இரண்டு இயக்கங்களின் ரகஸ்யங்கள்

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் தொடர்ச்சி மூன்று

கல் தோன்றி மண் தோன்றா மூத்த குடிமக்கள் வாழ்ந்ததாக இன்று வரையிலும் நாம் பெருமை பேசிக்கொண்டுருக்கும் இந்த பாரத பூமியை நோக்கி ஏன் இத்தனை படையெடுப்புகள்?

மாமன்னர்கள் ஆண்டது முதல் இன்று மாமா மன்னர்கள் வரையிலும். காரணம் மிக எளிமையானது.

அன்று வீரத்தின் குறியீடாக வைத்துக்கொண்டு வாழ்ந்த மன்னர்கள், பெற்ற செல்வத்தை அடைந்த சந்தோஷத்தை ஆலய வடிவில் அமைத்து தன்னுடைய பங்களிப்புகளை பட்டயமாக்கி, கல்வெட்டுகள் மூலம் ஊருக்கு உணர்த்தினார்கள். இது சுயநலம்.

எத்தனை போராட்டங்கள், போர்கள் என்றாலும் அமைதி என்பது வாழ்க்கையில் இல்லாவிட்டால் எல்லாமே வீண் என்று எல்லா வகையிலும் ஏற்றமான ஆலயத்தையே உருவாக்கினார்கள். இது பொது நலம்.

இந்திய சரித்திரத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களான படையெடுத்த மன்னர்கள், ஆட்சியாளர்கள் அனைவருக்குமே இருந்த எத்தனையோ நோக்கத்தில் முதலும் முக்கியமாய் இருந்தது வீரம் மட்டுமே. நவீன வசதிகள் எதுவுமே இல்லாத நாட்களில் நாடு கடந்த அவர்கள் பெற்ற அத்தனை வெற்றிகளுமே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

பெற்ற வெற்றிகளால் புத்தி பேதலித்து விடவில்லை. சென்ற இடங்களில் பெரும்பாலனவர்கள் எந்த கலாச்சார சீரழிவையும் உருவாக்கி விட வில்லை. கண்ணீர் வரவழைக்கக்கூடிய காட்சிகள் கூட அங்கொன்றும் இங்கொன்றும் தான். அனைவருமே ஆண்டவன் என்ற குறியீட்டை ஆளும் வரைக்கும் ஆட்சி இழந்த போது நம்பிக்கை வைத்து வாழ்ந்தார்கள். பயம் இருந்தது. ஆனால் பொறுமையாய் யோசிக்காத காரணங்கள் மட்டுமே எனக்கு கேள்விக்குறியாய் தெரிகின்றது. அதனாலேயே அத்தனை படையெடுப்புகள் உள்ளே வந்தபோது கூட பாதிக்கப்பட்டவர்களால் தன்னுடைய மக்களை மீட்சிப் பாதைக்கு கொண்டு வர முடியவில்லை.

முடிவில்லாத அன்பு ஒன்றே போதுமானது என்று வாழ்ந்த வாழ்க்கைக்கும், மூர்க்கம் ஒன்றே வாழ்க்கை என்று உள்ளே வந்த அத்தனை படையெடுப்புகளும் எதை உணர்த்தியது?

காடுகள், மலைகள், கரை புரண்டு ஓடும் ஜீவ நதிகள், உழைக்க மட்டுமே தெரிந்த அப்பாவி மக்கள், கண்ணியமான வாழ்க்கை படைத்த அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள். எத்தனை இருந்தாலும் அரசன் என்பவன் ரொம்ப நல்லவனப்பா? என்று மட்டும் சொன்னால் போதுமா?

உள்ளே வந்தவர்களுக்கு ஒரே ஒரு நோக்கம் மட்டும் இருந்தால் கூட இங்கு ஏராளமான பொக்கிஷங்கள் காப்பாற்றப் பட்டு இருக்கும். பணத்தை திருட வந்தவன் பணத்தையும் எடுத்துக்கொண்டு, கண் முன்னாலே கற்பழிப்பு நிகழ்த்தி, வாழும் வீட்டை கொளுத்தி, பரிதாபத்தில் எதிர்க்க முடியாமல் இருந்தவர்களை இழுத்துச் சென்று மதம் மாற்றியும், மறுக்கப்பட்டவர்களை கழுத்து அறுத்ததும்?

ஸ்பானியர்கள், போர்த்துகீசயர்கள், போன்ற பல நாட்டு வியாரிகள் உள்ளே வந்து அப்பாவிகளை ஏமாற்றி, அடி மாட்டு விலையில் வாங்கி, மறுத்தவர்களை அடித்து உதைத்து, கப்பலில் ஏற்றி வேறு தீவுகளில் விட்டு விட்டு, மேலும் பல இடங்களில் அடிமையாய் காசுக்கு விற்று செய்த கண்ணியமான வியாபார தந்திரங்களை கையாளத்தெரியாமல் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களின் பொறுமையை எந்த வகையில் சேர்ப்பீர்கள்?

ஆலயத்தில் உள்ளே போய் வணங்கி விட்டு வௌியே வந்து உட்கார்ந்து கொண்டால் ஆழாக்கு அரிசி கைக்கு வந்து விடுமா?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானோ?

எய்ட்ஸ் இல்லை, இதய நோய் இல்லை, சர்க்கரை நோய் கூட இல்லை. ஏன் எந்த வழக்குகளும் உள்ளே அதிகமாய் வரவில்லை. வந்தாலும் வாழும் வரைக்கும் இன்று போல் கிடைக்காத தீர்ப்பு அன்று இல்லை. அத்தனை இனிமையான வாழ்க்கையை பெற்று வாழ்ந்து கொண்டுருந்த மக்கள் கூட்டத்திற்கு வந்து போய்க்கொண்டுருந்த படையெடுத்து வந்த புண்ணியவான்கள் மருந்து கூட குடிக்க அவகாசமில்லாமல் மார்ச்சுவரிக்கு அல்லவா அனுப்பிக்கொண்டுருந்தார்கள்?

எதை உணர்த்துகிறது?

அன்பு, அகிம்சை, சகிப்புத்தன்மையை அளவு கடந்து பெற்று இருந்தால் இரண்டு விஷயங்களுக்கு நாம் கட்டுப்பட்டுத்தான் வாழ்ந்தாக வேண்டும்.

1.நேற்று உள்ளே வந்து அட்டகாசமாக பயமில்லாமல் பயணித்துச் சென்ற சீன விமானத்தை நாம் செய்தித்தாள்களில் மட்டுமே படித்து விட்டு மறந்து விட வேண்டும்.

2. சந்தோஷமாக நாம் பிரிந்து கொள்கிறோம் என்று சொல்லி பிரிந்த அத்தனை நாடுகளிலும் அன்றாடம் கணக்கெடுக்கவே முடியாமல் சங்கடச் சாவுகள் சாலைகளை இரத்த சகதியாய் நடக்க வைத்த போதும் இன்று வரையிலும் இந்தியா ஏற்றப் பாதையில் பயணிக்கின்றதே?

பொறுத்தாள்வார் பூமி ஆள்வார்?

அதனால் தான் என்னவோ உள்ளே வந்த ஆங்கிலேயேர்கள் ஆட்சி புரிந்த மொத்த காலத்திலும் எந்த மத மாற்றத்தை முன்னிறுத்தவில்லை. சார்பு நிறுவனங்கள், சார்பாளர்கள் என்று அங்கொன்று இங்கொன்று என்று பாதை முழுக்க இருந்தாலும் ஆட்சியாளர்கள் தௌிவான பாதையில் பயணித்தார்கள்.

உண்மை. ராஜதந்திரம் என்பதே நம்மை விட அவர்களிடம் தான் அதிகம் இருப்பதாகத்தான் தெரிகின்றது. ஆனால் அத்தனை பூப்பாதைக்கும் கீழே பூகம்ப பாதையை வைத்துக்கொண்டு தான் ஆட்சி நடத்தினார்கள்?

இத்தனை மில்லியன் உன்னுடைய நல்வாழ்வுக்கு என்று பாகிஸ்தான்க்கு கொடுக்கவும் முடியும். என்னுடன் அணு ஆயுத ஒப்பந்தம் போட்டுத்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யவும் முடியும்.

இங்கிலாந்தின் இன்றைய பவுண்டு மதிப்புக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் பாதிக்கு மேற்பட்ட காரணிகள் நம் இந்தியாவில் இருந்து கொண்டு போகப்பட்டது என்றால் மறுப்பவர்கள் நன்றாக வரலாற்றுப்பக்கங்களை உற்றுப்பார்த்தால் புரியும்.

இன்று வரை உலகை ஆள்பவர்கள் என்று நம்பிக்கொண்டுருக்கும் அத்தனை பேரரசுகளும் தொடக்கத்தில் விதைத்த ஆலமர விதை. விதைத்த போது யாருக்கும் தெரியாது. இன்று புரிகின்றது ஏன் நல்ல நிழலில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள் என்று.

இந்தியாவில் மதம் கடந்த மாச்சரியம் கடந்து வாழும் நல்ல பூமியில் எங்களுடைய ஆட்சி பங்களிப்பு என்று அவர்கள் வௌியே தெரிந்த செய்த அத்தனை நல்ல காரியங்களும், வௌியே தெரியாமல் பல புனித காரியங்களும் தான் இன்று வரையிலும் நம்முடைய எல்லையில் ஏராளமானோர் தினந்தோறும் வீர மரணம் அடைந்து கொண்டுருக்கிறார்கள்.

அன்பு, சமாதானம், சகிப்புத்தன்மை போன்ற ரசங்களை சுவைத்து சுவைத்து இன்று வைக்கும் ரசத்திற்கான மிளகாய் உப்பு கூட விலையேறி அத்தனை பணத்தையும் ராணுவ பாதுகாப்புக்கு நாம் போய் கொட்டிக்கொண்டு இருக்கிறோமே?

இன்று நம் நாட்டை அந்நியர் ஆள்வதா என்று கூக்குரல் எழுப்புவர்களும், இந்துக்களின் பாதை வேறு இஸ்லாமியர்களின் வாழ்க்கை வேறு என்று சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்து கொண்டுருப்பவர்களைக் கூட தங்களுடைய சுய ஆசைக்காக இரண்டு சமூகத்தின் ஒற்றுமையை ஊறு விளைவித்துக் கொண்டுருப்பவர்களும் இரண்டுமே ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்றால் என்ன நினைப்பார்கள்?

இரண்டு இயக்கமும் மேட் இன் இங்கிலாந்து என்றால் நம்புவார்களா?

உண்மைகள்?

Advertisements

7 responses to “இரண்டு இயக்கங்களின் ரகஸ்யங்கள்

 1. நமது வளங்களை கொள்ளையடித்ததும் இல்லாமல் நம்முள் சண்டை மூட்டுவதற்கே இரு இயக்கங்களையும் தோற்றுவித்தானே பாவி. அருமை ஜோதிஜி தொடரட்டும் உங்களின் சரித்திர பதிவுகள்

  T.S.MUTHU

 2. //இன்று வரை உலகை ஆள்பவர்கள் என்று நம்பிக்கொண்டுருக்கும் அத்தனை பேரரசுகளும் தொடக்கத்தில் விதைத்த ஆலமர விதை. விதைத்த போது யாருக்கும் தெரியாது. இன்று புரிகின்றது ஏன் நல்ல நிழலில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள் என்று.//

  சரியாக சொன்னீர்கள் …. அவர்கள் செய்த அட்டூழியத்திற்கு அளவு உண்டா, ஆனால் அவர்கள் இப்பொழுது எத்தனை நியமம் / ஞாயம் பேசுகிறார்கள் … கடையில் வரிசையாக நிற்பது, ( தன்) குழந்தைகளிடம் மரியாதையாக பேசுவது, உக்கார்வது, உண்பது ( ஸ்பூன் , போர்க் ) , படுப்பதில் மட்டும் கொஞ்சம் முன்ன பின்ன.

  அமெரிக்காவில் , செவ்விந்தியர்களுக்கு குளிர்க்காக கம்பளி கொண்டுக்கிறேன் என்ற பேரில், அதனுடன் மலேரியா கிருமிகளையும் அனுப்பியவர்கள் … அவர்களின் யுத்தத்திற்கு தர்மமே கிடையாது ….

  தொடருங்கள்…

  • எந்தப் பதிவுக்கும் இந்த அளவிற்கு பயந்து இல்லை. ஒவ்வொரு பதிலையும் மின் அஞ்சலில் பார்க்கும் போது திறக்கும் போது படிக்கும் போது அத்தனை பயமாய் இருக்கிறது. மெத்தப் படித்த மேதாவிகள் உள்ளே வந்து புகுந்து சாட்டையை சுழற்றி விடுவார்களோ என்று. காரணம் அத்தனை கடினமாக விஷயங்களை எளிமையாக சொல்கிறேன் என்று ஏச்சுக்கள் வாங்கி விடப் போகிறோம் என்று. நல்ல வேளை எழுத்தாளர் பா. ராகவன் கூட மொழி நடையை (இன்னமும் மாற்ற வேண்டுமா சுந்தர்?) குறித்து தான் அறிவுரை அளித்துள்ளார். நன்றி சுந்தர்.

   உங்களின் படுக்கும் போது தான் முன்னே பின்னே என்ற வார்த்தைகள் சிந்திக்க வைத்தது சில நிமிடம் மனம் விட்டு சிரிக்கவும் வைத்தது. நல்ல எளிமையான உதாரணம்.

 3. அன்புள்ள ஜோதி கணேசன்,

  உங்கள் அஞ்சலுக்குப் பிறகு இந்தப் பதிவைப் படித்தேன். எழுதுமுன் ஒருமுறை வாயால் சொல்லிப்பாருங்கள். உச்சரிப்புக்கு உகந்த சொற்களை மட்டுமே எழுத்தில் கொண்டுவருவதன் மூலம் வாசிப்பை இன்னும் எளிதாக்க முடியும்.

  • வணக்கம்.

   எனது துரோணச்சாரியர் அல்லது எழுத்தாளர் பாரா (பா.ராகவன்)

   பட்டவர்த்தனமான விமர்சனம் என்றாலும் நண்பர்கள் நாகா, சுந்தர், சுவாமிநாதன் மற்றும் எழுத்தாளர் திரு. மாலன் அவர்கள் சொன்னதுக்கும் பிறகும் உங்கள் விமர்சனம் உணர்த்துவது

   நிறைய திருந்த வேண்டும்

   வாக்கியங்களை இன்னும் திருத்த வேண்டும்.

   உங்கள் அரசியல் பொருள் அடக்கம் உள்ள விஷயங்களையே அத்தனை எளிமையான வார்த்தைகளில் தர முடிகின்றது என்றால் மாற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

   என்ன ஒன்று மூன்று முறை அடித்து மாற்றுவதை இனி ஆறு முறை ஆக்க வேண்டும். ஆக்கபூர்வமான விஷயங்கள் என்றால் அல்லல்பட்டால் தான் அந்த அனுபவங்கள் மற்றவர்களுக்கு படிக்க சுகமானதாக இருக்கும் என்று மீண்டும் உணர்த்திய உங்களுக்கு நன்றி.

 4. வணக்கம்

  எனக்கு புரியவில்லை இந்தியா அன்பாலும், சகிப்புத்தன்மையாலும் அதன் நிலையில் சரியான உயரத்தில் இருக்கின்றது என்கின்றீர்களா

  இல்லை வெட்டி வெங்காயங்கள் என்கின்றீர்களா

  \\இங்கிலாந்தின் இன்றைய பவுண்டு மதிப்புக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் பாதிக்கு மேற்பட்ட காரணிகள் நம் இந்தியாவில் இருந்து கொண்டு போகப்பட்டது\\

  இது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளகூடியதே எனினும் இதையெல்லாம் விட்டுக்கொடுத்தவர் யார்.

  இங்கிருந்து எடுத்துப்போனவன் சரியாக அவற்றை உபயோகப்படுத்தி வளம் கண்டான் எனில் இந்த மண்ணின் மைந்தர்கள் என்ன செய்துகோண்டு இருக்கின்றோம்

  இராஜராஜன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s