பாரதிராஜாவின் கனவுக்காட்சியும் ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கையும்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 9

வாலிபத்தை தாண்டி வந்தவர்களும், வயோதிகத்திற்கு அருகில் சென்று கொண்டுருப்பவர்களும் இன்று வரையில் மிகவும் சிலாகித்துச் சொல்வது பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை. படத்தைப்பற்றிய என்னுடைய விமர்சனம் வேறு. ஆனால் அத்தனை கிளுகிளுப்பாய் உணர்ச்சிக் குவியலை மனம் உள்வாங்கியது இன்று வரையில் வெகு சொற்பம். தொடக்கம் என்பதால் அதை குறியீடாய் எடுத்துக்கொள்கிறேன். அத்தனை கதகதப்பாய் இங்கு வாழ்ந்த அத்தனை ஆங்கிலேயர்களும் வாழ்ந்த ராஜ வாழ்க்கை, ரகசிய வாழ்க்கை. திகட்டி திகட்டி வாந்தி வந்தாலும் வாலிபம் விரும்பி அனுபவித்த வாழ்க்கை அது.

ஏறக்குறைய எழுபது நாட்கள் அன்றைய நாட்களில் இங்கிலாந்தில் இருந்து பயணித்து வந்து பம்பாய் துறைமுகத்தில் உள்ளே வரும் ஒரு ஆங்கிலேய அரசாங்க ஊழியனோ, அதிகாரியோ, தலைமைப் பொறுப்புக்கு வரும் பருப்போ வாழ்ந்த வாழ்க்கை அவர்களும் சாவுக்கு அருகில் நிற்கும் போது கூட கடவாய் எச்சில் வடிய வைத்த ஏற்றமான வாழ்க்கை.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வௌிநாட்டில். பாடியவரும் எழுதியவரும் பல காலம் கழித்து தான் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அன்றே உணர்ந்தது ஆச்சரியம் என்றால் அத்தனையும் அனுபவித்தும் காட்டிய மகா பாக்கியவான்கள்.

ஆனால் இந்தியாவில் ஓரே பிரச்சனை மிஸ்டர் வெயில்.

ஆகஸ்ட் 24 1600 அன்று உள்ளே வந்த கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய மொத்த ஆளுமையையும் மாட்சிமை தாங்கி மகாராணியிடம் ஒப்படைத்த தினம் 1857. சிப்பாய்க்கழகம் தந்த பரிசு. சரியாக மூன்று தலைமுறைகள் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் ஆண்ட ராஜ வாழ்க்கை. ஒரே மூச்சாக மூச்சை பிடித்துக்கொண்டு ஓடி வாருங்கள் 1947. உத்தேசமாக இரண்டு தலைமுறைகள்.

ஆனால் உள்ளே வந்து இறங்கிய பெரும்பாலான ஆங்கிலேயர்கள் இருபது வருடங்கள் தாக்குப்பிடித்து உள்ளே இருந்தால் மிகுந்த ஆச்சரியம். விருதுநகர் வெயில் கொடைக்கானலில் தெரியாது. குமுளி குளிர்ச்சி திருவண்ணாமலைக்கு புரியாது.

ஒரு மாநிலத்திற்குள்ளே இத்தனை வேறுபாடுகள் என்றால் அன்று இருந்த அகன்ற இந்தியாவை நினைத்துப் பாருங்கள். பாகிஸ்தான், பங்களாதேஷ, இந்தியா. அடேங்கப்பாபாபாபா….. மிச்ச சொச்சமெல்லாம் நமக்கு இப்போது தேவையில்லை.

வௌ்ளைத்தோலை அணைத்துக்கொண்டு டார்ஜிலிங் போகலாம். வேலைக்கு இருந்த கருப்பு தோலை இழுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம். கடமையிலும் கண். காரியத்தில் அதைவிட கச்சிதம்.

எழுத்தும் இயக்கமும் என்று பொறுப்பில் இருந்த வைஸ்ராய் கீழ் 565 முடி மன்னர்கள் காத்து இருந்தார்கள். அவர்கள் தலைமுடி இருந்த மன்னர்கள் தான். ஆனால் இன்று வடிவேல் கால்ஷுட் கிடைப்பது கூட சுலபம். ஆனால் அத்தனை சீக்கிரம் வைஸ்ராய் அவர்களை தரிசனம் தந்து விட மாட்டார். வரிசைப்படி தான். விரும்பினால் பார்ப்பார். விரும்பாவிட்டால் கொண்டு வந்த கிஸ்திகளை வாங்கிக் கொண்டு வேறு ஒரு நாள் வரச்சொல்வார். சும்மாவா நம்மவர்களின் ராஜவிசுவாசம் அத்தனை பொக்கிஷமானது.

விரட்டி விரட்டி துரத்தினாலும் அழுகாச்சியுடன் இருக்கும் அத்தனை புலிகேசி மன்னர்களையும் ஒரே நாளில் பார்த்து விட்டால் வைஸ்ராயின் அந்தப்புரத்தை யார் கவனிப்பது. புரிந்த மன்னர்கள் அவரவர் அந்தப்புரத்திற்குச் சென்று விட்டார்கள்.

அந்த வைஸ்ராய் ஆட்சி புரிய அல்லது வைத்து இருந்த அழகியை புரிந்து கொள்ள கட்டிய கண்கொள்ளா கட்டிடம் தான் இன்றைய ஜனாதிபதி மாளிகை. சும்மா இல்லை. ஐரோப்பிய இந்திய கட்டிட கலை (விஞ்ஞானம் ப்ளஸ் மெய்ஞானம் என்று நினைக்கின்றேன்) வல்லுனர்களால் 17 ஆண்டுகள் உழைத்து இழைத்து கட்டப்பட்டது.

அன்றைய பவுண்டு மதிப்பு 115300.

அன்று கட்டிய வல்லுனர் (தோட்டா தரணியின் பாட்டனார்(?) ) பெயர் எட்வின் லட்யென்ஸ்.

மனுசன் பின்னிய பின்னலில் கட்டிடத்தின் உள்ளே ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் சைக்கிள் மூலமாக பயணித்தார்கள் பணிபுரிந்தவர்கள். கற்பனையில் கொண்டு வாருங்கள் விஸ்தாரத்தை.

யாருடைய பணமாக இருக்கும்?

முடிமன்னர்களால் தரிசிக்க முடியாத கோட்டையை நம்முடைய அப்துல் கலாம் ஐயா எல்லா மாணவர்களுக்கும் பார்க்கக்கூடிய அருங்காட்சியமாக மாற்றிய பெருந்தன்மையை நினைக்கும் பார்க்கும்

எதைக்கொண்டு வந்தாய் அழுவதற்கு

நேற்று உன்னுடையது. இன்று வேறு ஒருவருடையது.

ஆச்சரியமாக உள்ளது.

சூரியன் உதிக்கும் திசையெல்லாம் அவர்கள் செல்வாக்கு, சொல்வாக்கு. வைஸ்ராய் கோல்ப் விளையாடப் போகிறார் என்றால் செல்லும் பாதை எத்தனை கிலோ மீட்டர் என்றாலும் அணிவகுத்து நிற்பார்கள் படை வீரர்கள். தாங்க ஒரு ஆள். தூங்க ஒரு பெண். துடைக்க ஒரு ஆள். கழுவ ஒரு ஆள். துப்புவதை பிடிக்க ஒரு நாள். துடைத்து விட ஒரு ஆள். ஆள்பவர்களின் அத்தனை சேகவத்திற்கும் ஆட்களுக்காக இங்கு பஞ்சம்.

“கால் காசு என்றாலும் கவர்மெண்டு வேலை ” இன்றைய பழமொழி

” வெட்டி வேலை என்றாலும் வௌ்ளைத்துரையிடம் ” இது அன்றைய பழமொழியாக இருந்து இருக்கலாம்.

நாம் தான் இன்று வரையில் கரைச்சல் பண்ணிக்கொண்டே தானே இருக்கிறோம். பேசாம வௌ்ளைக்காரனிடமே எங்க அப்பா அம்மா வேலை பார்த்துக்கொண்டுருக்கலாம் என்று விரும்புவர்கள் இருக்கும் வரைக்கும் விரும்பித்தான் ஆண்டு அனுபவித்துக்கொண்டுருந்தார்கள்.

வைஸ்ராய் பயணிக்கும் ரயில் வண்டி கூட தங்கமும் வெண்ணிறமும் பூசி மினுமினுப்பாய் இருக்கும். அப்ப உள்ளே உள்ள இருக்கைகள்? அடப் போங்கப்பா? புரியாத ஆளா இருப்பீங்க போலிருக்கு. பயணம் தொடங்கி விட்டால் வரிசையில் மொத்தமாய் நின்று கொண்டுருப்பவர்கள் மழை வெயில் புயல் எத்தனை சீற்றங்கள் வந்தாலும் சிங்கமாய் நிற்க வேண்டும்.

பேச்சு. மூச்.

வைஸ்ராய் மாளிகை தோட்டத்தை பராமரிக்க 350 பேர்கள். அங்கு வரும் பறவைகளை விரட்ட மட்டும் 50 சிறுவர்கள் தனியாக. ஆனால் அவர்களின் இன்றைய கொள்கை திருப்பூரில் குழந்தை தொழிலாளர் கூடாது?

வௌ்ளைக்காரர்கள் அனுபவிக்க என்பதற்காகவே இந்தியாவின் அத்தனை இடங்களில் நடன அரங்குகள். கேளிக்கை மண்டபங்கள். கேள்வி ஏதும் கேட்காத பெண்கள் கூட்டம். பொங்கி நுரைக்கும் நுரையில் அத்தனை சந்தோஷங்களை அவனுடைய நுரையீரல் உள் வாங்கி அத்தனை சந்தோஷமாய் அனுபவித்தது.

இதைவிடக் கொடுமை வைஸ்ராஸ் மாளிகையில் விருந்து விசேஷம் என்றால் சிறப்பு அழைப்பாளர்கள் என்று எச்சமும் சொச்சமும் உள்ளவர்களை அழைக்கப்படுவார்கள். அதற்கு ரஜினி பட கள்ள டிக்கட் போல. ஒரே தள்ளு முள்ளு. வெட்கமாவது. ஒன்னாவது.

ஒரே ஒரு தடவை வைஸ்ராயை பார்த்து விட்டால் சொர்க்க லோகம் போன திருப்தி அத்தனை முடி இல்லாத மன்னர்களுக்கும்.

அதிகபட்சம் முப்பது நாற்பது வருடங்கள் ஒரு ஆங்கிலேயன் பணிபுரிந்து ஊருக்கு திரும்பும் யோகம் (காலரா,ப்ளேக்,மலேரியா,தெரியாத பலவிதமான காய்ச்சல்) இருக்குமேயானால் மீதி கழிக்கும் அத்தனை ஓய்வுக்கும் அவனுடைய உடம்பு அதற்கு மேல் இடம் கொடுக்காது.

ஓவர் டைம் போட்டு உழைத்த உழைப்பு அப்படி. சுகமாக பாராதிராஜா கதாநாயகி போல் காற்றுக்கிடையே வானக்கூட்டத்தை ரசித்துக்கொண்டு பறவைகளை துரத்திக்கொண்டு பச்சை வயலில் புகுந்த சிந்தனைகளை அசை போட்டுக்கொண்டு அசையாக உறுப்புகளை வைத்துக்கொண்டு கர்த்தரிடம் போய் சேர்ந்து விடமுடியும்.

ஆனாலும் இத்தனையும் மீறி, அவர்கள் செய்த பணிகள் அவர்களுக்கான தொழில் வசதிகள் என்ற போதிலும் போடப்பட்ட ரயில் பாதைகள், குடைந்த மலைகள், கொஞ்சமாவது அடைந்த நாகரீகம், தெரிந்து கொண்ட ஆங்கிலம், குறை அறிவை அணையா விளக்காக மாற்றிய அற்புதம், மின்சார வசதிகள், நிர்வாகத்தில் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் இவை அத்தனையும் நாம் பெற்று இருக்காவிட்டால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு பின்னால் நாம் வாழ்ந்து கொண்டுருப்போம்.

என்ன ஒன்று?

அவர்களுடைய கைகள் மேலே இருந்தது. நம்முடைய கைகள் கீழே இருந்தது. பொத்திக்கொண்டு இரு என்றார்கள். கத்திக்கொண்டு வந்த ரயிலில் பயணம் செய்ய முடிந்தது. அச்சத்தை தந்த இருட்டு தொலைந்து விளக்கொளியும் வந்தது. அன்று?

நம்மை சுரண்டுபவர்களின் கைகள் மேலே இருக்கிறது. ஆட்சி அதிகாரம் என்ற பெயரில். நம்முடைய கைகள் இன்னமும் கீழே தான் இருக்கிறது. எல்லா வசதிகளும் வந்து விட்டது. ஏராளமான மாற்றங்களும் வந்து விட்டது. ஆனால் ஸ்விஸ் வங்கி கணக்கு வழக்கு மட்டும் தெரிய மாட்டேன் என்கிறது. இன்று?

Advertisements

4 responses to “பாரதிராஜாவின் கனவுக்காட்சியும் ஆங்கிலேயர்களின் இந்திய வாழ்க்கையும்

  1. எனக்கு …மறுபடியும், எனக்கு … Harry Potter Half Blood Prince ஐ விட, அருந்ததீ ரொம்ப சூப்பரா இருந்தது …பார்த்து கொண்டே இருங்கள், நம் சாப்பாடு, உடை, பாட்டு, நடனம், காலாச்சாரம்… கடல் கடந்து, எல்லாரையும் இன்னும் கவரும், அவர்கள் இது வரை பார்த்தது பாலிவுட்டும் , அமிதாபச்ச்சனும் , ஷாருக்கானும் தான் …. அவர்கள் அந்த பழைய எச்சில் விட்டு நினைவுகளை நினைக்கும் காலம் கண்டிப்பாக வரும் … இந்த war on terror சற்று குறைந்து …. வழி தவறிய சகோதரர்கள் திரும்பவும் சாதரண இறை வழி பாட்டுக்கு திரும்பும் பொழுது …. நல்லதே நடக்கும்

  2. Hi

    எங்களுடைய இணையத்தில் தாங்கள் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. மேலும் தங்களுடைய பிளோக்கினை எங்களுடைய தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் ஆதரவுக்கு நன்றி.

    இப்படிக்கு
    செய்திவலையம் குழுவினர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s