” பரிசுத்தமானவர்கள் வாழும் பூமி “

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 11

வாசிக்கும் போதே எத்தனை சுத்தமாய் இருக்கிறது. சிலர் ஆமென் என்று கூட அவசரப்பட்டு சொல்லி விடக்கூடிய அர்த்தம் நிறைந்த வார்த்தைகள். ஆனால் இந்த வார்த்தைகள் தான் இன்று நம்மிடம் இருந்து பிரிந்து போய் இந்த நிமிடம் வரையிலும் சுத்தம் இல்லாத அத்தனை நடவடிக்கைகளையும் ஊக்குவித்துக்கொண்டுருக்கும் பாகிஸ்தானின் காரணப் பெயர்.

கர்வப் பெயர் என்று கூட கணக்கில் கொள்ளலாம்.

பாகிஸ்தான் என்ற பக்கத்து சகோதர நாடு, இன்று வரையிலும் பல பிரச்சனைகளுடன் சவலைக்குழந்தையாய் வாழ்ந்து கொண்டுருக்கும் அந்த நாட்டு மக்கள் உண்மையிலேயே முதல் மரியாதை செய்ய வேண்டிய முக்கிய நபர் யார் தெரியுமா?

திரு. ரஹமத் அலி.

ஆமாம். அன்று லண்டனில் மேற்படிப்புக்காக சென்று இருந்த அலி இஸ்லாமியர்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று அவர் எண்ணத்தில் உதித்தவைகளை எழுத்தாக்கி நாலரை பக்கமாக ( ஜனவரி 1 1933) அடித்த பேப்பருடன் ஜின்னாவைப் பார்த்து சொன்னபோது பாதி பேசிக்கொண்டுருக்கும் போதே ” வேண்டாம் பகல் கனவு ” என்று அனுப்பி விட்டார்.

வேறு வேறு சிந்தனைகள், வாழ்க்கை கோட்பாடுகள் எப்படி சேர்ந்தது வாழ முடியும்? முஸ்லீம் மக்கள் பெருவாரியாக வாழ்ந்து கொண்டுருக்கும் பஞ்சாப், காஷ்மீர், சிந்து, வடமேற்கு எல்லைப்புறம், பலுசிஸ்தான் ஆகிய அடங்கிய எல்லைப்பரப்பு தான் அலி உருவாக்கிய பரிசுத்தமானவர்கள் வாழும் பூமி.

உண்மையிலேயே இந்து முஸ்லிம் இரண்டு இனமும் சந்தோஷமாக சேர்ந்து வாழ வேண்டும் என்று தன்னாலான அத்தனை முயற்சிகளையும் தொடக்க பத்து ஆண்டுகளில் தந்த ஜின்னா காங்கிரஸ் தலைவர்களின் புறக்கணிப்பு ஆறாத வடுவாக நாளுக்கு நாள் உறுத்திக்கொண்டே இருந்தது. காலப்போக்கில் அவருடைய கருத்துக்களால் அத்தனை சமூக மக்களும் அச்சமடைய வைக்கும் முக்கிய நபராக மாறிவிட்டார்.

ஜின்னா என்ற பெயர் பிறப்பு மட்டுமே இஸ்லாமியராக காட்டிக் கொண்டுருந்ததே தவிர அவர் வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் இஸ்லாமிய கொள்கைக்கு விரோதமானது. எப்போதும் தன்னை ஆங்கிலேய கணவானாக அலங்கரித்துக் கொள்வதில் இருந்து, விடவே முடியாத புகை பழக்க வழக்கங்கள், விரும்பி குடிக்கும் மது வகைகள், தீண்டக்கூடாது என்று சொன்ன அத்தனை கவுச்சி வகைகளும் என்று திகட்ட திகட்ட அனுபவித்த அவரது வாழ்க்கை முறையே வித்யாசமானது.

பிரிட்டிஷ் கிழட்டுச் சிங்கம் இந்தியா வந்திருந்த போது வேட்டையாடிக்கொண்டுருந்தார். காட்டுக்குள் இருந்து இவரை நோக்கி ஓடி வந்த காட்டுவாசியை (பதான்) நோக்கி பயந்து போய் சுட முதல் குண்டு உள்ளே புக சற்று தடுமாறியபடியே ஓடி வந்தான். அடுத்த குண்டு உள்ளே புக நிலை தடுமாறினாலும் மேலும் முன்னேறி வந்து கொண்டுருந்தான். மூன்றாவது குண்டும் உள்ளே புக மிக அருகில் வந்தவன் அப்படியே அவர் காலின் கீழே விழுந்து இறந்து விழுந்தான்.

வெலவெலத்து விட்டார் வின்ஸ்டன் சர்ச்சில். ” என்ன ஒரு வீரமகன்” என்று ஆச்சரியப்பட்ட அவர் பார்வையில் இங்கு உள்ள அனைவருமே பக்கிரிகள் தான். அதனால் தான் மொத்த கூட்டத்திற்கும் தலைவராய் இருந்த காந்தியை அரை நிர்வாண பக்கிரி என்று அன்போடு அழைத்தார்.

ஆனால் வௌிநாட்டில் படித்த பழக்க தோஷமா அல்லது வௌி ஆட்களுடன் அதிகம் பழக விரும்பாத நபராக தொடக்கம் முதலே வாழ்ந்து வந்த பழக்கவழக்கத்தினால் என்னவோ ஜின்னாவுடன் யாரும் அத்தனை சீக்கிரம் நெருங்கி விட முடியாது. பத்தடி, இல்லை இல்லை இருபதடி தள்ளித்தான் நிற்க வேண்டும். பிடிக்காததை பேசினாலும் முகத்தில் அடித்தாற் போல் பேசி பேசியவரின் முகத்தை வௌிற வைத்து விடுவார்.

குறிப்பாக ஏழைகள், தூசி நிறைந்த சாலைகள், வீடு என்ற பெயரில் வாழந்து கொண்டுருக்கும் பாமர ஜனங்களின் அவல வாழ்க்கைகள் என்றாலே அவருக்கு எப்போதுமே அலர்ஜி தான். வக்கீலாக உள்ளே நுழைந்த சிறிது காலத்திலே உன்னத அடைந்து அந்த புத்திசாலியை வாதாட வைக்க வேண்டுமானால் அவர் கேஸ் கட்டுகளை விட பணக்கட்டு பெரிதாக இருக்க வேண்டும். ஜெயித்துக்கொண்டே இருந்தவர்க்கு வாழ்க்கையில் ஜெயிக்க முடிக்காமல் அவதிப்பட்டுக் கொண்டுருந்தவர்களை கண்டு கொள்ள நேரம் இல்லாமல் இருந்து இருக்கலாம்.

கொள்கைகள் ஏதும் இல்லை. மதம் என்பதெல்லாம் அவர் நினைத்தே பார்த்திராத விஷயங்கள். ஆங்கிலம் தான் மொழி. அவருடைய தாய் மொழி கூட தகறாறு தான்.

யாருடனும் வம்புக்கும் போவதில்லை. வம்பு வரும் பக்கத்திலும் திரும்பிக் கூட பார்ப்பதும் இல்லை. அவரைப் பொறுத்தவரையில் தினந்தோறும் இரவு வருவதே மேல் நாட்டு மக்கள் சென்று வரும் மயக்கும் விடுதிகள் தான்.

இத்தனையிலும் ஒரு சிறப்பு?

பெண் என்ற வாடைகூட அவர் மூச்சுக் காற்றில் கலக்காதது தான். ஆச்சரியமான அதிசயமான மனிதர்.

அதனால் தான் மவுண்ட் பேட்டன் பிரபுக்கு இவரை பார்க்கும் போதெல்லாம் பரலோகத்திற்கு போய்விட்டு வந்த ஆயாசம்.

மகானாக வாழ முயற்சித்துக்கொண்டுருந்தவருக்கும், சராசரி மனிதராக வாழ்ந்து கொண்டுருந்தவருக்கும் முட்டல் மோதல் வந்தால் தானே வாழ்க்கை. அன்று அந்த மோதல் வராமல் இருந்து இருந்தால் இன்று நீங்களும் நானும் பட்டுக்கோட்டைக்கு டிக்கெட் வாங்கி பயணம் செய்வதைப் போல அல்லவா பாகிஸ்தானுக்கும் பயணித்துக்கொண்டு இருப்போம்.

காந்தி செல்வாக்கு மிக்க தலைவராக வர வர ஜின்னாவுக்கு பல விதங்களிலும் அதிருப்தி தோன்ற ஆரம்பித்தது. குறிப்பாக கசங்கிய குல்லாவும் அழுக்கான வேட்டியுடனும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஜெயிலுக்குச் செல்ல விரும்பவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சியில் (1937) கீழ் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வெற்றி அடைந்த மாநிலங்களில் உள்ள முஸ்லீம் லீக் மக்களுடன், தலைவர்களுடன் பெரிய அளவில் பகிர்ந்து கொள்ளாதது ஜின்னாவுக்கு மிகப் பெரிய வருத்தம். தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் இருந்த ஜின்னாவுக்கு, ஏற்கனவே அதிக சுயகௌவரம் கொண்டு வாழ்ந்த அவருக்கு, அன்று முதல் மனதிற்குள் ஏற்றிய தீபம் தான் பாகிஸ்தான்.

அன்று ஆரம்பித்த அவரின் அத்தனை முன்னேற்பாடுகளும் 1947 அன்று விரும்பிய பெயரை, நாட்டைப் பெற்று தனி நபராக விமானத்தில் பயணம் செய்து சென்று பாகிஸ்தானுக்குள் அடைந்த வரையில் தீபத்தை அணைய விடாமல் பாதுகாத்தார்.

வாய்ப்பு என்பதே இல்லை என்று வாதாடிப் பார்த்த மவுண்ட் பேட்டன் பிரபுக்கும், வழங்கிப் பார்த்தால் என்ன தவறு என்று வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு செய்த காந்திக்கும் நடுவில் நின்றவர் ஜின்னா. இவர்கள் இருவருமே ஜின்னாவுக்கு பிடிக்காத நண்பர்கள் தான். காரணம் அவருடைய வித்யாச கொள்கைகள் போல் வாழ்ந்த தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை?

Advertisements

8 responses to “” பரிசுத்தமானவர்கள் வாழும் பூமி “

 1. சரித்திர இடுகைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன..

  நிறைய விசயஙகளை அறிந்து கொள்ள முடிகிறது..

  (முடியுமாயின்)ஆதார நூல்களையும் அந்தந்த இடுகையின் இறுதியில் தெரிவித்தால் மிகவும் உபயோகமாகவும், நம்பகத்தன்மையுடனும் இருக்கும்..

  • நம்ப முடியாமல் கதை போல் இருக்கிறது என்ற அர்த்தமாய் எடுத்துக்கொள்கிறேன். அத்தனையும் பெற்று வாழ்ந்த கூட்டத்தை இப்போது எல்லா வசதிகளுடன் வாழும் நீங்கள் கற்பனையில் கொண்டு வாருங்கள்.

   உயர்வாக என்னைப் பற்றி எண்ணி விடாதீர்கள். ஓராயிரம் செய்திகளுடன் ஓரே ஒரு புத்தகம். சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இல்லத்தரசி. இது மட்டும் தான்?

   தொடக்க பதிவுகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள். நன்றி நண்பரே.

 2. பிரிவினைக்கு பின் – அமெரிக்காவின் நிபந்தனை அற்ற உறவை – உதவியை பார்க்க வேண்டும்…. என்ன செய்தாலும் / என்ன தவறுகள் செய்தாலும் அமேரிக்கா இருக்கிறது என்ற தைரியம் , திமிர் ……

 3. அருமை. மிக சிரமப்பட்டு இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது..

  ஜஸ்வந்த் எழுதிய புத்தகத்தில் ரஹ்மத்தை பற்றி குறிப்பிட்டு இருக்கிறாரா..

  நல்ல தொடர்… படிக்கும் ஆர்வம் கூடிக்கொண்டே இருக்கிறது.. தொடருங்கள்..

 4. DEAR JOTHIJI
  PUNJAB, KASHMIR-M EMAANTHU IRUNTHAAL NAMMAI VITTUPOYIRUKKUMO .

  அன்று அந்த மோதல் வராமல் இருந்து இருந்தால் இன்று நீங்களும் நானும் பட்டுக்கோட்டைக்கு டிக்கெட் வாங்கி பயணம் செய்வதைப் போல அல்லவா பாகிஸ்தானுக்கும் பயணித்துக்கொண்டு இருப்போம். NINAITHU PAARKAVE EVVALAVU AASAIYAAKA IRUKKIRATHUONKO ARUMAI JOTHIJI THODARNTHU ELUTHUNKO

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s