கண்றாவி காதலும் கலங்காத தலைவரும்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 12

சிரிக்கவே தெரியாத தலைவர் என்று இன்றளவும் நாம் பார்த்து வந்த ஒரே தலைவர் காலஞ்சென்ற திரு.பி.வி.நரசிம்மராவ். சிரிக்காமலே அற்புத கணக்கில் ஐந்து ஆண்டுகளையும் கச்சிதமாய் ஆண்டு அடுத்தவர்களை அதிசியக்க வைத்தவர். ஆனால் ஜின்னா அவர்கள் எந்த சூழ்நிலையிலும் வாய்விட்டு அதிகமாக சிரித்ததாக காண இயலவில்லை. அதே சமயத்தில் எந்த சூழ்நிலையிலும் வாய் விட்டு அழுததாக தெரியவில்லை.

அழுத ஒரே சமயம் அவருடைய மனைவி இறந்து புதைகுழியில் இறக்கப்பட்டு மண் போட்டு மூடுவதற்கு சற்று ஒரு நிமிடத்திற்கு முன்னால் வாய் விட்டு கதறி அழுதார். பார்த்தவர்கள் அத்தனை பேருக்கும் அத்தனை ஆச்சரியம். காரணம் அவர் அழுதது அதுதான் முதல் முறை. உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆமாம். அது தான் முகமதலி ஜின்னா?

பெண் வாடையே என்னவென்று தெரியாமல் வாழ்ந்த மனிதர் காதலில் விழுந்தார் என்றால் எவ்வாறு சிந்திப்பீர்கள்? அது தான் காதலின் சக்தி என்றா? கல் மணம் படைத்த ஜின்னா கூட காதலித்தது ஆச்சரியம் என்றா?

இவரோ இஸ்லாமியர். பெண்ணோ தீயை ஆராதனை செய்யும் பார்ஸி வம்சம். கற்பனை செய்து பாருங்கள். மணிரத்னம் படத்தில் காட்டியதற்கே குண்டுகள் வீட்டுக்குள் விழுந்தது. ஆனால் இவருக்கு?

அதுதான் தலைவர்?

தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தொண்டர்கள் மட்டும் கண்ணியமாக கடமையாக கட்டுப்பாடுடன் வாழவேண்டும் என்ற எழுதப்படாத விதி அன்றும் இருந்து இருக்கும் போலிருக்கு?

வக்கீல் தொழிலில் இவருக்கு இருந்த புகழ், வளர்ந்து வருகின்ற தலைவர் என்ற இமேஜ் என்று மொத்தமாய் வாழ்ந்த 55 கிலோ உடம்பில் அரைக்கிலோ சதையும் உடன் வாழ்ந்த வந்த 41 வயதான ஜின்னா மேல் ரத்தன்பாய்க்கு காதல் வந்ததில் ஆச்சரியம் இல்லை. காரணம் ரத்தன்பாய் அன்றைய பம்பாய் மேல்தட்டு வர்க்கத்தின் பிரதிநிதி. காண்பவர்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டிய அம்சமான ஆடை வகைகளை அணிந்து அடிக்கடி பலரை மோட்சமடைய வைத்தவர். மோகத்திலே தன் வாழ்க்கை முழுவதையும் வாழ்ந்து அனுபவித்த அற்புத அழகி.

வைத்த கண் வாங்காமல் வாய் வழியே கண் வழியே பலர் புகைவிட்டுக் கொண்டு தொடர்ந்த போதிலும் ரத்தன் பாய் இவரை தன் வலையில் வீழ்த்தியது தான் மிகுந்த ஆச்சரியமாய் இருக்கிறது.

இரும்பு போல் அவரது மனம் மட்டுமல்ல. உடம்பும் கூட.

நரம்பும் எலும்பும் தான் மொத்த ஆறடி உயரத்தில் இறுக்கமாய் இருந்தது. எப்போதுமே இறுகிய முக தோற்றத்துடன் இருக்கும் ஜின்னாவின் கண்கள் மட்டும் கனவு காண்பவர்களின் வசீகரம் போல். எதற்கும் அஞ்சாதவர். எவரைப்பற்றியும் கவலைப்படாதவர். குடும்பம், குழந்தை, உறவு, கொண்டாட்டம் எல்லாவற்றையும் விட தன்னுடைய இறுதி கொள்கையில் கடைசி வரையில் உறுதியாய் இருந்தவர். வாழ்ந்தவர். ஆதனால் தான் என்னவோ தந்தையின் வக்கீல் நோட்டீஸையும் மீறி தனது 18 வயது பூர்த்தி ஆனவுடன் ரத்தன்பாய் ஜின்னாவுடன் வாழத் தொடங்கினார். அப்போது ஜின்னாவின் வயது 41.

30 வயதுக்கு மேல் ஆண்களுக்கு திருமணம் நடந்தாலே வாழ்க்கை என்பது ஒரு சடங்கு போலத்தான். அதிலும் இத்தனை வயது வித்யாசம் உள்ள பெண். நாகரிகத்தை ஒவ்வொரு மணி நேரமும் விதவிதமான உடைகள் மூலம் உலகறியச் செய்து கொண்டுருந்த வித்யாசமான பெண். கற்பனையில் கொண்டுவாருங்கள். வாழ்க்கை கண்றாவியாகத்தானே இருந்தது இருக்க முடியும்?

உண்மை.

பேச்சுக்கள், ஏச்சுகள், தடுமாற்றம் என்று கடந்து தட்டுத்தடுமாறி பத்து வருடங்கள் கழித்து பெண் குழந்தை ஒன்று பிறந்து அதன் தலைமுறையாய் வந்தவர் தான் இன்று வாழ்ந்து கொண்டுருக்கும் பாம்பே டையிங் அதிபர் நூஸ்லிவாடியா. மகள் வயிற்று பேரன்.

எதற்குமே பிடி கொடுக்காத ஜின்னா. எதைப்பற்றியுமே கவலைப் படாத ரத்தன்பாய். அவரோ வாழ்க்கை என்பது தான் மனதில் வைத்துருக்கும் கொள்கைக்காக. இவரோ வாழ்க்கை என்பது சொட்டுச் சொட்டாக அனுபவிக்கும் திராட்சை ரசம் போல் ஆசை தீர வாழ்ந்து அனுபவிக்க வேண்டியது. வயதில் அத்தனையும் அனுபவிக்க இடைவௌி இருவருக்கும் அதிகமாகிக் கொண்டே போனது.

ஜின்னாவின் இரும்பு மனதில் இளகிய எண்ணமா இருந்து இருக்க முடியும்? இவரின் திசை திரும்பாத பயணத்தில் ரத்தன் பாய் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

ஆமாம் கணவரை விட்டு வௌியேறி 28 வயதில் ஏதோ ஒரு வியாதிக்காக அளவு தெரியாமல் உட்கொண்ட மருந்தினால் மேல் உலகம் சென்றடைந்தார். அத்தனை நாள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் பீறீட்டு மனைவியை புதைகுழியில் இறக்கி மண்ணை மூடும் போது ஜின்னா தன் மனதை திறந்தார். அழுகையின் மூலம். பாவம் அவரும் மனிதர் தானே?

டினா ரத்தன் பாய். ஜின்னாவின் மகள் பம்பாய் கொலாபா பகுதியில் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த போது வீட்டின் மாடியில் இந்திய பாகிஸ்தான் கொடியை பறக்க விட்டு சந்தோஷப்பட்டார். அப்பாவுடன் பாகிஸ்தான் நாட்டுக்கு செல்லவில்லை. ஏன் ஜின்னாவின் சகோதரி கூட. காரணங்கள் தெரியவில்லை. அவர் மட்டுமே தனி ஆளாக தான் அடைந்த லட்சிய நாட்டுக்கு பயணப்பட்டார்.

ஜின்னாவின் வௌித்தோற்றம் தான் இரும்பு மனிதர் தோற்றம். ஆனால் உடம்போ மொத்த பிணிகளும் சேர்ந்து இருந்த கலைக்கூடம். ஆமாம் புகைத்த புகை, அருந்திய மது, என்று எச்சமும் சொச்சமும் எல்லாமும் சேர்ந்து அவருக்குள் காச நோயை பரிசாக கொடுத்து இருந்தது. செல்லறித்த நுழையீரலுடன் டாக்டர் எதிர்ப்பையும் மீறி சென்று அடைந்தார் தன் லட்சிய நாட்டுக்கு.

ஆனால் ஒன்று?

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற வேண்டும் என்ற பொதுக்கருத்தை மீறி அங்கங்கு மேலோங்கி நின்ற மத வேட்க்கை, ஜாதி, இன வேறுபாடுகள் ஏன் இத்தனை நாளும் அடங்கிக்கிடந்தது. அதுவே மொத்த வீர்யமாய் மாறி விவேகமற்ற தலைவர்களால் முன் எடுத்து செல்லப்பட்டு இன்று ஒரு புதிய நாடு உருவாகும் அளவிற்கு?

அப்படி நீங்கள் கேள்வி கேட்டால் அன்று இந்தியாவில் இருந்த ஜாதி, இன, வேறுபாடுகள் அத்தனையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அடக்கப்பட்டவர்கள், அடக்கி ஆண்டவர்கள், பொறுக்க முடியாமல் மதம் மாறியவர்கள், புறக்கணிப்பால் புழுங்கியே அழிந்தவர்கள், கட்டாய மத மாற்றத்தால் கலங்கி நின்றவர்கள் என எத்தனை எத்தனை கொடுமைகள், கொடூரங்கள்?

அது தான் அன்றைய இந்தியா?

Advertisements

6 responses to “கண்றாவி காதலும் கலங்காத தலைவரும்

 1. //பெருந்தன்மையின் முகவரியே //

  ?????????????

  திட்டுறதா இருந்தா நேரடியா திட்டிருங்க பாஸ்..

  😦

 2. நல்லா எழுதுறீங்க பாஸ்..
  அடுத்த இடுகையை ஆவலோடு எதிர்பார்க்கும்,

 3. உங்கள் எழுத்து, வேகம் எடுத்து பாய்கிறது… பின் தொடர்வர்தற்கே மூச்சு வாங்குகிறது, … படித்த பின், அம்மாடி இவ்வளவு விஷ( ய)ங்களா …. கட்டுரை நன்றாக வருகிறது, தொடருங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s