நிஜத்தை உணர்த்திய தேசிய கொடியும் பயத்தை தந்த காந்தி ரகஸ்யமும்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி 6

இன்று வரையிலும் நாம் கண்டு கொண்டுருக்கும் தேசிய கொடியின் மூன்று நிறங்களுக்கும், பதிய வைக்கப்பட்ட எண்ணத்தைத்தான் நாம் புரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தையும், பங்கு எடுத்த தலைவர்களையும், சுதந்திரம் பெற்ற போது நடந்து முடிந்த பிரிவினைகள் என்று அனைத்தையும் உள் வாங்கிப் பார்க்கும் போது

நாளையே சுதந்திரம் வாங்கி இந்த ஆங்கிலேயேர்களை இங்கிருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்று வீரத்தை அடிப்படையாக வைத்து பேசி வாழ்ந்த தலைவர்களும், தொண்டர்களும், கொள்கைகளும்.

“அப்படியெல்லாம் பேசப்படாது. ஆக்க பொறுத்தவன், ஆற பொறுக்க மாட்டீயா? ” என்று ஆற அமற கூட்டம் போட்டு பேசிப் பேசி சாத்வீகத்தை கடைபிடித்தவர்களும்

“என் வழி தனி வழி ” என்று எந்த வகையிலும் நாங்கள் உங்களுடன் ஒட்ட மாட்டோம் என்று மூஸ்லிம் லீக் சார்ந்த அமைப்புகள், தலைவர்கள், தொண்டர்கள், கொள்கைகள், குழப்பங்கள், கலவரங்கள், கண்ணீர் காட்சிகள்

நடுவில் உள்ள சக்கரத்தில் அத்தனை மக்களும் சுழன்று கொண்டு.

இரண்டு மாடுகள் ஒரே வண்டியை வெவ்வேறு திசையில் இழுத்துக்கொண்டு சென்றாலே பயனம் பரிதாபத்தில் முடிந்து விடும்.

ஆனால் வண்டிக்கு பின்னால் இருந்து ஒரு கூட்டம் “நகர்த்த விட்டு விடுவேனா? என்று இழுத்துக்கொண்டுருந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்.

விவேகம் என்பதை மட்டுமே வாழ்க்கை முழுவதும் தானும் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய காந்தி அவர்களைப் பற்றி இன்று வரையிலும் விமர்சனமாய் பேசுபவர்கள் அனைவருமே ஒன்றை மட்டும் எளிதில் மறந்து விடுகின்றோம்.

அன்று முதல் இன்று இலங்கைப் பிரச்சனை வரையிலும் அத்தனை வீரமாய் வாழ்ந்த தலைவர்கள் அனைவருமே அவர்களின் இறுதி நிலைமை வித்யாசமான மரணத்தைத் தான் தந்ததுள்ளது. மர்மக் கதையின் இறுதி பக்கங்கள் கிழிந்து படிக்கத் தவிக்கும் வாசகனின் மனோ நிலையில் தான் அவர்களின் வாழ்க்கை வரலாறு முற்றுப் பெறாமல் இருக்கிறது. வாழ்ந்த வரையில் இவர்கள் அத்தனை பேருமே நாட்டுக்காக, கொள்கைக்காக, இனத்துக்காக தன்னாலான அத்தனை பங்களிப்புகளை சுயநலமில்லாமல் செய்தவர்கள் தான். எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

ஆனாலும் ஏன் இவர்களின் வாழ்ந்து காட்டிய வீரத்தை காலச்சுவடு விமர்சனமாய் வைத்து விடுகின்றது.

முடிவு ஏன் முழுமை அடையாத முக்கியப்புள்ளியாய் அடையாளம் காட்டுகிறது.

“கிலாபத் இயக்கம் ” இரு மதங்களின் வெறியாளர்களை அவர்களின் வெறித்தனத்தை வெட்ட வௌிச்சமாக்கி தொடங்கி வைத்த முதல் படி. இதன் மூலம் இறுதியில் கிடைத்த அத்தனை சோகமும் முன் எடுத்து வந்த தலைவர்களில் முதன்மையாய் இருந்தவர் மகாத்மா காந்தி. முன் மொழிந்ததோடு வாழ்ந்த கடைசி வரையிலும் வழி மொழிந்து வாழ்க்கை முழுவதும் இந்து முஸ்லீம் என்று இருவருக்கும் பொதுவான மனிதராய் இருக்க முடிந்தவரையிலும் பாடுபட்டவர்.

ஆனால் துருக்கி சிந்தனையாளர் கமால் பாஷா அவர்களை இந்தியாவில் இருந்து போய் சந்தித்த அத்தனை தலைவர்களையும் அடித்து துவைத்து அவர் சொன்ன கருத்து என்ன தெரியுமா?

“நீங்கள் உண்மையான முஸ்லீமாக இருக்க விரும்பினால் இன பேதம் பார்க்காமல் காந்தி பின்னால் நின்று ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை விடுவிக்கப் பாருங்கள் “.

மண்டை உடைந்து திரும்பி வந்தவர்கள் இங்கு பல லட்சம் மக்களின் மண்டை ஓடுகளின் அணிவகுப்பை பார்ப்பதற்க்காகத்தான் ஆசைப்பட்டு வீண் புகழுக்கு அத்தனை அயோக்கிய தனத்தையும் செய்தார்கள்.

கமால் பாஷா மனதில் வைத்து இருந்த அத்தனை தீர்கக தரிசன சமூக எதார்த்த பார்வையை பத்தில் ஒரு மடங்கு காந்தி அவர்கள் பெற்று இருந்தால் கூட சிறப்பாக வாழ்ந்து இருக்க முடியும்.

ரவீந்திரநாத் தாகூர் வழங்கிய மகாத்மா என்ற பட்டத்தை விட இந்திய மக்களின் உண்மையான மனோ நிலையை புரிந்த நல்ல ஆத்மார்த்தமான மனிதராக வாழ்ந்து இருக்க முடியும்.

சுத்தமான தங்கம் என்பது சுத்தியால் தான் உடைக்க முடியும். கலந்த கலவைகள் தான் ஆபரணமாக கண்களுக்கு காட்சி அளிக்க முடியும்.

எதற்குமே ஒத்துவரமாட்டோம் என்ற முஸ்லீம் லீக் ஒரு பக்கம். எப்போது இவர் சாவார்? என்று ஈமக்கிரியை செய்வதற்காக காத்து இருந்த ஆங்கிலேயர்கள் ஒரு பக்கம். (கல்கத்தாவில் இருந்து வரைவழைக்கப்பட்ட நான்கு பிராமணர்களை தயார் நிலையில் வைத்துருந்தார்கள்) இந்தியாவின் எதார்த்த மக்களின் மனோ நிலை என்ன? என்று உணராமலே வாழ்ந்த காந்தி ஒரு பக்கம்.

அதனால் தான் அவரின் மறுபக்கம் அத்தனையும் கேள்விக்குறியாய் கேலிக்குறியாய் இன்று வரையிலும் விமர்சிக்கப்படுகின்றது. அவரின் இறுதி ஊர்வலம் கூட கொள்கைகாரர்களால் கொண்டாட்ட ஊர்வலம் போல் மாற்றி இருந்தது.

மனிதன் என்பவனின் முதல் தகுதியே மற்றவர்களை புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வளர்த்துக்கொள்ளவாவது வேண்டும். தலைவன் என்பவனின் முதல் தகுதியே தன் மக்களை புரிந்த தகுதிகள் வேண்டும். இல்லாவிட்டால் உலகம் வாழும் வரையிலும் தராதரம் இல்லாத நாக்குகள் கூட நா கூசும் வார்த்தைகளைத் தான் காறித்துப்பும்.

எளிமையாய் வாழ்ந்தார். ஏற்றமான சிந்தனைகளுடன் தான் வாழ்ந்தார். எல்லா மக்களும் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று உண்மையாய் உழைத்தார். ஆனால் உடன் வாழ்ந்த அத்தனை நஞ்சுக் கொடிகளையும் பிஞ்சுக் கரங்களால் வளர்த்தார். தவறு என்று சுட்டிக்காட்டிய போதெல்லாம் மனிதன் என்பவன் மாறக்கூடியவன் என்று தத்துவம் சொல்லி அமைதி படுத்தினார். ஆனால் அவருடைய சாவு மட்டும் ராமனை அழைத்தாலும் அமைதியாய் நடக்க வில்லை.

எந்த நாடு அமைதிப்பூங்காவாய் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அவருடைய ஆத்மா அவரை விட்டு பிரியும் போது கூட அவஸ்த்தைகளுடன் தான் பயணத்தை தொடங்கியது.

அவரின் தீர்கக தரிசன கொள்கைகளை விமர்சித்த நாமோ இன்று வரையிலும் தீராத பிரிவினை அவஸ்த்தைகளுடன் பயணித்துக்கொண்டுருக்கிறோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s