மன்னா நீ மாமா மன்னா? (கொஞ்சம் சிரித்து விட்டு போங்களேன்)

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 20

நம்முடைய இந்திய நாடு ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டு இருந்தது. சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு நாம் சுதந்திரத்தை அடைந்தோம் என்று தான் இதுவரையில் படித்துக்கொண்டு வந்துள்ளோம். ஆனால் உண்மையில்?

ஆங்கிலேயர்கள் ஒரு பக்கம். காங்கிரஸ் இயக்கம் சார்ந்த தலைவர்கள், ஜின்னா அவரைச் சார்ந்த முஸ்லீம் லீக் படை பட்டாளங்கள் மற்றொரு பக்கம். ஆனால் நான்காவது திசை என்பது திக்குத் தெரியாமல் வகை தொகையில்லாமல் பரந்து விரிந்து ஆட்சி புரிந்து கொண்டுருந்த சுதேசி (565) மன்னர்கள்.

இந்த நான்கு திசைகளுக்கு நடுவில் மக்கள். ஆனால் திக்கு தெரியாத காட்டில் வாழ்ந்தவர்கள் போல். உண்மை. மக்களுக்கு வௌ்ளையர் என்பதும் மன்னர் விசுவாசம் என்பது ஒரே பார்வைதான். மொத்தத்தில் விகல்பம் இல்லாத விசுத்தனம் இல்லாத வாழ்க்கை அவர்களுடையது.

பண்டைய மன்னர்கள் என்றாலே இன்னமும் நாம் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று வீரமான நடிகர் திலகம் உச்சரித்த வசனங்களை பேசி ஆச்சரியப்படுகின்றோம். ஆனால் வௌியே தெரியாத மன்னர்கள் வாழ்ந்த பூமி தான் இது.

வௌ்ளையர்கள் ஒவ்வொன்றாக தங்களுடைய ஆளுமைக்குள் கொண்டு வந்து கொண்டுருந்த போது, சிலர் 23ம் புலிகேசி வடிவேல் போல் சத்தத்தை சாவி தூவாரத்தின் வாயிலாக பார்த்து பயந்து வௌ்ளைக் கொடியை ஆட்டி அவர்களை வரவேற்றதும் உண்டு. போராடிப் பார்த்தும் தோற்றவர்களும் உண்டு.

இரண்டுமே ஒன்று தான். ஆங்கிலேயர்களை பொறுத்த வரையில் அவர்களுக்கு கப்பம் சரியாக கட்டப்படவேண்டும். அதிகாரங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதாய் இருக்கும். அத்தனையும் கவனித்து மேலே செய்தி சொல்ல ரெசிடணட் என்ற (கவர்னர்) அலங்கார வௌ்ளை அதிகாரி ஒருவர். ஒவ்வொரு மன்னருக்கும் ஒரு அதிகாரி.

அவருடைய வேலை நம்முடைய இன்றைய கவர்னரை விட மிகவும் எளிதானது. மன்னர் வழங்கிய அழகிய குடியிருப்பில் இருந்து கொண்டு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை விருந்தில் கலந்து கொள்வார். பான வகைகளை ருசித்து விட்டு ” எங்களுடைய அதிகாரத்திற்குள் நீ ” என்று ஒரு தடவை மட்டும் சொல்லிவிட்டு சென்று விடுவார். மன்னர் அது நூறு தடவை சொன்ன மாதிரி அநியாயத்திற்கு அவர்களுக்கு அடங்கி நடப்பார்.

அந்த ரெசிடணட் அதிகாரியின் மற்றொரு மகத்தான வேலை ஒன்று உண்டு.

உளவு.

உள்ளே நடக்கும் அத்தனை விஷயங்களையும் குறிப்பு எடுத்து மேல் அதிகாரிக்கு அனுப்பிக்கொண்டுருப்பது. உங்களுக்குத் தான் தெரியுமே? வௌ்ளைக் கணக்கு என்பதே புள்ளி விபரப்பட்டியலாகத்தான் இருக்குமே?

கொஞ்சம் இந்தப் பட்டியலை படித்து விட்டு சிரிக்காமல் இருந்தால் நீங்கள் சத்தியமாக சவாலான மனிதர் தான்.

ஒவ்வொரு இந்திய மன்னருக்கும் 5.8 மனைவிகள். 12.6 பிள்ளைகள். 9.2 யானைகள். 2.8 தனி ரயில்கள். 3.4 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள். 11 கௌரவ பட்டங்கள் (இதில் மட்டும் பெரும் புள்ளியாய் இருப்பதால் புள்ளிக் கணக்கு இல்லையோ?) கொன்ற புலிகள் 22.9.

தலை சுற்றுகிறதா?

நல்ல வேளை மேனகா காந்தி அன்று இல்லை. ஒவ்வொரு மன்னருக்கும் வேட்டை என்றால் வேட்டைக்காரன் ரீலீஸ் போல் அத்தனை சந்தோஷம். பகலில் கன்னியர் வேட்டை அதுவே இரவில் விலங்கு வேட்டை. இரண்டிலும் கெட்டியாய் சுட்டியாய் இருந்தார்கள். வரிசைப்பட்டியலில் உள்ள மன்னர்களின் விஷயங்களைப் படித்து விட்டு அப்புறம் ஏன் அன்றைய மக்கள் கூழுக்கு அலைந்து கொண்டுருந்தார்கள் என்று சொன்னாயே என்று கேட்டு விடாதீர்கள்.

காரணம் இவர்கள் மன்னர்கள்.

பரோடா மகாராஜா கடைசி நாள் வரையிலும் தங்க இழையினால் ஆன உடைகளையே அணிந்து வந்தார். அந்த ஆடைகளை நெய்வதற்கென்றே தனிப்பட்ட குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் மட்டும் நெய்து கொடுக்க வேண்டும். அத்தனை கலா ரசிகர் அவர்.

கபூர்தலாவின் சீக்கிய மகாராஜாவின் தலைப்பாகை போன்ற கீரிடத்தில் 3000 வைரங்களும் முத்துக்களும் இருந்தன.

ஜெய்ப்பூர் மகாராஜாவின் புகழ் பெற்ற தங்க வைர குவியல்களை ராஜஸ்தான் மலைக்குகைகளில் தலைமுறை தலைமுறையாக தோள் வலிமையும், வீரமும் பெற்ற குறிப்பிட்ட மக்கள் பாதுகாத்து வந்தனர்.

பரோடா மகாராஜா நகர் பவனி வருவது நூறு ஆண்டுகள் வயது கொண்ட யானையின் மேல். யானைக்கு போர்த்தப்பட்டுருக்கும் அத்தனை ஆடை அணிகலன்களும் தங்க இழைகளால் ஆனது. இரண்டு காதுகளிலும் தலா பத்து ஒட்டைகள் போடப்பட்டு இருக்கும். ஒவ்வொரு ஓட்டையிலும் தொங்கும் தங்க சங்கிலியில் ஒலிக்கும் மணியோசை அத்தனையும் மக்கள் காது குளிர கேட்பதற்காக. மொத்தமாக தொங்கிய தங்கச் சங்கிலியின் அன்றைய மதிப்பில் 25,000 டாலர்கள்.

இத்தனை மன்னர்களையும் விட சிறப்பான சிரிப்பு வரவழைத்த ஒரு மன்னர் இருந்தார்.

பாட்டியாலா மன்னர். அவர் அணிந்துருந்த முத்து மாலை அன்றைய மதிப்பின் (பிரிட்டன் லாயிட்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனி) பத்து லட்சம் டாலர்கள். அவர் அணிந்து கொண்டு மக்களுக்கு வருடத்திற்கு ஒரு முறைதான் ஆசி வழங்க மாடத்தின் மேல் நின்று கொண்டு காட்சி தருவார். அதற்கு அத்தனை தள்ளுமுள்ளு.

இதில் என்ன சிரிப்பு சமாச்சாரம் இருக்கிறது என்கிறீர்களா?

அவர் அணிந்து இருப்பது மேல் ஆடையுடன் உள்ள முத்து மாலையுடன் மட்டுமே. கீழே சேம் சேம் பப்பி சேம்.

அவரது கிளர்ந்து எழுந்து நிற்கும் ஆண்மையை தரிசித்தால் அத்தனை புண்ணியமாம்.

கெ(ா)டுத்து வைத்த மக்கள்.

Advertisements

9 responses to “மன்னா நீ மாமா மன்னா? (கொஞ்சம் சிரித்து விட்டு போங்களேன்)

 1. நடத்துங்க …. கேட்ட ஊக்கம் கிடைத்து விட்டதா !!!!!!!.

  பெரிய மனுஷங்க ( ராஜா) விவகாரமே தனி தான் …. நம்ப ( சாரி ) அருகில் உள்ள சுவாதி திருநாள் – நல்லா படம் வரைந்தார், பாட்டுக்கள் இயற்றினார் .. பாட்டியாலா ரொம்ப ஓவர் ( இதுனால தான் பெரிய drinks ஐ ) பாட்டியாலா என்று சொல்கிறார்களோ ????!!!!!

 2. நடுத்துங்க …. கேட்ட ஊக்கம் கிடைத்து விட்டதா !!!!!!!.

  பெரிய மனுஷங்க ( ராஜா) விவகாரமே தனி தான் …. நம்ப ( சாரி ) அருகில் உள்ள சுவாதி திருநாள் – நல்லா படம் வரைந்தார், பாட்டுக்கள் இயற்றினார் .. பாட்டியாலா ரொம்ப ஓவர் ( இதுனால தான் பெரிய drinks ஐ ) பாட்டியாலா என்று சொல்கிறார்களோ ????!!!!!

 3. உங்களது எல்லா இடுகைகளையும் தொடர்ந்து படித்து வருகின்றேன். இந்த தொடர் முடிந்தவுடன் போடலாம் என்று இருந்தேன். ஆனால் நேற்று காந்திப்படம் பார்த்தேன். படம் சிறிது நேரத்தில் முடிந்துவிட்டாலும், அதனுடைய தாக்கம் பல மணி நேரம் நீடித்தது. உங்கள் இடுகையைப் படிக்கும் போதும் அதைப் போல் உணர்கின்றேன்.

  • நீங்கள் இனிமேல் எதற்கு விமர்சிக்க வேண்டும். உலகம் மொத்தமைக்கும் இரு வார்த்தைகளில் கொண்டு சேர்த்து விட்டீர்கள். தந்து விட்டீர்களே அது தான் மொத்தமாய் ஒரே வார்த்தைகளில் உரக்கச் சொல்லி விட்டீர்களே? உங்கள் வார்த்தைகளுக்குரிய தகுதியை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கின்றேன். வருகை தந்தது பரவசம். நன்றி திரு. இராகவன் நைஜிரியா.

 4. ராஜாக்கள் வைத்திருந்த சொத்துக்களின் மதிப்பை கேட்டால்

  தலை சுற்றுகிறது

 5. புத்தகம் போட வேண்டிய பதிவு, எல்லோருக்கும் செல்ல வேண்டும்,தொடர்கிறோம்

  • மதன் அவர்களின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்திற்கு தெய்வத்திரு சுஜாதா கொடுத்த அணிந்துரை. இந்த மாதிரி வரலாறு நான் படித்த புத்தகங்களில் இருந்து இருந்தால் நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருப்பேன். முடிந்தால் அவரின் அந்த புத்தகத்தையும் படித்துப் பாருங்கள். கலர்புல் இதைவிட. நன்றி ஜெரி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s