” ஓரு வி.ஐ.பி. யின் அந்தரங்க ரகஸ்யங்கள் “

நீங்கள் விரும்பும் விரும்பாத அத்தனை முக்கிய நபர்களின் ரகஸ்யங்களும் விரைவில் வௌியே வந்து விடக்கூடிய அபாயமணி சத்தம் கேட்கிறது?

சரியான நபருக்கு பொருத்தமான பதவி என்பது நம்முடைய இந்திய ஜனநாயகம் அளித்த முதல் நபர் முன்னாள் ஜனாதிபதி திருமிகு ஐயா அப்துல் கலாம் அவர்கள்.

இரண்டாவது திரு நந்தன் எம். நிலகேனி. இன்போஸிஸ் கணிணி தொழில் நிர்வாகி.

பாரதப்பிரதமர் திரு. மன்மோகன் சிங்கின் தனிப்பட்ட அக்கறையின் காரணமாக உருவாகிக்கொண்டுருக்கும் இ கார்டு அல்லது மின் அட்டை திட்டத்தின் தலைமை நிர்வாகியாக கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன்.

தொடர வேண்டிய அத்தனை துறைகளையும் தொடர்பில் கொண்டு பணியாற்ற வேண்டிய பரம அவஸ்த்தை வேலை இது. தொடங்கிய போதும் இன்னமும் எந்த விஷயங்களும் வௌியே வந்து விடவில்லை?

இறுதியாக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர் போல் அந்த அட்டை நம்மை அடையக்கூடிய யோகம் இருக்குமேயானால்?

கந்தசாமி கனவில் வைத்துள்ளவைகள் நனவானால் நூற்றியோரு சிதறுதேங்காய்?

விவசாயம்

இந்தியாவின் முதுகு தண்டுவடமே இன்று காந்தி தாத்தாவின் தள்ளுபடி பத்து ரூபாய் துண்டாக சுருங்கி விடப்போகின்றதோ என்ற அச்சம் தவிர்க்க

மொத்த நில வரைபடங்களையும் உற்று நோக்கி உள் வாங்கும் கருவிகளால் கணக்கெடுத்து சேமித்து வைத்து விட்டாலே பாதி பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும். இணைத்த இந்திய மொத்தமும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வர தட்ப வெப்ப நிலை, தானிய மகசூல், குறீயீட்டில் குதித்தாடும் விலையரசியை விரும்பும் அரசியாக வாங்குவர்களுக்கும் விற்பவர்களும் கொண்டு வர முடியுமே?

2. கல்வி

அந்தந்த மாநில வளர்ச்சி என்பது வௌியாகும் ஒவ்வொரு வருட தேர்ச்சி சதவிகித குறியீடு என்பதாக படம் காட்டிக்கொண்டுருப்பதை விட

விருது பெற்ற பள்ளிகளையும், மதிய விருந்து மட்டும் சாப்பிடும் பள்ளிக்கூடங்களையும் மொத்தமாய் ஒரே நேர்கோட்டில் கொண்டு வர,

வராந்திர, மாதாந்திர வளர்ச்சிகளை கொண்டு வந்து இறுதியில் வேறு வழியே தெரியாமல் கழுதை மேய்க்க போவோர்களையும், கையெழுத்து மட்டும் போட்டு கணக்காக சம்பளம் வாங்கிக்கொண்டுருக்கும் கண்ணியவான்களையும் கணக்கு பார்க்க உதவுமே?

3. போக்குவரத்து

வளர்ச்சிகளுக்கு அத்தனை உரமாய் இருக்கும் இந்த போக்குவரத்தில், நாமக்கலில் ஏற்றிய முட்டை சென்று அடைய வேண்டிய பஞ்சாப் மாநிலத்திற்குள் உள்ளே நுழையும் போதே வௌிவந்த குஞ்சுகள் அனைத்தும் கோழியாக கூவத்தொடங்கும் அளவிற்கு, நீட்டிய அத்தனை அதிகார வர்க்க கூண்டுக்கிளிகள் அணைவரையும் சிறகொடிந்த கிளியாக்க, ஓய்வறியா கைகள் உறக்கமறியா கண்கள் கடைசியில் சந்திக்கும் விபத்தை தடுக்க?

ஏற்றும் இடத்திலே உறுதிபடுத்தப்பட்ட ஆவணங்களையும் மொத்த சரக்குகளின் விபரபட்டியல்களை இணைப்புக்கோட்டில் கொண்டு வந்தாலே, முத்திரையிடப்பட்ட சரக்குகளுடன் உத்திரவாதமான அட்டைகளுடன் பயணிப்பவர்களை ஏன் அட்டைப் பூச்சிகள் உறிஞ்சப் போகின்றது. அவர்கள் ஏன் விலைவாசி உயர்வுக்கு மூலகாரணமாக இருக்க போகிறார்கள்? பயணிப்பது பார்சலா இல்லை வெடிகுண்டுகளா என்று ஏன் பரிசோதிப்பவர்கள் பதட்டப்படபோகிறார்கள்?

4. வேலை வாய்ப்பு

பதிந்து வைக்கும் அட்டைகள் வீணாகும் அரசின் செலவீனமாக வீட்டின் பரணில் பத்திரப்படுத்தி வைத்துருக்கும் அந்த அட்டைக்குறீயீட்டை

திறமையால் வந்தவர்கள் போக எச்சமும் சொச்சமும் ஊனமாய் பிறந்து உறுப்புகள் இழந்து சவாலாய் வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு போக ” கால் காசு என்றால் கவர்மெண்டு வேல ” என்று வரதட்சணை பணத்திற்காக தொங்கிக்கொண்டுருப்பவர்களை தொடர்ந்து வரும் சுய முன்னேற்ற வாய்ப்புகளை வகைகளை காட்டி தொல்லையில் இருந்து விடுவித்து, அவர்களை மாற்றி திருடனாக மாறாமல் இருக்க உதவலாமே?

5. வருமானம்

வசூலிக்காமலே போய்க்கொண்டுருக்கும் வங்கி கடன்கள், வராத கடன்கள் என்று நம்மை கண்களை கட்டும் பட்ஜெட் கடன்கள், வரிக்குள் வராமலேயே அத்தனையும் வாழ்க்கை வசதிகளாய் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் கடனே என்று பான் எண் வைத்துருந்தாலும்

சற்று மேம்பட்ட வசதிகளுடன் அடிப்படையில் அம்சமான வியாபாரிகளைக் கொண்ட மளிகைக்கடை முதல் அட்டகாசமான அடுக்கு மாடிகள் கொண்டு ஆட்சி புரியும் வர்த்தக பிரம்மாக்கள் வரையிலும் மொத்த விற்பனைகளையும் மொத்த கொள்முதல்களையும் வழங்கப்பட்ட அட்டை மூலம் என்று மட்டுமே அவசரப்படுத்தினால் அத்தனை பேர்களின் நதி மூலம் ரிஷி மூலமும் தெரிந்து விடுமே. என்ன ஒன்று அடுத்த நாள் தலைப்புச் செய்தியாக கிடைத்துக் கொண்டுருக்கும் ” வருமான வரியில் சிக்கிய பிரமுகர் ” படிக்காத வருத்தம் மட்டும் மிஞ்சும்.

6. இலவசம்

வளர்ந்து விட்டதாக சொல்லிக்கொண்டுருக்கும் வாழும் ஜனநாயக நாட்டில் வாக்குச் சீட்டுக்கு கையெந்தும் கஞ்சிக்கு வழியில்லாத மக்களின் அறியாமை கூட பெரிதாக தோன்றவில்லை? சேர வேண்டிய சரியான இலவசங்கள் தகுதியான நபர்களுக்குத் தான் போய்ச் சேர்கின்றதா என்பதை உறுதிபடுத்த?

ஒவ்வொரு தாலூகா கீழ் வரும் அனைத்து கிராமங்களில் ஆறாத ரணங்களுடனும் அடிப்படை வசதிகளையே இன்று வரையில் பெறாமல் அலைந்து கொண்டுருப்பவர்களை மொத்த வசதிகளுடன் தராதரம் பார்த்து உறுதிபடுத்தப்பட்ட இறுதியான புகைப்பட அடையாளங்கள் ஒன்று மட்டும் போதுமே? மான்யங்கள் என்பது மன்னர் பரம்பரையோடு போனதாக ஆகி விடுமே?

7. ஜனநாயக உரிமை

வாக்களிக்காத குடிமகன்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகள் என்ற வௌிநாட்டுச் சட்டம் கூட வேண்டாம். பார்க்க முடியாத படங்களையும் தொடர்களை மொத்தமாக பார்க்க வாக்களிக்க மறந்து உள்ளே இருப்பவர்களை துறத்த முயற்சிப்பதோடு

திருமங்கல தேர்தல் செலவை விட கூடும் போலிருக்கே என்ற அச்சம் வேண்டாம் ஆள வேண்டும் என்று ஆசைபடுவர்களுக்கு? பூத்தில் வந்து சீட்டு கொடுக்க வேண்டியவர்களுக்கு வெத்திலை பாக்கு வைத்து அழைக்க வேண்டாம்? வருடா வருடம் நீக்கியும் திருத்தியும் படுகின்ற அரசாங்க ஊழியர்களின் அவஸ்த்தைகள் கூட வேண்டாம். மொத்தத்திற்கும் வருடா வருடம் எகிறிக்கொண்டுருக்கும் தேர்தல் பட்ஜெட் பார்த்து பயப்படாமல் இருக்கலாமே?

8. உள்ளே வௌியே

உலகத்தில் ஒவ்வொரு நாட்டு கடவுச்சீட்டுக்கும் ஒரு மதிப்பு உண்டு. அதனால் தான் என்னவோ எத்தனை கடுமையான சட்டங்கள் வந்து கொண்டுருந்தாலும் மூட முடியாத கடையை வைத்துள்ள கள்ள மார்க்கெட் கடவுச்சீட்டு பாவாத்மாக்களை மட்டும் இன்று வரையில் எந்த அச்சுறுத்தல் வளையத்திற்குள்ளும் கொண்டு வரமுடியவில்லை.

இந்தியாவில் எத்தனையோ அதிசயங்கள் உண்டு. அத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உள்ளே வந்து விட்டால் போதும் பாகிஸ்தான் நாட்டுக் காரரும் அவர் விரும்பக்கூடிய எந்த பங்களிப்பையும் தந்து விட முடியும்?

விரும்பாவிட்டாலும் பங்ளாதேஷ் காரரும் கூட வாக்காளர் அட்டை பெற்று குடிமகனாக மாறி விட முடியும்?

அனாமதேயதாக கணக்கில் எடுத்துக்கொண்டு அருணாசல பிரதேசத்தையும் சீனாவால் அங்குள்ள அத்தனை குடிமகனையும் தனது குடிமகனாக நினைத்துக் கொள்ள முடியும்?

தொகை அதிகம். இனங்கள் இதை விட அதிகம். மொழியும் வித்யாசமான வாழ்விடங்கள் அத்தனையும் விட மிகுந்த தொல்லை?

எல்லாமே சரி தான்.

மொத்த அரசு தனியார் ஊழியர்கள், அங்கீகரிகப்பட்ட அனைத்து தொழிற்கூட பணியாளர்கள், எல்லா நிலையிலும் உள்ள பள்ளி கல்லூரிகள், வாகனங்கள் வைத்துருப்போர், வசதிகளுடனும் மட்டும் வாழ்ந்து கொண்டுருப்போர்களை ஒரே அட்டைக் கணக்கில் கொண்டு வந்தாலே பாதிக்கு மேற்பட்ட கூட்டலில் வந்து விட மாட்டார்களா?

சொச்சமாய் உள்ளவர்களை தரம் பிரித்தாலே பாதிக்கு மேற்பட்டவர்கள் பக்கத்து நாட்டுக்குள் ஓடி ஒளிந்து விட மாட்டார்களா?

எச்சமாய் மிஞ்சுபவர்கள் என்ன சமூக குற்றங்களை செய்து விட முடியும்? அவர்களின் அவர்களின் அன்றாட ஜீவனத்துக்கே ஜீவன் இல்லாத பாடுகளுடன் வாழ்ந்து கொண்டுருப்பவர்களால்?

நாமும் நம் குழந்தைகளும் வளர வேண்டுமனால் பொய் சொல்லி விற்கும் “காம்ப்ளான்” போதுமானதாக இருக்கட்டும்?

நாட்டின் நல்ல வளர்ச்சிக்கு?

ஒரே ஒரு முறை மிகப்பெரிய அனைத்து அந்தரங்க ரகஸ்யங்களையும் சேமிக்கும் செலவீனம். அதுவே அத்தனை இனங்களையும் தலைமுறை தாண்டியும் வார்ப்பாக வளர்த்தெடுத்து முன்னெடுத்து செல்லும் முக்கிய ஆவணம்.

மொத்தத்திலும் ஒரே ஒரு பிரச்சனை?

எல்லோருடைய ரகஸ்யங்களையும் காக்கக்கூடிய இடத்துக்கு வரக்கூடிய “தல” தறுதலயாய் இருந்துவிடக்கூடாது.

Advertisements

4 responses to “” ஓரு வி.ஐ.பி. யின் அந்தரங்க ரகஸ்யங்கள் “

  1. வார்த்தைகளின் வலிமையை விட, அதை கோர்த்திருக்கும் விதம் அழகு!

  2. எதிர்பார்த்து வந்தவர்களின் ஏமாற்றம் எனக்கு ஏராளமான அனுபவங்களை உணர்த்தியது?

    உங்களின் ஏற்றமான வார்த்தைகள் என்னை உயிர்ப்பில் நிறுத்தியது.

  3. இது பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரிய வில்லை…. ஆனால் இது மிக பெரிய திட்டம் , இதன் வீச்சு, வரும் தலை முறைகளுக்கு கிட்டும் என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாது. ..

    நல்ல அருமையான தகவல்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s