பய வரிசை பத்து

1. முந்தைய தலைமுறைகளை விட மேம்பட்ட முன்னேற்றத்தை எல்லா துறைகளிலும் இன்றைய இளையர் கூட்டம் பாலின பாரபட்சம் இல்லாமல் வெற்றியடைந்து இருக்கிறார்கள். பாராட்டக்கூடியது என்றாலும் சமீப ஊடக செய்திகளிலும் உருவாகும் அனைத்து பிரச்சனைகளான குற்றங்களிலும் மிக அதிகமாக பதின்ம வயதினரும், மாணவ சமுதாயமும் ஈடுபடுவதாக காட்டும் படங்களில் கூட பயமில்லாமல் பல் இளித்துக்கொண்டுருப்பது ஏன்?

2. மேம்பட்ட சுதந்திரம் வேண்டும், மேலான 33 சதவிகிதமும் வேண்டும் என்று மார் தட்டும் பெண்கள் கூட்டத்தில் அதிகமான காலாவதியான கன்னியர் கூட்டம், மாண்புகளை புறக்கணிக்கும் உடைகளும், மனதிற்குள்ளே மறுக வைக்கும் கலாச்சார சீரழிவு ஊடக தொடர்களை இத்தனை ஆர்வமாக ஆதரிப்பது ஏன்?

3. மண் பயனுற வேண்டும், கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாகி கரை சேர்ப்பேன், உண்மை நேர்மை துணிவு, உண்மையின் உரைகல், உலகத் தமிழர்களுக்கான ஒரே ஊடகம், முந்தித் தந்து முன்னேறிக் கொண்டுருப்பது, அத்தனை வயதுக்கு மொத்தமான ஒரே இதழ் போன்ற அத்தனை செய்தி சாதனங்களும் உண்மையான அக்கறையுடன் சிறப்பாய் முன்னெடுத்து செல்ல முயன்று முடங்கி கிடக்கும் எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற ஏராளமான சமூக அக்கறை உள்ளவர்களை ஆதரிக்காமல் இருப்பது ஏன்?

4. அத்தனை ஆயிரம் கோடிகள் அங்கு ஸ்விஸ் வங்கியில் முடக்கப்பட்டு இந்திய பொருளாதராம் மொத்தமும் மூச்சு முட்டிக்கொண்டுருப்பது நன்றாக தெரிந்த போதிலும் மீட்பதற்கான பேச்சு வார்த்தையே வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்குவோம் என்று எதார்த்தமாக சொல்கிறாரே இது யாருக்கு உணர்த்தும் அறிகுறி? மொத்த ஊடகமும் அமைதி காப்பது ஏன்?

5. மதம் தாண்டி மனிதம் மட்டுமே பார்க்கக்கூடிய நல்ல பல லட்ச மனிதர்களை பெற்றுள்ளது எல்லா மதங்களுமே என்றாலும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட இடங்களில் நடக்கும் போது அத்தனை மனிதர்களும் அதை முன்னெடுத்து செல்பவர்களை அடக்காமல் இருப்பது ஏன்? சார்ந்தவர்களை பார்க்காமல் மொத்தத்தையுமே சார்பாக பார்ப்பது ஏன்?

6. கணக்கற்ற சொத்துக்கள் சேர்த்து இருந்த போதிலும் அமைதியாய் வாழ சகிப்புத்தன்மையை அதிகம் பெற்ற இந்தியனான இருப்பது கூட தவறு இல்லை. இருபது வருடங்கள் இருந்த போதிலும் தேர்தல் வந்ததும் மட்டும் கட்சி மாறியவர்களைக் கூட கணக்கில் கொள்ளாமல் அவர்கள் நமக்கு நல்லது தான் செய்வார்கள் என்று அதீத நம்பிக்கை கொள்வது ஏன்?

7. ஓழுக்கம் உயிரினும் ஓம்மப்படும் என்பது போய் ஓழுக்கமாய் வாழ்ந்து ஓட்டையாண்டி ஆகி விடாதே என்ற அளவிற்கு ஓழுங்கீனம் மட்டும் சேர்த்து தரும் சொத்துக்கள் வைத்து அளிக்கும் சமூக அங்கிகாரம் ஏன்?

8. பட்டங்கள் வாங்கினால் தம்மை பல்லாக்கில் வைத்து தாங்குவான் என்று பலவற்றையும் இழந்து தகுதிக்கு மீறிய இடத்தில், புண்ணிய ஆத்மாக்களுக்கு மொத்த சொத்தில் ஒரு பங்கை நன்கொடை கட்டணமாக செலுத்த முன்வருவது ஏன்?

9. விண்னை முட்டும் விலைவாசி உயர்வு, விளங்கிக் கொள்ள முடியாத குறீயீடு சமாச்சாரங்கள் என்ற போதிலும் விருந்தோம்பல் முக்கியம் என்று கடன் வாங்கி கணக்கற்ற ஆடம்பரத்தில் கண்களை உறுத்தும் காட்சியாய் நடத்தும் ஆரம்பர திருமணங்கள் ஏன்?

10. முன்னேறி விட்டோம் என்ற வாக்குறுதிகளும், முன்னேறிக் கொண்டுருக்கிறோம் என்ற செய்திகளும் படித்துக் கொண்டுருக்கும் நான் பருப்பு வகைகள் இல்லாத பக்குவமான உன் சமையல் திறமை ருசிக்க ஆசை என்றால் இல்லத்தரசி இனிமையான முகத்தை மாற்றி விடுகிறாளே ஏன்?

Advertisements

4 responses to “பய வரிசை பத்து

 1. விண்னை முட்டும் விலைவாசி உயர்வு, விளங்கிக் கொள்ள முடியாத குறீயீடு சமாச்சாரங்கள் என்ற போதிலும் விருந்தோம்பல் முக்கியம் என்று கடன் வாங்கி கணக்கற்ற ஆடம்பரத்தில் கண்களை உறுத்தும் காட்சியாய் நடத்தும் ஆரம்பர திருமணங்கள் ஏன்?

  ரொம்ப நாளா என் மண்டைய குடையும் கேள்வி???? நான் கண்டிப்பா அப்டி பண்ண கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன் பாக்கலாம்….

  அருமை ஜி……

 2. நீங்க சொல்ற பத்தும் முத்து…

  யாரோ ஒருத்தர் , இந்த பசங்களுக்கு பொறுப்பே குடியாது, எதையாவது கற்க வேண்டும் என்ற ஆவல் துளி கூட கிடையாது , பொறுமை துளி கூட கிடையாது, ஒழுக்கமும் இல்லை …இப்படி சொல்லிக்கொண்டே போனார். …எப்ப தெரியுமா ????அந்த யாரோ ஒருவர் – ரொம்ப காலத்து முன், அத்தாவது கி.மு. வில் , ஒரு கிரேக்க தத்துவ ஞானி … அரிஸ்டாட்டில் சொன்னதாக ஒரு பதிவில் ரொம்ப நாட்களுக்கு முன் படித்தேன் …இப்பவும் அதே பல்லவி தான் ..பார்த்தீங்களா !!!!!

  நக்கீரன் பேசியதற்கு சிலாகித்து கொள்கிறீர்களே… நம்ப அண்ணன் ஜே.கே.ரித்தீஷ் பற்றி இது மாதிரி எழுதுங்கள் ..பூரண கும்பமே வந்தாலும் வரலாம்…

  • மிகுந்த ஆச்சரியமாய் இருக்கிறது.

   உங்களுடைய அனுபவங்கள் சொல்லி வரும் போது கூட யார் மீதும் கோபம் இல்லாமல் அதை ஒரு பாடமாகத்தான் எடுத்துக்கொண்டு பயணித்து வந்துள்ளீர்கள்? இந்த வார்த்தைகள் மூலம் தான் தொடக்கத்தில் நீங்கள் என்னை ஆசிர்வதித்த வாசங்கள்.

   இந்த நிமிடம் வரையிலும் நான் மாறவில்லை. மீறவில்லை.

   நீங்கள் பார்க்கும் பார்வையில் அவர் எதனால் இத்தனை துன்பங்களை அடைந்தார் என்றும் அதற்குப் பின்னால் என்ன? என்று பார்க்கிறீர்கள். ஆனால் நான் பத்திரிக்கையாளராக இருக்கும் போது ஆட்சியை அதிகாரத்தை எதிர்க்கும் பட்சத்தில் அவர்களின் போராட்ட வாழ்க்கை எப்படி இருக்கிறது? எப்படி அதை மீறி வந்தார்கள் என்பதாகத்தான் நான் பார்த்தேன்.

   அது போலவே பிரபல்யம் ஆவது கடினம், மேலும் அதை தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். ஆனால் கடைசி வரையிலும் கரைபடியாத அந்த பிரபல்யத்தை கட்டுக்குள் வைத்துருப்பது மிக மிகக் கடினம் என்பதாகத்தான் (அவர் உரையாடலின் போது கலங்கிய வார்த்தைகள்) எனக்கு உணர்த்தியது.

   நீங்கள் சொல்லியிருக்கும் பிரபல்யத்தை முழுமையாக தெரியாது.

   எப்போதும் போல் அறைகுறையான நல்லதும் கெட்டதுமான விஷயங்கள் ஊடகம் மூலம் தொடர்ந்து கொண்டுருக்கிறேன். ஆனால் மொத்தத்தையும் கல்விக்கென்று இன்று வரையிலும் அவர் கரங்கள் தராளமாய் நீண்டு கொண்டுருப்பது உங்களுக்குத் தெரியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

   எத்தனை பூர்ண கும்ப மரியாதை கிடைத்தாலும் ஒரு ரூபாய் அரிசி வாங்க வேண்டுமானலும் எனது சட்டைப் பையில் அந்த ஒரு ரூபாய் இருந்தால் தானே சாப்பிட்டு விட்டு இது போன்ற பதிவு எழுதி உங்களிடம் பாராட்டோ விமர்சனமோ வாங்க முடியும்?

   விலை போகக்கூடிய வாய்ப்புகள் திருப்பூரில் எத்தனையோ இருந்தபோதிலும் விலை போகாத லட்சியங்கள் என்னுடன் பயணித்து வரும் என்னுடைய சொந்த வாழ்க்கை முக்கால் வாசி தெரிந்த நீங்களுமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s