கதாநாயகனின் ஆளுமை ரகஸ்யங்கள்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 10

ஆமாம்.

வந்து விட்டார். உண்மையான கதாநாயகன் லார்ட் மவுண்ட் பேட்டன் பிரபு.

உடல் மொத்தமும் ஆரோக்கியமான பெண். ஆனால் தலை முதல் கால் வரை சொறி சிரங்கும், படை பத்தும், குமட்டக்குடிய கொடிய வியாதிகளும்.

உண்மை. அன்றைய இந்திய நிலைமை இது. பாமரக்கூட்டம் அதிகம். படித்தவர்கள் மிகக்குறைவு. படித்தவர்களில் பாதி பேர் ஆங்கியேர்களின் விசுவாசி. ஒரே காரணம் அவர்களின் சமூக பாதுகாப்பு.

மிதவாத திவிரவாத தலைவர்கள் ஒரு பக்கம். எந்தக்கூட்டத்தின் கீழ் இருந்தாலும் கிடைத்தவரை லாபம் என்று புடுங்கிக்கொண்டு வாழ்ந்த புண்ணாக்கு கூட்டம் ஒரு பக்கம்.

அவர்கள் எந்த புண்ணாக்கு என்று கேட்டு விடாதீர்கள். அவர்களின் வேலையே தினமும் நாட்டுக்கு அவர்களால் முடிந்தவரைக்கும் ஒரு கலவரத்தை உருவாக்கிக்கொண்டுருக்க வேண்டும். அதுவும் மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாத வலி நிறைந்த?. இந்த மக்களுக்கு வஞ்சகம் இல்லாமல் வாரி வழங்கிக்கொண்டே இருந்தார்கள்.

கலவரம் மூலம் பெற்ற வசதிகளை வைத்துக்கொண்டு வாழும் வரையிலும் அவர்கள் அந்த புனிதர்கள் ஆத்ம சுத்தியோடு செய்து கொண்டுருந்தார்கள்.

இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கென்று மொத்த போராட்டத்திலும் ஒரு உத்தேச கணக்காக பத்து லட்சம் பேர்கள் இறந்து இருப்பார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் சுதந்திரம் வழங்கப்படக் கூடிய காலம் கனிந்து விட்டது. நாள் கணக்கில் மாதக் கணக்கில், வருடக்கணக்கில் தான் இருக்கிறது என்று என்றைக்கு இங்குள்ளவர்களுக்கு தெரிய ஆரம்பித்ததோ அன்று தொடங்கி, அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கலவரத்தின் போது என்று மொத்தமாக கூட்டிக் கழித்துப் பார்த்தால் பத்து மடங்கு அல்ல பத்து நூறு மடங்குகள் பகுதி பகுதியாக குருதியாய் குற்றுயிராய் குத்திக் கொல்லப்பட்டு இறந்தார்கள்.

பெண்கள் மார்பு அறுக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு, ஓட விட்டு, ஓளிந்து இருந்தவளை அத்தனை பேர்கள் மத்தியிலும் அலற வைத்து செய்த கொடுமைகள் ஒன்றா இரண்டா?

ஜின்னா ஒரு பக்கம் “நேரிடை நடவடிக்கை” என்று பட்டவர்த்தனமாக பல பேர்கள் கூட்டம் போல் ஆத்ம சுத்தியோடு அட்டவணை போட்டுக்கொடுத்து அலற வைத்துக்கொண்டுருந்தார்.

மதவாத இந்துக்கூட்டம் அவர்கள் ஒரு பக்கம் பதற வைத்துக்கொண்டுருந்தார்கள். ஆனால் இழப்பு மொத்தமும் அப்பாவிகளுக்கு மட்டும் தான். ஏன் சாகிறோம் என்று தெரியாமலே கண் இமைக்கும் நேரத்தில் கழுத்து அறுக்கப்பட்டது. கொடியவர்களின் பார்வையில் குழந்தைகள் பெரியவர்கள் என்ற பாகுபாடே இல்லை.

சீக்கியர்களின் வாழ்க்கை மொத்தத்திலும் சிறப்பானது. மொத்த குடும்பமும் சேர்ந்து உறவு மறந்து குதுகலமாய் வாழ்க்கை அனுபவிக்கும் அழகு நிறைந்தது. அத்தனையும் மொத்தத்திலும் வீரமானது. இரவு நேரத்தில் வௌியே காத்து வாங்கிக் கொண்டு கதைகளை பேசிக்கொண்டு கவிதையாய் வாழ்ந்த அவர்களின் மொத்த வாழ்க்கையும் கனவு வாழ்க்கை போல் ஆகிப் போனது. மாலை ஆறு மணி என்றாலே உள்ளே அடங்கிக்கொள்ள வேண்டும். வீரமான, இன ஈடுபாடு உள்ள அவர்களின் வாழ்க்கையே இத்தனை அவலம் என்றால் மற்ற பகுதியில் உள்ள இந்தியாவை நினைத்துப்பாருங்கள்.

எத்தனை தான் முன்னேற்பாடு என்றாலும் பக்கத்தில் இருந்த வீட்டுக்காரன் கூட வேற மதம் வேற ஜாதி வேற இனம் என்று ஏதோதோ காரணத்தை உள்ளே வைத்துக்கொண்டு முடிந்த வரையில் வதம் செய்து கொண்டுருந்தான். எவரையும் நம்ப முடியாமல் எவரிடமும் பேசக்கூட பயந்து எத்தனை நாள் தான் நரகத்தில் தவிப்பது.

குண்டு வீச்சு, கலவரம், கண்ணீர் புகைக்குண்டு, கதறல் சத்தங்கள், இடிபாடுகள், இனிமையாய் வாழ்ந்த அத்தனை மக்களின் வாழ்க்கையும் இலக்கணம் இல்லாத கவிதையைப்போல் சகிக்கவில்லை.

ஆனால் காந்தியோ சபர்மதி ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டு சகிப்புத்தன்மையை போதித்துக்கொண்டுருந்தார்?

” இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப் போகிறோம் நீ போய் எல்லா ஏற்பாடுகளையும் முன்னால் போய் செய்து வை ”

என்று பிரிட்டன் அதிகார வர்க்கத்தால் இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மவுண்ட் ரோடு பகவான். ஆமாம் உண்மையிலே அண்ணா சாலையைப் போல் அகன்ற அருமையான தங்க மனது படைத்த கதாநாயகன் தான்.

எந்த சந்தேகமும் வேண்டாம்.

லார்ட் மவுண்ட் பேட்டன் பிரபு பிறப்பால் தான் ஆங்கிலேயர். ஆனால் கொள்கையால் குணத்தால் லட்சியத்தால் ஒரு நல்ல ஆத்மா. சுருக்கமாகச் சொன்னால் குனக்குன்று இந்தியன்.

ஆனால் அவருக்கு இந்த பொறுப்பு கிட்டத்தட்ட மிரட்டி பணிய வைத்து தான் வழங்கப்பட்டது. இனி மறுக்கவே முடியாது என்ற போது தான் ஏற்றுக்கொண்டார். ஒரே காரணம் சிங்கப்பூர், வியட்நாம், இந்தியா போன்ற அத்தனை நாடுகளிலும் இருந்த தலைவர்களை விடுதலைக்காக போராடிக்கொண்டுருந்த அந்தந்த நாட்டு தலைவர்களை தனிப்பட்ட முறையில் பரிச்சயம் மிக்கவர் தான்.

அப்புறம் ஏன் தயக்கம்?

” இந்தியாவிற்கு விரைந்து சுதந்திரம் கொடுக்கப்பட்டு விட வேண்டும். அதுவும் தாமதம் இல்லாமல் விரைந்து செயல்படவேண்டும் ” என்று வௌிப்படையாக பேசிக்கொண்டுருந்த வௌ்ளையர்களில் அவரும் ஒருவர்.

பதவி திணிக்கப்பட்ட பிறகு அவருக்கு சொல்லப்பட்ட இந்தியாவைப்பற்றி விசயத்தை நீங்கள் படித்தால் உங்களுக்கே புரிந்து விடும் அன்றைய இந்திய நிலைமை.

“அடிப்பகுதியில் வெடி மருந்துகள் ஏற்றப்பட்டுள்ள கப்பலில் மேல் பகுதியில் தீப்பிடித்து இருக்கிறது. அது பரவி வெடி மருந்து ஏற்றப்பட்டுள்ள பகுதிக்கு வருமானால் கப்பலே வெடித்து சிதறுண்டு போகும்”.

ஆனால் இயக்குநர் விக்ரமன் படங்களில் வரும் மென்மையான கதாநாயகன் போல் உள்ளே வந்த பிரபு, பிஞ்சு போன செருப்பை போட்டுக்கொண்டு நடக்கும் அவஸ்த்தைகளுடன், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்ட கொடுமை?

Advertisements

4 responses to “கதாநாயகனின் ஆளுமை ரகஸ்யங்கள்

  1. நிறைய தகவல்களை அறிந்துகொண்டேன்.
    தங்களது வேகம்தான் வியக்க வைக்கிறது. ஒரு வாரம் வலைத்தளங்கள் பக்கம் வரவில்லை, வந்து பார்த்தால் 20க்கும் மேல் இருக்கிறது. இப்போதுதான் 10 வரை வந்திருக்கிறேன். மற்றவைகளை பின்புதான் படிக்கனும்.

    தங்களுக்கு எப்படிக் கிடைக்கிறது இவ்வளவு நேரம்?

  2. ரொம்ப வேகமா எழுதீறீங்க …. தொடருகிறேன் ….

    பழம் கஞ்சி இவ்வளவு சுவை என்று இப்ப தான் தெரிகிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s