புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள்

கட்டுப்பாட்டை மீறியதாக கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்று ஒவ்வொரு கட்சியும் கட்டம் கட்டப்படும் போது அது வெறும் செய்தியாகத்தான் நாம் படித்து விட்டு மறந்து விடுகிறோம்?

ஆனால் எந்தக் கட்டுப்பாடு? மீறியதால் கட்சிக்கும் நாட்டுக்கும் என்ன பாதிப்பு வந்தது என்பதை தொடர்ந்து படிக்க நமக்கு அவஸ்யம் இருக்காது என்பதாலே பல விஷயங்கள் நம்முடைய பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதாய் இருந்து விடுகின்றது.

வட்டம், மாவட்டம் என்றால் அது ஒரு சிறிய பிரச்சனை. பெரும்பாலும் பணத்தின் அடிப்படையிலும், கிளர்ந்து எழுந்த ஈகோ அடிப்படையிலும் இருக்கும். அதுவே ஒரு தேசிய கட்சியின் முக்கியத் தலைவருக்கு அது நேரும் பட்சத்தில் ஊடகத்தால் ஊதி பெரிதாக்குவதும் பாதிக்கப்பட்டவரின் ஊதுகுழலாகவும் மாறி விடும் போது, அவரின் தனிப்பட்ட வளர்ச்சியை இந்திய சரித்திரத்தில் கறையாக, களங்கமாக சில சமயம் கண்ணீர் வடிக்கக்கூடிய காட்சியாகவும் மாற்றிவிடுகின்றது.

மீண்டும் பாகிஸ்தான் தந்தை திரு.ஜின்னா அவர்கள் உயிர்த்து எழுந்துள்ளார். காரணம் திரு. ஜஸ்வந்த் சிங்.

திரு. அத்வானி அவர்கள் அன்று பாகிஸ்தானில் ஆற்றிய பெருமை உரைக்கும் இவருக்கும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? இத்தனை உழைப்பும் அர்பணிப்பும் ஒரு கால் கடுதாசியில் கரைக்கப்பட்டு விடுமா? புத்தகம் தான் காரணம் என்றால் அத்தனை பெரிய புத்தகத்தை படிக்கவே பத்து மணி நேரமாவது வேண்டுமே? சரியா? தவறா என்று உணர்வாளர்கள் உணர்ந்து கூட்டும் கூட்டங்கள் குறைந்தது இரண்டு மணி நேர விவாதமாகவும் இருக்க வேண்டுமே?

அப்படியென்னறால் வேறு என்னவாக இருக்க முடியும்?

இந்த நிகழ்ச்சிதான் எனக்கு இந்தியா சுதந்திரம் வாங்கிய போது முன்னும் பின்னும் நடந்த நிகழ்ச்சிகளையும், பங்கெடுத்த தலைவர்களையும், பரிதவித்த மக்களையும், இழந்த சொத்துக்கள், வலி நிறைந்த வாழ்க்கை அத்தனையும் யோசிக்க வைத்து பரணில் உள்ள புத்தகத்தை துலாவ வைத்தது.

என்னுடைய நோக்கம் எவரையும் பற்றிய தனிப்பட்ட விமர்சனம் அல்ல. என்னுடைய ஆதங்கம் எல்லாம் இந்தியாவின் குறிப்பிட்ட கால கட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை குறிப்பாக சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளை சுய சுத்தியோடு ஆத்ம திருப்தியோடு மறைக்கப்படாத அந்த எல்லா நிகழ்ச்சிகளையும் யாருமே தந்து விடவில்லை என்ற ஆதங்கத்தால் பதிவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நம்முடைய நாட்டின் பாதி விஷயங்களை உண்மையாகவே உணர வேண்டுமென்றால் வௌிநாட்டில் இருந்து வந்து எழுதியவர்களால் தான் நாம் உணர்வு பூர்வமாக அறிந்து கொள்ள முடியும்.

அவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் பெரும்பாலும் உண்மை இருக்கும். அந்தந்த கால கட்டத்தில் நம்மவர்களால் எழுதப்பட்ட நிகழ்வுகள் நூறு சதவிகிதம் உண்மையிருந்தால் இருந்தால் இன்று திரு. ஜஸ்வந்த சிங்கின் சர்ச்சை புத்தகம் சக்கை போடு போடாது?

அவர் புத்தகத்தின் அடிநாதமே பாகிஸ்தான் பிரிந்த காரணம் திரு.ஜின்னா அவர்களை விட திரு. நேரு அவர்களுக்கும் திரு. பட்டேல் அவர்களுக்கும் உண்டு என்பதே.

அவர்கள் காலத்தில் பிறக்காத நாம், இவர்களைப்பற்றி அவவ்போது வௌிவந்து கொண்டுருக்கும் இது போன்ற சர்ச்சை புத்தகத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? இவர்கள் சொல்வதை மட்டும் தான் நம்ப வேண்டுமா?

அவரவரின் பார்வையில் சுய சார்பு சிந்தனையோடு வௌிவந்த அத்தனை சரித்திர எச்சத்தை வைத்து தான் படித்தும் பாதுகாத்தும் கொண்டுருக்கிறோம். எழும் சந்தேகத்தை, எந்தக் கேள்வியையும் நாம் ஆசிரியர்களிடம் கேட்டு விட முடியாது. கல்வி திட்டத்தைப் போலவே நம்முடைய தனிப்பட்ட கல்வி வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் திரு. தார்க்ஷியா என்ற புனைபெயரில் எழுதிய எழுத்தாளர் என்பவர் எழுதப்பட்ட புத்தகத்தை அந்த புனித மனிதர் எழுதிய ” இந்திய விடுதலையின் இறுதி நாட்கள் ” தமிழ் கூறும் நல் உலகத்தில் எத்தனை பேர்கள் படித்து இருப்போம்?

திரைப்படத்தின் ஒரே ரீல் மட்டும் நீங்கள் பார்த்து விட்டு அந்தப்படத்தின் மொத்த கதையையும், சாகசத்தையும், வலிமையையும் உங்களால் உணர்ந்து விட முடியுமா?

மொத்த சுதந்திரம் பெற்ற கதையும் தெரிந்தால் தான், பெறுவதற்கு முன், பெற்ற போது நடந்த திரை மறைவு நிகழ்ச்சிகள், பிரிவினை காரணங்கள், பிரிந்த போது நடந்த வர்ணிக்கவே முடியாத சோகங்கள் என அத்தனையும் தெரிந்தால் மட்டுமே இன்று உயிர்த்த திரு. ஜின்னா அவர்களின் தரம் பற்றியும் மொத்த தலைவர்களின் தராதரம் பற்றியும் புரிந்து கொள்ள முடியும்.

எந்த சுய சார்பும் இல்லாமல், ஐயோ இது அழுக்கு. இதையெல்லாம் வௌியே சொல்லி ஏன் மானத்தை வாங்க வேண்டும். மறைக்கப்பட்டது மறக்கப்பட்டதாக இருந்து விடட்டுமே என்று பயந்து கொண்டு அவர் மட்டும் எழுதாமல் இருந்தால் எது நிஜமான சுதந்திரம்? நாம் பாடத்தில் படித்த விசயங்கள் போலத்தான் இந்த புனித சுதந்திரம் கிடைத்ததா? ஏன் பாகிஸ்தான் என்ற நாடு தோன்றியது? பாகிஸ்தான் தோன்றியதற்கு திரு. ஜின்னா மட்டும் தான் காரணமா? நாம் நேசமாய் இருக்கும் தேசத்தலைவர்கள் அத்தனை பேரும் அதற்குரியரியவர்கள் தானா? ஒரு வேளை பாகிஸ்தான் என்ற நாடு தோன்றாமல் இருந்தால் நம்முடைய பாதி வழித்தோன்றல்களின் பரிதாப மரணங்கள் ஏன் இன்னமும் எல்லைகளில் நடந்து கொண்டுருக்காதே? என்பதன் போன்ற பல உண்மையான அர்த்தமே தெரியாமல் போயிருக்கும்?

திரு. தார்க்ஷியா அவர்கள் எந்த கால கட்டத்தில் எந்த பத்ரிக்கையில் எழுதினார் என்பதோ அவரின் சுய விபரங்கள் குறித்தோ அதிகம் இல்லை. ஆனால் வௌிவந்த முதல் பதிப்பு ஆண்டு 1994, அலைகள் வௌியீட்டாளர்களால் 353 பக்கங்கள் கொண்ட (கோடம்பாக்கம், சென்னை) தமிழ்நாடு அரசின் பரிசையும் பெற்ற நூல் இது.

கீதை,பைபிள்,குரான் போன்ற அனைவருமே மதிக்கக்கூடிய பொக்கிஷங்களை எனக்குத் தெரிந்தவரையில் யாருமே விமர்சனப் பார்வையில் பார்த்தது இல்லை. படிக்கும் யாருமே அதனுடன் ஒன்றிப்போய் அவரவர் பார்வையில் அதன் மொத்த பரவசத்தையும் பகிர முடியா விட்டாலும் அவர் அவருக்குண்டான தகுதிகளுடன் அதை படைத்து மகிழ்வார்கள்.

அதற்கு சமமான இந்த நூலை சில பதிவுகளாக தருவதே என் நோக்கம். காரணம் திரை உலகம், அரசியல், ஆன்மிகம், நிழல் உலகத்தைப் போலவே நமக்குத் தெரியாத வலி நிறைந்த கறைகள் அதிகமான சுதந்திர பெற்ற நிகழ்வுகளை அந்த உலகத்தை பகிர்ந்து கொள்ள தயாராய் இருப்பவர்கள் பின் தொடருங்கள்………………..

ஒரு வேளை இன்று வாழ்ந்து கொண்டுருக்கும் உங்கள் ஆதர்ஷண தலைவர் குறித்தோ, அவர்கள் மீது நீங்கள் வைத்துருக்கும் தனிப்பட்ட அபிப்ராயங்களோ, இன்று வார்டு கவுன்சிலர் கூட வசதியாய் வாழ்ந்து கொண்டுருப்பதை பார்த்துக்கொண்டுருக்கும் நீங்கள் இந்த பதிவை முழுமையாகத் தொடர்ந்தால் இத்தனை அவஸ்த்தைகளுடன் பெற்ற சுதந்திரம் தந்த ஜனநாயக சுவாச காற்று குறித்து உங்கள் சிந்தனையில் வேறு சில வித்யாச எண்ணங்கள் உருவாக்கக் கூடும்?

Advertisements

4 responses to “புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள்

  1. ஆரம்பிங்கள் …. நானும் கூட வருகிறேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s