நேசமில்லா தலைமையில் மோசம் போனவைகள்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 17

சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவிற்குள் நடந்து கொண்டுருந்த குழப்பங்களும், வன்முறைச் சம்பவங்களையும் பார்த்துக்கொண்டுருந்த காந்தி மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் சொன்னது.

” எனது பிணத்தின் மீது இந்தியா பாகிஸ்தான் பிரிவினைகள் செய்யப்படும் ”

குனக்குன்று தடுமாறித்தான் போய் விட்டார்.

ஏற்கனவே குன்றி போயிருந்த மவுண்ட் மகாராஜன் புத்தி அன்று பேதலிக்காமல் இருந்தது நாம் செய்த புண்ணியம். இல்லையென்றால் காத்துக்கொண்டுருந்தவர்கள் அன்றே பல ஏற்றமான காரியங்களை கச்சிதமாக செய்து முடித்து இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

மிகச் சிறிய விஷயங்களில் கூட தன்னுடைய சொந்த வாழ்க்கையை வகுத்து, இந்தியா எதிர்காலத்தில் எப்படி வாழவேண்டும்? ஆட்சியாளர்கள் எவ்வாறு ஆட்சி நடத்த வேண்டும் என்று அவர் மனதில் யோசித்து வைத்திருந்த அத்தனை விஷயங்களையுமே தன்னுடைய வாழ்க்கை முறையின் மூலமாக உலகத்திற்கு உணர்த்திய மகா ஆத்மா அவர்.

மூன்றாம் வகுப்பு ரயில் பயணங்கள், மூத்திர வாடையை மொத்தமாக பெற்ற சேரி வாழ்கையில் தன்னை அமிழ்த்துக்கொண்டு வாழ்ந்த விதம், தன்னலமற்ற எண்ணங்கள், உடல் சோர்ந்த போதும் கூட ஊக்கம் அளித்த அறிவுரைகளுடன் தன்னலமற்ற எண்ணங்கள்.

கலவர பூமியில் பாதுகாவலர்கள் யாரும் உடன் வரவேண்டாம் என்று நடத்தி காட்டிய பல்லாயிரம் கிலோ மீட்டர் நடை பயணங்கள். வீதி முழுக்க போட்டு வைத்திருந்த மலத்தையும், முட்கள், கண்ணாடி சிதறல்களையும் தாண்டி அத்தனை பேர்களின் மத்தியில் அச்சமில்லாமல் தன் மனதில் நிணைத்தவற்றை முழுங்காமல் முழங்கிய முக்கிய மனிதர்.

அமைதியை உருவாக்கிய அவரது மாசற்ற எண்ணங்கள் அத்தனையுமே விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்விட்டது.

ரயில் பயணத்தின் போது தான் இடுப்பில் எப்போதும் கட்டி வைத்திருந்த கடிகாரம் (செய்யும் அத்தனை காரியத்தையும் கடைசிவரையில் மணி பார்த்தே திட்டமிடுதல்) திருடப்பட்டு விட்டதில் இரண்டு நாட்களாக மூட் அவுட். திருடப்பட்ட கடிகாரத்தை (எட்டு ஷில்லிங் அன்றைய இந்திய மதிப்பு ஆறு ரூபாய்) சுட்ட தங்கமகன் மனம் உறுத்தி, கொண்டு வந்து ஆசிரமத்தில் கொடுத்த போது கட்டி அணைத்து விழா எடுக்காத குறைதான்.

அதனால் தான் இன்று வரை நமக்கு குறைவாகத் தெரிகிறார்?

மவுண்ட பேட்டன் பிரபு வருவதற்கு முன்பே படேல் இந்த பசங்களுக்கு பேசாம நாட்டை பிரித்துக்கொடுத்து அனுப்பி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்து இருப்பார் போல.

நடிகர் வடிவேல் போல பல பஞ்சாயத்தில் நிற்க விரும்பாமல் இருந்து இருக்கலாம்.

நேருவே தௌிவான எந்த எண்ணத்தையுமே வௌிப்படையாக தெரிவித்து விட முடியவில்லை. காரணம் அவர் தினந்தோறும் பார்த்துக்கொண்டுருக்கும் இரண்டு பக்க மதவாதிகளின் கோரத்தாண்டவங்கள்.

நேரிடை நடவடிக்கை என்று முழங்கிய ஜின்னாவின் கொள்கை முழக்கம் இது.

” ஒன்று இந்தியாவை பிளப்போம் அல்லது அதை அழிப்போம் “.

முழங்கிய முழக்கம் முழுங்கியது இந்தியாவை.

அவருடைய வழித்தோன்றலான அத்தனை பாகிஸ்தான் தலைவர்களும் இன்று வரையில் மிகச் சரியாகத்தான் இருக்கிறார்கள். எப்போதுமே கெட்ட விஷயங்களுக்கு குளிர் சாதன பெட்டி தேவையிருக்காது. நாற நாறத்தான் அவர்களின் புகழ் நானிலம் எங்கு பரவும்.

ஜின்னா வக்கிலுக்கு படித்து இருந்தாலும் பம்பாய் புறநகர் பகுதியில் பக்காவான ஆசிரியர் போல் பாடம் நடத்திக்கொண்டுருந்தார்.

“பாகிஸ்தான் வேண்டும் என்பதில் நாம் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறோம் என்பதை காங்கிரஸ்காரர்களும் ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் லட்சியத்தை அடைய வேண்டும் என்றால் அதை நடத்திக் காட்ட ஒரு போர் வேண்டுமென்றால் நாம் நடத்திக் காட்ட தயாராய் இருக்க வேண்டும். அதை உணர்த்துவது தான் இந்த நேரிடைய நடவடிக்கையின் லட்சியம் “.

ஆயிரம் அர்த்தம் பொதிந்த அவருடைய விளக்கவுரையை அன்றைய ஆட்சியாளர்களுக்கும், தலைவர்களுக்கும் ஏன் மக்களுக்கும் கூட புரியவில்லை.

தமிழ்நாட்டு (இன்றைய சென்னை) தலைநகரில் அமைதி ஊர்வலம் என்ற பெயரில் ஒரு சவவெட்டியை பாடை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு சென்றார்கள். பெட்டியின் மேல் மௌலானா அபுல்கலாம் ஆசாத் என்று எழுதப்பட்டு (அவர் மேல் என்ன கோபமோ?) எடுத்துச் சென்றார்கள்.

ஆனால் அன்றைய தினத்தில் கல்கத்தாவில்?

அந்த சாம்பிள் சரக்கு ஒன்று தான் பாகிஸ்தான் பிரிவினை கோரத்தாண்டவத்திற்கு முன் வந்த வௌ்ளி விழா கொண்டாடிய சின்னத்தம்பி.

ஆமாம் கலப்பில்லா சரக்கு குடித்த குடிமகன்கள் பெற்ற தலைசுற்றல் சமாச்சாரம். அத்தனை தலைவர்களும் கிறுகிறுத்துப் போய்விட்டார்கள்.

அந்த நேசமில்லா தலைவன் வங்காள அரசியல்வாதியும் அன்றைய முக்கிய மந்திரியுமான ஷிகீத் சஹ்ரவர்த்தியினால் முக்கித் திணறிய மக்கள் கூட்டங்கள், மோசம் போனவைகள், மூச்சு விடுவதற்குள் முழுமையும் இழந்தவர்கள்.

கண்ணீர் விட்டா வளர்த்தோம்?

Advertisements

2 responses to “நேசமில்லா தலைமையில் மோசம் போனவைகள்

  1. பெங்காளிகள் எழுதிய ( அல்லது அவர்கள் மேற்பார்வையில் எழுதப்பட்ட ) பாட புத்தகத்தின் சரித்திரம் … இது பற்றி ஒன்றும் சொல்லி இருக்காதே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s