(எம) தர்ம ராஜ தலைவர்கள்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 18

“ஜின்னாவை சந்தித்து பேசும் வரையிலும் என்னுடைய பணி எத்தனை கடினமானது என்பதை நான் உணரவில்லை ”

மவுண்ட் பேட்டன் பிரபு மகிழ்ச்சி இல்லாமல் சொன்ன வார்த்தைகள் இது.

நெஞ்சில் கோபமும், பசையற்ற முகத்தில் இருந்து வந்த பதைபதைக்கக்கூடிய வார்த்தைகள் என்ன தெரியுமா?

“ஒன்று இந்தியாவை பிளப்போம். அல்லது அதனை அழிப்போம் ”

அவரின் கொள்கை முழக்கங்களுக்கும் முதுகெலும்பாய் இருந்தவர்களுள் முதன்மையாய் இருந்த வங்காள அரசியல்வாதி ஷகீத் சுஹ்ரவர்த்தி என்ற எமனை இந்த இடத்தில் சற்று விரிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஆரம்பர அரசியல்வாதி. அத்தனை அக்கிரமத்திற்குள் அடங்கும் கொள்கைவாதி. மொத்தத்தில் சுயநலவாதி. மத உணர்வுகளை தூண்டி விட்டு தூண்டிலுக்குள் சிக்காத அத்தனை மீன்களை வலைவீசி அழிக்கும் கொலை பாதகன். ஆட்சியில் அலங்கரித்து அத்தனை அமைச்சருக்கும் முதன்மையானவராக இருந்தாலும் முக்கிய வேலையே கொலை கொள்ளை கடத்தல் கற்பழிப்பு.

வங்காளத்தில் தலைவிரித்தாடி மகா பெரிய பஞ்சத்திற்கு (1942) அனுப்பட்ட அத்தனை லட்ச டன் தானிய வகைகளையும் வஞ்சகம் எண்ணம் எதுவும் இல்லாமல் கருப்புச் சந்தையில் விற்று காசு பார்த்த பெரும் புள்ளி. மக்கள் புள்ளி புள்ளியாய் நெருக்கியடித்துக்கொண்டு வாழ்ந்த அத்தனை கல்கத்தாவாசிகளையும் காலனிடம் நெட்டித்தள்ளிய முக்கியப் புள்ளி.

சேர்த்த அத்தனை பணத்தை சுயநலமில்லாமல் செவழித்த கலாரசிகன். கணக்கற்ற வேசிகளிடத்திலும், அச்சத்தை ஊட்டக்கூடிய ஆடழரசிகளிடமும் கொடுத்து உவகை கொண்ட உன்னத அரசாங்க காவலன். நடு இரவு என்றாலும் மூச்சு முடியப் போகிறது என்றாலும் முட்ட முட்ட குடித்த ஷாம்பெய்ன் கலக்கத்திலும் தன் கடமையை கடைசி வரையிலும் செய்த (எம) தர்ம ராஜன்.

கல்கத்தாவில் பரவிய கலவரத்தில் உயிர் இழந்த மக்கள், கற்பழிக்கப்பட்ட பெண்கள், சூறையாடப்பட்ட சொத்துகள், வீடு வாசல் இழந்து வாழ்க்கையின் ஓரத்திற்குகே வந்தவர்கள் கணக்கு நமக்குத் தேவையில்லை.

ஆனால் அத்தனை பேருக்கும் கொள்கை தெரியாது. மதம் புரியாது. ஒன்றே ஒன்று தான் புரிந்து வாழ்ந்தார்கள். காலையில் வேலைக்குப் போனால் தான் வீட்டின் அன்றாடம் அடுப்பெறியும்.

கல்கத்தாவில் தொடங்கிய கலவரம், நவகாளி, பீகார், பம்பாய் வரைக்கும் தனது கரங்களை நீட்டியது. நீண்ட கரங்களுக்குள் சிக்கிய அப்பாவிகள் அத்தனை பேருக்கும் பாவிகளின் கொள்கை அன்று தான் புரிந்தது.

காரணம் ஜின்னாவின் நேரிடை நடவடிக்கை என்றால் என்ன? பாகிஸ்தான் என்ற நாடு பிரிக்கப்படாவிட்டால் என்ன விளைவுகளை இந்த நாடு பெறும்? என்பதை முழுமையாக அத்தனை பேர்களும் உணர்ந்தார்கள்.

இந்து மதவாதிகளின் எண்ணம் வேறானதாக இருந்தது.

“எப்படி பார்த்தாலும் அதிக எண்ணிக்கையில் உள்ள இந்துக்கள் கடைசியில் வெற்றி பெற்றுத்தான் ஆகவேண்டும் “.

உண்மை கடைசியில் சுடுகாட்டைக் கூட ஆள ஆள் இருக்காது. அந்த உண்மையை மத துவேஷ எண்ணங்கள் உண்மைகளுக்கு அப்பாற்பட்டு அத்தனை பேர்களையும் அச்சப்பட வைத்தது.

மதக் கொள்கை என்பது மொத்தமாக இருந்தாலும் உள்ளே இருந்தது மூன்று விஷயங்கள் தான்.

பொறாமை, போட்டி, எரிச்சல்.

மூன்றும் ஒன்றாக கலந்து பெற்று வாழ்ந்த மக்கள் கூட்டத்திற்கு ஜின்னா, முஸ்லீம் லீக், சுயம் சேவக், குண்டர்கள், தடியர்கள் என்று பாரபட்சம் இல்லாமல் தங்களால் ஆன அத்தனை பங்களிப்புகளை தந்து அத்தனை மக்களின் வாழ்க்கையும் அவசர கதியில் முடித்தார்கள்.

முடிந்த உயிர்களுக்கு எதுவும் தெரியாது?

சுடுகாட்டில் புதைக்கப்பட்டோமா? கல்லறையில் புதையுண்டோமா? தன்னைத் தவிர அத்தனை பேர்களும் “காபீர்” என்று அழைத்தோமே? நாம் மறுவாழ்வை பார்த்தோமா?

புரியாமலே புதையுண்டார்கள்.

மவுண்ட் பேட்டன் பிரபு நடந்து கொண்டுருந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் பார்த்தவர் அவசர அவசரமாய் அத்தனை காவல் துறை அதிகாரிகளையும் தலைமை இடத்திற்கு வரவழைத்தார்.

வந்தவர்கள் கூறிய கருத்து கலவரத்தின் அத்தனை அம்சங்களையும் அலசி முடித்த போது அவரின் முகம் கருத்து விட்டது.

“ஐயா, இப்போது நாட்டில் உள்ளே நடந்து கொண்டுருக்கும் கலவரங்களையும், வரப் போகும் கலவரங்களையும் அடக்க வேண்டுமானால் இந்தியாவிற்குள் இருக்கும் ராணுவமோ, அல்லது நீங்கள் கூறியபடி வௌியே இருந்து வரவழைக்கப் போகும் எந்த படையும் கொண்டு இவர்களை அடக்கி ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வர முடியாது. வசதிகள் இல்லை என்பதுடன் தான் வாய்ப்பே இல்லை ” என்றார்.

காரணம் அன்று தொடக்கப்புள்ளியாய் இருந்த பஞ்சாப் கலவரத்தை பார்த்த பீதியில் இருந்து விலகாமல் இருந்தவரின் பங்களிப்பு இது.

இவை எல்லாமே பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னால் நாடு பார்த்த கலவரங்களின் சிறிய சமாச்சாரங்கள்?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s