மலையாளிதான். ஆனால் மற்றொரு?

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் (26)

மலையாளிதான். ஆனால் மற்றொரு?

தொடரின் தொடக்கத்தில் விமர்சனத்தில் தந்த நண்பர் ( சுதந்திரத்திற்கு பாடுபட்ட ஏழைகளின் பெயர் ஏதும் இருக்கிறதா என்று அறிந்திருந்தால் சொல்லவும். ஏதோ ஒருவன்.காம்)

இந்திய சுதந்திரத்திற்கு நமக்குத் தெரிந்த தலைவர்கள் மட்டும் தான் இருக்கிறார்களா? வேறு யாருமே இல்லையா என்று கேட்டுருந்தார். உண்மை. இன்றைய அகன்ற இந்தியாவை உருவாக்க, அத்தனை மன்னர்களையும் வழிக்கு கொண்டு வந்த படேலுக்கு உதவியாய் இருந்த தெய்வத்திரு வி.பி.மேனன் அவர்களை இந்த நேரத்தில் பார்த்தே ஆக வேண்டும்.

மேனனது குடும்பம் மிகப் பெரியது. பத்து பிள்ளைகள். இவர் தான் மூத்த மகன். வசதி இல்லாத காரணத்தால் படிப்பை பாதியில் நிறுத்தும் சூழ்நிலையில் கட்டிட வேலைக்கு கூலியாளாகச் சென்றார். கூலியாள், ரயில் என்ஜினில் நிலக்கரியை தள்ளி விடும் வேலை, ஒரு சிறு பள்ளியில் சிறிது நாட்கள் ஆசிரியர் பணி. இடையிடையே இரண்டு விரல்களால் தட்டெழுத்துப் பயிற்சி. முறைப்படி கற்றுக்கொள்ளவில்லை. வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை. போராடி (1929) அன்றைய அரசாங்கத்தில் ஒரு குமாஸ்தா வேலையை பிடித்துக் கொண்டு விட்டார்.

சிம்லாவில் போய் பணியில் சேர வேண்டும். ரயில் பயணத்தின் போது மொத்தத்தையும் திருடிவிட வழிதெரியாமல் இடையே இறங்கி பயந்து கொண்டு வேறு வழியே தெரியாமல் நடைமேடையில் நின்று கொண்டுருந்த சீக்கீயரிடம் 15 ரூபாய் கேட்க, மொத்தத்தையும் உள்வாங்கிய அவர் கொடுத்த ரூபாயில் பயணம் தொடர்ந்தது.

ஊருக்குச் சென்றதும் உங்களுக்கு அனுப்புகிறேன். முகவரி தாருங்கள் என்று கேட்ட போது அந்த சீக்கியர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

எனக்குத் தரவேண்டிய இந்த 15 ரூபாய் போல உன்னைத் தேடிவருபவர்களுக்கு வாழ்நாள் முழுக்க கொடுத்துக்கொண்டே இரு.

உண்மை வாழ்நாள் முழுக்க (சாவு வரைக்கும்) 15 ரூபாய் என்பதை கொடுத்துக் கொண்டே கடைபிடித்து வாழ்ந்தார்.

ஏன் இத்தனை விபரம் என்றால் கல்வித் தகுதியில்லை. அத்தனை அறிவு கூட இல்லை. உழைப்பு. உழைப்பை மட்டுமே நம்பி பயணித்த அவருடைய பாதை ஒவ்வொரு படியாக உயர்ந்து உயர்ந்து அன்றைய ஐசிஎஸ் படித்த மக்களுக்கு சமமாக அல்லது அவர்களுக்கு மேலாகவே ஒரு படி உயர்ந்து நேரு படேல் மவுண்ட்பேட்டன் அந்தரங்க ஆலோசகர் வரைக்கும் உயர்ந்தார்.

எந்த குறுக்கு வழியிலும் இல்லை. இந்திய சுதந்திர பிரகடனத்தை மவுண்ட் பேட்டன் சொல்லச் சொல்ல குறிப்பெடுத்து அறிக்கை தயார் செய்த நபர். நம்முடைய சுதந்திரத்தை அத்தனை தலைவர்களுக்கும் முன்னால் படித்த, பரவசமான வாழ்க்கை வாழ்ந்தவர் விபி மேனன்.

பின்னாளில் அவரின் அரசியல் வாழ்க்கையில் வௌியான நிகழ்வுகள் கூட (மத்திய அமைச்சர்) பல்வேறு லஞ்சம் ஊழல்கள் பற்றியது அல்ல. அது அவரின் அரசியல் சம்மந்தமான சார்பு தன்மையுள்ள விஷயங்கள்.

வௌ்ளையர் ஆட்சி காலத்தில் எந்த இந்தியர்களையும் இனம் வைத்து மதம் வைத்து ஜாதி பார்த்து எல்லாம் அவர்களுடைய திறமைகளை நசுக்க வில்லை. இருக்குதா வா? இல்லையா போ? ஒரே கொள்கை. ஒரே வார்த்தை.

இருந்த போதிலும் கற்பனையில் கொண்டு வாருங்கள்

இன்று சைதை துரைசாமி அவர்களால் இலவசமாக நடத்தி நல்ல மாணவர்களை மாவட்ட ஆட்சியாளர்களாக உருவாக்க அத்தனை பாடுபட்டுக் கொண்டுருக்கும் இன்றைய நவீன கால வசதிகள் பெற்ற உழைப்புக்கும், எந்த வசதிகளும் இல்லாமல் தனி மனிதனின் விருப்பமும் உழைப்பும் தான் உயர்த்தி உள்ளது என்பது தான் ஆச்சரியமளிக்கக்கூடிய செய்தி தானே?

சைவ உணவு. எந்த தவறான பழக்கமும் இல்லை. வேலை என்றால் 24 மணி நேரமும் உழைக்கத் தயங்காதவர். டிமிக்கி கொடுத்துக்கொண்டுருந்த மன்னர்கள் பின்னால் படேல் அறிவுரையின் படி லோ லோ என்று அலைந்து கொண்டுருந்தவர்.

ஒரு மன்னர் (ஜோத்பூர்) துக்கம் தாளாமல் இவரை அழைத்து பார்ட்டி கொடுக்கின்றேன் அசைவத்தை தண்ணியை வாயில் தள்ளி ( உண்மை?) தலை குப்புற கீழே விழுந்து கிடந்தவர்.

மயங்கிக் கிடந்தவரை மறுபடியும் எழுப்பி தன்னுடைய சொந்த விமானத்தில் (மன்னர் மிகச் சிறந்த விமான ஓட்டி) அழைத்துச் சென்று (வந்தால் தான் கையெழுத்துப் போடுவேன்?) அத்தனை சாகசங்களையும் வான்வௌியில் நிகழ்த்திக் காட்டி மப்பும் மந்தாரமுமாய் குலை நடுங்கி பாதி உயிருடன் அவரின் கையெழுத்தை பெற்று வந்தவர்.

இதே ஜோத்பூர் மன்னர் ஒரு மேஜிக் கலைஞர் கூட. மவுண்ட் பேட்டன் அலுவலகத்தில் கையெழுத்து போட்டுக் கொடுக்க வேண்டிய காகிதத்தில், கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு வைத்திருந்த பேனாவை அப்படியே துப்பாகி போல் மாற்றிக் காட்ட கதறிய விபி மேனன் மயங்காத குறைதான். அந்தப்பக்கமாக வந்த மவுண்ட் பேட்டன் பிரபு அதை தைரியமாக பிடுங்கிக்கொண்டு இவரை காப்பாற்ற மூச்சு விட்டு எழுந்தார்.

ஒரு பக்கம் நேரு. ஒரு பக்கம் படேல். மற்றொரு பக்கம் மவுண்ட் பேட்டன் பிரபு என்று மும்மூர்த்திகளாலும் சூழப்பட்டு தீபகற்கபமாக வாழ்ந்து கற்பகத்தருவாய் காட்சியளித்து வாழ்ந்தவர். வித்யாசமான தலைவர்களுடன் பழகினாலும் ஒருவரின் அந்தரங்கத்தை அடுத்தவருடன் தெரிவிக்காமல் அனைத்து தலைவர்களுடனும் ஒன்றாக இணைந்து தன்னுடைய ஆளுமையை நிரூபித்து வாழ்ந்த மகான்.

உதவியாளர் பொறுப்பில் இருந்த இந்த மேனன் பாடே மேள தாளம் என்றால் படேல் அவர்கள் பட்டையை கிளப்பிய பிறகு தான் இந்த மன்னர்கள் தன்னுடைய பட்டறையை காலி செய்து கொடுத்தார்கள்.

காரணம் அன்றே படேல் அவர்கள் வடிவேல் வசனத்தை உச்சரித்து இருக்கக்கூடும்.

ஸ்…….ஸ்……. அப்பாடா………இப்பவே கண்ணக்கட்டுதே…………

நட்புடன்

ஜோதி கணேசன். (ஜோதிஜி)

தேவியர் இல்லம். திருப்பூர்.

http://deviyar-illam.blogspot.com/

Advertisements

4 responses to “மலையாளிதான். ஆனால் மற்றொரு?

 1. எந்த வசதிகளும் இல்லாமல் தனி மனிதனின் விருப்பமும் உழைப்பும் தான் உயர்த்தி உள்ளது என்பது தான் ஆச்சரியமளிக்கக்கூடிய செய்தி தானே?//

  ஆச்ச்யர்மான தகவல் தான் … நல்ல செய்திகள்.

 2. இவர் மந்திரியாக இருந்த காலத்தில்தான் சீனா இந்தியாவின்
  6000 சதுரமைல் இந்திய நிலப்பகுதியை கைப்பற்றிக்கொண்டது.
  எல்லா மலையாளிகளும் சீனக்கம்யூனிட்ற் அனுதாபிகள்.இந்தி
  யநலன்களிலும் பாற்க அவர்களுக்கு சீனா நாட்டின் நலன்தான்
  மிகமுக்கியம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s