பிரபல்யமாக வேண்டும் என்பவர்களுக்கு மட்டும்

ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் போன்ற பலரின் சரித்திரங்களையும், அவர்களுடைய நூல்களையும் படித்தேன். எனக்கு ஓர் உத்வேகம் வந்து உள்ளது. மற்றவர்களில் இருந்து வேறு பட்டு சமூகத்தில் என் பெயரையையும் பதிந்து விட்டுப் போக ஆசையாக இருக்கிறது.

அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

சமூகத்தில் மாபெரும் மனிதராக வேண்டும் என்று நினைப்பதே சிறுமையான மனோநிலை.

அற்பமாக உணர்பவர்கள் தான் வித்தியாசமாகத் தங்களைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று முனைவார்கள். சிறப்பானவராகவோ, பெருமைக்கு உரியவராகவோ ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அவசியமே இல்லை.

மற்றவர்கள் உங்களைக் கவனிக்க வேண்டும் என்று எதற்காக நினைக்கிறீர்கள்?

மற்றவர்களின் கவனத்தை கவர்ந்தவராக மாறவா ஆசை? இல்லை என்னை மற்றவர்கள் போற்றும் அளவு நடக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?

வாழ்க்கையில் எதை நோக்கினாலும் “நான் என்ன ஆவேன்? எனக்கு என்ன கிடைக்கும்? என்ற கணக்குகளை நீக்கிவிட்டு வாழ்ந்து பாருங்கள். உங்கள் திறனை 100 சதவிகிதம் முழுமையாகப் பயன்படுத்திச் செயல்படுங்கள். உங்களுக்கான ஆதாயங்களைப் பற்றிய கவனம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அமைந்து விட்டாலே நீங்கள் பெருமைக்கு உரியவராகிவிடுவீர்கள்.

தவிர ஒருவர் வாழும் நாட்கள் சரித்திரத்தில் எந்தக் கட்டத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருக்கான பெருமையும் மாறும்.

திரு மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்ற நபர் இந்தத் தேசத்துக்கு மிகத் தேவையாக இருந்த போது கிடைத்ததால் தான் மகாத்மா காந்தி ஆனார்.

மகாத்மா என்றால், மிகச் சிறந்த உயிர் என்று அர்த்தம்.

இன்றைய காலகட்டத்தில் அவர் அரசியலுக்கு வந்தால், மற்றவர்களோடு தாக்குப்பிடிப்பாரா…… யோசியுங்கள்?

அவர் வாழ்ந்த கால கட்டத்திலும் தான் பெருமைக்கு உரியவராக அறியப்பட வேண்டும் என்ற முனைப்புடனா செயல்பட்டாா? இல்லை தன் தனிப்பட்ட தேவைகளைப் பின்தள்ளி வைத்துவிட்டு, தேசத்துக்கு எது தேவையானதோ, அதற்கு அவர் முக்கியத்துவம் தந்தார்.

அதனால் திரு. காந்தியடிகள் பெருமை பெற்றார்.

உங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற ஆதாயக் கணக்கை நீக்கிவிட்டு உங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையைக் கவனியுங்கள். தானாகவே உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் கவனிப்பீர்கள். தேவையானதைச் செய்வதற்கு உங்கள் திறமையை இன்னும் எப்படி மேலோங்கச் செய்யலாம் என்று யோசிப்பீர்கள். திறமைகளைக் கூர் தீட்டிக் கொளவீர்கள்.

எனக்கு என்ன கிடைக்கும் என்ற கணக்கு விலகியவுடன் நீங்கள் பிரசாசிக்கத் துவங்கி விடுவீர்கள்.

உங்களுக்கு எந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும், எந்த அளவுக்கு மதிப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உங்கள் திறனைப் பொறுத்து தான் அமையும். தேசத்தில் உயர்ந்தவராக நீங்கள் அறியப்படலாம் அல்லது உங்கள் ஊரில் பெருமைமிக்கவராக மாறலாம். உங்கள் தெருவில் கவனிக்கபடுவராக இருக்கலாம். எதுவும் இல்லாமல், உங்கள் வீட்டளவில் மட்டுமே நீங்கள் சிறப்பானவராக மதிக்கப்படலாம்.

அதனால் என்ன?

மற்றவர்கள் உங்களை மகாத்மாக என்று அழைக்கட்டும். அழைக்காமல் போகட்டும். அது பொருட்டல்ல.

உங்கள் அளவில் நீங்கள் மகாத்மாவாக, பிரபல்ய மனிதனாக உணர்வீர்கள்.

உள் உணர்ந்தவைகள், வாழ்க்கைப் பாதை உன்னதமாக இருந்து விடுமா? என்பதில் உங்களுக்கு இன்னும் ஏதும் சந்தேகம் உண்டா?

*************ஆன்மீகத்தை பசுமையாக மேல் நோக்கி கொண்டு வந்து கொண்டுருக்கும் திருமிகு. ஜக்கி வாசுதேவ் அவர்களின் எண்ணச் சிதறலில் இருந்து……………………………………………………………………………

Advertisements

4 responses to “பிரபல்யமாக வேண்டும் என்பவர்களுக்கு மட்டும்

 1. // உங்கள் திறனை 100 சதவிகிதம் முழுமையாகப் பயன்படுத்திச் செயல்படுங்கள். உங்களுக்கான ஆதாயங்களைப் பற்றிய கவனம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையின் நோக்கம் அமைந்து விட்டாலே நீங்கள் பெருமைக்கு உரியவராகிவிடுவீர்கள்.//

  அருமையான கருத்து! பள்ளி நாட்களில் என் தோழி ஒரு முறை கேட்டாள், ‘நம் வாழ்க்கையை சரித்திரத்தில் பதிப்பது போல வாழ்வதால், நாம் இறந்த பின் நமக்கு அதனால் என்ன பயன்?” என்று,

  சிந்தித்துப் பார்த்தால், ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றியது. இன்றும் தோன்றுகிறது.

  உனக்கு ஆத்ம திருப்தி தரும் செயலை நீ செய்! அதன் மூலம் உனக்கு பிரபலம் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி!

  நான் பதிவிடும் போது, எனக்குள் ஓடும் மந்திரம் இது!

  • நன்றி.

   மாணவனிடம் கேள்வி கேட்ட ஆசிரியர் போல. அதற்குப்பிறகு, அதற்கு பிறகு என்று கடைசியாக அந்த மாணவன் சொன்ன அந்த ஓய்வைத்தான் இப்போது எடுத்துக்கொண்டுருக்கிறேன் என்பது போல

   அந்த மாயை உருவாக்கும் வேகத்தில் பணம், பதவி, ஆசை, அதிகாரம் எல்லாம் சேர்ந்து உருவாக்கிய குழப்பக் கலவைகள் இன்றைய ஊடகத்திற்கு பல தலைப்புச் செய்திகள். அதுவே நமக்கோ தலைமுறைகளை பயமுறுத்திக்கொண்டுருக்கும் தன் மானப் பிரச்சனைகள்.

   மாறும் ஒரு நாள்.

 2. ஜீவன் உள்ளவர்களால் தான் ஜீவ நதிகள் கூட இன்னும் வற்றாமல் ஓடிக்கொண்டுருக்கிறது.

 3. ஜக்கி வாசுதேவ் அவர்களின் மரம் நடும் பணி மிகவும் பாரட்டுக்குரியது…. ஆ.வியில் அவர் எழுதியதை ( இன்னும் வருகிறது ) படித்திருக்கிறேன். நன்றாக பல கருத்துக்கள் சொல்லிஇருக்கிறார். வாழ்க , வளர்க அவர் பணி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s