முகவரி – சுடுகாடு. அடையாளம் – முழுக்க போர்த்திய முக்காடு

உள்ளே நுழைந்ததும் என்னையும் இழுத்துக்கொண்டு வந்து விட்டார். அவருக்கு என்னுடைய ஒப்பந்தம் உறுதியாக்குவதில் அத்தனை ஆர்வமான சுயநலம்.

இந்த மாதிரி இடங்களில் என்னை அமர வைத்தால் அத்தனையும் பொதுப்பிரச்சனையாக வௌியே தெரிய வைத்து விடலாமென்ற பொதுநலம்.

ஊருக்கு வௌியே எல்லைபுறத்தில் சலவைப்பட்டறை வைத்துள்ளார். கிரிவலத்தை சுற்றிவராமல் அவரை சுற்றிவந்தாலே எளிமையான விலையில் ஏற்றம் காணமுடியும்.

வௌ்ளையை மட்டும் விருப்பமான தொழிலாக தொடக்கம் முதல் செய்து கொண்டுருப்பவர். தௌிவான சிந்தனை.

எது நம்மால் முடியாது என்று தெரிகின்றதோ? அதைப்பற்றி முழுமையாக தெரிந்தவர் அதில் நுழையாமல் இருந்தாலே நம்முடைய தொழில் வெற்றி உறுதியானதில் பாதி என்று என்னை உணர வைத்தவர்.

இன்று உறுதிபடுத்தப்படவேண்டிய மிச்சமான வேலைக்காக உள்ளே வந்த போது கூட்டப்பட்ட மொத்த கூட்டத்திற்குப் பின்னால் அமர வைத்துவிட்டார்.

நீதியரசர் கற்பக வினாயகம் கடைக்கண் பட்டபிறகு இந்த பிரச்சனை பல நிறுவனங்களுக்கு வாழ்வாதார பிரச்சனையாகி விட்டது.

எத்தனையோ கூட்டங்கள். எத்தனையோ இழுத்தடிப்புகள். ஆனால் முடிவு இல்லாமல் இன்று வரையில் முட்டுச் சந்துக்குள் இருட்டானதும் பயணிப்பது போல் இருக்கிறது?

சாய கழிவு நீர் பிரச்சனை விரைவில் டெல்லியில் தீர்ப்பாய் வரப்போகின்றது. அதற்கான ஆய்த்த ஏற்பாடுகளுக்கான சங்க கூட்டம்.

உள்ளே அமர்ந்துருந்த அத்தனை பேர்களும் பயணித்து வந்த வௌிநாட்டு உள்நாட்டு வாகனங்கள் மர நிழலில் ஓய்வெடுத்துக்கொண்டுருந்தது. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் மட்டும் ஓய்வெடுக்க முடியாமல் மன உளைச்சலோடு இன்று வரையிலும் நகர்ந்து கொண்டுருக்கிறது.

திருப்பூரில் உள்ளே நுழைந்த காலத்தில் எதுவும் பெரிய அளவில் வளர்ந்துருக்கவில்லை. உள்ளே வராத நவீனங்கள் குறித்து எவருக்கும் அக்கறையில்லை. அவரவருக்குண்டா அயராத உழைப்பே அத்தனையும் வெற்றியாக்கியது. தந்த வெற்றிகள் அனைத்தும் வெறியான போது தான் ஒரு சமூகத்தின் முகவரியே மாறிவிடும் அளவிற்கு அச்சுறுத்த தொடங்கியுள்ளது?

வாசிக்கும் நீங்கள் எத்தனையோ வகையான ஊடகத்தின் வழியே இந்த சாய கழிவு நீர் பிரச்சனை உங்களை வந்துடைந்துருக்கும். ஆனால் அதற்குப்பின்னால் உள்ள அபாயம் உங்களை தாக்காத காரணத்தால் உங்கள் கை விரல்கள் பக்கத்தையோ, பார்க்கும் காட்சிகளையோ மாற்றி இருக்கக்கூடும்.

உங்கள் வேதியல் அறிவியலோடு விளையாட எனக்கு விருப்பம் இல்லை. கவிஞர் வைரமுத்து சொன்னது போல் ” எட்டு எட்டாக மனிதன் வாழ்க்கையை பிரித்துக்கொள் ” என்பதாக இந்த சாயத்தின் தொடக்கமும் இந்த எட்டில் தான் ஆரம்பிக்கின்றது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்.

திருப்பூர் ஆடை உற்பத்தியில் சமாதானத்தை சுமந்து வரும் வௌ்ளை ஆடைகளை விட வண்ணங்களை சுமந்து வரும் ஆடைகளுக்குத் தான் அதிக கிராக்கி. அணிபவர்களின் தோல் மட்டும் தான் வௌ்ளையாக இருக்கும். கேட்கும் ஆசையில் ஏழு வண்ணங்கள் எழுபது நிறமாக மாறி இருக்கும்.

நிறங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அத்தனையும் இங்குள்ளவர்களின் வாழ்வாதரம் வகை தொகையில்லாமல் அழிந்து கொண்டுக்கிறது.

ஆந்திராவில் இருந்து பயணித்து வரும் பஞ்சு முதல் தூத்துக்குடிக்கு பயணிக்கும் ஆடைகள் சுமந்த பெட்டி வரைக்கும் அத்தனைக்கும் பின்னால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை அடங்கியுள்ளது. சில லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை வாழ வைத்துக்கொண்டு பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அழிக்கும் தொழில் என்றால் இந்த தொழிலை எந்த வகையில் கொண்டுவருவீர்கள்?

தயாரிக்கப்போகும் ஆடைகளுக்குத் தேவையான அளவு சுமந்த துணிகள் சாயப்பட்டறைக்குள் உள்ளே காலடி வைக்கும் போதே நம் வாழ்க்கையின் காலடித்தடமும் சுருங்கத் தொடங்குகின்றது. எட்டில் பிரித்த வாழ்க்கை போல் சாயமேற்ற எட்டு விதமாக தண்ணீர் அலசலாக துணியை அலசி துவைக்க அத்தனையும் விரும்பும் நிறத்தில் வந்து விடுகின்றது.

துணிகளை சாயமேற்ற இரண்டு வகையான உத்திகள் உண்டு. அதிக நவீனம் இல்லாத வின்ஞ் என்ற முறையிலும், சாப்ட் புளோ என்ற நவீன எந்திரமாகவும் உள்ளே வௌியே துணிகள் குதியாட்டம் போடும். உச்சக்கட்ட நவீனத்தில் எந்த குதியாட்டமும் இருக்காது. எட்டு மணி நேரம் என்றால் அத்தனையும் கணிணி வழியே கண்காணித்து அற்புத பிரசவசமாய் வந்து விழுந்து பளபளக்கும்.

ஆனால் நவீனமில்லாத வின்ஞ் என்ற சுற்றிக்கொண்டுருக்கும் இரும்பு வளையங்களுக்குள் துணியை ஏற்றத் தொடங்கும் போது உள்ளே உள்ள தொட்டியில் நீர் நிரப்பி குளித்த துணியை நணைக்க வெட்டிங் ஆயில் என்ற வஸ்துவை ஊற்ற அத்தனையும் மொத்தமாக சேர்ந்த பிறகு தான் அத்தனை மங்கல சம்பிராதயங்களும். அத்தனை வேதியல் சமாச்சரங்களும் அந்தணர்களும் ஓதும் மந்திரங்கள் போல் அவஸ்யமாகி, ஒவ்வொரு முறையிலும் ஒவ்வொரு தடவையிலும் ஒவ்வொன்றாக சேர்த்துக்கொண்டே வரவேண்டும். துணியை இளக்க, இளக்கிய துணியை சாயத்தோடு ஓட்ட வைக்க, ஒட்ட வைத்த சாயத்தை உறுதியாக்க, உறுதியான சாயத்துணியை தரமாக்க, தரமானதை வந்து கொண்டுருக்கும் வண்ணத்துணியை அதன் தராதரம் பார்த்து, அச்சரம் பார்க்க துண்டு வெட்டிபார்த்து சேர்த்த கலவை சரியில்லை என்றாலோ சேராத சாயங்கள் சிரித்தாலோ எட்டு அலசலுக்குப் பிறகு மேற்கொண்டு இரண்டு அலசலில் அந்த துணி வண்ணமாய் சிரிக்கும்.

ஓவ்வாரு அலசலுக்கும் பிறகு அந்த தண்ணீர் தேவையில்லாமல் வௌியேற்ற, ஒவ்வொரு முறை வௌியேறும் தண்ணீரும் சோடாவாக, ஆசிட்டாக, அடர்வேதியல் சாயமாக, வௌியேறி வௌியேற்றி, நாம் துணியை வௌிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து உள்நாட்டுக்கு உற்பத்தி செய்து தரும் வயல்காடுகளை பாழ்படுத்தி எதிர்காால சமூகத்தை உலகத்தை விட்டு வௌியேற்றிக்கொண்டுருக்கிறோம்?

பணம் படைத்தவர்களின் மனத்தை போலவே திருப்பூர் பூமியும் கல் பாறையால் ஆனது. சில இடங்களில் நூறு அடிகளில் குழாய் இறங்கும். ஆனால் இறக்க உதவும் எந்திரங்கள் கண்ணீர் விடாமலே கதறும். இத்தனை இறுக்கமான பூமியில் விட்ட மிச்சமான பாறைக்குழி என்ற வட்ட வடிவ குளம் போன்ற குட்டைகள் இன்று வரையிலும் பல சாய நிறுவனத்தின் பொக்கிஷம். நடுஇரவில் வண்டியில் கொண்டு வந்து ஊற்றி விட்டுபோவர்கள். அருகே வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் விழித்து பார்ப்பதற்குள் அந்த குட்டை நீரில் மட்டையாக வாழ்ந்த உயிர்கள் மிதந்து கொண்டுருக்கும்.

பொது சுத்திகரிப்பு நிலையம், தனியாருக்குச் சொந்தமாக தனியான சுத்திகரிப்பு நிலையம் என்று ஏராளமாய் இன்று வரையிலும் ஏற்றப்பாதையில் வந்து கொண்டுருந்தாலும் அத்தனையும் பின்பற்ற விரும்பாத கொள்ளை லாபம் வேண்டி வௌியே இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டுருப்பவர்களின் அவர்களின் வீம்பான புறம்போக்கு நடவடிக்கைகள் இன்று அத்தனை நஞ்செய் புஞ்செய் வயல்களையும் போகத்தை உருவாக்காத மலடாக மாற்றி விட்டது.

கண்காணிக்க இருக்கும் அதிகார வர்ககம் அத்தனையும் ஊரில் வாங்கிப்போடுகின்ற இடங்களில் கருத்தாய் இருக்க கண் இருந்து குருடாய் தான் பல நிறுவனங்கள் தொழில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருக்கிறது.

சிறப்பான எத்தனையோ முன்னோடி நிறுவனங்கள் உண்டு. பிரச்சனை வராத காலத்திற்கு முன்பே இதை சமூகப் பிரச்சனையாக பார்த்து பல நவீனங்கள் உள்ளே புகுத்த இன்று வரையிலும் அவர்கள் பார் புகழும் வேகத்துடன் தான் பயணித்துக்கொண்டுருக்கிறது.

வௌியேறும் சாய நீரை சுத்திகரிக்க சுத்திகரிக்க அத்தனையும் நல்ல நீராக மாறி அறுவடை செய்யும் தென்னைகளுக்கு உரமாக்கிக்கொண்டுருக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு திருப்பூரில் இருந்து வௌியாகும் சாயக்கழிவு நீர் தோராயமாக பத்தாயிரம் கோடி லிட்டர்.

கற்பனையில் கொண்டு வாருங்கள். புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருக்கும் நீங்கள் உங்கள் ஊரின் குளத்தை, ஆறு, ஏரிகளின் நீள அகலங்களை அதன் கொள்ளவுகளையும். அத்தனை வளமும் ஒரே நாளில் உள்ளே வந்து விழுகின்ற இந்த சாய அடர்த்தியான வேதியல் சமாச்சாரங்கள் சாவைத்தரும் என்றால் சம்மதமா உங்களுக்கு?

பயணித்து வரும் பாதை மட்டுமல்லாமல் பயணிக்காத பாதையிலும் இதன் கெமிஸ்ட்ரி உருவாக்கும் காதல் சமாச்சாரங்கள் அத்தனையும் எதிர்கால நம்முடைய சந்ததிக்கு நாம் விட்டுச்செல்லும் வினைகள்?

அகமதாபாத்தில் குடிசை தொழிலாக தொடங்கிய சாயங்கள் தரம் வாரியாக தகுதியான நிறுவனங்களால் முத்திரை குத்தப்பட்டு உள்ளே வந்து கொண்டுருந்தாலும் பலரின் வாழ்க்கையின் முதுகைத்தான் நிமிரவே முடியாமல் இன்று வரையிலும் குத்திக்கொண்டுருக்கிறது.

எத்தனை முறை சிவகாசி வெடி விபத்து நம்மை விசம்ப வைத்ததாலும் அத்தனைக்குப்பிறகும் பல லட்ச மக்களின் வயிற்றுப்பிரச்சனையாக இருந்தாலும் பேயோடு வாழ்ந்தாலும் பராவாயில்லை வாய் நிறைய சாப்பிடுகிறோம் என்பவர்களால் தான் அத்தனை சட்டங்களும் அமைதி காக்கின்றது.

பணம் படைத்தவர்கள் பணத்தை தேடிக்கொண்டுருப்பவர்களைப்போல் இங்கு சட்டத்தை மதித்து சமுக வாழ்க்கையாக தொழிலாக செய்து கொண்டுருப்பவர்களுக்கும், சட்டம் என்பது இருட்டறை வஸ்து என்பதாக தொழிலாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும் இடையே உள்ளே போராட்டத்தின் இறுதி விளைவு தான் நான் சமீபத்தில் படித்த செய்தி.

திருப்பூருக்கு என்று ஒரு ராசி. எல்லா ஊர்களிலும் மழை வராத என்ற ஏக்கம் தான் அதிகம் இருக்கும். ஆனால் இங்கோ வந்த மழை எப்போது நிற்கும் என்று ஏக்கமாய் இருக்கும். காரணம் ஆடையின் அத்தனை நிகழ்வுகளையும் சூரியன் ஒருவன் மட்டுமே அத்தனை சூட்சுமத்தை புரிந்தவன் என்ற முறையில். மழை தொடரத் தொடர பல பேர்களின் வங்கிக் கணக்கும் ஒழுகத்தொடங்கும். விடாது தொடரும் மழையில் பலரது வாழ்க்கை புயலில் சிக்கிய கப்பலாய் கரை தட்டி நின்று விடும் அதிசயத்தை பார்த்தவன் என்ற முறையில்.

ஓரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 20 அடி உயர்வு. சாயக்கழிவு கலந்த நீரால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக வருகின்ற தண்ணீரை தேக்கிவைக்க அனுமதியில்லை. தண்ணீரை நம்பி வாழும் மனிதர்களும், கால்நடைகளும், விவசாய நிலங்களின் தற்போதையை நிலையை விரைவில் உங்கள் தலைமுறைகள் ஆவண படமாக பார்க்க வாய்ப்புள்ளது. காரணம் தேக்கி வைத்தாலும் செத்து விழுகின்ற ஜீவன்கள் உருவாக்கும் நாற்றத்தில் பத்து வேளை சாப்பிடாமல் இருந்து சாகலாம்?

Advertisements

3 responses to “முகவரி – சுடுகாடு. அடையாளம் – முழுக்க போர்த்திய முக்காடு

 1. எங்களுக்கு சம்மதம் இல்லைதான் என்றாலும் காலம் செய்த கோலம் தான் என்ன செய்வது. தீர்வு காண்பதில் அரசுதான் அக்கறை கொள்ளவேண்டும்

  BY

  T.S.MUTHU

 2. நடந்து கொண்டுருக்கும் உண்மையை உங்களிடம் சொல்லி விடலாம்? ஆனால் என்னை எம்பி நிம்பி விடுவார்கள்? எல்லா இடத்திலும் நடந்து கொண்டுருப்பது தான் இங்கும்.

  வர்க்கத்திற்கும் வசதிகளுக்கு இடையே நடந்து கொண்டுருக்கும் தர்மயுத்தம்.

  மாற்றம் என்பது மட்டும் மாறாதது?

 3. படிக்கும் போதே ரொம்ப பயமாய் இருக்கே … சிங்கப்பூரில் எல்லாம் எப்படிப்பட்ட தண்ணியையும் ( பாத்ரூம் தண்ணி கூட )..குடி நீராக மாற்றும் திறமை / தொழில் நுட்பம் உள்ளது … அந்த யாருக்கும் உபயோகம் இல்லாத தண்ணீரில் வேறு வகை புல்லோ / செடியோ / …வளர்க்க முடியாதா…?? நிச்சயமாக வேளான்மை கல்லூரியில் இதில் வளரும் படி செடி ஏதாவது வைத்ருப்பார்கள்…… நிச்சயமா ஏதாவது செய்யணும் இந்த அரசு / தொழில் அதிபர்கள் / பொது மக்கள் எல்லாரும் கூடி தான் தேர் இழுக்கணும். …

  இங்கு துபாயில் புல் வளர்க்க , மரம் வளர்க்க … பாத்ரூம் தண்ணீரை சுத்தம் செய்து மறுபடியும் பயன் படுத்துகிறார்கள். …

  எம்.பி யிடம் சொல்லிபாருங்கள் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s