வேட்டையாடு விளையாடு

மோதி விளையாடு ஒரு பார்வை

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (29)

கலவரம், கண்ணீர், கதறல் திருந்தவேண்டாம் (1)

ஏன் இந்தியாவில் இத்தனை மொழிகள்? அகன்ற இந்தியா என்று பெருமையாய் போற்றி புகழ்ந்து கொண்டுருக்கும் நாம் ஏன் ஒரே மொழியை இன்று வரை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கவில்லை.

காரணம் அன்று தொடங்கிய விபரீத கலவரங்களின் வித்துக்களை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

சீனர்கள் பெரும்பான்மை. அடுத்த இடத்தில் மலாய் மக்கள். மிச்சமும் சொச்சமும் தமிழர்கள் அல்லது இந்தியர்கள். ஆமாம் சிங்கப்பூரில் தமிழ்மொழி ஆட்சி மொழி. இதில் பெருமையோ சிறுமையோ இல்லை. காரணம் ஐயா லீ குவான் யூ வின் தௌிவான சிந்தனைகள்.

எது எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் என்று தொலை நோக்கத்தில் ஒரு தலைவன் யோசிக்கத் தெரிந்து அதை அன்றே செயல்படுத்தி விட்டாலே பாதி பிரச்சனைகள் முடிந்து விடும்.

திருப்பூருக்குள் இருபது வருடங்கள் வாழ்ந்தாலும் பேசுபவர் மலையாளத் தமிழ், சேட்டுத்தமிழ் தான். எந்த மாற்றமும் வந்து விடாது. ரயில் நிலையங்களில் கூட ஹிந்திதான் மந்தியாக நம்மை பயமுறுத்தும். காரைக்குடி தமிழனும் ஒன்று தான். கடைக்கோடி காஷ்மீர் குடிமகனும் ஒன்றுதான். அவனுடைய வாழ்நிலை, படிப்பறிவு, விருப்பங்கள் எதுவும் ஆட்சியாளர்களுக்கு முக்கியமில்லை.

பீகாரி மொழியைத் தவிர வேறு ஒன்றும் தெரியாத கடைக்கோடி பாமரனும் ஹிந்திக்காரன் தான். அன்றாட 20 ரூபாய் வருமானம் கூட பெறமுடியாமல் வாழ்ந்து கொண்டுருக்கும் வட கிழக்கு மாநிலங்களின் ஆயுதப்புரட்சியை விட ஆளுபவர்களின் ஒரே நோக்கம்?

விழித்து விடக்கூடாது. விழித்தால் விடிந்து விடும்?

வௌிச்சம் வந்தால் ரயிலில் பயணித்தால் கூட மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விடுவார்கள்.

ரயில் முன்பதிவு சீட்டுகளில் உங்கள் பெயர் என்று தமிழில், தெலுங்கில் பீகாரி மொழியில் அச்சிட்டு கொடுத்தால் என்ன பிரச்சனை வந்து விடும். ஒரு பிரச்சனையும் வந்து விடாது. மாட்டுத் தொழுவத்தில் பயணம் செய்வது போல் இருக்கிறது என்று விமான பயணத்தை அமைச்சர் சொன்னாரே அவர்கள் அனைவரும் எப்படி முதல் வகுப்பில் பயணிக்க முடியும்.

ஆமாம். திணித்தல் அல்லது அகம்பாவம்.

வௌ்ளையர்களிடம் அடிமைப்பட்டு இருந்த போதிலும் அவவ்ப்போது கலவரம் தூண்டிய மக்களால் பிரச்சனைகள் வந்ததே தவிர அது தொடரவில்லை. ஆனால் பாகிஸ்தான் என்ற நாடு பிரிவினை என்று உறுதிப்படுத்த பேச்சு வார்த்தைகள் தொடங்கிய போதே அத்தனை பேர்களும் முழித்துக்கொண்டனர்.

ஒரே வாய்ப்பு இது தான். இதை விட்டால் வேறு எந்த வாய்ப்பும் அத்தனை சீக்கிரம் வந்து விடாது.

இந்தியாவின் வடமேற்கு எல்லைபுறத்தில் முஸ்லீம்கள் (பத்தான்கள்) 93 சதவிகிதம் வாழும் இடம். ஆனால் அங்கு வாழ்ந்த மொத்த இனமும் அதுவரையில் எந்த பெரிதான சண்டை சச்சரவுகளும் கொண்டு வாழவில்லை என்பதன் காரணம் அங்குள்ள தலைவர். ஆமாம் அனைவரின் பாராட்டைப் பெற்ற எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கபார்கான். தௌிவான சிந்தனைகள். அப்பழுக்கற்ற சேவைகள். மத மாச்சரிங்களைக்கடந்து அனைவரையும் அரவணைத்த கரங்களுக்குச் சொந்தகாரர்.

மற்றொரு மகாத்மா.

ஆனால் ஜின்னாவின் ” பாகிஸ்தான் என்ற நாடு. முஸ்லீம்களுக்கென்று ஒரு நாடு ” என்ற கோஷத்தை வைத்துக்கொண்டு சேர்ந்த கூட்டம் வலுப்பெற்று, அத்தனை வசதிகளையும் பெற்றவர்களின் வாழ்க்கையை அழிக்க எல்லை காந்தியின் கொள்கையை எதிர்க்கத் தொடங்கினார்கள்.

நாட்டின் மொத்த நிலவரம் என்ன? என்பதை அறிவதற்காக பெஷாவார் பகுதியில் பயணம் செய்த மவுண்ட் பேட்டன் பிரபு கேட்ட ஒரே கோஷம் ” பாகிஸ்தான் ஜிந்தாபாத். ஜின்னா சாகிப் ஜிந்தாபாத் “. அப்போதே மனதில் குறித்துக்கொண்டார். எந்த விதத்திலும் இனி மாற்றமுடியாது. மக்களை தயார் செய்து விட்டார்கள். மாற்ற முற்பட்டால்? இல்லாவிட்டால் தகராறு தான்.

பஞ்சாப் கவர்னர் சர் எவான்ஸ் ஜெங்கிள்ஸ் சொன்னதைக் கேட்டு மவுண்ட் பேட்டன் பிரபு ஒரு நிமிடம் கதிகலங்கி விட்டார்.

” பிரிவினையை எதிர்பார்த்து மாநிலங்கள் பலவற்றிலும் கலவரம் நடக்கிறது. கொலை, கொள்ளை தீ வைத்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை. இரவில் கூட தூங்கமுடியாதபடி பலமுறை டெலிபோன் மூலம் என்னை எழுப்பி புதிய கலவரம் எதையாவது எனக்குத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். பிரிவினை ஏற்பட்டால் பஞ்சாப் பற்றி எரியும் என்பது கேலிப் பேச்சு. இப்போதே அது எரிந்து கொண்டுதானிருக்கிறது ”

எத்தனையோ குறைகள் நாம் இதுவரையில் ஆங்கிலேயர்களை இது வரைக்கும் படித்தோம். ஆனால் கலவரம் தொடங்கிய போதும், நடந்து கொண்டுருந்த போதும் அவர்கள் அழித்த பங்களிப்புகளை இந்தியா என்றைக்கும் மறக்கக்கூடாது. தங்களால் முடிந்த வரையில் அதிகாரத்தை வைத்து, ஆயுதத்தை வைத்து கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார்கள். ஆனால் கலவரக்காரர்களால் அடித்து செல்லப்பட்ட சிறகு படகு போல் சின்னாபின்னமாகி சிதைந்து போன அவர்களின் பல கல்லறை நினைவுச் சின்னங்கள் இன்று வரையிலும் இந்தியா முழுக்க பரவியுள்ளது.

தற்கால அரசியல் அறீவீலிகள் போல் எறிகின்ற தீயில் நெய்யை ஊற்றவில்லை. ஆங்கிலேயர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், அறிவுத்திறமை அத்தனையும் அடிபட்டு போனது. அடிபட்டு காயம் பட்டு உயிர் இழந்து உறுப்புகள் இழந்து ஏன் தோற்றார்கள்?

ஓரே காரணம் மனதிற்குள் இருந்த வெறி.

உலகத்தில் உள்ள அத்தனை மோசமான விலங்குளின் மோசமான குணங்களையும் அன்று வாழ்ந்த அத்தனை மனிதர்களும் ஒருங்கே பெற்ற காரணம் ஒன்று மட்டுமே.

அடுத்தவர் சொத்தை அபகரிக்க போட்டுருந்த நீண்ட நாள் திட்டம், அடுத்தவரின் மனைவியை ஆளப் போட்ட மகா பாதகம், பொன்னும் பொருளும் இல்லாமல் வாழ்ந்த கூட்டத்தின் எரிச்சல் என்று வாழ்ந்த அத்தனை கூட்டத்திற்கும் அன்றைய காலகட்டம் அல்வா சாப்பிடும் சந்தோஷம்.

எங்கிருந்து வந்தது இதில் மதம்?

இல்லை. இன்றுவரையிலும் அது ஒரு முலாம் தான். வௌிப்பூச்சு தான். உள்ளே உள்ள புழுத்துப்போன் எண்ணங்களின், வக்கிரத்தின் வௌிப்பாடு தான் மதமாக, ஜாதியாக, நான் பெரியவன்? நீ பெரியவனா? என்று கூட்டம் போட வைக்கிறது. கூடிய கூட்டமெல்லாம் தனது வெறியை தணிக்க பேரூந்தை எறித்து, வெகு ஜன கூட்டத்தை கலங்கடித்து, ஆயுதம் தூக்கி அணைவரையும் அச்சப்பட வைக்கின்றது.

இந்துவோ, முஸ்லீமோ, கிறிஸ்துவனோ முழுமையாக மூலத்தை அறிந்தால் அவன் மனதில் அமைதி மட்டுமே உருவாகும்.

எந்த பிறப்பும் இங்கு கேவலம் இல்லை. அவன் மனதில் பிறக்காத எண்ணங்கள் மட்டுமே அருவருப்பானது. புத்தர் சொன்ன வழியில் நடப்பவர்கள் புனிதமாகவா வாழ்ந்து கொண்டு ஆட்சி புரிகிறார்கள். ஓரே கடவுள் என்று சொன்னவர் அத்தனை பேரையும் மதம் மாற்று என்று சொன்னார்கள்.? அன்பு வடிவானவர் என்று சொன்னவர் ஆசிய நாட்டையே ஆளுமைக்குள் கொண்டு வாருங்கள் என்று அறிவுறுத்தினாரா? தலையில் தோன்றியவர்கள் நாங்கள் என்று சொன்னவர்கள் அத்தனை பேரும் ஆட்சியில் அதிகாரத்தில் ஆளுமையில் இருக்கும் போது தலைக்கனம் இல்லாமலா வாழ்கிறார்கள்?

ஆன்மிகம் என்பது அமைதியின் தொடக்கம்.

இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம், புத்தம் என்று பிரிவினைகள் உண்டே தவிர எந்த மதமும் ஒருத்தருடன் ஒருவர் மோதி எங்களின் உன்னதத்தை உலகிற்கு காட்டுங்கள் என்ற போதனையை சொல்லவில்லை.

உணர்ந்தவன் உள்வாங்கியவன். உணராதவன் உளறலின் சார்பாளன்.

தூண்டுதல் ஒரே ஒரு நிமிடம் தான். தூண்ட உதவிய வார்த்தைகள் சில தான். ஆனால் எறிந்த நெருப்பும், அணையாத வன்மும் தலைமுறை தாண்டியும் இன்றுவரையும் பாதுகாத்து தன் பயணத்தை தொடர்ந்து கொண்டுருக்கிறது.

பஞ்சாப் கலவர காரணங்களுக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், மொத்தமாய் முடிந்த பிறகு பிரிட்டிஷ் மக்கள் சொன்ன காரணம் தான் உண்மையாக இருக்கும்.

” இந்துக்களும் முஸ்லீம்களும் தமக்குள் ஒருவர் ஆட்சியின் கீழ் மற்றவர் வாழ்வதென்கிற எண்ணமே அவர்களுக்கு அருவருப்பை உண்டாக்கியது என்பதுதான் ”

இப்போது புரிகிறதா?

ஏன் ஆங்கிலேயர்கள் ஆறு தலைமுறைகள் நம்மை ஆண்டார்கள்? ஏன் இன்றுவரையிலும் ஆங்கில மொழி நமக்கு ஆட்சி மொழியாக இருக்கிறது என்பதை?

நட்புடன்

ஜோதி கணேசன். (ஜோதிஜி)

தேவியர் இல்லம். திருப்பூர்.

தொடரப்போகும் தலைப்புகளின் புதிய இல்லத்தின் சுட்டி

http://deviyar-illam.blogspot.com/

அத்தனை தலைப்புகளும் இருக்கும் தேன்கூடு சுட்டி

http://thamizmanam.com/bloglist.php?id=5625

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s