அழிக்கப்பட்ட ரகசிய கோப்புகள் (1) ஆண்மையை நிரூபிக்கச் சொன்ன மன்னர்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி 21

இந்திய ஆளுமைக்குள் இருந்த 565 சுதேசி மன்னர்களுக்குள் சுமார் 400 மன்னர்கள் 20 சதுர மைல்களுக்குள் ஆட்சி செலுத்தினார்கள். ஒவ்வொரு மன்னருக்கும் இன்றைய கவர்னர் போன்ற அதிகாரம் படைத்த ரெசிடணட் என்ற வௌ்ளை அதிகாரியின் முக்கிய வேலை உள்ளே நடக்கும் அத்தனை விவகாரங்களையும் விகாரங்களையும் புலனாய்வு கட்டுரையாக மேலே அனுப்பியாக வேண்டும்.

சுதந்திரம் உறுதிபடுத்தப்பட்ட பின் மன்னர்கள் மேல் விசுவாசத்தால் வௌ்ளையர்கள் அத்தனையும் சேர்த்து தீயிட்டு அழித்தனர். அழியாத, கிடைத்த அந்த ரகசிய கோப்புகள் அத்தனையும் பொக்கிஷம்.

ஆமாம் அத்தனை மன்னர்களின் வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயிலாக காட்சிப் பொருளாக மாற்றியது.

எந்த மன்னர் என்பது இங்கு முக்கியமல்ல.

இந்து, சீக்கியர்,முஸ்லீம், என்று எந்த மன்னராக இருந்தாலும் இரண்டே இரண்டு கோட்டுக்குள் உள்ளே விளையாடிக்கொண்டுருந்தார்கள். ஒரு புறம் விளையாட்டுகள் என்ற பெயரில் வேட்டையாடுதல் பகலில். மறுபுறம் அந்தப்புரம் என்ற கோட்டுக்குள் அளவில்லா அவர்களின் நாதாரித்தனங்கள்.

காரணம் பாலூணர்வு என்பது கூட அவர்களின் வக்கிர எண்ணங்களின் வடிகாலாகத்தான் இருந்தது.

படுப்பதில் கூட “முன்னே பின்னே ” என்ற இன்றைய நவீன சித்து விளையாட்டுக்கள் அத்தனைக்கும் அவர்கள் முன்னோடிகளாகத்தான் விளங்கியுள்ளனர். சிலை வடித்து பார்த்து பரவசமெல்லாம் அவர்கள் வாழ்ந்து காட்டிய மகானுபாவர்கள். ஆமாம் மகா பாவம் புரிந்தவர்கள். மக்கள் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் விளையாட்டில் அடிபட்டு விழும் பந்துகள். மக்களைப் பொறுத்தவரையில் விசுவாசம் என்று கோட்டுக்குள் வௌியே இருந்து பந்துகளை இந்த பொறுக்கிகளுக்குத் தந்து கொண்டுருந்தவர்கள்.

பிரிட்டிஷ் மக்கள் கொடுத்து “மேன்மை தாங்கிய ” மற்றும் “மிக மேன்மை தாங்கிய ” போன்ற பட்டங்களை வாங்கிக் கொண்டு மக்களின் நல்வாழ்க்கையை பட்டமாக விளையாடிப் பார்த்தவர்கள். இதற்கு மேலும் “ராயல் சல்யூட் ” என்ற வருகைக்கு முன்னால் குண்டு முழக்கம் என்ற தந்திரத்தால் அத்தனை மன்னர்களையும் வௌ்ளையர்கள் கவிழ்த்து வைத்துருந்தனர்.

எனக்கு ஐந்து, உனக்கு எட்டா என்று அலங்கோலமாய் யோசித்து யோசித்து வௌ்ளையர்கள் பின்னால் விழுந்து விழுந்து மொத்த வாழ்க்கையையும் தொலைத்தவர்கள்.

விசித்திர எண்ணங்கள். மனோபாவங்கள், விளங்க முடியாத மனிதர்கள் என்ற உருவில் வாழ்ந்த கொடியவர்கள். நல்லவர்கள் இருந்தார்கள். அத்தனை அம்சமான திட்டங்களையும், வௌ்ளையர்கள் கூட நினைத்துப் பார்க்க முடியா வசதிகளையும் மக்களுக்கு செய்து கொடுத்த மன்னர்கள் பத்தில் இரண்டு பேர்கள் மட்டுமே.

ஐதராபாத் நிஜாம் மன்னர் (மிக மேன்மை தாங்கிய) பிரிட்டனின் முதலாம் உலகப் போருக்கும் 250 லட்சம் டாலர்களை இலவசமாக கொடுத்து இந்த பட்டத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் அவருடைய சொந்த வாழ்க்கையில் மார்க்கெட்டில் தேடிப்பிடித்து வாங்கிய பழைய கந்தல் ஆடைகளையும், நைந்து போன செருப்புகளையுமே அணிந்தபடி (மகா உலோபி) வலம் வந்தார். அமர்ந்திருக்கும் சிம்மாசனம் நடுவில் ஒரு ஓட்டை இருக்கும். சிறுநீர் கழிப்பதற்காக. அத்தனை சோம்பேறி. முப்பது ஆண்டுகளாக அணிந்து வந்த குல்லாவை மாற்ற மனம் இல்லை. அரண்மணை முழுக்க தங்கமும் வைரமும் பதிக்கப்பட்ட தட்டுக்கள் இருந்தாலும் சாப்பிடுவது தகர தட்டில். விருந்தினர் புகைத்த சிகரெட் துண்டுகளை எடுத்து புகைப்பது தான் மிக விருப்பம். விருந்து நடக்கும் போது வைக்கப்படும் ஷாம்பெய்ன் பாட்டில் இரண்டு நபர்களுக்கு மேல் அந்த பாட்டில் நகர்ந்து விடாமல் கெட்டியாக அதையே பார்த்துக்கொண்டு இருந்து மொத்தத்தையும் பருகிவிட்டால் தான் நிதானமாக இருப்பார்.

வாழும் வரையிலும் இரவில் அபின் இல்லாமல் வாழ முடியாது என்ற போதிலும் உதிர்ந்த பல்லும் தள்ளாடிய நடையாக வாழ்ந்த போது யாரோ தன்னை கொல்லப்போகிறார்கள் என்று பயந்து பயந்து எலி வளைக்குள் ஒளிந்து கொள்வது போல் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிய வித்தகர். விளங்க முடியா மனிதர்.

இதைவிட இவருடைய தனிப்பட்ட கலாரசனை தான் என்னை அதிகம் ஆச்சரியப்பட வைக்கின்றது. காரணம் இன்று புழல் சிறையில் ஓய்வெடுத்துக்கொண்டுருக்கும் டாக்டர் பிரகாஷ் அவர்களின் முன்னோடி இவர்.

வௌிநாட்டில் இருந்து வரும் வௌ்ளையர் மற்ற எவராக இருந்தாலும் குறிப்பிட்ட அறைகளில் தான் தங்க வைக்கப்படுவார்கள். அத்தனை (கழிப்பறை உட்பட) அறைகள் மொத்தத்தையும் தனது அகன்ற எண்ணத்தை பறைசாற்றும்படி நவீன சாதனங்கள் மூலம் நடக்கும் அத்தணை அந்தரங்களையும் கழிப்புடன் பார்த்த கலா ரசிகர்.

இதுவரையில் இவருடைய தனிப்பட்ட குணாதிசியங்கள். இவைகள் அத்தனையும் இவருடைய மன வக்கிரங்களுக்கு வேண்டுமானால் வடிகாலாக இருந்து இருக்கலாம். ஆனால் பொது சபையில் நடந்த கூத்துக்கள்?

கவர்னர் (ரெசிடணட்) மன்னரை சந்திக்கும் போது தெரியாத்தனமாக ஒரு விஷயத்தை தெரியப்படுத்தி விட்டார். “உங்களுடைய இளவரசர் போக்கு ஒரு மாதிரியாக (ஹோமோ) இருக்கிறது? ” என்று.

வீரனாக வாழ்ந்து கொண்டுருக்கும் மன்னருக்கு வந்ததே கோபம். அழைத்து வந்த இளவரசருக்கும் இவர் இட்ட கட்டளை என்ன தெரியுமா?

அந்தப்புரத்தில் அத்தனை கலைகளிலும் தேர்ச்சி பெற்ற குறிப்பிடட பெண்ணை வரவழைத்து அத்தனை பேர்களின் மத்தியிலும் இளவரசரின் ஆண்மையை நீருபிக்க வைத்தது?

கதறிய பெண்ணின் கூச்சலும், கலங்கிப் போன கவர்னரின் பேச்சும் அங்கு எடுபடவில்லை.

இத்தனை விரிவாக மன்னரைப்பற்றி இங்கு விவரிக்க காரணம் வௌ்ளையர்களுக்கு அத்தனை விசுவாசமாக இருந்தவர், தன்னுடைய விளையாட்டுகளில் அத்தனை ஆர்வமாக இருந்தவர் ஏன் மக்களின் நலன் குறித்து பத்தில் ஒரு மடங்கு கூட ஆர்வம் செலுத்த வில்லை. காரணம் அரசியல் என்பதும், ஆட்சி அதிகாரம் என்பதின் தூய்மை என்பதே தனி மனித ஓழுக்கத்தினால் மட்டுமே தொடங்குகிறது. அந்த தொடக்கப்புள்ளியே அவரை அவரின் கொள்கையை, தன்னலமற்ற தொண்டுள்ளங்களை மக்கள் விரும்பு முக்கியப் புள்ளியாக ஆக்குகின்றதா? இல்லை வெறுக்கக்கூடிய முக்கும் புள்ளியாக மாற்றுகின்றதா என்பதே இன்று வரை நாம் பார்த்துக்கொண்டுருக்கும் அத்தனை முக்கிய புள்ளிகளின் அந்தரங்களையும் உங்கள் சிந்தனையில் படித்த வரையில், பார்த்த வரையில் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்குத் தேவையில்லை. நன்றாக ஆட்சி செலுத்தினால் போதும் என்று சொல்பவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். வேசிகளின் தொடர்பும், வீணான பழக்க தொடர்பும் கொண்டவர்களால் எத்தனை தான் விரும்பினாலும் அனைவரும் விரும்பக்கூடிய தன்னலமற்ற பங்களிப்புகளை இந்த நாட்டுக்கு தந்து விட முடியாது?

காரணம் அத்தனை தொடர்புகளும் அவர்களை மக்களிடமிருந்து தொலை தொடர்புக்கு அப்பால் நிற்கும் அலைபேசியாக உருவாக்கிவிடுவதை நாம் பார்த்துக்கொண்டு தானே வாழ்கின்றோம்?

Advertisements

6 responses to “அழிக்கப்பட்ட ரகசிய கோப்புகள் (1) ஆண்மையை நிரூபிக்கச் சொன்ன மன்னர்

 1. Sir, when did you start this blog,so far i did not know, today only i came to know you have one more,Anyway wish you all the best.(Every day one time i am opening ur blog but very surprising for me abt this how i did not notice)

 2. interesting… கடைசி பின்னூட்டதில ஓபாமா ஒப்பீடு அழகு, புரிதல்…

 3. அப்பா ..நினைத்தாலே கசக்கும் போல , எவ்வளவு கதை இருக்கு, சரித்திரம் இருக்கு. இதை பார்க்கும் பொழுது காந்தி, திலகர், ராஜாஜி காமராஜ் போன்ற தலைவர்களின் ஒழுக்கத்தையும் பார்த்து பெருமையா இருக்கு… இப்போ யார் இருக்காங்க இப்படி … எண்ணுவோமா… சிதம்பரம், வீரமணி, கம்யூனிஸ்ட் தலைவர்கள், இன்னும் கொஞ்ச பேர் அவ்வளவு தான் ..

 4. // வேசிகளின் தொடர்பும், வீணான பழக்க தொடர்பும் கொண்டவர்களால் எத்தனை தான் விரும்பினாலும் அனைவரும் விரும்பக்கூடிய தன்னலமற்ற பங்களிப்புகளை இந்த நாட்டுக்கு தந்து விட முடியாது?

  காரணம் அத்தனை தொடர்புகளும் அவர்களை மக்களிடமிருந்து தொலை தொடர்புக்கு அப்பால் நிற்கும் அலைபேசியாக உருவாக்கிவிடுவதை நாம் பார்த்துக்கொண்டு தானே வாழ்கின்றோம்? //

  சரியாகச் சொன்னீர்கள். தனிமனித ஒழுக்கம் ஏன் தேவை என்பதை இதைவிட அழகாக சொல்ல இயலாது.

  • ஆசை எங்கிருந்து பிறக்கிறது? பிறந்த ஆசைகள் எதை நோக்கி நகர்கிறது. உத்தமியாய் வாழும் மனையாள் இருந்தாலும் ஏன் இந்த தலைவர்கள் தறுதலையாய் இருக்கிறார்கள். தவறு அவர்கள் மேல் அல்ல. மக்களை? அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் கிசு கிசுவாக படித்து மகிழ்ந்து விடுவதும் தான்.

   அதுவே ஓபாமாவின் அத்தனை ஜாதகத்தையும் ஒரு வருடத்திற்கு முன்பே அங்கு அலச தொடங்குவதால்தான் அவர்களின் அதிபர்கள் அத்தனை பேரும் நேருக்கு நேர் தொலைக்காட்சியில் உரையாடி உள்ளே இருப்பது அறிவா? அறிவீனமா? என்று நிரூபித்து நெருப்பாற்றில் நீந்தி பெரியண்ணன் பதவியில் உட்கார முடிகிறது.

   ஆனால் இங்கு? தமிழ்நாட்டிற்குள் எத்தனை பஞ்சாயத்து இருக்கிறது என்று கூட தெரியாது.

   காரணம் அவரோ கட்டப்பஞ்சாயத்து கதாநாயகனாக வாழ்ந்த காரணத்தால்.

   நன்றி திரு ராகவன் நைஜீரியா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s