சத்திய சோதனையா நித்தமும் வேதனையா?

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 16

இன்று வரையிலும் படித்த இளைஞர்களின் பாவமான குற்றச்சாட்டு இது. காந்தி மட்டும் பேசியிருந்தால் பாகிஸ்தான் என்ற நாடே உதயம் பருப்பாகி வௌி வந்து இருக்க வாய்ப்பு இல்லை?

ஜின்னா ஒரு பக்கம்.

தராவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? என்று நேரிடை நடவடிக்கை என்ற பெயரில் அத்தனை அக்ரமத்தையும் அரங்கேற்றிக் கொண்டுருந்தார்.

முடிவே இல்லாத பேச்சு வார்த்தைகள் அத்தனை காங்கிரஸ் தலைவர்களுக்கும் “போய்ச் தொலைஞ்சுருப்பா? ” என்று மனதிற்குள் உருவாக்கியிருந்தது.

மவுண்ட் பேட்டன் பிரபுக்கோ ஜின்னாப் பார்த்து ” இவருக்கு எல்லாமே தெரிகிறது. புரிகிறது. ஆனால் புரிந்த மாதிரி காட்டிக்கொண்டால் கொண்டுள்ள கொள்கை காணாமல் போய் விடும் என்பதாகவே இருக்கிறாரா? இவரை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று முழித்துக்கொண்டுருந்தார்.

ஆனால் காந்தி?

காந்தி ஒன்றுமே பேசவில்லை. அது தான் பிரச்சனை. அந்த அமைதியின் அர்த்தத்தை தான் ஆளுக்குள் ஆள் தனக்குத் தகுந்தமாதிரி உருமாற்றிக் கொண்டு அவரை கழுவேற்றிக் கொண்டுருந்தார்கள்.

உண்மை.

காந்தியின் பெரிய பலவீனமே இது தான். சொல்ல வேண்டிய அவஸ்யத்தை சொல்லாமலே அமைதி காப்பார். அக்கிரமம் அத்தனைக்கு இவன் தான் காரணம், என்று சொல்பவர் அத்தனை பேர்களுக்கு மத்தியிலும் அந்த நபரை தோளில் கை போட்டு ஆசுவாச படுத்துவார். காரணம் தவறு செய்தவன் மாறி விடுவான் என்று அதற்கு பொக்கை வாயில் மொக்கை தத்துவம் சொல்லுவார்.

கல்கத்தாவில் நடந்த அத்தனை கலவரங்களுக்கும் காரணமான அன்றைய கொடியவன் ஷகீத் சுஹ்ரவர்த்தி (1942) காந்தியிடம் சரண் அடைந்து உயிர் பிச்சை கேட்காமல் இருந்தால் லட்சம் துண்டுகளாக பிரித்து மேய்ந்து இருப்பார்கள். சராசரி மக்களுக்கு புரிந்த அவனின் அத்தனை செயல்பாடுகளும் காந்திக்கு ஏன் புரியவில்லை.

ஜெயிலுக்கு போகிறவன் திருந்துவதாக நம்புபவர் காந்தி. ஆனால் அங்கு கற்ற அத்தனை தெரியாத ” சிறுதொழில் ” வித்தைகளையும் வைத்துக்கொண்டு அடிக்கடி மறுவீட்டுக்குச் செல்லும் மாப்பிள்ளைகள் போல் காரியங்கள் செய்து கொண்டுருந்த அத்தனை பேர்களும் காந்தியின் பார்வையில் திருந்ததக்கூடியவர்கள்?

இதுவே காந்தியை இந்து மதவாதிகளின் முதல் எதிரியாக மாற்றியது. குழந்தையின் மழலை சிரிப்பை போல் சிரித்தவரின் வாழ்க்கை முழுவதும் அத்தனை தலைவர்களுக்கும் அபிப்ராய பேதங்களை உருவாக்கியது. உள்வாங்கத் தெரியவில்லை. உணர்ந்தவர்கள், பார்த்தவர்கள், பரிதாப வாழ்க்கைக்கு காரணமானவர்கள் என்று சுட்டிக்காட்டியும் கூடவா இந்த மகானுக்கு புரியவில்லை.

ஒரு வேளை அவர் சராசரி மனிதனாக வாழ்ந்து இருந்தால் பிரச்சனை வந்துருக்காது போல?

நான் உள் வாங்கிய வரையிலும் எந்த இடத்திலும் பாகிஸ்தான் பிரச்சனையை அவர் வாயால் உரத்துச் சொல்லவே இல்லை. நீண்டு கொண்டுருந்த வாத பிரதி வாதங்களைப் பார்த்து வெறுத்துப் போன காந்தி அன்று மாலை பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துருந்தார்.

முஸ்லீம் பெண்மணி ஆவேசமாகக் கேட்டார்.

“ஒரு தாய் குழந்தைகள். மனம் விட்டு பிரிய வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு?”

“ஆஹா. நல்லவிதமாக பிரிந்தால் தவறே இல்லையோ? பிரிவதற்கு முன் அடித்தே செத்துக்கொண்டால்? ” காந்தி சொன்னது.

அவர் பிரார்த்தனை கூட்டத்தின் வாயிலாக பாகிஸ்தான் நாட்டு பிரிவு ஆதரவுக்காக குரல் எழுப்பப் போகிறார்? என்ற செய்தி கேட்டதுமே மவுண்ட் பேட்டன் பிரபு மயங்கி விழாத குறை தான். அத்தனை காங்கிரஸ் தலைவர்களும் ஆடிப் போனார்கள்.

மவுண்ட் பேட்டன் பிரபுக்கு அங்குலம் கூட பிரித்துக் கொடுப்பதில் விருப்பம் இல்லை. முக்கிய காரணங்கள் பல இருந்தாலும் முதல் காரணம் ஜின்னாவால் பெற்ற மன உளைச்சல். நேரு, பட்டேல் உள் மனது என்ன சொல்லி இருக்கும் என்று தெரியவில்லை. ஒரே காரணம் காந்தி மொத்த இந்தியாவிற்கும் ஆத்மாவாக இருந்து கொண்டுருந்த காரணத்தால் காந்தியின் மௌனமே அவர்களுக்கு பல சந்தேகங்களை உருவாக்கிக் கொண்டுருந்தது.

எதிர்க்க முடியாது. இவர்கள் இருப்பது கணவான்களாக வாழ்ந்து கொண்டுருக்கும் (?) கூட்டத்துடன். அவரோ கலங்கிய மனதுடன் வாழ்ந்துகொண்டுருக்கும் கிராமத்திற்குள்.

” பிரிவினையை நான் எதிர்க்கின்றேன். எனது ஒவ்வொரு அணுவும் வேண்டாம், வேண்டாம் என்று கூக்குரல் இடுகின்றது. ஆனால் இன்றுள்ள நிலவரம் என்ன? உங்களை நீங்களே ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மவுண்ட் பேட்டன் பிரபுவைக் குறை கூறி பயன் இல்லை. பிரிவினை அவரது திட்டமும் அல்ல. ஆனால் அவருக்கு நீங்கள் என்ன வழியை விட்டு வைத்து இருக்கிறீர்கள்? ” என்று கேட்டார் காந்தி.

பிரிவினைக்கு காந்தி சம்மதித்தார் என்பது மிக மோசமான குற்றச்சாட்டு.

“பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்தாலொழிய ஜின்னாவுக்கு அவரது பாகிஸ்தான் கிடைக்கப் போவதில்லை. காங்கிரஸ் கட்சி, ஒரே குரலில் உறுதியாக எதிர்த்தால் அதனை மீறி அவர்கள் நடப்பதற்கு வழியில்லை. வைஸ்ராய் மவுண்ட் பேட்டனால் காங்கிரஸ் மகாசபையின் எதிர்ப்பைப் புறக்கணிக்க முடியாது. முதலில் வௌ்ளையர் வௌியேறட்டும். யாரிடம் இந்தியாவை ஒப்படைப்பது என்ற கவலை அவர்களுக்குத் தேவையில்லை. இந்தியாவை கடவுளின் கருணைக்கோ அல்லது பிசாசிடமோ விட்டு விட்டு வௌியே செல்லட்டும். இங்கு எல்லாவிதமான உபத்திரங்களும் ஏற்படலாம். அவர்கள் கூறுவது போல உள் நாட்டு போரே கூட மூளலாம். நாம் அக்னி ஆற்றில் நீந்த வேண்டும். ஆனால் எல்லாம் நடந்து முடிந்த பிறகு அந்த அக்னி நம்மை சுத்தப்படுத்தி விடும்.

பிரிவினை குறித்து காந்தி வாய் திறந்து பேசிய வார்த்தைகள் இது தான்.

மனதில் பல வித எண்ணங்களை கொண்டுருந்த நேரு, படேல், ராஜேந்திர பிரசாத் முழுமையாக காந்திக்கு எதிராக இருந்தார்கள். கிட்டத்தட்ட காங்கிரஸ் என்ற பேரியக்கம் உடைந்து விடும் என்ற அச்சப்படும் அளவிற்கு. மொத்த பிரச்சனைகளையும், பரிணாமத்தையும் புரிந்து கொண்ட காந்தி காத்து வந்த அமைதி அப்படியே திசை திரும்பி மேலும் மேலும் சிக்கலை உருவாக்கியது.

கிட்டத்தட்ட இன்றைய ரஜினிகாந்தின் நிலமை போல். பேசினாலும் பரபரப்பு. பேசாவிட்டாலும் முழுநீள கவர் ஸ்டோரி.

ஆனால் கதாநாயகன் நம்ம மவுண்ட் பேட்டன் கருத்தாய் இருந்தார்.

” இந்தியாவைத் துண்டாடுவது சுத்த பைத்தியக்காரத்தனம். இங்கு விஷம் போல் பரவி அனைவரையும் ஆட்டி வைக்கும் மதவெறி மட்டும் இல்லையானால் பிரிவினையைப் பற்றி நினைக்கும்படி என்னை எவராலும் நிர்ப்பந்திகக முடியாது ” என்றார்.

காரணம் அப்போது மவுண்ட் பேட்டன் பிரபு காதுக்கு வந்து சேர்ந்த உள்நாட்டு (பஞ்சாப்) கலவர பீதி?

Advertisements

6 responses to “சத்திய சோதனையா நித்தமும் வேதனையா?

  1. சரித்திரத்தை மறக்க கூடாது… ஆனால் கண் முன்னே இருக்கும் ஆபத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்

  2. தேசப்பிரிவினை பொதுவாக ஏதாவது ஒரு கோணத்தில் மட்டுமே பார்க்கப்படுகிறது. அவரவர் வசதி போல ஜின்னாவையோ, காங்கிரசையோ, அல்லது காந்தியையோ குறை சொல்கிறார்கள். காந்தி பிரிவினை வேண்டாம் என்று சொன்னவுடன் எல்லாரும் கேட்டுவிட போகிறார்களா என்ன? பிரிவினைக்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.

    • செய்தி தாளின் நாயகன் திருவாளர் சுதந்திரப் போராளி ஜஸ்வந்த் சிங்கின் புத்தகம் குறித்த செய்திகள்.

      தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட உண்மை. அதனால் தான் அத்தனை மாநில நீதிமன்றமும் அவசரமாய் 3000 தினந்தோறும் விற்று கல்லாபெட்டி நிறைவதை தடை நீக்கி அதிகபடுத்திக்கொண்டுருக்கிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s