கலையப் போகும் ராஜ வேஷங்கள்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் (25)

இன்றைய இந்தியாவில் அரசியல் இல்லாமல், அதிகாரம் ஏதும் இல்லாமல் தன்னாலான அத்தனை சமூக பங்களிப்புகளையும் செய்து கொண்டுருப்பவர்கள் ஒரு அளவுக்கு மேல் சோர்ந்து போய்விடுவதுண்டு. காரணம் கசடுகள் மூச்சு முட்ட வைத்து விடுவதுண்டு.

சில கண்களுக்கு தெரிந்த உதாரணங்கள். திரு. தோழர் நல்லகண்ணு உழைக்க முடியாத உடம்பும் ஒய்வெடுக்க வேண்டிய சூழ்நிலையில். திரு. எம்.எஸ். உதயமூர்த்தி மக்களின் சக்தியை திரட்டுவதற்காக அத்தனை வசதிகளையும் மகன்களிடம் ஒப்படைத்து விட்டு அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து சென்னையில்?. திருப்பூர் முயற்சி அமைப்பு, கோயமுத்தூர் வளம் அமைப்பு இன்று வரையிலும் மூச்சை நிறுத்தாமல் முன்னேறிக்கொண்டுருக்கிறார்கள்.

ஆனால் இத்தனை வசதிகளை இன்று பெற்றும் இவர்களால் முடியாத காரணங்கள் எத்தணையோ?

எவரும் காரணம் இல்லை. ஒரே ஒரு காரணம் இல்லாத விழிப்புணர்ச்சி. அதை உருவாக்கி விடக்கூடாது என்று கவனமாக முன்னேற்பாடுகளுடன் காய் நகர்த்தும் அவவ்போது வந்து போகும் ஆட்சியாளர்கள். அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிகாரவர்க்கம். ஆனால் இவர்கள் கூட பராவாயில்லை. விரும்பி அழைக்கும் கூட்டமெல்லாம் விருந்தில் அல்லாவா கடைசியில் முடிக்க வேண்டியிருக்கிறது. அப்புறம் எங்கே கருத்துரைக்க வருபவர்களின் கூட்டம் கரை சேரப் போகிறது.

ஆனால் இந்த மன்னர்களைப் பாருங்கள்.

பரோடா மன்னர் பலதார மண தடைச் சட்டத்தை அன்றே கொண்டு வந்து நடைமுறை படுத்தி வெற்றி கண்டார். சமஸ்தானம் முழுமையும் அணைவருக்கும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களுக்கும் இலவச கல்வியை வழங்கி பெருமை படுத்தினார். தீண்டாமையை ஒழிக்க அவர் பாடுபட்டது காந்தியின் கொள்கைகளை விட ஒரு படி மேலானது. இவர் தான் பீமராவ் அம்பேத்கார் அவர்களை நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைகழகத்திற்கு அனுப்பி மேல்படிப்பு படிக்க வைத்தவர்.

பாலைவனத்தில் தண்ணீருக்காக தவித்த மக்களுக்காக பல செயற்கை ஏரிகளையும், நீரூற்றுகளையும் உருவாக்கியவர் பிகானீர் மகாராஜா.

போபால் சமஸ்தான மன்னர் அந்தக்கால இந்தியாவில் எங்கும் இல்லாத பெண்களுக்கு சமஉரிமையும் கொடுத்து சட்டமாக இயற்றி பாதுகாத்து கொண்டு சென்றார்.

மைசூர் சமஸ்தானத்தில் ஆசியாவிலேயே மிகச் சிறந்த விஞ்ஞான கூடம் இருந்தது. ஏராளமான ஹைட்ரோ எலக்ட்ரிக் அணைகளையும் நவீன தொழிற் சாலைகளையும் ஏற்படுத்தினார்கள்.

ஜெய்பூர் மகாராஜா உலகத்தினர் அனைவரும் பாராட்டிய “யூகலிட்ஸ் பிரின்ஸிபிள் ஆப் ஜியாமெட்ரி ” (அவரே ஒரு மாபெரும் சாஸ்திர நிபுணர்) என்ற நூலை சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்து அனைவருக்கும் வழங்கினார்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாம் தலைமுறை மன்னர்கள் மேம்பட்ட அறிவுடன் விளங்கினார்கள்.

பாட்டியாலா மன்னர் சர். புபீந்தர்சிங் (ஞாபகம் இருக்கிறதா கடுமையான அந்தப்புரத்தில் உழைக்கும் உழைப்பாளி) தனது அந்தப்புரத்தில் பல ஆண்டுகளாக வைத்திருந்த 350 பல நாட்டு அழகிகளையும் அவரது மகன் விடுவித்து அனுப்பி வைத்தார்.

குவாலியர் மகாராஜா பரம்பரை வழக்கத்தை உடைத்து சாதாரண தனக்கு கீழே உள்ள அடிமட்ட அரசாங்க ஊழியரின் மகளை மணந்து புதிய பாதைக்கு வழி வகுத்தார். அரண்மனை வாசத்தை (செலவு மிச்சப்படுத்த) விட்டு வௌியே வந்து சாதாரண மக்கள் வாழும் வீட்டில் வாழ்ந்து சிறப்படையச் செய்தார்.

இன்னமும் பல மன்னர்கள் மிகக் குறுகிய நிலபரப்புகளை ஆண்டு வந்தாலும் ஆங்கிலேயர்களை விட மிகச் சிறப்பாக மக்களை அக்கறை ஒன்றை மனதில் கொண்டு ஆட்சி புரிந்தனர்.

அதனால் தான் அன்றைய ஆங்கிலேய கவிஞர் (ருட்யார்ட் கிப்ளிங்) ஆண்டு கொண்டுருந்த நாதாரி மன்னர்களைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் இது.

” மனித இனத்தை மயங்கித் திகைக்க வைக்கும் நோக்கத்துடன் விசித்திரமான தோற்றங்களை வழங்கும் உயிருள்ள காட்சிப் பிம்பங்களாக இந்திய சுதேச மனனர்களை விதி சிருஷ்டித்திருக்கிறது ”

ஆனால் என்ன செய்யமுடியும். பெயர்ச்சி நடக்கும் போதே பல அதிகாரங்களும் பெயர்ந்து விடுகின்றதே?

மகாராசன் மவுண்ட் பேட்டன் பிரபுக்கு இந்த மன்னர்களை என்ன செய்வது? என்று வேதனையாக இருந்தது. காரணம் அத்தனை மன்னர்களுடனும் ஒன்னு மன்னா வேறு பழகித் தொலைந்த புண்ணியம் வேறு அவரை பயமுறுத்திக்கொண்டுருந்தது. அவர்களின் அத்தனை அந்தரங்களும் அவருக்கு அத்துப்படி. இழக்க விரும்ப மாட்டார்கள். இழக்க வேண்டும் என்று நிலை வந்தால் எந்த “சூழ்நிலைக்கும் ” தயாராய் இருப்பார்கள்?

பலவாறாக யோசித்தவர் தானைத்தலைவரும் கடுமையான உழைப்பாளியுமான பாட்டியாலா மன்னர் புபீந்தர் சிங் தலைமையில் (?)வௌ்ளையர் சர். கோன்ராட் கார்பீல்ட் என்பவருடன் லண்டனுக்கு பேச்சு வார்த்தைக்கு அனுப்ப முடிவு செய்தார்.

மன்னர்கள் தௌிவாக இருந்தார்கள்.

சுதந்திரமா? வாங்கிவிட்டு போகட்டுமே?

நீங்கள் இந்தியாவை விட்டு போகிறீர்களா? போங்களேன்.

அப்படின்னா நீங்கள்?

நாங்கள் எப்போது மன்னர்கள். நாங்க பாட்டுக்கு எங்கள் “கடுமையான உழைப்பு ” என்று இருந்து விட்டு போகிறோம். நாங்கள் பிரிட்டிஷ் தலைவர்களுடன் போட்ட ஒப்பந்தங்கள் மிகப் புனிதமானது. அது மனிதர்கள் உணர்ந்து கொள்ள முடியாது என்றவர்களைப் பார்த்து இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா?

“சுதேச மனனர்களா? எதிர்ப்பார்களா? எதிர்க்கட்டும். அப்போது கவனித்துக்கொள்(ல்)ளுவோம் ” என்றார்.

Advertisements

3 responses to “கலையப் போகும் ராஜ வேஷங்கள்

  1. இது தான் …இதை தான் நான் எதிர் பாத்தேன் … அப்போதும், இப்போதும் எப்போதும் நல்லவர்கள் உண்டு இந்த நாட்டினில் …. என்ன நீங்க சொன்ன விழிப்புணர்ச்சி வரணும்

  2. உங்களின் இடைவிடாத பணிகளுக்கு இடையே இல்லத்திற்கு வந்து உள்ளத்தில் உள்ளதை அவ்வப்போது என்னை மெருகேற்றிக்கொண்டுருக்கிறீர்கள்.

    சமீபத்தில் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அறங்காவல் துறைக்கு (கோவில்,குளம்,குத்தகை இடம், மொத்த இடங்கள்,மன்னர்கள் கொடுத்த இடங்கள்) மொத்த கோவில்களின் உண்மையான கணக்கும் இன்று எடுக்கப்பட்ட கணக்கும் மலைக்கும் பள்ளத்தாக்கும் உள்ள வித்தியாசம் உங்களின் வார்த்தைகளை படித்தவுடன் யோசனைக்கு வந்தது.

  3. // எவரும் காரணம் இல்லை. ஒரே ஒரு காரணம் இல்லாத விழிப்புணர்ச்சி. அதை உருவாக்கி விடக்கூடாது என்று கவனமாக முன்னேற்பாடுகளுடன் காய் நகர்த்தும் அவவ்போது வந்து போகும் ஆட்சியாளர்கள். //

    சரியாகச் சொன்னீர்கள். விழிப்புணர்ச்சி ஒரு விஷயத்தில் மட்டும் ரொம்ப நல்லா இருக்கு, அடுத்தவன் சொத்தை கொள்ளை அடிப்பதிலும், பொதுச் சொத்துகளான ஏரி, குளம், புறம்போக்கு நிலங்களை அழிப்பதிலும் எல்லா கட்சிகளுக்கும் மிக நல்ல விழிப்புணர்ச்சி இருக்கு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s