மனிதன் மாறிவிட்டான்?. மதத்தில் ஏறிவிட்டான்?

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 13

மதம் என்பதன் மூலம் என்ன?

நம்பிக்கை வை.

எந்த கடவுள் மேல் என்பது பிரச்சனை அல்ல. உனக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது.

அப்படி என்றால் வளர்ந்த விஞ்ஞானத்தின்படி அளப்பறிய சக்தியை பெற்று இருக்கும் மனித மனம் குறித்து கேள்வி வருமே?

உண்மை. உன்னுள் எத்தனை சக்தி இருக்கிறதோ அத்தனை சக்தியும் அழிவுக்கும் உன்னை அழைத்துச் செல்லும்.

அப்படி என்றால் எதற்கு பகுத்தறிவு. ?

பகுத்தறிவு இருக்கும் ஐ.நா. தலைவர் மூன் அவர்கள் ஏன் இன்னமும் அவலத்தை கண்டு காணாமல் இருக்கிறார்?

பகுத்தறிவு பெற்ற அத்தனை மேலை நாட்டு வானளாவிய அதிகாரம் படைத்த அத்தனை அதிபர்களும் ஏன் வளர்ந்து வரும் நாட்டின் சமூக அழிவுக்கு துணை போகின்றார்கள்?

பயம். அதன் தொடர்ச்சியான கோழைத்தனம். வாழ்க்கையின் அத்தனை புள்ளிகளின் கோலங்களையும் மாற்றினாலும் விட முடியாத சகிப்புத்தன்மை என்ற சமரசச் சொல்.

உன்னுடைய இறப்புக்கு பிறகும் ஒரு உலகம் உண்டு. மோட்சம் வேண்டுமென்றால் உனக்கு சொர்க்கம் வேண்டுமென்றால்? உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒழுங்காக வாழ நிஜ வாழ்க்கையை யாருமே அத்தனை சுலபமாய் கற்றுத் தரவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் உண்டு.

காரணம் வளர்ந்த நாடுகளில் அத்தனை அதிபர்களிடமும் கல்வி, ஆரோக்கியம், தௌிந்த அறிவு, பகுத்துப் பார்க்கும் பகுத்தறிவு நம்மை விட அவர்களிடம் அதிகம் இருப்பதாகத் தானே எல்லோரும் கருதுகிறோம்.

கருதவில்லை என்றால் நமக்குள் இத்தனை வேற்றுமை வந்து இருக்காது. உள்ளே உடன் வாழ்ந்து கொண்டுருப்பவர்களைவிட மேலை நாட்டு விஷயங்கள் இன்று வரையில் தொடர்ந்து இருக்காது?

பிடிக்குதோ இல்லையோ? உள்ளே நுழைந்தவுடன் ஒரு கோக் குடுங்க என்று சொல்ல மாட்டோம்?

சமாதானமாய் வாழந்து விட மாட்டோம். வந்தவர்களுக்கு வேண்டுமானால் அடிமையாய் இருப்போம்.

அன்று அவலத்தை தந்த படையெடுப்பாளர்கள். அடுத்த மன்னர்கள். இன்று பொருளாதார நிர்ப்பந்தங்கள் என்ற பெயரில் பெரிய அண்ணன்களுக்கு?

ஒவ்வொரு கால கட்டத்திலும் நாம் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறோம் என்று நம்முடைய அத்தனை செல்வங்களையும் தெரிந்து தெரியாமல் இழந்து கொண்டுருக்கிறோம்.

உலகத்தின் நாகரிகத்திற்கே வழிகாட்டி என்று நம்மை நாமே பெருமை பட்டுக்கொண்டு வாழ்ந்தோமே ஒழிய வந்தவர்கள் அனைவருமே நம்மை வழி காட்டும் பலகையாக வைத்துக்கொண்டு அத்தனையையும் அபகரித்துக் கொண்டே இருந்தார்கள். இருக்கிறார்கள்.

நம்முடைய அறிஞர்கள் சமர்பிக்கும் ஆய்வுக் கட்டுரைகள் கூட அவர்கள் வௌியீடும் இதழ்களில் வந்தால் தானே அத்தனை சிறப்பாய் சிலாகித்துப் பேசுகிறோம்.

கடவுள் என்ற மூலத்தையே, மரபு மூலக்கூறையே உடைத்து டோலி என்ற ஆடு மூலம் அவதாரத்தையே ஆட்டம் காண வைத்ததிற்குப் பிறகுமா இந்த கடவுள் நம்பிக்கை நமக்குத் தேவை?

ஏற்றமான பெரியார் கருத்துக்கள், எண்ணிப் பார்க்கவே முடியாத அம்பேத்கார் கருத்துகள் எல்லாமே இங்கு வந்து அடைந்த போதும் இன்னமும் ஏன் இத்தனை ஜாதி மதங்கள் இனங்கள்?

பயம். அதன் தொடர்ச்சியான கோழைத்தனம். வாழ்க்கையின் அத்தனை புள்ளிகளின் கோலங்களையும் மாற்றினாலும் விட முடியாத சகிப்புத்தன்மை என்ற சமரசச் சொல்.

உன்னுடைய இறப்புக்கு பிறகும் ஒரு உலகம் உண்டு. மோட்சம் வேண்டுமென்றால் உனக்கு சொர்க்கம் வேண்டுமென்றால்? உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒழுங்காக வாழ நிஜ வாழ்க்கையை யாருமே அத்தனை சுலபமாய் கற்றுத் தரவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் உண்டு.

ஆமாம். இன்று வரைக்கும் எத்தனையோ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகள் கண்டு பிடித்தாலும் தனி மனிதனுக்குள் இருக்கும் அந்த பயத்தை கண்டுபிடித்து அழிக்க ஏதாவது ஒரு எந்திரம் வந்தால் ஒழிய உலகம் அழியும் வரையில் அத்தனையும் இங்கு உயிர்ப்புடன் இருக்கும். வாழும்.

உளவியல் சிந்தாந்தங்கள் எத்தனை பார்த்தாகிவிட்டது. உள் மன ஆற்றலை எத்தனை விதமாக இந்த உலகத்திற்கு படைத்தாகி விட்டது. ஆனால் இன்று வரையிலும் ராக்கெட் செலுத்தும் விஞ்ஞானிகள் கூட தேங்காய் உடைத்து சூடம் காட்டித்தான் அவர்கள் அறிவு கொடுத்த அற்புதத்தை, மெய்ஞானம் என்று நம்பிக்கொண்டுருக்கும் நம்பிக்கை கொண்டு அனுப்பிக்கொண்டுருக்கிறார்கள்.

ஒரு பக்கம் புனித பூமி என்றும், இங்கு புண்ணிய ஆத்மாக்கள் வாழ்ந்த பூமி என்று ஆளுக்கு ஆள், மதத்திற்கு மதம் மாறுபட்டு சொல்லிக் கொண்டு அவர்களை அறியாமல் அத்தனையும் இன்று வரை வளர்ப்பதில் தான் கவனமாய் இருக்கிறார்கள்.

இந்தியாவில் மட்டும் தான் இத்தனை கொடுமை என்று எண்ணிக்கொள்பவர்கள் தயை கூர்ந்து எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

சிலுவைப் போர் தந்த அவலங்களை கூர்மையாய் படித்துப் பாருங்கள். இன்று இஸ்லாமிய நாடுகளில் நடந்து கொண்டுருக்கும் அத்தனை ரத்தக் குருதிகளை கால் நணைந்து கடந்து வாழும் மக்களை எண்ணிப்பாருங்கள்.

இந்தியாவில் மட்டும் இத்தனை ஜாதிகள், இத்தனை வர்ணம் என்றால் ஒரே மதம் என்று சொல்லும் அத்தனையிலும் ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வுகள்.

ஏன் அத்தனை பிரிவுகள். ஏன் இத்தனை அடிதடிகள்?

காற்றில் ஏற்றத்தாழ்வு வந்தால் மழை வரும். மனிதம் வாழும். ஆனால் மனிதர்களின் எண்ணத்தில் ஏற்றத்தாழ்வு வந்தால் மொத்த சமூகமே அழியும்.

அழிக்கும் தீ நாக்குக்கு, கத்திகளுக்கு, கடப்பாறைக்கு, சூலாயுதத்திற்கு, துப்பாக்கிகளுக்குத் தெரியாது இவன் இந்து, அவன் முஸ்லீம், அவள் கிறிஸ்தவ மதம் என்று.

ஒன்று மட்டும் தான் தெரியும். அழிக்கத் தெரியும்.

அழிப்பவனுக்கு வெறி அடங்கும். அழிபவன் குருதி பார்த்து அடுத்து வருபவனுக்கு ஆயுதம் தூக்க வழி பிறக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது.

எத்தனை மாற்றங்களை இந்த இந்தியா பெற்றுள்ளது?

இஸ்லாமியர்கள் படையெடுத்து வந்தார்கள். வந்தவர்கள் அத்தனை பேருமே சொன்னது. அன்பும் அழிவும் அற்ற ஒரே இறைவன்.

உண்மை தான்.

ஆனால் வந்தவர் எவரிடமும் மருந்துக்கு கூட அந்த அன்பு இல்லை. மனிதர்கள் மேல் அக்கறை இல்லை.

மதம் மாறுகிறாயா? என்று கேள்வியை முடிப்பதற்குள் மாறாதவர்களின் தலை மண்ணுக்குள் புதைந்தது. மாறியவன் வாழ்க்கையை அடுத்து வந்தவன் அவசரமாய் புதைத்தான்.

அவர்கள் போனார்கள். போகும் போதே கொள்ளை போனது நம்முடைய சொத்துக்கள் மட்டுமல்ல. கொள்கைகள் அத்தனையும்.

கலப்பு அதிகமானது. கற்பு கேள்விக்குறியானது?

மன்னர் வந்தார். மாட்சிமை தாங்கிய என்று அழைத்த கூட்டமும் தொடர்ந்தது. தொடர்ந்த கூட்டமோ தன்னுடைய தொல்லையில்லா வாழ்வுக்கு வகை தொகையில்லாமல் மன்னருக்கு கற்றுக்கொடுத்த வர்ண பேதங்கள் மூலம் வாழ்க்கை முழுவதும் சூறை காற்றாய் பலருடைய வாழ்வை சூன்யத்தில் கொண்டு போய் தள்ளியது.

இடுப்பு இருந்தும் எந்திரிக்க முடியாமல் தலைமுறை தலைமுறையாய் தள்ளாட்டமான வாழ்வில் தத்தளித்தே போய்ச் சேர்ந்தார்கள். அடிமை முறை, ஆண்டான் முறை, ஆண்டை முறை, எஜமான் முறை, என்று எல்லா முறைகளிலும் ஏராளமானவர்களில் முகவரியே காணாமல் போய்விட்டது.

பொருத்துப் பார்த்தார்கள். பொங்கி எழுந்தார்கள். எழும் போதே நசுக்கப்பட்டார்கள். நசுங்கி எந்திரித்தவர்களை நாறடிக்கப்பட்டார்கள்.

பார்த்த நாற்றத்தைப் பொறுக்க முடியாமல் நாம் அமைதியாய் இவர்களுக்கு அடிமையாய் வாழ்வதே சிறப்பு என்று அவசர தீர்மானத்திற்குள் வாழ்ந்தார்கள்.

என்ன செய்ய முடியும்.

ஆறாத புறையோடிய காயம். புழுத்துப் போன எண்ணங்கள் கொண்டு வாழ்ந்த கூட்டம் எப்படா காலம் வரும் என்று காத்துருந்தனர்.

காத்து இருந்தவர்களுக்கென்று அவதாரம் எடுத்த கடவுள் போல் அவ்வப்போது தோன்றி மறைந்தனர் தொல்லை தரும் புண்ணிய ஆத்மாக்கள். எல்லோருடைய பணி ஒன்று தான். ஆனால் பெயர் மட்டுமே மாற்றம்.

மதங்களின் பெயரால், ஜாதிகளின் பெயரால் இன்று வரையிலும் மொத்தக்கூட்டத்தையும் தன்னுடைய பிடியில் வைத்து விளையாட்டு காட்டிக்கொண்டுருக்கும் அத்தனை பேர்களுமே நன்றாகத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

ஓவ்வொரு காலத்திலும் அழிபவர்கள் அப்பாவிகள். ஆமாம் பாவிகளை ஆதரித்ததால்.

வன்மம் கொண்டு வாழ்ந்தவர்களை வளர்த்து எடுத்து முன்னிலைப்படுத்திய கலவரங்கள் தான் நம்முடைய சுதந்திரத்தை சற்று காலம் தள்ளிப் போடவைத்ததோ என்ற அச்சம் படிக்கும் போது புரிகின்றது.

காரணம் 1947க்கு முன் ஒரு வருடம் பின் ஒரு வருடம் அத்தனை கோரத்தாண்டவம்?

Advertisements

4 responses to “மனிதன் மாறிவிட்டான்?. மதத்தில் ஏறிவிட்டான்?

  1. தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

    முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்…!!

    வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் …!!!

  2. படத்தின் க்ளைமாக்ஸ் போல போகிறது, ஒரே ரத்தம், குண்டு, வாள், சூலம் ….. எல்லாம் சுபமாய் முடியனும் … ஒன்னு மட்டும் பாருங்க நமக்கு நேரு, மொராஜி, காமராஜ் , படேல், இந்திரா , அப்துல் கலாம், வாஜ்பாய் போன்ற தேசிய தலைவர்கள் …. எம்.ஜி .ஆர் , குண்டுராவ், என்.டி.ஆர், நந்தினி சத்பதி, … அங்கிட்டு பாருங்க …எனக்கு தெரிஞ்சு யாருமே இல்லை, புல்லை சாப்பிடுவோம், அணு குண்டை செய்வோம் என்று சூளுரைத்தார் புட்டோ …நாமும் செஞ்சோம் இல்லை என்று சொல்லவில்லை. வித்யாசம் நிறைய உண்டு நம்மிடையில்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s