75. நாறிப்போனாலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 19

சுதந்திர இந்தியாவிற்கு முன்னால் இந்த அன்னை பூமிக்கு இரத்தத்தால் செய்த அபிஷேக பட்டியல் சில இது.

மாப்பிள்ளை கலகம் (1919) கிலபாத் இயக்கம் என்ற கேலிக்கூத்தால் நடைபெற்றது. இந்தியா முழுவதும் மயான அமைதியை உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு நம்முடைய எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று முதன் முதலாக ஹர்த்தால் (1919 ஏப்ரல் 7) என்று காந்தியால் அறிமுகப் படுத்தப்பட்ட அமைதியான வேலை நிறுத்தம். ஜாலியன் வாலாபாக் என்ற நான்கு புறமும் உள்ள சுவர்களுக்குள் நடந்த மக்கள் கூட்டம். வெறுமனே பேச்சுக் கூட்டம். எந்த (1919 ஏப்ரல் 13) ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடந்து கொண்டுருந்தது. வௌியேற வழியே இல்லை என்ற போதும் ஜெனரல் டயர் என்ற மற்றொரு எமன் வடிவில் இருந்தவன் குண்டுகள் முடிந்து போகும் வரையிலும் ஆசையாய் சுட்டுத் தீர்த்தேன் என்று பெருமை பேசிய இரத்த அபிஷேகம்.

ஓடமுடியாமல், தவறி விழுந்தவர்கள், மேலே மிதித்து இறந்தவர்கள், சுவற்றில் ஏறும் போது குண்டு அடிபட்டு செத்தவர்கள், சுட்டுச் செத்தவர்கள் கணக்குப்படி 1516 பேர் அகலான மரணம் அடைந்தனர்.

ஜின்னாவின் நேரிடை நடவடிக்கை (1946) மூலம் கல்கத்தாவின் தொடங்கிய கலவரம் நவகாளி, பீகார், பம்பாய் வரை நீண்டது.

ஒவ்வொன்றாக பார்த்த மவுண்ட் பேட்டன் பிரபு ” நாம் சென்ற பிறகு எப்படி இவர்கள் ஆளப் போகிறார்கள்? ” என்று ஆடிப்போனார்

உச்சகட்டமான இந்தியா முழுக்க ரகசிய புலனாய்வு குழு, உயர் அதிகாரிகள் தரும் தகவல்கள் அவரை ஆட்டம் காண வைத்துக்கொண்டுருந்தது.

எனவே தான் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் ஆட்லியின் அறிவுரையான 1948 ஜுன் மாதம் முடிவதற்குள் சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்பதை பொருட்படுத்தாமல் எவ்வளவு சீக்கிரம் வழங்க முடியும் என்று அத்தனை ஆலோசனைகளையும் கேட்டு துரிதப்படுத்தத் தொடங்கினார்.

சர்.எவான்ஸ் ஜெங்கின்ஸ் பஞ்சாப் மாநில கவர்னர்.

மிகத் திறமையான அதிகாரியால் கூட பஞ்சாப்பில் நடைபெறப்போகும் உக்கிரமான கலவரத்தை முன்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அத்தனை அரசாங்க அதிகார வர்க்கமும், ஏன் நேரு கூட பிரியுமா? என்ற சந்தேகம் கொண்ட மக்கள் விரைவில் மாற்றம் அடைந்து விடுவார்கள் என்று நம்பினார். அத்தனை அறிஞர்களும், உண்டாக்கி உள்ள பிரிவினைக் கோடுகளைக் கொண்டு தான் அடித்துக்கொள்கிறார்கள்.

பிரித்த பிறகு அத்தனை பேரும் உத்தமர்களாக மாறி விடுவார்கள் என்று நிணைத்துக்கொண்டு அமைதியாய் இருந்தார்கள்.

பிரிவினை ஏற்படுமானால் நாட்டில் இரத்த ஆறு ஓடும். நண்பனுக்கு விரோதமாக நண்பனும், சகோதரனுக்கு எதிராக சகோதரனும், அந்நியனுக்கு எதிராக அந்நியனும் கிளர்த்தெழுந்து ஒருவரையொருவர் கொன்று குவிப்பார்கள். பிரிவினையினால் ஏற்பட இருக்கும் விளைவு இது தான் என்று ஒரே ஒரு ஆத்மா அறிந்து இருந்தது.

அது மகாத்மா காந்தி.

ஆமாம் கலவர பூமியில் அவர் நடத்திய பாத யாத்திரையின் மூலம் மக்களின் நாடித் துடிப்பை கச்சிதமாக கணக்கு எடுத்து வைத்திருந்தார்.

ஆனால் இந்தியாவைத் துண்டாடக் கூடாது என்கிற காந்திஜியின் பிடிவாதமான போக்கு, காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே அவரையே விட்டுப் பிரிந்து செல்ல நினைக்குமளவிற்கு காரணமாக அமைந்தது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு பஞ்சாப் கலவரங்களை எதிர்பார்த்து 55000 பேர் கொண்ட பாதுகாப்புப் படை ஒன்றை மவுண்ட்பேட்டன் அமைத்திருந்தார். இந்த படையில் மத வேற்றுமைகளற்ற கூர்க்கா ரெஜிமெண்ட் போன்ற ஆட்களே பெரும்பாலும் சேர்க்கப்பட்டார்கள். இவர்களுக்கு பர்மா போர் முனையில் அனுபவம் பெற்றவரான மேஜர் ரீல்ஸ் என்பவர் கமாண்டராக நியமிக்கப்ட்டார். இவர் கேட்ட எண்ணிக்கையை விட மவுண்ட் பேட்டன் பிரபு இரண்டு மடங்கு அனுப்பி வைத்தார். ஆனால் இந்த 50000 வீரர்களும் பெரு வௌ்ளத்தில் அகப்பட்ட படகு போல் ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளிவிட்டது.

நில்லுங்கள். படத்தின் இறுதி காட்சியில் நடக்கும் வில்லன் கதாநாயகன் யுத்தம் போல் ஒரு முடிவுக்கு படம் வந்து விட்டதைப் போல் நீங்கள் எழுந்து நிற்பது புரிகின்றது.

பாவம் நீங்கள்.

நீங்கள் நினைப்பது போல் கலவரங்கள், மக்கள் அவஸ்த்தைகள், தலைவர்களின் மன உளைச்சல் போன்ற இது வரை வந்து கொண்டுருந்த மொத்த கண்ணீர் காவியம் மட்டும் தானா?

இந்திய சுதந்திரத்தில் நகைச்சுவை காட்சியா இல்லையா?

ஏன் இல்லை.

நடிகர் வடிவேல் எல்லாம் அந்தப்பக்கம் நிற்க வேண்டும். காரணம் பஞ்சாப் கலவரம், பாகிஸ்தான் பிரச்சனை, பிரியும் போது நடந்து கலவரங்கள், இடம் மாறிய மக்கள் கூட்டம். இழந்தவைகள், இந்திய சுதந்திர அறிவிப்பு, பாகிஸ்தான் சுதந்திர அறிவிப்பு இதற்கு முன்னால் அந்த காமெடி காட்சிகளை உள்ளே அங்கங்கே சேர்க்க வேண்டும்.

காரணம் இன்று நாம் வாழ்ந்து கொண்டு மொத்த இந்தியாவை சுதேசி மன்னர்களிடம் இருந்து படேல் அவர்கள் பெற்று இணைப்பதற்குள் அவர் பட்ட பாடு இருக்கிறதே. அது ஒரு தனி நகைச்சுவை அத்தியாயம்.

உண்மை.

சுதேசி மன்னர்கள் என்ற போர்வையில் சுதந்திரமாய் வாழ்ந்த ஆத்மாக்கள் அவர்கள்.

எத்தனை விதமான மன்னர்கள்? எத்தனை மன்னர்கள்? அத்தனையும் வயிறு குலுக்க வைக்கும் இல்லாவிட்டால் வயித்தெரிச்சலை கிளப்பும்.

அம்மணமாக நின்று ஆசிர்வாதம் வழங்கும் மன்னர், காலையில் முழிக்க வேண்டும் என்று வௌி ஊரில் இருந்த போதிலும் கொண்டு வந்த பசுமாட்டை கயிற்றில் கட்டி மாடிக்கு தூக்கிய மன்னர், கஞ்சப்பிசினாறி, கருத்துன்னா கிலோ என்ன விலையின்னு கேட்ட பல மன்னர்கள் எப்படி இங்கு ஆட்சி நடத்தினார்கள்.

எப்படி இவர்கள் மக்களை ஆட்சி புரிந்து இருப்பார்கள்.

இவர்களை பார்த்துவிட்டு கடைசி காட்சிக்கு பிறகு செல்வோம். அதுவரை கண்ணீரை சேமித்து வைத்துருப்போம். அது சிரிக்க வைக்கவும், கொடுமையை பார்த்து குமைந்த கண்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கட்டுமே?

இல்லாவிட்டால் நீங்களும் நானும் தமிழ்நாட்டில் வாழ்ந்து இருக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள பத்து மன்னர்களில் ஏதோ ஒரு 23ம் புலிகேசி ராஜதர்பாரின் கீழ் மிளகாய்ப் பொடிக்கு பயந்து வாழ்ந்து கொண்டுருப்போம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s