சிவப்பு ரோஜாக்கள்

உள்ளுக்குள்ளேயே நடக்கும்

குடுமிபிடிச்சண்டை.

நீயா? நானா என்பதற்குள்

நீண்டு விட்டது குருதி ஆறு.

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (28)

கலவரம், கண்ணீர், கதறல்

மன்னர்களை மான்யம் வாங்கிக் கொண்டு பேசாமல் எப்போதும் போல் உள்ள கடின உழைப்பை வைத்துக் கொண்டு வாழுங்கள் என்று வழிக்கு கொண்டு வந்தாகிவிட்டது. ஜின்னா, காங்கிரஸ் தலைவர்கள், மவுண்ட் பேட்டன் பிரபு என்ற முத்தரப்பு ஒப்பந்தங்கள் ஓரளவுக்கு உறுதி படுத்தும் நிலைமைக்கு வந்தாகிவிட்டது. அப்புறம் என்ன? கொடி ஏற்றி பாட வேண்டியது தான் என்கிறீர்களா?

கடைசி காட்சியில் பிழியக்கூடிய சோகம், வியக்கக்கூடிய காட்சிகள், சிலிர்க்கக்கூடிய மயிர்கூச்செறியும் துரத்தல்கள் இருந்து முடித்தால் தானே மூன்று சென்டர்களிலும் ஓட்ட முடியும்.

ஆனால் நம்முடைய சுதந்திர பிரகடனத்திற்கு முன்பு அன்றைய பகல் தினத்தில் நேரம் கெட்ட நேரத்தில் நேரு மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டுருந்தார்.

அப்போது ஒலித்த தொலைபேசி மூலம் நேரு உரத்த குரலில் பதட்டமாய் உரையாடிக்கொண்டுருந்தார்.

அருகே இந்திரா காந்தியும், சரோஜினி நாயுடுவும் அவருடைய உரத்த குரலை ஆச்சரியமாய் பார்த்து விட்டு அருகே வந்தனர்.

“லாகூரில் இருந்து பேசினார்கள். லாகூரில் இந்துக்கள், சீக்கியர்கள் வசிக்ககூடிய இடங்களில் குடிநீர் வசதியை துண்டித்து விட்டார்கள். வௌியே வருபவர்கள் அத்தனை பேர்களையும் கொன்று குவிக்கிறார்கள் “.

காரணம், அன்றைய இரவு தினம் நேரு அவர்கள் சுதந்திர செய்தியை நாட்டுக்கு வானொலியில் தெரிவிக்க வேண்டும்.

தொடர் வாசிப்பில் என்னை தொடர்ந்து கொண்டுருப்பவர்களும் திடீர் என்று உள்ளே வந்தவர்களும் தயை கூர்ந்து ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். இந்தப் பதிவுக்கு தொடர்ந்து வரப்போகின்ற அத்தனை பதிவுகளும் படிப்பதற்கு சற்று மனத்துணிவு வேண்டும். நான் எதையுமே அதிகப்படுத்தியோ இனச் சார்பாகவோ முன் நிறுத்தப் போவது இல்லை. இந்து, முஸ்லீம்,சீக்கியர் என்று வேறுபாடு இல்லாமல் அத்தனை பேர்களும் தங்களால் முடிந்த அத்தனை அக்கிரம விஷயங்களையும் அரங்கேற்றி அவஸ்த்தைப்பட்டு இருக்கிறார்கள். தானும் தன்னுடைய குடும்பத்தையும், மொத்த சமூகத்தையும் முடிந்த வரையில் அலங்கோலமாக்கி இருக்கிறார்கள்.

மறைக்கப்பட்ட விஷயங்கள் ஏன் வௌியே கொண்டு வரவேண்டும்? வீணான விவாதங்கள் தானே உருவாகும்.? உள்வாங்குபவர்கள் அத்தனை பேர்களும் ஒழுங்கான தகுதியான அறிவுடன் தான் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களா? அதுவும் உணர்ச்சிகளை மட்டுமே முன்நிறுத்தி வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழ்நாடு சில சமயம் இந்தியாவில் யார் இதை பெருந்தன்மையாக எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்று கேள்விகள் வரக்கூடும்? உண்மை.

ஆனால் மற்றொரு விஷயத்தையும் நீங்கள் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். நம்முடைய இந்தியாவில் தான் ஆன்மிக தலம் முதல் ஆள்வர்களின் தரிசனம் வரையிலும் பிரபல்யத்துக்கு ஒரு பாதை பிரபல்யம் இல்லாதவர்களுக்கு ஒரு பாதை. வௌிநாடுகளில் எத்தனையோ கொடுமைகள் இருந்தாலும் அதிகாரத்தின் பார்வையில் ஒன்றே ஒன்று தான்.

அதுவும் என்றுமே மாற்ற முடியாத கடினப் பார்வை மட்டும் தான்.

சமீபத்தில் அப்துல் கலாம், ஷாருக்கான் பயணத்தில் உண்டான பரிசோதனை குழப்பங்கள் என்ற பெயரில் மிகப் பெரிய ஊடக முன் நிறுத்தல்கள் நிகழ்ந்தது.

சரியா? தவறா? என்பதை விட ஏன் இன்று இந்த நூற்றாண்டில் கூட இந்த பயங்கர வாதம் நம்மை பயமுறுத்திக்கொண்டுருக்கிறது? எல்லாமே வளர்ந்து இருக்கிறது என்பதாக படம் காட்டிக்கொண்டு வாழும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை இத்தனை பாடாவதியாய் இருக்கிறது?

கான் என்ற பெயர் இருந்தாலே கணிணி அலருகிறது என்பது அவர்களின் வாதம். அது வாதமோ முடக்கு வாதமோ நமக்குத் தேவையில்லை. ஆனால் அத்தனை தூரம் அவர்களை பயமுறுத்தக்கூடிய அளவிற்கு அவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்த காரணம் என்ன? அவர்களின் நிர்வாகத்தின் சீர்கேடுகள் இன்று திருப்தித் தாக்குகின்றது என்று எளிதாக புரிந்து கொண்டாலும் கூட மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் ஏன் இத்தனை ஆர்வமாய் இந்த சமூக சீர்கேடுகளில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்?

காரணம் வெறி?

மன்னர்களின் காம களியாட்டங்களை கண்கொத்தி பாம்பாக ரசிக்க நிணைக்கும் நாம் இந்த மாதிரி உண்மையான வெறி தோன்றிய விதம், இடங்கள், முன்னெடுத்த சம்பங்கள், பின்புலங்கள், சமூகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள், ஏன் இப்படி பகுத்தறிவையும் மீறி அடித்துக்கொண்டார்கள்? கடைசியில் எதை சாதித்தார்கள்? தூண்டி விட்டவர்கள் இன்று வரையிலும் சுகமாகத்தானே வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்? இடையில் வந்தவர்கள் தான் நிற்கக்கூட தெம்பு இல்லாமல் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்?

இது போன்ற பல கேள்விகளை நாம் இன்று வரையிலும் உணரத் தயாராய் இல்லை என்பது தான் முக்கிய நோக்கம்.

முழுமையாக படித்து முடிக்கும் போது தான் வெறி மூலம் பெற்ற வெற்றிகள் அத்தனையும் வெற்றிடத்திற்கு சமம் என்பது ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். புரிந்ததை காட்டிக்கொண்டால் அவர்கள் சாணக்யபுரி வரைக்கும் போகமுடியாது.

புரிந்து (?) வீசி எறிந்த காலணியை பரிசாக பெற்றவர், இன்று மகள் நடத்தும் டாக் ஷோ வில் கூட தலைகாட்ட முடியாமல் வாழ்ந்து கொண்டுருக்கும் தலைவர்கள் பெற்ற போதும் கூட யாரும் உணரத் தயாராய் இல்லை.

ஏதோ ஒரு இயக்கம், தலைமை, கொள்கை அத்தனை பேர்களையும் இன்று வரையிலும் முன்னெடுத்து கவனமாக காத்துக்கொண்டே வருகிறது. இதை வாசிப்பவர்கள் கூட ஏதோ ஒரு சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களாக, பக்கத்தில் இருந்த பார்த்தவர்களாக இருக்கக்கூடும்.

கிலாபாத் இயக்கம், ஜாலியன் வாலாபாக், கல்கத்தா, பம்பாய், பீகார், நவகாளி போன்ற அத்தனை கலவரங்களும் உள்ளுக்குள் நடந்தவைகள், அழிவுகள் அதிகமானதாக இருந்தாலும் அமைதி திரும்புவதற்கு அதிக நாள் ஆகவில்லை. ஆனால் இந்த பாகிஸ்தான் இந்தியா பிரிவினைகள் அதனால் உண்டான பெயர்ச்சி கலவரங்களினால் பாதிக்கப்பட்டவைகள்?

முஷ்ராப் கூட தன்னுடைய மூதாதையர்கள் வாழ்ந்து இடத்தை வந்து பரவசமாய் வந்து பார்க்க வைத்தது.

ஆண்டு கொண்டுருக்கும் பிரதமரும், எதிர்கட்சி தலைவரும் அங்கு பிறந்தவர்கள். (அதனால் தான் இவர்களின் கருணைப் பார்வையில் இன்று வரையிலும் பாகிஸ்தான் இருக்கும் போல.) எஸ்கார்ட் நிறுவன தலைவர் நந்தா அவர்கள் முதல் நாள் மகா கோடிஸ்வரர்.

உயிருடன் வந்தால் போதும் என்று இந்தியாவிற்குள் வந்த போது?

காரணம் இந்த வெறி உருவாக்கிய மாயம். கடவுள் நம்பிக்கை என்பது இல்லாதவர்கள் கூட நம்பித்தான் (மெய்ஞானத்தை) ஆக வேண்டும் என்று வாரிச் சுருட்டிய அழிவு.

முதலில் பஞ்சாப்பில் ஒரு கிராமத்திற்குள் நுழைந்த மவுண்ட்பேட்டன்பிரபு கூறிய வார்த்தைகளை படித்து விட்டு அடுத்த தொடருக்கு போகலாம்.

லட்சக்கணக்கான போர்வீரர்களுக்குத் தலைமை தாங்கி பர்மா காடுகளில் போர் புரிந்து பல மிருகத்தனமான கொலைகளை நேரில் கண்டு அனுபவம் அடைந்துருந்த கிழக்காசியப் படைகளின் தலைமைத் தளபதி மவுண்ட் பேட்டன் பிரபு இந்தச் சிறிய கிராமத்தில் கண்ட காட்சிகள் அவரது இரத்ததை உறையச் செய்து விட்டது.

“காகுந்தா கிராமத்தை நேரில் காணும்வரை மதவெறியின் அளவையும், மனிதன் எத்தனை மோசமாக மிருகங்களைவிடக் கீழாக நடந்து கொள்ள முடியும் என்பதையும் நான் உணர்ந்து இருக்கவில்லை ”

காரணம் வெவ்வேறு நிறங்களில் வாழ்ந்த அத்தனை மனிதர்களின் சடலங்களையும் வழிந்தோடும் ரத்தத்தின் சிவப்பு நிறந்தோடு மொத்தமாக ஒரே இடத்தில் வரிசையாக அடுக்கி வைத்திருந்த வரிசை மிக மிக நீண்டதாய் இருந்து.

தொடரப்போகும் தலைப்புகளின் புதிய இல்லத்தின் சுட்டி

http://deviyar-illam.blogspot.com/

எழுதிய திருப்பூர் வாழ்வியல் அனுபவங்கள்-இந்திய சுதந்திர ரகஸ்யங்கள்

அத்தனை தலைப்புகளும் இருக்கும் தேன்கூடு சுட்டி

http://thamizmanam.com/bloglist.php?id=5625

Advertisements

2 responses to “சிவப்பு ரோஜாக்கள்

  1. மிக சுவாரஸ்யமாக உள்ளது,தொடர்கிறோம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s