சிங்கிளாய் வந்த சிங்கம்

சிங்கிளாய் வந்த சிங்கம்

பட்ட பாடு சிந்திக்க வைத்தது.

முயன்று பார்ப்பதற்குள்

முடிவும் வந்து விட்டது.

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (30)

கலவரம், கண்ணீர், கதறல்

தேசத்தலைவர்களுடன் சேர்ந்து பல அரசியல் வேலைகளில் ஈடுபட்டு இரவும் பகலும் அலைந்து களைத்துப்போயிருந்த வி.பி.மேனன் வீட்டில் தனது அறையில் ஒரு நாற்காலியில் மௌனமாக அமர்ந்திருந்தார். நள்ளிரவில் சுதந்திரப் பிரகடனம் செய்யப்படுவதை வானொலியில் கேட்ட அவரது 19 வயது மகள் ” சுதந்திரம் வந்து விட்டது ” என்று துள்ளிக்குதித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அப்பா அருகே வர அப்போது வி.பி. மேனன் சொன்ன வார்த்தைகள் இது.

“மகளே, இந்தியா இதுவரையில் கண்டும் கேட்டுமிராத அதி பயங்கர நிகழ்ச்சிகள் இனிமேல் தான் ஆரம்பமாகப் போகின்றன ” என்றார்.

பஞ்சாப் சீக்கியரின் ஆளுமைக்குள் இருந்த போது அவர்கள் முஸ்லீம்களுக்கு இழைத்த கொடுமையை எந்த முஸ்லீம்களும் மறந்துவிடவில்லை. அது போலவே மொகலாயர்கள் ஆட்சியில் சீக்கியர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

சீக்கியர் இனத்திடம் மொகலாயர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்? என்ற காலப்பெட்டகத்தை அமர்தசரஸிலுள்ள பொற்கோவிலில் ஒரு காலப்பெட்டகம் போல் பாதுகாத்து தங்களுடைய வருங்கால சந்ததியினருக்கு ஒவ்வொரும் உணர்த்தி வந்தனர். ஓவ்வொரு தகப்பனும் சீக்கியனாக இருப்பதில் எத்தனை பெருமை? என்பதை பலவிதமாக தங்களுடைய குழந்தைகளுக்கு பல்வேறு வடிவங்களில் இன்று வரையிலும் போதித்து வருகின்றனர்.

இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொள்ளாத சீக்கியர்களை மொகலாயர்கள் செய்த அத்தனையும் படங்களாக, பாடங்களாக அலங்கரித்து வெறியேற்றி அணையவிடாமல் பாதுகாத்தனர்.

பலகையோடு கட்டப்பட்டு கொடு வாளால் இரு துண்டுகளாக அறுக்கப்படுவது, வட்டமான இரு பாறைகளுக்கிடையே வைத்து எலும்பு முறியும் சப்தத்தை கேட்கும் வரையிலும் அழுத்துவது, பல் சக்கரங்கள் பொறுத்தப்பட்ட இரு சக்கரங்களுக்கிடையே அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக சித்ரவதை செய்வது, வெவ்வேறு திசைகளில் நிறுத்தப்பட்ட குதிரைகளின் கால்களில் இரண்டு கால்களை கட்டப்பட்டு குதிரையை விரட்டி செலுத்துவது, போன்ற ஏராளமான காட்சிப்படங்கள் ஆவணப்படங்களாக மாற்றி கலைக்கூடத்தை பாதுகாத்து தங்களுடைய பெருமையை குழந்தைகளுக்கு புகட்டினர்.

முஸ்லீம்கள் தாங்கள் மைனாரிட்டி என்ற பெயரில் அடைந்த கொடுமைகளை துண்டு பிரசுரங்களாக விநியோகம் செய்து முடிந்தவரையில் மொத்த அமைதியை அவரவர் வழியில் கெடுத்துக்கொண்ட நிகழ்ச்சியினால் அன்று ஆட்சி செலுத்திக்கொண்டுருந்த இந்து சீக்கிய முஸ்லிம் கூட்டு ஆட்சியாளர்களை கலைத்துவிட்டு கவர்னராக பொறுப்பேற்றவர் தான் சர். எவான்ஸ் ஜெங்கின்ஸ்.

இரு மதத்தை சார்ந்தவர்களும் சிங்கம் புலியைவிட மிகக் கேவலமாக ஒருவரை ஒருவர் கடித்து குதறும் அளவிற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்தனர்.

கலவரம் தொடங்க மூல காரணம் ஒரு சீக்கியரின் நடவடிக்கை.

தொடர்ச்சியான முஸ்லீம்களின் கண்மூடித்தனமான கொலைவெறித்தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாமல் தாராசிங் என்பவர் (லாகூர் அருகே உள்ள கிராமம்) முஸ்லீம் லீக் கொடி மரத்தை தமது வாளால் வெட்டி வீழ்த்தி “பாகிஸ்தான் முர்தாபாத்” (பாகிஸ்தான் அழியட்டும்) என்று கோஷமிட்டார்.

முஸ்லீம்கள் கொடுத்த பதில் தாக்குதல்களில் மொத்தமாக உயிர் இழந்தவர்கள் 3000 பேர்கள்.

இதில் கற்பிழந்த பெண்கள்,கொள்ளை,கொலை,வன்முறை கோரத்தாண்டவங்கள் கணக்கில் அடங்காது.

இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அன்றைய லாகூர் நகரம் பம்பாய் கல்கத்தாவைவிட மிக மேன்மையான வசதிகள் பெற்றது. பழைமையான கலாச்சாரமும் சரி, கண்களைக் கவரக்கூடிய மேல் நாட்டு ஆடம்பர வாழ்க்கையும் சரி அத்தனையையும் ஒருங்கே பெற்று வாழ்ந்த கூட்டங்கள்.

ஒவ்வொரு ஆங்கிலேயர்களின் கனவுப் பிரதேசம் லாகூர் நகரம்.

இனம், மொழி, மதம் என்ற பாகுபாடு எல்லாம் இரண்டாம் பட்சம். அத்தனை இளைஞர்களும் இளைஞிகளும் இன்று நாம் பயப்படும் அத்தனை நாகரிக வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.

உயர்ந்தவர்கள், உயராதவர்கள் என்ற பாகுபாடும் இல்லாமல் மேல் நாட்டு கிளப்புகள், காபரே, அசிங்க அழகிகள், ஆர்ப்பாட்ட உரசல் என்று உண்டு தின்று வாழ்ந்த கூட்டம். மதம் எல்லாம் அந்தப்பக்கம். எங்களின் மனம் மட்டும் தான் மகிழ்ச்சியான மதம் என்றவர்கள் வாழ்ந்து முடிந்த கதை சோகத்தில் முடிந்தது.

மதம் முக்கியம் என்று வாழ்ந்த கூட்டமும், நாம் சிங்கம் என்று காட்சியை காட்டி வளர்த்த கூட்டமும் ஒன்றாகத்தானே உண்டு கழித்தார்கள். உலகம் வெறுத்த, மதங்கள் வெறுத்த அத்தனை செயல்களையும் செய்தார்களே?

“அக்பர் கோட்டை ” என்ற இடத்தில் உலகத்தில் அன்னையைத்தவிர அத்தனை “தினுசான” விஷயங்களும் இங்கு வாங்கிவிடமுடியும். இன்றைய கதாநாயகிகள் தோற்க வேண்டும். அத்தனை மேம்பட்ட நாகரிகத்தை அன்றே வாழ்ந்து காட்டிய லாகூர் கலாச்சாரம் அது.

உலகிலேயே அதிக நெருக்கடியான ஜனக்கூட்டம் வாழ்ந்த இடம் இது. ஒரு சதுர மைல் பரப்பளவுக்குள் ஒரு லட்சத்து நாலாயிரம் மக்கள் வசித்தனர்.

மோதிய மோதலில் ஒரு லட்சம் பேர்கள் கலவரம் தொடங்குவதற்கான அறிகுறியின் போதே கிடைத்தவரை போதும் என்று இடம் பெயர்ந்தனர். தினந்தோறும் யாருக்கு என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாமல் அத்தனையும் அம்சமாக நடந்தது.

தெருவின் குறுக்கே இரண்டு பேர்கள் மறைவிடத்தில் அமர்ந்து கொண்டு கம்பியை நீட்டி வைத்துக்கொண்டு காத்து இருப்பார்கள். சைக்கிளில் வரும் சீக்கியர் கம்பியை கவனிக்காமல் முன்னேறும் போது கம்பியைத் தூக்கி, கீழே விழுபவரை இழுத்து கழுத்தை நறுக்கி அடுத்தவருக்காக காத்து இருப்பது.

இந்த முறை ஏறக்குறைய எல்லா தெருக்களிலும் நடந்தது.

இறப்பு என்பது ஒரு மனிதனுக்கு மின்னல் வேகத்தில் சம்பவித்தது. ஏதோ ஒரு ஓசை கேட்டுத் திரும்பும் ஒரு மனிதனின் தலை அடுத்த வினாடியே உடம்பில் இருந்து விடுபட்டுத் தரையில் உருண்டது. தெருக்களில் எல்லாக் கதவுகளும் மூடப்பட்டு மயான அமைதி நிலவியது. எவரும் எதற்காகவும் வௌியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இந்த அர்த்தமற்ற அவசியமில்லாத கண்மூடித்தனமான கொலைகளால் நகரம் கலங்கியது.

இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் இங்கு உரிமை இல்லை. அவர்கள் தாங்களாகவே வௌியேற வேண்டும் அல்லது அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்பது முஸ்லீம் தீவிரவாதிகளின் கொள்கையாக இருந்தது.

மொத்தத்தில் நடந்த பிரிவினைகளின்படி இடம்பெயர்ந்தோர் அன்றைய கணக்குப்படி லட்சம் கோடி என்றார்களே தவிர உண்மையிலேயே எத்தனை கோடி மக்கள் தெருக்கோடிக்கு வந்தார்கள் என்ற சரியான கணக்கு எவரிடமும் இல்லை.

மதம் என்பது மனிதத்தை வாழ வைப்பது.

சொன்னவர்கள் பெற்ற உள்வாங்குதல் எதுவும் இல்லாமல் தன்னுடைய நலத்துக்கு என்று மாற்றிக் கொண்டவர்களால் மானம் மரியாதை இழந்த கூட்டம் ஒரு பக்கம். மனைவி மக்கள் இழந்த கூட்டம் ஒரு பக்கம். சொத்து சுகங்கள் இழந்தது போதாது என்று கண் முன்னாலேயே தாயை, தங்கையை, மனைவியை கற்பழித்ததை பார்த்து புத்தி பேதலித்து நடந்து வந்த கூட்டம் ஒரு பக்கம்.

மூளை உள்ளவர்களால் உருவாக்கப்பட்ட மதம் எப்போது மூலத்தை விட்டு விட்டு முகத்தை வைத்து தொங்கிக் கொண்டுருந்தவர்கள் கையில் சிக்கியதோ அன்று தொடங்கியது இந்த மானிட அழிவு. அறிந்தவன் சொன்ன விளக்கங்கள் மூளை இருந்தும் சிந்திக்கத் தெரியாதவர்களின் வாழ்க்கையை உணர்த்தியது.

சிரிப்பாய் சிரிக்க வைத்துக் கொண்டுருக்கிறது இன்று வரையிலும்.

உணராத போதும்?

தொடரப்போகும் தலைப்புகளின் புதிய இல்லத்தின் சுட்டி

http://deviyar-illam.blogspot.com/

எழுதிய திருப்பூர் வாழ்வியல் அனுபவங்கள்-இந்திய சுதந்திர ரகஸ்யங்கள்

அத்தனை தலைப்புகளும் இருக்கும் தேன்கூடு சுட்டி

http://thamizmanam.com/bloglist.php?id=5625

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s