கிரேட் பிரிட்டன் அல்ல உடைந்த பிரிட்டானியா பிஸ்கெட்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 8

இந்தியாவின் இரும்பு மனிதர் படேல் என்றால் அன்றைய பிரிட்டனின் இரும்பு மனிதர் வின்ஸ்டன் சர்ச்சில். அவர் பேசுவதை மட்டும் தான் கேட்க வேண்டும். கூட பேசினாலோ, திருப்பி பதில் அளித்தாலோ உங்கள் கன்னத்தில் அவரின் கரம் பதிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பேசுவது அத்தனையும் உண்மை. உண்மையைத்தவிர வேறு ஓன்று இல்லை. ஆனால் எல்லா சமயத்திலும் ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஐயா சாமிகளா, இந்தியாவில் நடக்கின்ற கலவரத்தை வச்சுக்கிட்டு அவசரப்பட்டு முடிவு ஏதும் செஞ்சுடாதீங்க. இந்தியாவில் உள்ள அத்தனை பேருமே நாடக பாணி அரசியல் வாதிகள். அவர்களுக்கெல்லாம் ஒரு மண்ணும் தெரியாது. குறிப்பா அந்த மண்ணை அவர்கள் ஆள்வதா? நெனச்சு பாத்தாலே நெஞ்சாங்குலை நடுங்குது. அவர்களை நம்மை விட்டால் வேறு யாரால் ஆள முடியும்?

சீக்கு பிடித்தவனும், சிரங்கு வந்தவனும், சொறிந்து கொள்வதையே சுகமாக பார்த்துக்கொண்டு எல்லாவற்றையும் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்ற அறியாமை நிறைந்த மக்களை விட்டு விட்டு நாம் வௌியே வந்தால் கண் இமைக்கும் நேரத்தில் அடித்துக்கொண்டே செத்து விடுவார்கள்.

அறிவு என்பதே என்னவென்று தெரியாதவர்கள் ஆளப் போகிறார்களா? என்னடா கொடுமை? அந்த கிழட்டுச்சிங்கம் புலம்பியது. கர்ஜித்தது. கதறியது. ஆனால் கேட்பவர் தான் அந்த சபையில் யாருமே இல்லை.

அன்றைய தினத்தில் அவர்கள் காந்தியை பார்த்துக் கூட பயப்படவில்லை. கணப்பொழுதும் என்ன பிரச்சனையை எந்த ரூபத்தில் உருவாக்கலாம் என்று யோசித்து யோசித்து செயலில் காட்டிக்கொண்டுருந்த ஜின்னாவைக்கூட சமாளித்து விடலாம்.

ஆனால் பத்து காசு கூட சட்டைபையில் இல்லாமல் இருக்கும் போது இந்தியாவில் போய் எப்படி நிமிர்ந்து நிற்க முடியும்?

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினார் இலங்கை வேந்தன்?

அவர்கள் படித்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் நிலைமை அப்படித்தான் இருந்தது. கடன் வாங்கித்தான் பிரிட்டன் பவுண்டுக்கு அன்றைய தினத்தில் குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டுருந்தார்கள்.

இரண்டாம் உலகப் போருக்கு பின் பக்கத்து வீட்டு பங்காளிங்க வந்து பந்திச் சாப்பாடு போட்டுக்கொண்டுருந்தார்கள். கனடாவும், அமெரிக்காவும் வழங்கிய கடனை வைத்து தான் காலம் தள்ள வேண்டிய நிலைமை. அன்று அவர்கள் உலகில் மூன்றில் ஒரு பங்கை ஆண்டு கொண்டுருந்தாலும் கூட.

கொடுமை கொடுமையின்னு கோயிலுக்கு போனால் அங்கிருந்த கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுன்னா எப்படி இருக்கும். இந்தியாவில் வந்து கொண்டுருந்த செய்திகள் அத்தனையும் சுவாரசியமானதாக இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்று ராஜேஷகுமார் கதை போல் அத்தனையும் திடுக்கிடக்கூடிய கதையாய் இந்தியாவில் திகில் போராட்டங்கள் பல பக்கங்களிலும்.

ஆண்டு கொண்டுருந்த இந்தியா இப்படி என்றால் உள் நாட்டு குழப்பம் ஒன்றா இரண்டா? ஜெர்மன் போட்ட குண்டுகளால் குண்டான மனிதர்களெல்லாம் சீக்கிரமே உடற்பயிற்சி இல்லாமலே சிம்ரன் ஆகி விட்டார்கள். வேலை வாய்ப்பை வழங்கிக் கொண்டுருந்த அத்தனை சுரங்கங்களுமே காற்று வாங்கிக்கொண்டுருந்தது.

காரணம் குண்டுகளால் சிதிலம் அடைந்து கிடந்த அத்தனை சுரங்கங்களையும் சீர் படுத்தி பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கு அத்தனை சிரமப்பட்டார்கள்.

நண்பர் சொன்ன படுப்பதில் முன்னே பின்னே என்ற சமாச்சாரமே இல்லை. காரணம் படுக்கும் அறையில் உள்ள எந்த சாதன வசதிகளும் இயங்கக்கூடிய நிலமையில் இல்லை. வேப்பமரம் வீட்டுக்கு முன்னால் வளர்த்து இருந்தால் கூட கயிற்று கட்டில் சுகம் கிடைத்து இருக்கும். இந்தியாவிற்கு வந்தவர்கள் இதையெல்லாம் காணாமல் போனதை அன்று நினைத்து இருக்கக்கூடும்.

இருபது லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. எல்லா கடைகளில் தொங்கிய போர்டு ஒன்றே ஒன்று தான். ஆமாம் “இல்லை” என்று போர்டு. உள்ளே ஒன்று, உரச ஒன்று, உட்கார்ந்து பேச ஒன்று என்று செய்த உடை அலங்காரங்கள் எல்லாமே போயே போச். கான். ? மூச்சே விட முடியுமா என்று யோசித்து வாழ வேண்டிய சூழ்நிலையில் மூச்சா கூட முக்கி முக்கி தான் போயிருப்பார்கள் போல.

நம்முடைய தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான் எல்லாம் தோற்று விடுவார்கள். வின்ஸ்டன் சர்ச்சில் மேடையேறி முழங்க ஆரம்பித்தால் வாயில் இருந்து கொட்டுவது திராவகம் மட்டும் அல்ல தீராத நம்முடைய தாகம் கூட அடங்கி விடும். அத்தனை கூட்டமும் அம்சமாய் கேட்கும் நா வன்மை படைத்த சர்ச்சில் ஐயா கூட அப்போது நடந்த தேர்தலில் தோற்றுப்போனார்.

அத்தனை வெறுப்பில் மக்கள் வாழ்ந்தார்கள். அல்ல சாகத் தெரியாமல் தவித்துக்கொண்டுருந்தார்கள்.

பிரிட்டன் மக்களின் ராஜ விசுவாசம் என்பது அத்தனை ஆச்சரியமானது. அன்று மேடையில் மன்னரை விமர்சித்து பேசிக்கொண்டுருந்தார் ஒருவர். பேசிக்கொண்டுருந்தவர் நிறுத்தவதாய் தெரியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்தார். பார்த்த பார்வையாளர் ஒருவர் பேசாமல் மேடையில் ஏறினார். விட்டாரே ஒரு அறை பேசியவருக்கு.

இத்தோட நிப்பாட்டிக்க. இதுக்கும் மேலே பேசினால் பேத்துடுவேன். எத்தனை துன்பங்கள் என்றாலும் நம்முடைய ராஜவிசுவாசம் என்பது கேள்விக்கு கேலிக்கு அப்பாற்பட்டது.

பேசியவர் என்ன செய்துருப்பார். பொத்திக்கொண்டு அடுத்த சந்துக்கு பேச போயிருப்பார் என்று நினைக்கின்றேன்.

என்னப்பா பெரிசா கதை விடுற. இத்தனை வருஷங்கள் ஆண்டாங்க. சொகமா இருந்தாங்க. அப்புறம் எப்படி இத்தனை சோமாலியா பிரச்சனை?

அதெல்லாம் ஜெர்மன் குண்டுகள் செய்த வேலைகள்.

இந்தியாவில் எத்தனை துன்பங்கள் எந்த காலத்திலும் வந்தாலும் சோறு என்பது கூழாக மாறுமே தவிர யாருமே அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவது இல்லை. பால் கிடைக்க வில்லை. இருக்கவே இருக்கு வரக்காபி. பஸ் இல்லையா. காசு மிச்சம். வாங்கப்பா பொடி நடையா ஆறு கிலோ மிட்டரும் சினிமா கதையை பேசிக்கொண்டே போயிடுவோம். எளிமையான எதார்த்தமான வாழ்க்கை. இழப்புகள் அதிகம் என்பது தெரியும். ஆனால் அத்தனையும் ஆழமாய் பாதிக்காது.

எப்போது பாதிக்கும். ?

குடிக்கும் கூழ் கூட கேள்விக்குறியாய் மாறும் போது தான் அடிக்கும் ஆப்பை ஆழமாய் இறங்கும் அளவிற்கு ஆட்சியாளருக்கு அடிப்பார்கள்.

ஆனால் மேலை நாடுகளில் பொருளாதார ஏற்ற இறக்கம் என்பது மிகக் கொடுமையானது.

போட ஒரு ஜட்டி, ஆட ஒரு ஜட்டி , அவுத்துப் போட ஒரு ஜட்டின்னு ஒரு நாளைக்கு ஜட்டியிலே இத்தனை கெட்டியா இருக்குறவங்க மத்த உடை அலங்காரங்களைப்பற்றி நான் சொல்லவும் வேண்டுமா?

பெருமைக்குன்னு ஒரு வாழ்க்கை. பேசுவதற்கு என்று ஒரு வாழ்க்கை. பழகுவதற்கு என்று ஒரு கண்ணிய வாழ்க்கை. காண்பதற்கு என்று ஒரு இருட்டு வாழ்க்கை. இன்னமும் மீதியுள்ள வாழ்க்கை என்ன தெரியுமா?

ஐயோ நீ இந்தியாவா? குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காதாமே? என்று கேட்கும் அலட்டல் வாழ்க்கை.

வாழ்ந்து கெட்டவர்களின் வாழ்க்கை எப்போதுமே சிரிப்பாய் சிரிக்க வைத்து விடும். ஆட்சியாளர்களை சிந்திக்க வைத்து “இந்த பயலுகளை விட்டு விட்டு வந்துடலாமா? இல்லை இவனுக வெட்டுற வரைக்கும் வெரலை விட்டு ஆட்டுவோமா? என்று யோசிக்க வைத்தது. அதனால் தான் இறப்பு ஊர்வலகத்திற்கு முன்னால் வாசிக்கப்படும் இரங்கல் பா போல் மசோதா தாக்கல் செய்தார் (1947 பிப்ரவரி 18) அந்நாளைய பிரதமர் கிளமென்ட் ஆட்லி.

இந்தியாவை அவர்களிடமே ஒப்படைத்து விடுவோம்.

ஆனால் சிங்கிளாய் இருந்த சிங்கம் வின்ஸ்ன்டன் சர்ச்சில் கத்திய கத்தலை யாருமே கேட்பதாய் இல்லை. மொத்த இந்தியாவும் அவரைப் பொறுத்தவரையில் “அறியாமையில் வாழ்ந்தவர்களை ஆள்வதற்காகவே ஆங்கிலேயர்களை இறைவன் படைத்து இருக்கின்றான் ” என்பதை கடைசி வரையிலும் உறுதியாக நம்பிக் கொண்டுருந்தார்.

ஒரு இந்தியரைக் கூட மதிக்க தயாராய் இல்லை. எட்டி நின்று பார்க்கும் குஷடரோகி போலத்தான் அனைவருமே தெரிந்தார்கள். அதிலும் காந்தியைப்பற்றி சொல்லி விட்டால் அவருடைய காது மடல் எல்லாம் ஜிவ்வென்று ஆகிவிடும். அதனால் தான் அவரை அன்புடன் அழைத்த வார்த்தைகள் “அரை நிர்வாண பக்கிரி”.

பாருங்கள் அன்றைய பிரிட்டனுக்கு பிரிட்டானியா பிஸ்கெட் கூட மக்களுக்கு வாங்க வக்கில்லை. வக்கணையான பேச்சுக்கு மட்டும் கொறைச்சலில்லை. என்ன செய்வது நம்மாளுகளுக்குத் தான் வௌ்ளைத் தோல்ன்னா எப்போதுமே புடிக்குமே?

ஆனால் இந்த சமயத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது. அன்று சிங்கிள் சிங்கமாய் புலம்பிய வின்ஸ்டன் ஐயா சொன்னது ” அவர்கள் ஆட்சியின் பாலபாடத்தைக் கற்று கொள்ளவே நூறு ஆண்டுகள் ஆகிவிடும் ” என்றார். அவர் சொன்ன ஆண்டு 2047 அன்று தான் வருகின்றது.

அதனால் தான் 2050 ஆண்டு இந்தியாவிற்கு முக்கியமாய் இருக்கும் போலிருக்கு?

Advertisements

2 responses to “கிரேட் பிரிட்டன் அல்ல உடைந்த பிரிட்டானியா பிஸ்கெட்

  1. நீங்கள் சொன்ன அந்த வக்கனையான பேச்சு …. அதாவது அவர்களிடம் , அந்த Sarcastic பேச்சு கொஞ்சம் நிறைய உண்டு…. ஆப்ரிக்காவை நாறடித்த்தில் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற தேசங்களின் பங்கு உண்டு என்று நம்புகிறேன். இப்பவும் பாருங்க அங்க ….. எத்தனை ஆயுத விற்பனை அங்கு.

    நாமும் நிறைய சாதரண வாழ்கையை விட்டு …. தூர விலகி கொண்டே போகிறோம், வேப்ப மர காத்து , கூழ் , ஒரு வேட்டி….இதெல்லாம் போய் ரொம்ப நாளாச்சு. இந்த டாஸ்மாக் கலாச்சாரம் வேற இந்த ஏழைகளை ஒரு வழி பன்னிட்டு தான் போகும் போல….

    நம்பிக்கை வைப்போம், நம்பிக்கை தான் வாழ்க்கை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s