குருடாகும் கண்களுக்கு தங்க நிற கண்ணாடி?

திருப்பூரில் முழுமையாக மூன்று வாரங்கள் ஒரு சந்துக்குள் போகாமல் இருந்தால் அங்கு ஒரு புதிய கட்டிடம் முழுமையுற்று காட்சியாய் காண்பது இன்று வரையில் எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம் தான்?

குறியீடுகள் விழுந்து விட்டன? மொத்தமும் சர்வநாசம்? முன்னே மாதிரி இல்லீங்கோ? வித்துட்டு ஊருக்கு போயிர்லாம்ன்னு இருக்கேன்? விற்பதற்கு முயற்சி செய்து கொண்டுருக்கிறேன்? வீணாகிப் போச்சு மொத்த வாழ்க்கையும்?

விளக்கு வௌிச்சத்தில் தன் வாழ்க்கையை தேடிக்கொண்டுருப்பதாக சொன்ன எவருமே அத்தனை சீக்கிரம் திருப்பூரைப் விட்டு வௌியேறி நான் பார்த்ததே இல்லை. விடாது துரத்தும் கருப்பு போல் அவரவருக்கு தெரிந்த தெரியாத மாய மானை துரத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

சிலருக்கு எளிதில் சிக்கி விடும். சிலருக்கு சிக்கலாக்கி சிரிக்க வைத்து விடும்.

திருப்பூர் நூல் கண்டுகள் சிறைப்படுத்தினாலும் சிறையில் தள்ளாத வாழ்க்கை வாழும் வரையிலும் திருப்பூர் வந்து வாழ்ந்து கொண்டுருக்கும் அனைவருக்குமே நம்பிக்கையுளள ராம ஜென்ம பூமி தான்.

வாழ வந்து நுழைந்து போது, வளரத் தொடங்கும் குழந்தைகளின் நடை போலவே சாலைகளும் தத்க்காபித்தக்கா என்று தான் இருந்தது. சாலையில் பயணம் செய்தாலே நாடி நரம்புகள் நம்மிடம் கெஞ்சம். முழுமையாக பணி முடிந்து தூங்கும் போது முண்டி வந்து பார்க்கும் முதுகு வலி. அத்தனை ஆயாசம் தந்த சாலைகள் இன்று ஆத்தா தந்த இனிப்பு பயாசம் போல் இனிதாய் மாறியுள்ளது.

புதைகுழியா? இல்லை புதிரான குழியா? என்று முணங்கிக்கொண்டே முழிந்த சாக்கடைச்சந்துகள் அனைத்தும் இன்று பூக்கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்ற அளவிற்கு மாறியுள்ளது.

பெட்டிக்கடை வைத்து பிழைத்தவர்களும், ஓட்டுக் குடித்தனத்தில் தன் உறவுகளை துறந்து வந்து வாழ்ந்தவர்களும் இன்று அத்தனை சிறப்பாய் வாழ்ந்து வாழ்க்கையின் வசந்த பக்கங்களை வரவுகளாக மாற்ற முடிந்துள்ளது.

நகரமயமாக்கல் என்றாலே நாலும் நடப்பதை வேடிக்கைப் பார்க்கத்தான் முடியும். வலிகள் அனைத்தும் உளிகளாகத்தான் எண்ணிக்கொள்ள வேண்டும் என்று தத்துவம் தந்த உலகமயமாக்கல் தாய்க்கு வணக்கத்தை தவிர வேறு என்ன விளக்கங்கள் நம்மால் சொல்லி விட முடியும்?

ஒதுக்கி விட வேண்டும் என்று முயற்சித்தால் நாற்பது ஊர்களின் நாட்டாமை தீர்ப்பாக நாம் ஓதுங்கி ஓரம் தள்ளி விட மாட்டோமா?

ஒவ்வொரு தொழிலுக்கும் பின்னால் ஓராயிரம் நோய்கள்.

நோய் நாடி என்று சொல்லிதந்த ஐயன் கூற்றை நோக்கினால் நாங்கள் வாழும் திருப்பூர் வாழ்க்கை, திருப்பூரில் கூறாக பிரிந்து விடும் அபாயமுண்டு.

பருத்தி பஞ்சை பக்குவப்படுத்தும் ஆலைகள், பக்குவமாக்கிய பஞ்சை நூலாக்கும் நூற்பாலைகள்,, நூலை துணியாக்கும் எந்திர ஆலைகள், ஆடையாக இறுதியாக தைக்கும் ஏற்றுமதி நிறுவனம் என்று படிகள் கடந்து வரும் போதே நம்முடைய மூச்சும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத்தான் செய்கின்றது.

வேறு என்ன செய்ய முடியும்? இத்தூண்டு சின்ன மூக்குத்தூவாரத்திற்குள் எத்தனை பஞ்சுத்துகள்தான் சேமிக்க முடியும்? நுரையீரல் பை என்ன நூர்ஜகான் தந்த தாஜ்மகால் போன்ற விஸ்தாரமாகவா இருந்து விடப்போகின்றது?

சேமிக்க சேமிக்க அந்த தொழிலாளி சேமித்து வைத்துருக்கும் சேம நல நிதியைக் கரைத்து சில சமயம் உயிரையும் விரும்பி எழுதி வைத்த ஆற்றில் அஸ்தியாய் கரைத்து விடும்.

உள்ளே வாழ்ந்தால் பஞ்சு, வௌியே வந்தால் போக்குவரத்து தூசி, பொட்டால் காட்டில் நின்றால் கூட அடிக்கும் காற்றில் அத்தனையும் புகையாக நம்மை கடந்து செல்லும் போது புழுத்துப்போன ஆயுளை புழுக்கள் அரித்துக்கொண்டுருப்பது தெரிந்தும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து தானே தொலைக்க வேண்டியிருக்கிறது?

ஒரு லட்ச ரூபாய் வண்டிக்கு உறவுகள் அனுமதி இல்லாததால் உலுக்கிய காட்டில் கடைசியில் உருவாகி வௌி வரவேண்டிய வண்டிகளுக்குப் பதிலாக சவங்கள் மட்டுமே சர்வசாதாரணமாய் அணிவகுத்தது. அழித்த அத்தனை காடுகளும் இனிமேல் மீண்டு வர எத்தனை காலங்கள் பிடிக்குமோ?

புகை சுவாசித்து மாண்டவர்களின் வாரிசு கூட மாண்டு விடக்கூடிய வயதுக்கு வந்தும் இன்னும் அங்கு நீதி தேவதை வயதுக்கு வரவில்லை?

அடித்த அம்மிக்காற்றில் எத்தனை வேகமாக பரவியதோ அத்தனைக்கும் இல்லாத காடுகளும், இருந்த அத்துவான பொட்டல் காடுகளும் அனைவரையும் சுருட்டி சுகப்படுத்தி இன்று வரையிலும் வந்து பிறக்கின்ற வாரிசுகள் வரைக்கும் குறையாய் உள்ள உறுப்புகள் பார்த்து அதிகார வார்க்கம் குமுறவில்லை,

விதி என்று நொந்து வாழ்வதற்குத்தான் நம்மிடம் ஏராளமான பொக்கிஷங்கள் உண்டே?

இந்தியாவில் உள்ள 21 சதவிகித காடுகளில் இன்று வரையிலும் 2 சதவிகித காடுகள் மட்டும் தான் அதே அடர்த்தியாய் உள்ளது. 9 சதவிகிதம் அதன் ஆளுமையை முடித்துக்கொண்டு முடி வெட்டத் தெரியாத சவரக்கடைக்காரர் போல் முழித்துக்கொண்டுருக்கிறது.

திருப்பூர் பசுமை இயக்கம் சார்பில்

ஈஷா அறக்கட்டளை திருப்பூரில் 25,000 மரக்கன்றுகள் நடக்கூடிய விழா விரைவில் நடைப்பெறப்போகின்றது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்களின் பங்களிப்புகள் என்று ஆன்மிகவாதியாய் அவதாரமாய் வாழ்ந்து கொண்டுருக்கும் திருமிகு. ஜக்கி வாசுதேவ் அவர்களின் முன்னேற்பாடுகளில்.

அத்தனை கன்றுகளையும் மூன்று ஆண்டுகளுக்கு பராமரித்து காக்க வேண்டிய அவஸ்ய திட்டங்களுடன் சேர்த்து.

பாருங்கள் ?

நல்ல திட்டங்கள் அவதார பூமியில் அவதார புருஷர்களால் முன்னெடுத்து கொண்டு செல்லப்படும் போது திட்டங்கள் கூட வட்டமாக முடிந்து விடாமல் அத்தனையும் தாண்டி அட்டகாசமான முன்னேற்பாடுகளுடன்.

ஒவ்வொரு முறையும் போக்குவரத்து நெரிசலில் திருப்பூர் மேம்பாலத்தை பயத்துடன் கடக்கும் போது கீழே தெரியும் ரயில் நிலையத்தின் ஓரத்தில் இருக்கும் மொத்த மரக்கூட்டங்களும் வாழ்க்கையை உணர்த்துவதாய் தெரியும்?

கரித்தூசியில் வெந்து கருகிய மொத்த இலைக்கூட்டத்தில் ஒன்று இரண்டு பசுமை இலைகள் பக்கமாய் மேலே பார்த்து முண்டிக்கொண்டு வந்து வௌிச்சம் பார்த்து சிரித்துக்கொண்டுருக்கும்???

மரம் வளர்ப்போம். மனிதம் காப்போம் என்பது கூட பழமையானதாக இருந்து விட்டு போகட்டும்.

வளர்ந்த மரங்களின் சிரசுகளை வெட்டும் கைகள் விளங்காமல் போகட்டும் என்று வீறு கொண்டு எழுவோம்.

பாவம் எத்தனை நாட்களுக்குத் தான் சந்தன மர வீரப்பன்கள் உயிர் வாழ முடியும்.

காலன் கணக்கில் கலாவதியாய்ப்போன அவரின் கணக்கு இங்கு பலரின் வங்கிக்கணக்குகளை வருமான கணக்காக மாறிவிட்டது.

ஓட்டகம் மேய்க்கும் எரிபொருள் பூமி கூட வனபூமியாக மாறிக்கொண்டு வரும் இந்த சூழ்நிலையில் இன்னமும் அத்தனை வர்க்கமும் முழிக்கவில்லை என்றால் நம்முடைய தலைமுறைகள் மரங்களை தாங்கள் படிக்கும் பாட புத்தகங்களில் மட்டும் தான் கண்டு களிக்க முடியும்.

கடலில் வேண்டுமானால் கலந்து விட்டு போகட்டும். ஆனால் உங்கள் கண்ணீரை மட்டும் துடைக்க முன் வர மாட்டோம் என்பவர்களை சட்டம் வேடிக்கை பார்க்கட்டும். கரைபுரண்டு கட்டுக்களை உடைத்து வரும் அத்தனை ஜீவ நதிகளையும் அதன் ஆர்ப்பாட்டத்தை நம்முடைய வயிற்று பாட்டையை போக்காத திட்டங்களை அதிகார வர்க்கம் உருவாக்காமல் இருந்து விட்டு போகட்டும்.

நாம் எப்போதும் போல் வேற்றுமையில் ஒற்றுமை என்று உலகிற்கு உரத்துக் கூறி புழுங்கி வாழ்வோம்.

ஆனால் உங்கள் வீட்டிற்கு முன்னால் நிற்கும் அந்த ஒற்றை வேப்பமரம் மொத்த குடும்பத்தின் புழுக்கத்தையும் குறைத்து விடுமே?

அப்புறம் எதுக்கு ஆர்க்காட்டார் திட்டு வாங்கப்போகிறார்?

Advertisements

5 responses to “குருடாகும் கண்களுக்கு தங்க நிற கண்ணாடி?

 1. உங்கள் வீட்டிற்கு முன்னால் நிற்கும் அந்த ஒற்றை வேப்பமரம் மொத்த குடும்பத்தின் புழுக்கத்தையும் குறைத்து விடுமே?

  அப்புறம் எதுக்கு ஆர்க்காட்டார் திட்டு வாங்கப்போகிறார்?

  அருமை ஜோதிஜி
  எங்கள் வீட்டிற்கு அருகிலும் மரகன்று நடுவதற்கு என்னால் ஆன எல்லா முயற்சியும் செய்வேன்
  BY
  T.S.MUTHU

  BY
  T.S.MUTHU

 2. என் எழுத்துக்களை விட உங்கள் எண்ணங்களை இரண்டாவது முறையாக படித்த போது கைகளுக்கு இடையே கடல் இருப்பதால் விரல்கள் அமைதியாக இருக்கிறது. உண்மை? காத்துருங்கள் வேறு ஒரு வகையில் இந்த எழுத்துக்கள் கனவாக இல்லாமல் நிஜமான காரியமாக மாறுவதை இருவரும் பார்ப்போம். புரியும் என்ற நம்பிக்கையில்?

 3. உங்கள் பதிவை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது.

  முதலில், யாராவது தினகூலிக் காரர்..வாட்ச்மேன் என்று யாராவது கிடைத்தால், என் பேருக்கு ஒரு பத்து வேப்ப மரம் நடும்படியாக ஏற்பாடு செய்யுங்கள், அவருக்கு மாதம் ரூபாய் ஐந்நூறு சம்பளம், அரை மணி நேரம் அதற்க்கு தண்ணி ஊற்ற வேண்டும் … பன்னிரண்டு மாதங்களில் ஒரு பத்து மரம் தளிர்த்து நன்றாக பெரியதாய் இருக்கும் ..

  இப்போது என் மனதில் தோன்றியது…. நான் வந்த /வாழ்ந்த ஊர்களில் … ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு மரம் ..அதாவது நான் திருச்சியில் வாழ்ந்த காலம், ஒரு பத்து வருடம் என்றால் ஒரு நூற்றி இருபத்து மரம் …ஏதோ நம்மால் முடிந்தது… அந்த கணக்கு படி சென்னையில் அற்பது மரம், திருச்சியில் 216 மரங்கள், டெல்லியில் 84 மரங்கள், பெங்களூரில் 60 மரங்கள், மும்பையில் 60 மரங்கள் …. இது எப்படி இருக்கு

 4. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s