விலகி ஓட வேண்டிய ரகஸ்ய விளையாட்டு

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 11

உண்மை தான்.

கிட்டத்தட்ட ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு விலகி ஓடி விட வேண்டும் என்ற பதட்டத்தில் தான் அன்று இருந்தார்கள் ஆளை விட்டால் போதும் என்ற நிலைக்கே வந்து இருந்தனர். சுதந்திரமாவது சுண்டக்காயாவது? கொத்துகறியாட்டம் கொறிச்சுக்கிட்டு போங்கடா அல்லது சாவுங்கடா? என்று மவுண்ட் பேட்டன் புலம்பிய உள் மனம் நிச்சயம் சொல்லி இருக்கும்.

உச்சக்கட்ட திரைப்பட முடிவில் வில்லனும் சாகாமல் கதாநாயகனும் வாழாமல் கதை இழுத்துக்கொண்டே போனால்?

நேச நாட்டு தலைமை தளபதியாக பணியாற்றி தனது ராணுவ எல்லைக்குள் 12 கோடியே 60 லட்சம் மக்களை பெற்று, ஜப்பான் நாட்டை இறுதியில் வெற்றி கொண்ட மவுண்ட்பேட்டன் பிரபுக்கு, எச்சரிக்கையை மீறி நேருவை தாமே முன்வந்த சந்தித்த கண்ணியமான மனிதரால் இங்கு நடந்து கொண்டுருந்த நிகழ்ச்சிகள், வந்து கொண்டுருந்த செய்திகள் அத்தனையும் தலைவலியாகத்தான் இருந்தது. சுருக்கமாகச் சொன்னால் திருகுவலி. கழுத்தை எங்கேயாவது மாட்டி விட்டு வெறும் முண்டமாக அலைந்து விடலாம் என்ற நிலைமைக்கு.

ஆங்கிலேயர்களால் “வைக்கோல் மனிதர்” என்றழைக்கப்பட்ட காந்தி மீது அளவற்ற மரியாதை வைத்துருந்தார். அவருடைய தத்துவங்களை புரிந்து கொள்ள முயற்சித்துக்கொண்டுருந்தார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியா பரவசம். இந்த எலும்பும் தோலுமா இத்தனை ஜீவன்களை உயிர்பித்து வைத்துருக்க முடிகின்றது. ஆனால் காலத்துக்கும் கருத்துக்கும் சற்று கூட சம்பந்தம் இல்லாமல். என்ன இது?

ஆனால் ஜின்னாவைப் பார்க்கும் போதெல்லாம் அவருடைய விதாண்டாவாதத்தை புரிந்து கொள்ள முடியாமல் எத்தனை பிரச்சனை வந்தாலும் ஒரு அங்குலம் கூட அவர் கேட்பது போல் பிரித்துக் கொடுக்க தயாராய் இல்லை.

ஆனால் அன்றைய நிலைமை அத்தனை சாதகமாய் இல்லை.

பல மணிநேரம் உட்கார்ந்து அத்தனை சாதக பாதக அம்சங்களையும் பிரித்து மேய்ந்து ஜின்னாவுடன் அலசினாலும் கடைசியில் அவர் விடைபெறும் போது பாகிஸ்தான் என்று நாடு உறுதியாக பிரிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் மனிதரை அவரால் ஒரு அளவுக்கு மேல் திருப்தி படுத்த முடியாமல் தோல்வி அடைந்த மன வேதனையை யாரிடம் சொல்லி புலம்ப முடியும்.

பிரிட்டன் இந்தியாவை காலணி ஆதிக்க முறையில் ஏறத்தாழ 350 ஆண்டுகள் சிறந்த முறையில் ஆட்சி செலுத்தி ஆளுமைக்குள் கொண்டு வந்த போதிலும் மிகக் குறைவான மனித இழப்புகளில் தான் சாதித்தார்கள். ஆனால் இன்று சுதந்திரம் கொடுத்தே ஆக வேண்டிய நிலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்து நின்று கொண்டு நிற்பவர்களை பார்க்கும் போது கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத பயங்கரங்களை உருவாக்கி விடும் போலிருக்கே?

அத்தனையும் தெரிந்தாலும் அவரவர் பக்கம் உள்ள நியாய தர்மங்கள் தான் அவர்களுக்கு பெரிதாக தெரிகின்றது. ஜின்னாவின் விருப்பம் மறுக்கப்படுமேயானால் 1946 நேரிடைய நடவடிக்கை என்ற பெயரில் இழந்த உயிர் இழப்புகள் அந்த ஒரே தினத்தில் மட்டும் 6000 மனித உயிர்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவருக்கு லட்டு மாதிரியான இழப்புகளை தந்து கொண்டுருந்தது. ஆமாம் பயம் மூலம் உருவாக்கப்பட்டு கிடைத்த இழப்புகள் அனைத்துமே அவருக்கும் லட்டு தான்.

பிரிக்கலாம். ஆனால் என்ன?

சாதக பாதகம் என்று ஆராயத் தொடங்கும் போதே இத்தனை உயிர் இழப்புகள் என்றால்?

நினைத்து பார்த்தாலே முந்தைய வைஸ்ராய் அனுபவித்துக்கொண்டுருந்த எந்த சுகத்தையும் அவரால் அனுபவிக்க முடியாத அப்பாவியாய் உள்ளே வந்து மாட்டிக் கொண்டார். ஆனால் வரும் போதே பிரிட்டன் கிழட்டுச் சிங்கம் சர்ச்சில் சொன்னது நினைவுக்கு வந்து போனது.

” உன்னால் முடியும். உன்னால் மட்டும் தான் முடியும். ”

ஆனால் பிரிக்கும் போது நடக்கும் போது பரிமாற்றம் நடைமுறைக்குள் வரும் போது உள்ளே எழுந்து கொண்டுருக்கும் குரோதம் அடங்குவதற்குள் எத்தனை லட்சம் உயிர்கள் மாண்டு விடுமோ?

இதற்கு சற்றும் குறைவில்லாமல் 30 கோடி மக்களின் இந்து தலைவர்கள் பாகிஸ்தான் என்ற நாடு பிரிவதை எதிர்க்கிறார்கள். இவர்கள் இருவரையும் ஒரே அணியில் எப்படி கொண்டு வருவது?

வினையை விதைத்தது மவுண்ட் பேட்டனின் கொள்ளுத்தாத்தா வம்சம். ஆனால் அறுவடையின் போது அவர்கள் பரமபிதாவிடம் கொஞ்சிக்கொண்டுருந்தார்கள். இவரோ இங்கு கெஞ்சிக்கொண்டுருக்கிறார்.

அறிவு என்பதே விஞ்ஞானம் என்பதாக கற்று வைத்துருந்த அவரின் அத்தனை மூதாதையர்களும், பெற்று இருந்த அத்தனை அறிவினால் உருவாக்கியது தான் இத்தனை பிரிவினைகள். இன்று பிள்ளையார் இல்லாத ஆலமரம் அரசமரமாய்?

அவர்கள் உருவாக்கிவிட்டுச் சென்ற பிரிவினை மரங்கள் இன்று விழுதுகளுடன் மிக நீண்ட கடினமான அசைக்க முடியாமல்?

ஆனால் இங்கு உள்ள அத்தனை தலைவர்களும் மெய்ஞானம் இருப்பதாக தன்னைத் தானே நம்பிக்கொண்டுருந்தவர்களும் நடித்துக் கொண்டுருந்தவர்களும் உருவாகியிருந்த விழுதை பயன்படுத்தி விளையாட்டு காட்டிக்கொண்டுருந்தார்கள்.

இந்த இடத்தில் வௌ்ளை மனதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் பெற்று இருந்த கருப்பு மனதின் அருமை தெரியும்.

அவர்கள் வௌியேறியே ஆக வேண்டும். அதில் சந்தேகமே இல்லை. இதற்கு மேல் இங்கு தாக்கு பிடிக்க முடியாது என்று நன்றாக தெரிந்து இருந்த போதிலும் 350 ஆண்டுகள் ஆண்ட உறவை, கட்டுப்பாடுகளை, கண்ணியமான நடத்தை விதிகளை ஓரே நாளில் அவர்கள் நினைத்துருந்தால் ” எக்கேடு கெட்டாலும் பராவாயில்லை. நாங்கள் வௌியேறுகிறோம். நீங்கள் அடித்துக்கொண்டு சாங்கடா? ” என்று கிளம்பி விட நிணைக்கவில்லை.

” பிரபு ராசா ஒம்மேல ரொம்ப நம்பிக்கையிருக்கு. அவசரப்பட்டு எந்த தப்பான முடிவும் எடுத்து விடாதே. பத்து பேரு காறித்துப்புற அளவுக்கு எந்த பிரச்சனையையும் உருவாக்கிடாதே. என்ன அதிகாரம் வேண்டுமானாலும் நீயே எடுத்துக்க. எங்களையெல்லாம் கேட்க வேண்டாம். உன்னுடைய அதிகாரம் வானளாவிய அதிகாரம். நீ தான் ராசா. மந்திரி. கூஜா? ஆனால் பேரு பெத்த பேரா இருக்கனும். இதுக்கு மேல இங்கிருந்து என்ன உதவி வேண்டுமானலும் வாங்கிக்க ”

அப்போதைய பிரதமர் கிளமண்ட் ஆட்லி அனுப்பிய உத்தரவு இது. ஆனால் மொத்தத்திலும் ஒரு பெரிய கொடுமை என்னவென்றால்

பாகிஸ்தான் ஒரு நாடு என்று எங்களுக்கு வேண்டும். நாங்கள் உங்களுடன் சேர்ந்து வாழ முடியாது. எங்களின் கொள்கை, கோட்பாடுகள், வாழ்க்கை முறை வேறு என்று யார் முன்னிலையில் நின்று கொண்டு மூக்கால் அழாமல் மொத்த மக்களையும் அடித்துக் கொள்ள வைத்துக் கொண்டுருந்தாரோ அந்த ஜின்னா உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தை கடைபிடித்தாரா? அவர் உருவாக்கியது தான் பாகிஸ்தான் என்ற வார்த்தையா என்றால்?

இல்லை என்று தான் பதில்.

அதில் தான் விதியின் விளையாட்டு. உருவாக்கியவர் ஒருவர். உணர்ந்தவர் ஒருவர். உள்வாங்கியதை தொடக்கத்தில் விரும்பாமல் இருந்த ஜின்னா அதை விடாமல் கெட்டியாக பிடித்து இன்று ஜஸ்வந்சிங் கல்லாபெட்டி நிறைந்து வழியும் அளவிற்கு அட்சய பாத்திரமாய் புகழோடு இருப்பதை எதில் சேர்ப்பீர்?

Advertisements

4 responses to “விலகி ஓட வேண்டிய ரகஸ்ய விளையாட்டு

  1. எப்படி வந்ததோ …. அது எப்படி இருக்குன்னு தான் கேள்வி ???!!!!.

    பெரிய ஒரு போராட்டம் / யுத்தம் வந்தா தான் சரியாகும் போல …விஷ செடி மரமாகி , பரவி ..பேயாட்டம் போடுகிறது….எல்லா இயற்கையின் விதியை போல், இதற்கும் ஒரு முடிவு உண்டு ..விலை தான் யார் கொடுக்க போகிறார்களோ

  2. எல்லாமே தெரியாத, தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.. அருமையான நடையில் அட்டகாசமாக எழுதுகிறீர்கள்..

    தொடர்ந்து படிக்கிறேன்.. நன்றி..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s