைவரின் பார்வையும் பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14 காலை முதல் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 முடிய அத்தனை மோசமான கிரகங்களும் ஒரு சேர அமைந்துள்ளது. ஒரு பெரிய தூதுக்குழு அவரைப் போய்ச் சந்தித்தி மன்றாடியது.

உலகம் முழுக்க பரவி விட்ட பிறகு இனி எப்படி மாற்றுவது? கடைசியில் வேறு வழியே இல்லை என்றதும் தூதுக்குழுவின் விருப்பம் கலந்ததாக உள்ள நடு இரவில் அதாவது ஆகஸ்ட் 14 முடிந்து நடு இரவில் ஆகஸ்ட் 15 பிறந்த 12 மணிக்கு சில நொடிகளில் அறிவிக்க ஏற்பாடு ஆனது. அது போலவே அறிவிக்கப்பட்டது.

கிரகங்களின் கோளாறு அல்லது அரசாங்கத்தில் பதவி ஏற்றவர்களின் கட்டங்களின் கோளாறு எதுவென்று தெரியவில்லை? காரணம் டெல்லியில் பரவிய கலவரம்.

செப்டம்பர் 3. அன்றைய டெல்லி என்பது பெரும்பான்மையான முஸ்லீம் மக்களால் வாழப்பட்ட நகரம். அடித்தட்டு வேலை முதல் மேல்தட்டு வர்க்க மக்களின் பணியாள் வரைக்கும் அவர்கள் தான். காரணம் மொகாலாய மன்னர்கள் ஆண்டு போயிருந்த மிச்சத்தின் சொச்சம் உருவாக்கிய மாயம். எந்தப்பக்கம் திரும்பினாலும் அவர்கள் தான். இடப்பெயர்ச்சியினால் பாதிக்கப்பட்ட அத்தனை இந்து சீக்கிய மக்கள் டெல்லியில் நுழைய நுழைய தென்பட்ட அத்தனை முஸ்லீம் மக்களின் மீது இனம் புரியா வெறுப்பை உமிழ சமயம் பார்த்து காத்துக்கொண்டுந்தார்கள்.

இந்த சமயத்தில் தலைநகரத்தில் ஒரு கிசுகிசு வேகமாக பரவிக்கொண்டுருந்தது. பாகிஸ்தான் என்ற நாடு உருவான சந்தோஷத்தில் “நமது உரிமையால் அடைந்தோம் பாகிஸ்தான். அடித்துப் பெறுவோம் ஹிந்துஸ்தான் ” என்ற கோஷம்.

பழைய டெல்லி மசூதி ஒன்றில் அங்கிருந்த முல்லா ஒருவர் தொழுகைக்கு வந்த முஸ்லீம்களிடம் ” டெல்லி பல நூற்றாண்டுகளாக முஸ்லீம் மன்னர்களால் ஆளப்பட்ட நகரம். ஆண்டவன் அருள் இருந்தால் (இன்ஷா அல்லா) மறுபடியும் அது முஸ்லீம்களுக்கே கிடைத்துவிடும் ” என்ற செய்தி பதிவாகியுள்ளது.

சுதந்திரம் வாங்கிய பதினெட்டாம் நாள் செப் 3 அன்று முதலில் டெல்லி ரெயில்வே ஸ்டேஷனில் 12 முஸ்லீம் போர்ட்டர்கள் கொலை செய்யப்பட்டதில் இருந்து சூறைக்காற்றை விட வேகமாக பரவத்தொடங்கியது.

விடியாத நேரத்தில் வந்த சுதந்திரம் வீடு இழந்து வீதியில் நிறுத்தியது. விதியையும் மாற்றி உயிரையும் பறித்தது.
புதிய பாதை http://deviyar-illam.blogspot.com/

தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s