இந்தியாவின் நிதர்சன தலைவன் வின்ஸ்டன் சர்ச்சில்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 7

உழைப்பு, திறமை, தன்னம்பிக்கை இவை மூன்றுடன் கொஞ்சம் அதிர்ஷடமும் வேண்டும். இன்று வரையிலும் எல்லோராலும் நம்பப்படும் அந்த அதிர்ஷடம் தான் இந்தியாவிற்கு சுதந்திரத்தை வாங்கிக் தந்தது என்றால் ஆச்சரியமாய் பார்க்காதீர்கள். சற்று உண்மையும் கூட. அந்த அதிர்ஷடம் பெற்ற தனி மனித பாக்கியவான்கள் மற்றவர்கள் போற்றும் அளவிற்கு அவரவர் துறையில் சிறப்பு அடைக்கின்றனர்.

அடைந்தவர்கள் நீடித்து இருப்பது உழைப்பு திறமையை வைத்து. நினைவில் இருந்து மறைவது கொண்டுள்ள தன்னம்பிக்கைகளை பொறுத்து.

” மாட்சிமை தங்கிய மன்னரது அரசாங்கம் 1948 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முடிவதற்குள் பொறுப்புள்ள இந்தியப் பிரதிநிதிகளைத் தேர்தெடுத்து அவர்களிடம் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து வௌியேற தீர்மானித்து இருக்கிறது”

அன்றைய பிரிட்டன் பிரதமர் கிளமெண்ட் ஆட்லி (1947 18 பிப்ரவரி) தாக்கல் செய்த மசோதா இது?

350 வருடங்களாக ஆண்டு கொண்டுருந்த ஆங்கிலேயர்கள் அவசரம் அவசரமாய் வௌியேறி விட வேண்டும் என்று எந்த சக்தி தீர்மானம் செய்தது?

இந்திய தேசிய காங்கிரஸாக உருமாற்றிய காந்திக்கு பின்னால் இருந்த தலைவர்களால் முன் எடுத்துச் செல்லப்பட்ட போராட்டங்களா?

காலையில் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ அத்தனை அக்கப்போர்களை உருவாக்கிக் கொண்டுருந்த மத வாத கருத்துக்கள் கொண்ட தலைவர்களா?

கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வியாபாரத்திற்காக மட்டுமே உள்ளே வந்த ஆங்கிலேயர்கள் (1600 ஆகஸ்ட்டு 24) மூன்று தலைமுறைகளாக எந்த வித பிரச்சனைகளையும் சந்திக்காமல் மூன்றாவது தலைமுறையாக வியாபாரத்தில் நல்ல கொழுத்த லாபத்துடன் வாழ்ந்து வந்தனர்.

மூன்றாவது தலைமுறையினர் நாம் வியாபாரத்திற்காக வந்தவர்கள் என்பதை சுத்தமாக மறந்து விட்டனர். காரணம் உள்ளே நடந்த அத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்கிறேன் என்று நுழைந்து நுழைந்து திரும்பிய பக்கமெல்லாம் அத்தனை இடங்களும் அவர்கள் ஆளுமைக்குள் வந்து இருந்தது.

சுகமானது அவர்களின் வாழ்க்கை. ஆனால் சூறாவளியாய் மாற்றியது வங்காளத்தில் பிளாசி என்ற இடம்.

நேரிடையாக அல்லது மறைமுகமாக செய்து கொண்டுருந்த ஆங்கிலேயர்களின் விஸ்தரிப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் ஓயாத தொல்லை கொடுத்துக் கொண்டுருந்தார் ஒரு நவாபு. நவாபு கொண்டுள்ள படைபலம் கடுகு. ஆனால் காரம் அதிகமாக இருந்த காரணத்தால் கொட்டும் மழையில் நனைந்தவாறு (1757 ஜுன் 27) ராபாட் கிளைவ் என்கிற அயோக்கியன் போட்ட ஆட்டத்தில் அடித்து ஒடுக்கப்படவில்லை. எதிர்ப்பவர்கள் எவராயின் மொத்தமாகவே நிர்மூலம் ஆக்கப்படுவீர்கள் என்று உணர்த்தப்பட்ட சம்பவம் அது.

இது முதல் கோணல்.

இந்தியர்களின் பொறாமை, போட்டி, விரோத மனப்பான்மையை வைத்தே அவர்களால் தொடர்ந்து வந்த நூறு ஆண்டுகள் எந்த பெரிதான பிரச்சனைகளையும் சந்திக்காமல் ஆண்டனர். ஆங்கிலேயர்கள் சந்ததியினர் கூட இங்கு ஓய்வுக்கு வந்து சந்தோஷமான அனுபவம் பெற்று திரும்பும் அளவிற்கு.

நன்றாக நினைவு வைத்துக்கொள்ளுங்கள். இந்தியாவின் ஆட்சி என்பது அன்று வரையிலும் ஆங்கிலேயர்களான கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தின் ஆளுமைக்குள் இருந்ததே தவிர பிரிட்டன் அரசாங்கத்திடம் அல்ல.

எப்போது பிரிட்டன் அரசாங்கத்திடம் இந்தியா வந்தது?

தமிழர்கள் ஆங்கிலேயர்களின் ஆட்சியை “கும்பினி ஆட்சி” என்று பெயரிட்டுத்தான் அழைத்தார்கள். ஆங்கிலேயர்களால் முதலாவது சுதந்திரப் போர் என்றழைக்கப்பட்ட சிப்பாய்க்கழகம் (1857), இந்தியர்களும் ஆங்கிலேயர்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ள வெறிபிடித்த ஆங்கிலேயர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா?

கிராமம் கிராமமாக கொளுத்தி, கொன்ற நபர்ககளை எட்டு மற்றும் ஒன்பது வடிவத்தில் மரக்கிளைகளில் தொங்க விட்டு அழகு பார்த்தனர். இதன் மொத்த எதிரொலியும் பிரிட்டனில் ஒலிக்க மாட்சிமை தாங்கிய அஸ்தமிக்காத அரசாட்சியை பெற்றவர்களின் கைக்கு (விக்டோரியா மகாராணி) போய் சக்ரவர்த்தினி ஆளத் தொடங்கினார்.

இன்னமும் பிரிட்டனின் அந்தகால வளம் குறித்து மனதிற்குள் கோட்டை கட்டி வைத்துக்கொண்டுருப்பவர்கள் தயை கூர்ந்து 1922 அன்று இந்தியாவிற்கு விஜயம் செய்த வேல்ஸ் இளவரசர் கூறியதை படித்துப் பார்த்தால் புரியும்.

இந்தியாவை மகாராணியின் சார்பாக ஆண்டவர்களை வைஸ்ராய் என்று அழைக்கப்பட்டனர். படத்தயாரிப்பாளர் போல பக்கத்தில் வராமல் இருப்பவர் தான் மகா ராணி. எழுத்தும் இயக்கமும் என்று போட்டுக்கொள்ளபவர் போல் எல்லாமே இந்த வைஸ்ராய் தான்.

“இந்தியாவிற்கு வந்து வைஸ்ராய் ஆட்சியின் கோலாகலங்களையும், அதிகார பிரயோகங்களையும் பார்த்த பிறகுதான் ஒரு பெரிய சாம்ராஜ்யாதிபதி எப்படி வாழ வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்”.

சும்மாவா?

16 கவர்னர்கள் 2000 ஐசிஎஸ் அதிகாரிகள், 10,000 ராணுவ அதிகாரிகள், 60,000 படைவீரர்கள். இது மட்டுமே அவர்களின் சொத்து. மீதி உள்ள இரண்டு லட்சம் அல்லக்கை நொல்லக்கை எல்லாம் நம்முடைய முத்துக்கள். வீரர்கள் என்ற பெயரில் கொடுத்ததை வாங்கிக்கொண்டு கொள்கை பிடிப்போடு அவர்களுடன் அணிவகுத்தவர்கள்.

மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் குள்ளமான மனிதருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் திருமணம் என்றால் என்ன சொல்வீர்கள்? பரபரப்பு செய்தியில் பத்திரிக்கைகள் பட்டாசு விழா கொண்டாடி விடாதா? ஆமாம் ஆள்பவர்களின் நிலமோ அத்தனை சிறிது. ஆண்ட நிலமோ அத்தனை பெரிது.

மிகப்பெரிய கொடுமை என்றால் ஆள்பவர்கள் யார்? மன்னர் யார்? நாளை என்ன நடக்கும் எதுவுமே தெரியாமல் வாழ்ந்த மனிதக்கூட்டங்களை பெற்றது தான் இந்த புண்ணிய பூமி.

ஆள்பவர்கள் என்றால் அவர்கள் ஆண்டவருக்குச் சமம். அவர்கள் இந்துவா, இஸ்லாமியரா என்று நிச்சயமற்ற நிலையில் உள்ளே இருந்த ஏராளமான மன்னர்கள், சுல்தான்கள், நவாபுகள், அவர்களுக்கு கீழே குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்கள். இதற்கு பின்னால் சந்துக்கு சந்து இன்று சந்தி சிரிப்பதைப் போல தடி எடுத்தவன் அடி கொடுத்தவன் எல்லாம்.

இவர்கள் அத்தனை பேருமே மிக்க சந்தோஷமாய் கட்ட வேண்டிய கப்பங்களை, வரிகளை கட்டிக்கொண்டு ஆட வேண்டிய அத்தனை ஆட்டங்களையும் போட்டுக்கொண்டுருந்தார்கள். அப்படி என்றால் மக்களும் சந்தோஷமாய் தானே வாழ்ந்து இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு நிறைய நகைச்சுவை உணர்வு இருக்கிறது என்று அர்த்தம்.

வசதிகள் இல்லாத காலத்தில் வந்த நோய்கள் அத்தனையும் பாதி வாரிக்கொண்டது போனது. பிழைத்து இருந்த பாதி பேர்கள் வெந்த சோறு என்பது நல்ல விருந்தாக

கருதப்பட்டது. நான் அரிசிச் சோறு சாப்பிட்டேன் என்றால் இன்றைய நடுத்தர வர்க்கத்திற்குச் சமம். கேழ்வரகு, கம்பு, சோளம் இவைகள் தான் முக்கிய உணவு.

காலையில் கூழ், மதியம் அரிசிக்கஞ்சி, இரவில் களி உருண்டை. மாதம் இரண்டு ரூபாய் சம்பளம் என்பது தீண்டப்படாத மக்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்தில் உயர்ந்த வாழ்க்கையாக கருதப்பட்டது. அவர்களுக்கு ஆண்டையே (எஜமான்) எல்லாமே.

அதனால் தான் அவர்களின் நல்ல அழகு படைத்த பெண்களின் கொண்டை கூட ஆண்டையிடம் அடகில் இருந்தது.

இதையெல்லாம் இங்கு வந்த பார்த்ததால் தான் என்னவோ பிரிட்டனின் இரும்பு மனிதர் வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன கருத்து என்ன தெரியுமா?

” ஆளத்தெரியாதவர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தை ஓப்படைத்தால் அவர்களுக்கு பின்னால் வரும் அத்தனை சந்ததியினரும் நம்மை சபிப்பார்கள் “.

உங்கள் நினைவுக்கு வரும் அத்தனை சம்பவங்களுக்கும் நான் பொறுப்பல்ல.

Advertisements

2 responses to “இந்தியாவின் நிதர்சன தலைவன் வின்ஸ்டன் சர்ச்சில்

 1. என்ன சொன்னாலும் இது பெரிய ஆச்சர்யம் தான், இவ்வளவு சின்ன தேசம் நம் தேசத்தை இத்தனை நாள் அடிமை படித்தியது என்பது. இப்ப பாருங்க நாம ஆள் , அவங்களை ஓட ஓட விரட்டறாங்க … அதாவது வேலை வாய்ப்பில், படிப்பில், … இன்னும் சில காலம் பொறுங்கள்

 2. ஐயோ என்னமா படுத்தியிருக்கானுக படு பாவிகள் நிகழ்காலத்தின் ஈழம் போல்.
  ஜோதிஜி உங்களின் வரலாற்று பதிவுகளை வரவேற்கிறேன்
  கும்பினி ஆட்சி பற்றியும் வின்ஸ்டன் சர்ச்சில் பற்றியும் எழுதும் உங்களை பாராட்டுகிறேன்
  மகராணி – தயாரிப்பாளர்
  வைஸ்ராய் – எழுதும் இயக்கமும் அருமை

  T.S.MUTHU

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s