கத்தி என்பது கழுத்து விரும்பிய ஆயுதம் சூலாயுதம் போதும். சூறாவளியும் தேவையோ?

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 14

குலத் தாழ்த்தி உயர்த்திச் சொல்லி உள்ளே இரு?

உருவமானவர் எங்களை உயர்விக்க வந்தவர் என்றவர்களும், அருவமானவர் எங்களை ஆளுமை செய்பவர் என்றவர்களும், இல்லை இல்லை அன்பு வடிவானவர் எங்களின் மோட்சத்திற்கு வழிகாட்டுபவர் என்று வாழ்ந்த அத்தனை பேர்களும் மூலத்தை விட்டு விட்டு முகத்தை பிடித்து தொங்கி அடித்து நாறிக் கொண்டார்கள்.

எடுக்கப்பட்ட கணக்குப்படி (1918) மொத்த ஜாதிகள் 5106.

தலையில் தோன்றியவர்கள், தோள்பட்டையில் தொங்கியவர்கள், தொடையில் வந்தவர்கள் என்று தொடங்கப்பட்ட பிரிவுகள் அனைத்துமே பாதத்தில் வந்தவர்களை பரலோகம் போகச் செய்தது.

ஒரு நதி. அதில் ஏராளமான கிளை நதிகள். கலப்பது என்பது கடைசியில் கடல் என்ற இறப்பு. வாழ்ந்து முடிப்பதற்குள் மூச்சு கூட விட நேரமில்லாமல் முட்டி முட்டியே போய்ச் சேர்ந்தார்கள். இந்து என்றாலும் முஸ்லீம் என்றாலும் கிறிஸ்துவம் என்றாலும் ஒரு வட்டம் என்றால் பராவயில்லை. ஒவ்வொருவரும் ஒரு ஒளிவட்டம் கொண்டு வாழும் போது வாழ்ந்தவர்களின் மொத்த வாழ்க்கையும் கடைசியில் பரிதாப வட்டத்திற்குள்ளே தான் போய் முடிந்தது.

பிராமணன் என்றால் நீங்கள் எந்த பிராமணன்?

“ஜலபுஷ்பம்” என்று கூறி மீன் சாப்பிடுகிற வங்காளி பிராமணனா?

காலில் ஷு போட்டுக் கொண்டு கோட்டு சட்டையுடன் பூஜை செய்கிற கங்கோத்திரி பிராமணனா?

கையில் உருளை போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு அதைச் சுழற்றி பூசை செய்யும் பூடான் பிராமணனா?

கேரளத்து நம்பூதிரியா? ஆந்திரத்து சாஸ்திரியா? ராவ்ஜீயா? சதுர்வேதியா?

தமிழ்நாட்டு பிராமணரா? அய்யரா? அய்யங்காரா?

யார் நீங்கள்?

செட்டியாரா? எந்த செட்டியார்? முதலியாரா? அதில் பல பிரிவுகள்.

ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு ஜாதி.

பல்லக்குளைச் செய்தவன் பல்கிவாலா, இனிப்புகளைச் செய்தவன் மிட்டாய்வாலா, பல்லக்கைத் தூக்குபவன் “போயி” என்ற கீழ் ஜாதி. இது போக ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு நுணுக்கமான வரையறைகள்.

இரும்மை உருக்குபவன் ஒரு ஜாதி, இரும்பைக் கொண்டு பொருள்களைச் செய்பவன் வேறொரு ஜாதி. கடைசி வரையில் வௌியே வரவே முடியாத பின்னல்கள் கடைசியில் கடவுளுடன் இணைக்கப்பட்டு பாதுகாப்பாய் முள்வேலிக்குள் பரிதாபத்தில் வாழ்ந்த வாழ்க்கை அது.

ஒரே மதம் என்ற இஸ்லாத்தில் பல பிரிவுகள். சுன்னி, ஷியா, கோஜா, போரா இப்படி தொடர்கின்றது.

ஒரு பிரிவு அடுத்த பிரிவுடன் பரிவாய் கூட பார்க்க முடியாது.

அடுத்த ஆச்சரியம்?

இந்தியாவில் படையெடுத்து வந்த மொகலாய மன்னர்கள், அவர்கள் வழி வந்தவர்கள், படைத்தளபதிகள், மந்திரிகள் மற்ற மிச்சமும் சொச்சமும்,

எந்த நவாபும், சுல்தானும் ஒரு மனைவியுடன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மனைவி ஒரு பக்கம். மற்ற பக்கம் எல்லாம் வகை தொகையில்லாத ஆசை நாயகிகள், ஆடலழிகள், வைப்புகள். இவர்கள் வழியில் வம்சாவழியினர்.

நாங்களும் அரசவம்சத்தினர் என்ற சொல்லிக் கொள்ளும் அங்கிட்டும் இல்லாமல் இங்கிட்டும் இல்லாமல்?

இந்துவுக்கு ஒரே ஒரு கல் போதும். கழுவி பொட்டு வைத்தால் கடவுள். எல்லாமே கடவுள் வடிவம் தான். ஆனால் இஸ்லாமியருக்கோ மசூதியில் 99 திருநாமங்கள் எழுதப்பட்டுருக்கும். வேறு எதுவும் இருக்காது. உருவ வழிபாடு கூடாது.

கலவரம் வேண்டுவோர் தவறாமல் நாடும் இடம் என்று விளம்பரம் அன்று பண்பலையில் ஒலிக்கவில்லையே தவிர வெட்டி எறிந்த பசுமாட்டுத்தலையும், தூக்கி எறிந்த பன்றிக்கூட்டமும் சேர்ந்து மொத்த கூட்டத்தை உண்டு இல்லை என்று ஆக்கியது.

உருண்ட தலைகள் எண்ணிப்பார்ப்பதற்குள் உறக்கம் மறந்து மருகி வாழ்ந்த கூட்டம் அது. நீ மதம் மாறியவன் தானே? என்ற உறுமல் ஒரு பக்கம். உன்னை வைத்துக்கொள்கிறேன் பார்? என்ற கருவிக் கொண்ட கலாச்சார தூதுவர்கள் மறுபக்கம்.

ஆனால் எவரின் பக்கமும் இறைவன் இல்லை. அவன் அமைதியாய் ஆனந்தமாய் கோவிலுக்குள் மசூதிக்குள் தேவாலயத்தில் புன்னகையில் வேடிக்கை பார்த்துக்கொண்டுருப்பார் போலும்.

காரணம் என்ன தெரியுமா?

நான் உருவாக்கச் சொல்லவில்லை. உருவாக்கியவர்கள் யார் என்று உங்களுக்கு உணரவும் தெரியவில்லை. அல்லது நீங்களாக உள் வாங்கவும் தெரியவில்லை?

இதற்கு மனிதர்களுக்குத் தேவையான பாடத்தை அமைதி வடிவானவர் நினைத்து வைத்துருந்த தண்டணை 1942ல் நேரிடை நடவடிக்கை என்பது என்ன? என்று உலகத்திற்கு ஜின்னா காட்டிய கலவரம். மூளை மட்டும் அவருடையது. முன்னிலை அன்று அதிகாரத்தில் இருந்த ஷகீத் சுஹ்ரவர்த்தி என்ற கொடியவன்.

அதிகம் இல்லை நண்பர்களே. மதத்தை என்பதை மட்டும் கருத்தில் கொண்டு வாழ்க்கை முழுவதும் வன்மத்தை வைத்துக்கொண்டு வாழ்ந்தவர்கள் ரத்தம் அணைத்தும் அன்று வீட்டுக் வௌியே ஓடிக் கொண்டுருக்கும் கல்கத்தா சாக்கடையை நிறம் மாற்றியது. திருப்பூர் சாயக் கழிவை விட நல்ல அடர்த்தியாய் இருந்து இருக்கும் போல.

ஆமாம் கழிவுகள் கலந்து ஓட வேண்டிய நீரில் ரத்தம் ஆறாக ஓடினால். ஹுக்ளி நதியில் மிதந்த அத்தனை பிணங்களையும் தின்ற கழுகு கூட்டங்கள் உண்மையிலே வாந்தி எடுத்து வல்லாறை லேகியம் தேடி அலைந்து இருக்கும். 6000 என்பது அரசாங்க கணக்கு. பார்த்தவர்களின் பார்வையில் 10000 என்பது.

கணக்கா முக்கியம். முக்காமல் மூச்சு விடக் கூட நேரமில்லாமல் கணக்கற்ற உயிர் போனது தான் முக்கியம். மொத்தமாய் சேர்த்து வைத்து பயணித்து வந்த மக்களின் வாழ்வாதாரங்கள் முடிந்த போது கழுகுளுக்கு உண்ணும் போது எந்த வேறுபாடும் தெரியவில்லை.

பகுத்தறிவு இல்லாத பறவையாய் பிறந்தது அது செய்த புண்ணியம்.

அரசியல் தெரியாது? கொள்கைகள் புரியாது.

ஒன்றே ஒன்று தான் புரியும். காலையில் எந்திரித்து வேலைக்குப் போனால் தான் கால் வயிறு கஞ்சி குடிக்க முடியும் என்று வாழ்ந்த கூட்டங்கள் தான் அத்தனை கலவரங்களிலும் பலியானவர்கள்.

தலைவர்கள், முன் எடுத்துச் சென்றவர்கள்?

அவர்கள் என்ன உங்களையும் என்னையும் மாதிரியா? அவர்கள் அடுத்த ஆலோசனை மண்டபங்கள் அர்த்த ஜாம பூஜையறையாக மாறியிருக்கும்.

அதனால் தான் என்னவோ ஜாமத்தில் துரத்தியடிக்கப்பட்டவர்கள், ஜமுக்காளம் கூட உன்னுடையது இல்லை என்று விரட்டியடிக்கப்பட்டவர்கள், தண்டவாளத்தை பார்த்தே உயிரை பிடித்துக்கொண்டே சடமாய் வந்தவர்கள், அழக் கூட தெம்பில்லாமல் அத்தனையும் இழந்தவர்கள், முகவரி இல்லாமல் தொலைந்து வந்தவர்கள், முதல் நாள் கோடியில் புரண்டு மறு நாள் தெருக்கோடிக்கு வந்தவர்கள் என்று அத்தனை பேரையும் அழக்கழிக்க வைத்த இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் கோர முகம்?

Advertisements

2 responses to “கத்தி என்பது கழுத்து விரும்பிய ஆயுதம் சூலாயுதம் போதும். சூறாவளியும் தேவையோ?

  1. உண்மை. பாதிப்பு அத்தனையும் வட நாட்டில் தான் அதிகம். நீங்கள் குறிப்பிட்டதும் உண்மைதான். இங்கு வாங்க செட்டியாரே என்பது போல் அந்தப் பக்கம் தொழில் வைத்து தான் அழைத்தார்கள் என்று >?. இன்று வரையில் வட நாட்டு மக்கள் எல்லோருமே எந்த மாநில மக்களாக இருந்தாலும் திருப்பூர் மட்டுமல்ல எந்த இடத்திலும் சேட்டு தான். சரிதானே?

  2. பார்சி என்பதே ஒரு சிறிய இனம் ..ரொம்ப கொஞ்ச பேர் தான், டோப்பி வாலா, பால்கி வாலா ஜாதியை குறிபிடுவதில்லை என நினைக்கிறேன் …

    இத்தனை வன்முறை நாட்டில் நடந்தாலும் , நம் தென்னாட்டில் அமைதி ஓரளவுக்கு இருந்தது. எனக்கு தெரிந்த வரை இங்கிருந்து ( தென் நாட்டில் ) கூட்டம் கூட்டமாக யாரும் பாகிஸ்தான் செல்லவில்லை என நினைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s