62 க்கு அடுத்து ஏழரையா?

ஊரில் அறுபதாம் கல்யாணம் நடக்கும் போது வாழ்ந்து கொண்டுருக்கும் எல்லா வாரிசுகளுடன் போவிலுக்குள் வரும் அனைத்து மூன்றாம் நபர்களும் கீழே விழுந்து பணிந்து அந்த பெயரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதுண்டு. கணவன் மனைவி இருவரும் திருமண பந்தம் மூலமாக இணைந்து அறுபது மற்றும் என்பது வயதில் மறுபடியும் எதற்கு மறுபடியும் இந்த திருமண வைபோகம்?

தற்போதைய நவீனங்கள் தனி மனிதனின் வாழ்வாதாரத்தை கூட்டியிருந்தாலும் ஆரோக்கியமாய், அமைதியாய், எந்த வித சமூக பிரச்சனைகளும் இல்லாமல் வாழும் வசதிகளுடன் தேவையானவர்களை அரவணைத்துக்கொண்டு வாழ்வது என்பது அறுகிக்கொண்டே வருவதால் அந்த நிகழ்ச்சிக்கு அத்தனை சிறப்பு.

ஆத்தாவுக்கு, தாத்தாவுக்கு நடந்த நிகழ்ச்சிகளையும் போல் நாட்டுக்கும் அடிமை அறுபதை கடந்து கூட இலவச இணைப்பாக இரண்டு ஆண்டுகளை கடந்த இயற்கை கொடுத்துள்ள இந்த சூழ்நிலையில்

1. கல்வி

இன்று புற்றீசல் போல் தினந்தோறும் பெருகி குடிசைத் தொழில் போல் வளர்ந்து ஊடகம் வழியாக உங்கள் பைகளை திருடும் தனியார் சுயநிதிக் கல்லூரிகள், நிர்வாக ஒதுக்கீடு மூலம் “சேவை” செய்து கொண்டுருக்கும் போது உண்டான கல்வி குறித்த இன்றைய கேலிக்குறி, மண்டல் கமிஷன் உள்ளே வந்த போது எண்ணெய் ஊற்றி அல்லது ஊற்றி விட்டு மாண்ட அந்த மாணவன் தான் கேள்விக்குறியாக?

2. ஆட்சி

இருபத்தி ரெண்டாம் புலிகேசி பராக் பராக் என்பதை தாண்டி வளர்ந்து ஜனநாயகத்தால் வளர்த்தெடுக்கப்பட்டோம் என்று சொல்லி அத்தனை மாநில இந்நாள் முன்னாள் முதல்வர்களின் வாரிகளின் இடங்களைப்பார்த்து வந்த கேலிக்குறி, சமீப தேர்தலில் தேநீர் கடை வைத்து பிழைத்து கொண்டுருக்கும் பட்டாளித்தோழர் கூட பாரளுமன்ற கூட்டத்தில் காலடி வைக்கமுடிகின்றது என்பது கேள்விக்குறியாக?

3. அதிகாரம்

பிராந்திய நலம் என்பது பிரிவினைவாதம் என்று சொல்லும் அதிகார அறீவீலிகள் தன்னுடைய மாநில நலத்தை கருத்தைக்கொண்டு காய்நகர்த்துதல் பார்த்து கேலிகுறியானதாக இருந்த விஷயம், திருவள்ளுவரும், சர்வக்ஞரும் தந்த படிப்பினைகள் கேள்விகுறியாக?

4. கலாச்சாரம்

மாலை நேரம் என்றாலே மதுவுடன் ஆடும் நடனம் என்ற கவ்வோதி கலாச்சாரம் தந்த கேலிக்குறி, கணவன் இல்லாவிட்டாலும் கவுரதயா வாழ கல்உடைத்து என் குழந்தைகளை காப்பாற்றிக்கொண்டுருக்கிறேன் என்று சமீபத்தில் விருது பெற்ற சுயஉதவிக்குழு பெண்மணி சொன்ன வார்த்தைகள் கேள்விக்குறியாக?

5. பொருளாதாரம்.

விடியலே இல்லாமல் வாழ்ந்து கொண்டுருக்கும் மாநில மக்களின் அன்றாட வருமானம் இருபது ரூபாய் கூட அதிகம் என்பதாக உணர்த்திய கேலிக்குறி, விரைந்து சென்று மறுமுனையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பாலங்களும் பல்வேறு திட்டங்களும் கேள்விக்குறியாக?

6. பாதுகாப்பு

வந்த அத்தனை பேர்களும் அம்சமாக உள்ளே வந்து ரயில் நிலையத்தில் இந்த பயணிகளை குருவி காக்கா போல் சுட்டுக் கொண்டாடி தீர்த்த மகிழ்ச்சி தந்த கேலிக்குறி வருடம் வருடம் ரானுவத்தின் மொத்த ஓதுக்கீடு மட்டும் அதிகாரித்துக்கொண்டுருப்பது கேள்விக்குறியாக?

7. இந்தியன்

சகிப்புத்தன்மையை அதிகம் பெற்று விட்ட இந்தியர்களால் ஐந்தே ஆண்டுகளில் இமலாய வளர்ச்சி பெற்று விடுகின்ற ஆண்டவர்கள் தந்த கேலிக்குறி, அடுத்த வேளை சோத்துக்கு தடுமாறும் உ.பி. தலித் மக்களின் அந்த குடிசை வீட்டுக்குள் சென்று சாப்பிட்டு உரையாடி விட்டு வரும் திரு.ராகுல் காந்தி கேள்விக்குறியாக?

அறை அறையாக பிரித்து திருப்பூரில் வகிக்கும் நண்பரின் வாடகை வீட்டில் அமர்ந்திருந்த போது ஒரு வேளை ஏழரை பகவான் ஆட்சி இன்னமும் முடியவில்லையோ என்று யோசித்துக்கொண்டுருந்த போது, பார்த்த செய்தித்தாள் புகைப்படம் முஸ்லீம் பெண்மணி தனது குழந்தைக்கு கிருஷணர் வேடம் போட்டு பள்ளி விழாவுக்கு தயார் செய்து கொண்டுருந்ததைப் பார்த்ததும்?

“நம்பிக்கைகள் நசுங்கிக்கொண்டு தான் இருக்கிறது. இன்னும் மாண்டு விட வில்லை”

Advertisements

5 responses to “62 க்கு அடுத்து ஏழரையா?

 1. Hi

  எங்களுடைய இணையத்தில் தாங்கள் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. மேலும் தங்களுடைய பிளோக்கினை எங்களுடைய தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் ஆதரவுக்கு நன்றி.

  இப்படிக்கு
  செய்திவலையம் குழுவினர்

 2. ஐயா, எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்க …. நீங்க சொன்ன போடோ சமாச்சாரம் பார்த்தவுடன் ஒரு புன்முறுவலை கொண்டு வந்தது உண்மை தான்.

  (ஏழரைக்கு) நடுவில் நிறய நல்ல விஷயங்களும் வந்து போய் கொண்டிருக்கிறது … (உங்கள் திருப்பூர் ஒரு பெரிய முன் உதாரணம் )… தகவல் தொழில் நுட்பம் / கணணி துறையில் பிரமிக்க தக்க முன்னேற்றம் – நம்பிக்கை வைப்போம்

 3. ஒரே ஒரு வருத்தம். உங்களைப்பற்றி எந்தவித விசயங்களும் இல்லாதது. உங்களின் பங்களிப்புகளை பார்க்கும் போது வயது முதிர்ந்த உங்கள் தௌிவான ஆசிர்வாதம் கலந்த பாராட்டு எனக்கு பரவசமாய் இருப்பதை மறுக்க முடியாது.

  தேவியர் இல்லம். திருப்பூர்.

 4. இதை விட நம் நிலையைத் துல்லியமாக எடுத்துச் சொல்ல முடியாது. நம்பிக்கையை
  இழக்காமல் இருப்போம்.
  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s