அடித்த அடியிலும் அசராத ராஜா

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (27)

அடித்த அடியிலும் அசராத ராஜா

இன்று வரையிலும் நாம் பார்த்துக்கொண்டுருக்கும் அத்தனை வௌ்ளையர்களின் நிர்வாகத்தின் மொத்த வடிவம் சற்று கருப்பாகத்தான் இருக்கும். ஆனாலும் தனிப்பட்ட வௌ்ளையர்களின் மனம் தோல் நிறத்தைப் போலவே இருக்கும். காரணம் அனைத்து நாட்டு நிர்வாகத்தின் மொத்த இறுதி வடிவமே ஓட்டெடுப்பு என்ற முறையில் வளர்ந்து கொண்டுருக்கும் பல நாடுகளை உருக்குலைத்துக் கொண்டுருக்கிறது.

கருப்பாக தோல் இருந்தாலும் தனிமைச் சிறையை தகர்த்த வௌ்ளை மனம் ஒபாமாவுக்கு உண்டு. ஆனால் மொத்த நிர்வாகம் என்பது பாகிஸ்தானுக்கு வழங்கும் கடன் உதவியால் இந்தியாவை கலங்கடிப்பதும் உண்டு.

ஆளுமைக்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர்களின் ஆட்சி முறையும் இதே போலத்தான். முப்பாட்டனார்கள் காலத்தில் உருவாக்கிய பிரிவினைகள் உச்சகட்டமாய் கொழுந்து விட்டு எறிந்து கொண்டுருக்கும் இந்த நேரத்தில் மன்னர்களின் அக்கப்போர் ஒரு பக்கம் அவர்களை அலைக்கழித்துக்கொண்டுருந்தது.

ஆனாலும் வௌியேறும் போது வீணான எந்த சர்ச்சைகளிலும் அவர்கள் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. மவுண்ட் பேட்டன் பிரபு தொடக்கம் முதலே பட்டும் படாமல் இருந்தார். காரணம் அத்தனை மன்னர்களின் அந்தரங்கம் வரையிலும் பழகிய பழக்கம்.

ஒரே நாளில் புத்தி சொல்கிறேன் என்று போனால் புழுதி கிளம்பி விடும் என்பதை நன்றாக உணர்ந்து வைத்து இருந்தார்.

நினைத்து இருந்தால் ஒரே வார்த்தையில் அமட்டியிருக்க முடியும். அவர்களையும் ஒரளவிற்கு சமாதானப் பார்வையில் திருப்பியிருக்க முடியும். ஆனால் கண்ணீர் விட்டு கதறிய மன்னர்களைப் பார்க்கும் போது ஒரு பக்கம் பாவமாகவும் மறுபுறம் பரிதாபமாகவும் இருந்தது.

அன்றைய பிரிட்டிஷ் நாட்டு அயல்நாட்டு விவகாரங்களை கவனித்துக்கொண்டுருந்த லார்ட் லிஸ்ட் வுட் அவர்களை நேரிடையாக சந்திக்க மன்னர்கள் வேண்டுகோளின்படி சர்.கோன்ராட் கார்பீல்ட் என்பவரை அனுப்பி வைத்தார். மன்னர்களின் சார்பாக தலைமை பொறுப்பாகச் சென்றவர் நம்முடைய பருப்பும் கடுமையான உழைப்பாளியுமான பாட்டியாலா மன்னர்.

முட்டி மோதுங்கள். உங்கள் பாடு. அவர் பாடு. ஓதுங்கி விட்டார் மவுண்ட் பேட்டன் பிரபு. எதையும் கட்டாயப்படுத்தி புரியவைப்பதில் அர்த்தம் இல்லை என்பதை அன்றைக்கே உணர்ந்து இருப்பார் போல.

மன்னர்களின் வாதம் சிரிப்பை வரவழைக்கக்கூடியது. நாங்கள் உங்கள் பாட்டனாரிடம் (1765) பெற்ற புனிதமான ஒப்பந்தம் இது. எங்களுக்கும் இந்தியாவிற்கும் சம்மந்தம் இல்லை. நாங்கள் சுயாட்சி மன்னர்கள். நாங்கள் எதற்காக இந்தியாவுடன் சேர வேண்டும்?

வௌ்ளை மனம் படைத்த லார்ட் லிஸ்ட் வுட் கையை விரித்து வைத்து விட்டார்.

“நாங்களே கட்டியிருக்கும் துண்டும் கழன்று விடுமோ என்ற அச்சத்தில் தான் அவசரமாய் காலிசெய்து கொண்டுருக்கிறோம். நீங்களோ உங்களின் கச்சையையும் மகுடத்தையும் வசதிகளையும் எண்ணி வந்து கண்ணீர் வடிக்கிறீர்கள்? வேண்டுமானால் உங்களுக்கென்று தனியான வசதிகள் வேண்டுமானால் பஞ்சாய்த்து மூலம் வாங்கித்தருகிறேன். அடம் பிடிக்காமல் ஆளுக்கொரு (கூட) ஒரு அவுன்ஸ் போட்டுக்கொண்டு கையெழுத்து போட்டு கொடுத்துடுங்க “.

பாட்டானார்கள் செய்த அலங்கோலங்கள் போல அன்றைய தினம் லிஸ்ட் நினைத்து இருந்தால் இந்தியா என்பது வரிசையாக (லிஸ்ட்)த்தான் சிதறி இன்று இலங்கை போல் காட்சி அளித்து இருக்கலாம்.

பொறுப்பை நிறைவேற்ற தேர்ந்தெடுத்த கரும்பான இரும்பு தான் நம்முடைய தலைவர் படேல் அவர்கள். உண்மை தான். இன்றைய விலை உயர்ந்த சமாச்சாரங்களைப் போல அத்தனை உயரத்தில் இருந்த நாதாரிகளையும் அடக்கி ஒடுக்கி வழிக்கு கொண்டு வந்தவர். காரணம் அத்தனை மன்னர்களும் ஆள் பலம், படை பலம், குண்டர் படை, குந்தாணி படை என்று அத்தனை படை சொறிகளுடனும் வாழ்ந்தவர்கள்.

ஒரே நாளில் இரவை முடிவுக்கு கொண்டு வந்து விட முடியாது. வௌிச்சம் வருவதற்குள் எத்தனை விடியாத இரவுகளை சந்திக்க நேருமோ? அச்சப்பட்ட படேல் அவர்களின் சிந்தனை உண்மையாகத்தான் இருந்தது.

அந்தப்புரத்தில் உழைத்துக்கொண்டுருந்தவர்கள் அத்தனை அம்சமாய் சுருதி சுத்தமாய் வௌியே வந்து உலகை உருட்டிக்கொண்டுருந்தார்கள். அதிலும் இந்த உலோபியாக வாழ்ந்த நிஜாம் மன்னர் போட்ட ஆட்டம் இருக்கிறதோ அனைவரையும் அச்சப்பட வைத்தது.

பத்தில் எட்டு இந்துக்கள் இருந்த போதிலும் எந்த பிரச்சனைகளையும் அவர் சந்தித்து இல்லை. காரணம் நம்மவர்களின் உலகறிந்த சகிப்புத்தன்மை. ஆனாலும் அவர் அன்றாடம் உருவாக்கிய கலவர வெடிகள் சிதற சிதற கடைசியில் அணுகுண்டு ஒன்றும் வெடித்தது.

உண்மை. அவர் வளர்த்து வைத்திருந்த கொடூரமான பன்றிக்கூட்டமான ரஜாக்கர் கூட்டம். சமஸ்தானத்தில் இருந்த அத்தனை இந்துக்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டது. கொளுத்தப்பட்டார்கள். பெண்களை நடுத்தெருவில் வைத்தே மானபங்கம் செய்யப்பட்டது. தப்பி ஓடியவர்கள் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் முடிந்த வரையில் தங்களை காப்பாற்றிக் கொள்ள கிடைத்த ரயிலில் பயணித்தார்கள்.

பயணத்தில் (பெசாவாடாவில் இருந்து மசூலிப்பட்டணம்) ஒரு பெண் திடீர் என்று எழுந்து கத்திகொண்டே மொத்த ஆடைகளையும் அவிழ்த்து நிர்வாணமாக கதறி தீர்த்தார். “மானங்கெட்டவர்களே, உங்களுக்கு எதுக்கு இந்த உயிர்? எங்கே போச்சு உங்கள் வீரம்? என் நிர்வாணத்தை ரசிக்க முடியாமல் கண்களை பொத்திக்கொள்பவர்களே, நடுத்தெருவில் உங்கள் அக்கா தங்கைகளை அங்கே அழித்துக்கொண்டு அந்த நிஜாம் மன்னனை ஒன்றும் செய்யாமல் ஏன் ஓடி ஒளிகிறீர்கள்? ”

கூட்ஸ் வண்டி சத்தத்தில் அந்த சப்தமும் கரைந்து போனது.

மொத்த மன்னர் பிரிவினையின் போது அதிக கோரத்தாண்டவம் நிஜாம் மன்னரின் சமஸ்தானத்தில் தான். இதற்கு இடையில் அந்த மன்னர் செய்த மகத்தான புண்ணிய காரியம் அத்தனை சொத்துக்களையும் தினந்தோறும் பாகிஸ்தானுக்கு கடத்திக்கொண்டுருந்தது.

டோல்பூர் மன்னர் கையெழுத்து போட்டவுடன் மயங்கி விழுந்தார். விழுந்த சில நிமிடங்களில் போயே சேர்ந்து விட்டார்.

பரோடா மன்னர் மேனன் தோளில் சாய்ந்து குழந்தை போல தேம்பி தேம்பி அழுதார்.

உதயபூர் மன்னர் மற்ற நாட்டு கூலிப்படையுடன் கூட்டணி அமைக்க முற்பட்டார்.

மிகுந்த புத்திசாலியான திருவிதாங்கூர் மன்னர் கரைச்சலை உருவாக்கினால் கண்டு கொள்ளமாட்டார்கள் என்று பெரிய கூட்டத்தை உருவாக்கினார். அவருடைய கெட்ட நேரமோ என்னமோ தெரியவில்லை, கூட்டத்தில் வந்த ஒருவன் நேருக்கு நேர் பாய்ந்து கத்தியால் அவரை குத்த (என்ன வைராக்கியமோ?) பயந்து போய் கையெழுத்துப் போட்டு கொடுத்து விட்டார்.

ஜோத்பூர் மன்னரின் வாரிசு அப்போது தான் அரியாசனத்தில் அமர்ந்து இருந்தார். இருந்தது சிறிது காலம் தான். ஆனால் அவருடைய ஆட்சி என்பது அவருடைய விலை உயர்ந்து பொழுது போக்குகள். விமானம் ஓட்டுதல் போன்றவைகள். அவரோ பட்டேல் நெருக்க நெருக்க நேரிடையாக ஜின்னாவிடம் போய் நின்றார். கூடவே ஜெய்சால்மர் மன்னரும்.

‘ நாங்கள் உங்கள் பின்னால் வந்து விடுகிறோம்’ என்றதைக் கேட்டு அதிசயமான ஜின்னா ஒரு வௌ்ளை காகிதத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தார்.

” இதோ பாருங்கள். என்னுடைய கையெழுத்து இருக்கிறது. எதுவும் எழுதவில்லை. உங்களுக்கு என்னன்ன வேண்டுமோ அத்தனையும் எழுதிக்கொள்ளுங்கள் ” என்றார்.

இதில் என்ன கொடுமை என்னவென்றால் இருவரின் சமஸ்தானத்தில் வாழ்ந்தது அதிக அளவு இந்து மக்கள்.

ஆனால் ஓற்றர்கள் மூலம் கவனித்து வந்த மேனன் மற்றும் படேல் அவர்கள் குண்டுகட்டாக தூக்கி வந்து காரியத்தை முடித்தனர்.

கடைசிவரையிலும் ஒத்துழைக்காமல் இருந்த நிஜாம் மன்னரும், ஜுனகாத், காஷ்மீர் மன்னர்களையும் வேறுவழியே இல்லாமல் அதிகார “போலீஸ்” கொடுத்த எத்தலில் தொத்தலாகிப் போனார்கள்.

இப்போது தான் படேல் முகத்தில் லேசான ஆமாம் லேசான புன்னகை.

காரணம் அன்றைய படேலை அணைவரும் வர்ணித்த வார்த்தைகள் என்ன தெரியுமா?

“ரோமச் சக்கரவர்த்திகளைப் போல கல்லில் செதுக்கியது போன்ற இறுகிய முகமும் தோற்றமும் உடையவர் “.

இரும்பு மனிதர் அன்று கடுமையான நடவடிக்கைகளால் செயல்பட்டு இருக்காவிட்டால் இன்று கரும்பு கடித்து பொங்கல் சுவைத்து தை தினத்தை கொண்டாடுவது போல் சுதந்திர தினத்தை கொண்டாடி இருக்க முடியாது.

=&&&&&=

வீடு கிரஹகப்பிரவேசத்திற்கு முன் நேரில் வந்து வழங்கி வரவழைக்கும் பத்திரிக்கை இது.

நட்புடன்

ஜோதி கணேசன். (ஜோதிஜி)

தேவியர் இல்லம். திருப்பூர்.

http://deviyar-illam.blogspot.com/

Advertisements

2 responses to “அடித்த அடியிலும் அசராத ராஜா

  1. yes, we need to educate our youth with this kind of powerful men’s very tough activities to liberate us from those kind of tyrants.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s