வெறுக்கப்பட்ட காந்தியும் விலகிப் போன ஜின்னா ரகஸ்யங்களும்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி 4

சிப்பாய்க் கழகம் (1857) உருவாக்கிய பாதிப்பில் மறுபடியும் இதே போல் ஒரு ஆயுதம் தாங்கிய கலவரம் (முதலாவது ஆயுதந்தாங்கிய சுதந்திரப்போர்) வேறு வகையில் உருவாக்கி விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆங்கிலேய ஐ.ஏ.ஏஸ் அதிகாரி ஆலன் ஆக்டேவியன் ஹியூம்ஸ் (1885) உருவாக்கியது தான் காங்கிரஸ் கட்சி.

ஆனால் தலைமைப் பொறுப்பில் ஒரு ஆங்கிலேயரைப் போட்டால் உருவாகும் பிரச்சனைகளை மனதில் கொண்டு யோசித்து செயல்பட்டார்கள். டபிள்யு.சி.பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி என்று வரிசையாக தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்கள் பொறுப்பாய் பேசியது என்ன தெரியுமா?

கூட்டத்தில் “மாட்சிமை தாங்கிய ஆங்கிலேயே சமூகத்திற்கு ” என்று பவ்யமான விண்ணப்பமாக தொடங்கித் தான் தங்களுடைய ராஜ விசுவாசத்தை நிரூபித்தார்கள். ஆனால் காலம் ஏமாற்றவில்லை. அன்று ஒரு அஞ்சா நெஞ்சன் (1906) லோகமான்ய பாலகங்காதர திலகர் வடிவில் வந்து எதிர்ப்பை தொடங்கி வைக்க அதற்கு பின்னால் வந்த காந்திஜி நடத்திய அத்தனை போராட்டங்களும் ஆண்டவர்களை ஆட்டம் காண வைத்தது என்றால் மிகையில்லை.

இந்து முஸ்லீம் என்று இரண்டு பக்கமும் தீவிரவாத கருத்துக்கள் பேசக்கூடியவர்கள் அன்று அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த போதிலும் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே முன் எடுத்துச் செல்லப்பட்டது. உரம் இன்றி பயிர் வாடி இருந்தது. ஆனால் பிழைத்துருந்தது.

அலிகார் பல்கலைக் கழகத்தில் வௌியிட்டு வந்த ஆங்கில பத்திரிக்கைக்கு ஆசிரியராக பணியாற்றிக் கொண்டுருந்தவர் சர். சையத் அஹமத்கான். குரான் வழியில் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருந்தாலும் இந்து முஸ்லீம் இரு சமூகத்திற்கும் தன்னாலான நல்ல பங்களிப்பை செலுத்தி ஆட்சியாளருக்கும் சமூகத்திற்கும் நல்ல பாதுகாவலராய் வாழ்ந்தவர்.

காலம் செய்த கோலம். அந்தப் பல்கலைகழகத்திற்கு தலைமைப் பணிக்கு உள்ளே வந்த ஆங்கிலேயர் தியோடர் பெக் கரைத்த கரைச்சலில் அவர் மனம் கலங்க கலவரத் தொடக்கத்தின் உண்மையான விதை பூமிக்குள் வௌிவராத செடியாய் உறங்கிக்கொண்டுருந்தது.

தியோடர் பெக் (1899) இறந்தாலும் அவர் வளர்த்த செடியை அடுத்து வந்தவர்கள் அற்புதமாக தண்ணீர் ஊற்றி வளர்த்தார்கள். ஆனால் ஆங்கிலேயர்களுடன் இணக்கமான உறவை பேண தொடக்கத்தில் முஸ்லீம்களுக்கு என்று இணைப்பு சங்கம் உருவாக்கினாலும் காங்கிரஸ் கட்சியின் முக்கல் முனங்கலை பொறுக்க முடியாத ஆங்கிலேயர்கள் ஒரு மாற்று ஏற்பாடு வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

ஒவ்வொரு படியாக நகர்த்தி நகர்த்தி இறுதியில் உதயமானது (30 ஆகஸ்டு 1906) முஸ்லீம் லீக். டாக்கா நகரில் நவாப் கலிமுல்லா கான் தலைமையில். ஆனால் கதை, திரைக்கரை, வசனம், இயக்கம் எல்லாமே ஆங்கிலேயர்கள்.

எதற்காக இத்தனை மதங்களும் கடவுள்களும் இந்த உலகத்தில் தோன்றியது? எல்லா மதங்களும் சொன்ன இறுதியான அமைதி இன்று வரையிலும் கிடைக்கவில்லையே?

எளிமையான காரணம்.

ஒவ்வொரு மதத்திற்கும் அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டுருக்கும் ஒரு மனிதரை மொத்தமாய் சார்பாளாராய் முன் நிறுத்தப்படும் போது அத்தனை தத்துவங்களும் பின் நோக்கி தள்ளப்படுகின்றது. உரு மாற்றமானவைகள் மட்டுமே மொத்த சமூகத்தால் உள் வாங்கப்படுகின்றது.

உருவம் உண்டு என்பவர்களும், இல்லை என்பவர்களும், அன்பு வடிவானவர் என்பவர்களும் ஒரே வட்டத்திற்குள் இன்று வரையிலும் வர முடிவது இல்லை. காரணம் அத்தனை வட்டத்தையும் அங்கங்கு ஒருவர் உருவாக்கி அத்தனையும் தனதாக்கி வைத்து இருப்பதால்.

மத மாற்றத்தை படையெடுத்து வந்த மற்றவர்கள் போல் ஆங்கிலேயர்கள் அந்த அளவிற்கு ஆதரிக்கவில்லை. விஞ்ஞான வளர்ச்சி பெற்ற பின்னாளில் கூட அவர்கள் நினைத்துருந்தால் இந்திய பாதி தொகையை மாற்றி இருக்க முடியும். செய்யவில்லை? ஆனால் ஆத்ம சுத்தியோடு பிரிவினையின் விதைகளை முடிந்த போதெல்லாம் விதைத்துக்கொண்டே தான் வந்தார்கள்.

“கிலாபத் இயக்கம்” என்ற ஒரு கேலிக்கூத்து (1919) இந்தியாவில் நடந்த போது கிடைத்த இறுதி பரிசு என்ன தெரியுமா?

மாப்பிள்ளை கலகமாக பெயர் பெற்று 2266 பேர் இறப்பு. 1615 காயம். 5688 பேர் கைது. அரசாங்க கணக்குப்படி சரண் அடைந்தவர் 38656 பேர்கள்.

ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்கி கட்டுக்குள் கொண்டு வந்த அரசாங்க கணக்கு இது மட்டும் தான் இருக்கும் என்று நம்புகிறீர்களா?

தேள் கொட்டியது ஒரு இடம். நெறி கட்டியது ஒரு இடம்.

ஆனால் மொத்த சோகத்தையும் பெற்றுக்கொண்டது ஒன்றும் அறியா அப்பாவிகள்.

துருக்கி நாட்டை ஆண்ட சுல்தான்கள் என்பவர்கள் கலீபா என்று மொத்த முஸ்லீம்களுக்கும் அல்லாவின் பிரதிநிதியாக கருதப்படுபவர். முதலாம் உலகப் போருக்குப் பின்னால் துருக்கி பிரிட்டனின் கோபப்பார்வையில் இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு அடிவருடியாக இருந்தவர்களை அடக்க வேண்டும் என்று புறப்பட்ட கமால் பாஷா என்பரின் தௌிவான சிந்தனை கருத்துக்களுக்கு துருக்கி மக்கள் அமோக ஆதரவு அளிக்க தயராய் இருந்தார்கள். அவருடைய பார்வையில் கலீபா அனைவரும் ஊழல் பேர்வழிகள். கமால் பாஷாவின் கருத்துரைகள் ஒரு பக்கம். வீழ்ந்த துருக்கியில் அன்று இருந்த கடைசி கலீபா சுல்தான் அப்துல் மஜீத் ஒரு பக்கம்.

மொத்த இந்திய முஸ்லீம்களும் புதிய கலீபா வை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக தோன்றியது தான் கிலாபத் இயக்கம்.

இந்துக்கள் ஆதரவு இல்லாவிட்டால் இந்த போராட்டம் வெற்றியடையாது என்று நிதர்சனத்தை உணர்ந்த மௌலானா அப்துல்பாரி (1919) அழைப்பு விடுக்க நேரு,காந்தி,மதன் மோகன் மாளவியாவும் கலந்து கொண்டனர்.

கலீபா ஆட்சி என்பது முடிந்து போனது. அது இங்கு தேவையே இல்லாதது என்று சொன்ன முகமது அலி ஜின்னா வெறுப்பாய் சில காலம் அரசியலை விட்டு விலகி இருந்தது விதி செய்த ஆச்சரியம். ஆனாலும் விதி அவரை அத்தனை எளிதில் விட்டு விடவில்லை.

காந்திக்கு ஒரே நோக்கம். இரு வகுப்பினரையும் ஒரே தேசிய நீரோட்டத்தில் கொண்டு வந்து விடவேண்டும். ஆனால் வீணர்களுக்கும், வெறும் புகழை விரும்பியவர்களுக்கும் ஒரே நோக்கம் கலவரத்தின் மூலம் நினைத்ததை அடைவது.

தென்னிந்தியாவில் மலபார் பகுதியில் உருவான வதந்தியில் உருவானது தான் மாப்பிள்ளைக் கழகம்.

மொத்த கலவரம் முடிந்த போது சர்வன்ட்ஸ் ஆப் இந்தியா சொசைட்டி என்கிற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பு படி கொல்லப்பட்ட இந்துக்கள் 1500 பலத்காரமாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் 20,000 பேர்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சொத்துக்கள் அன்றைய மதிப்பின் படி 3 கோடி. கற்பழிக்கப்பட்ட பெண்களின் கணக்கு வௌிவரவே இல்லை.

அத்தனைக்கும் காரணம் இயக்கத்தை முன்னிலை படுத்திய தலைவர்கள். என்ன செய்கிறோம்? என்ன கிடைக்கும் என்ற தௌிவற்ற நோக்கம் இல்லாத ஒரே காரணத்தால் இத்தனை சோகம்.

முடிவு என்ன?

முன் எடுத்து செல்ல வேண்டிய முகமது அலி ஜின்னா அவர்கள், அத்தனையும் தவறு என்று ஒதுங்கியே இருந்தார். ஆனால் அவரையோ அவரின் சொல்லையோ அன்று யாரும் கேட்கத் தயாராய் இல்லை. காளான் வடிவில் முளைத்த அத்தனை தலைவர்களுக்கும் ஒரே கொண்டாட்டம். கனவு கண்ட வாழ்க்கை நனவாகப் போகின்றதே என்று. இந்த வாய்ப்பு மூலமாவது இருவரையும் சேர வைத்து விடலாம் என்று நினைத்த காந்தி அவர்கள் இந்து முஸ்லீம் இரு பிரிவினருக்கும் பொதுவான எதிரியாய் மாறிய சோகத்தை என்னவென்று சொல்வது?

இன்று வரையிலும் மகாத்மாவாக நம்முடன் வாழ்ந்து கொண்டுருக்கும் மோகன் தாஸ் கரம் சந்த் காந்திக்கு அன்று கிடைத்த அத்தனை அவமரியாதை விமர்சனங்களும் கண்ணீர் வரவழைக்கக்கூடிய காலத்தால் மறைக்கமுடியாத காட்சிகள்?

Advertisements

4 responses to “வெறுக்கப்பட்ட காந்தியும் விலகிப் போன ஜின்னா ரகஸ்யங்களும்

  1. Pingback: புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்க ள் | இசையினி

  2. //துருக்கி நாட்டை ஆண்ட சுல்தான்கள் என்பவர்கள் கலீபா என்று மொத்த முஸ்லீம்களுக்கும் அல்லாவின் பிரதிநிதியாக கருதப்படுபவர்//
    This is not exactly correct. Only prophets are called like this not ‘Kaliphs’.

  3. எல்லா மதங்களும் சொன்ன இறுதியான அமைதி இன்று வரை இல்லையே என்பதும் அதற்கான காரணமும் உண்மை. மேலும் வரலாற்று பதிவுகளை ஆதாரபூர்வமாக சொல்வதற்கும் பாராட்டுக்கள்

    T.S.MUTHU

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s