நடிகர் சத்யராஜ் ஜின்னாவின் வழித்தோன்றலா

உயிர்க்குருவிகள் நகர்ந்த ஊர்வலம். ஒளிந்திருந்தவர்களின் கையில் சிக்காத மாயம்?
புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி 33

நடிகர் சத்யராஜ் ஜின்னாவின் வழித்தோன்றலா

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் ஜின்னா அவர்களை இன்று வரையிலும் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் எத்தனை விமர்சனங்கள் அவரைப்பற்றி என்ற போதிலும் அவருடைய இரும்பு போன்ற நெஞ்சுறுதியை, மனோ தைரியத்தை ஒப்புக்கொள்ளாமல் இருந்தது இல்லை.

சொல்லப்போனால் அவருடன் மற்ற எந்த தலைவர்களையும் ஒப்பிடுவது கூட முடியாது. காரணம் ஒவ்வொரு முறையும் தளர்ந்து போய் விடுகின்ற மவுண்ட் பேட்டன் பிரபு அவரைப்பற்றி சொல்லும் வார்த்தைகள் இது. அத்தனை தைரியம் படைத்த ஜின்னா அவர்கள் மவுண்ட் பேட்டன் பிரபு சொன்ன விஷயத்தைக் கேட்டதும் சொன்ன வார்த்தைகள் இது.

“எவ்வளவு பெரிய ஆபத்திற்குள்ளும் எவ்வளவு சுலபமாக தன்னைச் சிக்கவைத்துக் கொள்ளுகிறார். எவ்வளவு நெஞ்சுரமும் நேர்மைத் துணிவும் இருக்கிறது இந்த மனிதரிடம்?” நன்றிப்பெருக்குடன் ஜின்னா மவுண்ட் மகாராஜனைப் பார்த்தார்.

“ஆமாம். நீங்கள் பயணிக்கும் வாகனத்தில் நானும் வருகிறேன் ” சொல்லி முடித்த போது மவுண்ட் பேட்டன் பிரபு மனைவியான எட்வினா மவுண்ட் பேட்டன் பிரபு சொன்ன வார்த்தைகள் அத்தனை பேர்களையும் கதிகலங்க வைத்தது.

“நானும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்கிறேன்”

இதுபோன்ற சூழ்நிலையில் கூட ஜின்னா தனது பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ளத் தயாராய் இல்லை.

“எது வேண்டுமானலும் நடக்கட்டும். அதைப்பற்றிக் கவலைப்படவில்லை ” ஜின்னா கூறிய வார்த்தைகள்.

மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனம். திறந்தவௌி வாகனம். இரு பக்கம் திரளனான மக்கள் கூட்டம். ஜின்னாவின் பக்கத்து இருக்கையில் மவுண்ட் பேட்டன் பிரபு. அதே வாகனத்தில் மவுண்ட் மனைவி. யோசித்துப் பாருங்கள்.

இனி நிரந்தரமாய் வாழவேண்டிய பாகிஸ்தான் நாட்டில் என்பதால் தான் வாழ்ந்த, பாகிஸ்தான் என்ற கனவைக் கொண்டு அன்றாடம் செலவழித்த பொழுதுகள் கொண்ட வீடான எண்.10 ஓளரங்கசீப் ரோடில் இருந்த வீட்டை அன்று விலை கொடுத்து வாங்கியவர் யார் தெரியுமா?

“சரித்திரத்தின் எதிர்மறை நியாயம்” என்கிற விதத்தில் சேட் இராமகிருஷ்ண டால்மியா என்கிற தொழிலதிபர். இத்தனை நாளும் அங்கு பறந்து கொண்டுருந்த பச்சையும் வௌுப்புமான முஸ்லீம் லீக் கொடி பறந்த அந்த வீட்டின் கொடிமரத்தில் சேட் டால்மியா பசு பாதுகாப்பு இயக்கத்தின் கொடியை ஏற்றினார்.

ஜின்னா பாகிஸ்தான் செல்வதற்காக மவுண்ட் பேட்டன் பிரபு அவருக்கு டி.சி.3 என்கிற விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தார். படியில் ஏறியவர் கடைசியாக மொத்தமாக தீர்க்கமாக சற்று நேரம் நகரத்தை பார்த்தவர் கடைசியாக உச்சரித்த வார்த்தைகள் ” இது தான் நான் கடைசியாக டெல்லியை பார்ப்பது?”

விமானம் கராச்சியை அடைந்த போது திரண்டுருந்த மக்கள் கூட்டத்தை எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தார்.

எப்போதும் அப்படித்தான் ஜின்னா. எந்த உணர்ச்சிகளையும் வௌியே காட்டிவிட மாட்டார்.

எனது பிணத்தின் மீது பிரிவினை நடக்கட்டும் என்ற காந்தியும், என்னை நிர்ப்பந்திக்க முடியாது என்ற மவுண்ட் பேட்டன் பிரபும் ஜின்னாவிடம் தோற்றுப் போனார்கள். கிட்டத்தட்ட கையில் இருந்து பறிக்கப்பட்டதைப் போல.

“எங்களால் ஒருவரைக் கூட பிடிக்க முடியவில்லை ” என்று துப்பறியும் தலைவர் சொன்ன போது அருகே இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு மனைவி எட்வினா சொன்ன வார்த்தைகள் தான்

“அப்படி என்றால் நானும் உங்களுடன் பயணிக்கின்றேன் “.

ஏற்கனவே உச்சக்கட்ட கோபத்தில் இருந்த மகாராஜன் மனைவியை வேறு வழியே இல்லாமல் (நச்சரிப்பு) ஊர்வலம் (1947 ஆகஸ்ட் 14 கராச்சி) ஆய்த்த ஏற்பாடு நடந்து கொண்டுருந்தது.

சவப்பெட்டியை கொண்டு செல்லும் (கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ்) வாகனமாக மனதில் நினைத்துக்கொண்ட மவுண்ட் பேட்டன் பிரபு பின்னால் வந்த காரில் மனைவியை அமர (பிழைத்து விட்டு போகட்டும்) வைத்தார்.

31 பீரங்கி குண்டுகள் (?) முழங்க கூட்டம் தொடங்கி ஊர்வலம் சுமார் ஐந்து கிலோ மீட்டர். இருபக்கமும் அரணாக ராணுவ வீரர்கள். துப்பறியும் குழுவினர் வாகனம் நகர நகர உற்றுப் பார்த்துக்கொண்டே இவனா? அவனா? என்று அவஸ்த்தை பார்வை. அரை மணி நேரம் பயணம் கவர்னர் ஜெனரல் மாளிகையை அடைய.

குட்டிச்சுவர், மரக்கிளை, ஓரத்தில் நின்ற வாகனங்கள், என்று எல்லாப்பக்கத்திலும் மனித தலைகள். ஆரவார கோஷங்கள். ஜின்னா முகத்தில் எப்போது போல இறுகிய தசையிலான முகத்தில் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் வெற்றுப் பார்வை போல மெதுவாக கையாட்டிக்கொண்டே.

மவுண்ட் பேட்டன் பிரபுக்கு சொல்லவே வேண்டாம்.

துப்பறியும் துறைக்கான தலைவர் திரு.சாவேஜ் செத்து சுண்ணாம்பாகியிருப்பார். கால்சட்டைப் பையில் வைத்திருந்த துப்பாக்கியின் விசையை விரல்கள் தொட்டபடி நோட்டம் விட்டபடியே நடந்து கொண்டே. எந்த சத்தமும் அவர் காதில் விழவில்லை. அடுத்த அடியில் என்ன நடக்குமோ? என்ற அச்சம்.

அந்த அரைமணி நேர பயணம் முடிவுக்கு வந்தது. இறங்கியதும் ஜின்னா சொன்ன வார்த்தைகள் இங்கு முக்கியம்.

” ஆண்டவனுக்கு நன்றி. நல்லவேளை உங்களை நான் பத்திரமாக கொண்டு வந்து சேர்த்துவிட்டேன் “. மவுண்ட் பேட்டன் பிரபு மயங்கி விழாத குறைதான்.

“என்ன கொழுப்பு இந்த மனிதருக்கு? என்று நினைத்துக்கொண்டு

” நீங்கள் எங்கே கொண்டு வந்து சேர்த்தீர்கள்? நான் அல்லவா உங்களை உயிருடன் இங்கு கொண்டு வந்து சேர்த்தேன் “.

ஜின்னா லொள்ளு வார்த்தைகள் மவுண்ட் பேட்டனை காயப்படுத்தியிருக்குமா என்று தெரியவில்லை.

ஆமாம் ஜின்னாவை சுட்டுக்கொல்ல திட்டம் போட்டு தயாராய் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்?

புதிய பாதை http://deviyar-illam.blogspot.com/

தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625

Advertisements

2 responses to “நடிகர் சத்யராஜ் ஜின்னாவின் வழித்தோன்றலா

  1. உள்ளே நுழைந்தால் திரை அரங்கம் போலத் தான் இருக்கிறது. இந்திய சுதந்திரமும் சரி, உங்கள் இடுகையும் சரி. நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s