மரணம்

உணர்ந்தவர்களுக்கு மட்டும் ?

உணர்ந்தவர்களுக்கு மட்டும் ?

திருப்பூருக்குள் அத்தனையும் மீறி எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கத் தான் செய்கின்றது.

கண்களுக்குத் தெரியாமல் பலரும் பல நல்ல விஷயங்களையும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

வாழும் போது பவாத்மாவாக இருப்பவர் முடியும் தருவாயில் ஜிவன் உள்ள ஆத்மாவாக உரு மாற்றம் அடைந்து பல உன்னதமான பணிகளை செய்து போய் சேர்கின்றார்கள்.

அதில் ஒன்று தான் திருப்பூரில் உள்ள மின் மயானம்.

முழுமையாக இன்னமும் உள்ளே போக சமயம் வாய்க்க வில்லை.

ஆனால் தூசியில், இரவுகளில், தன்னை தொலைத்த அத்தனை நபர்களும் அங்கு நுழையும் போது உடலுக்குத் தான் உயிர் இருக்காது. ஆனால் அவர்களின் உள்ளம் அந்த சூழ்நிலையை நிச்சயம் ரசித்து அனுபவித்து தான் மேலே செல்லும்.

அத்தனை இயற்கை சூழ்நிலையில் மகத்தான புண்ணிய காரியங்களை செய்வதற்களின் கணக்கு வழக்குகளை காலன் தொலைத்து விட விண்ணப்பிக்கின்றேன்.

அதற்கு மேலும் திருப்பூரில் சென்னையை போல விபத்து மூலமும் இயற்கை மரணமாகவும் பூக்கள் தூவி பாதையை பரவசமாக்கி ஏதோ ஒரு சந்தில் தினந்தோறும் ஒரு ஊர்வத்தை பார்த்த பிறகு தான் என் பயணம் முடிவுக்கு வருகின்றது.

மற்ற ஊர்களில் எப்படியோ. மரணத்திற்குப்பிறகு தன்னுடைய உடலுக்கு மரியாதை வேண்டும் என்பவர்கள் நிச்சயம் திருப்பூர் மின் மயான மின் அஞ்சல் முகவரிக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

சோலைவனமா? வீரப்பன் காடா? ஓலிக்கும் பாடல் தரும் அமைதியா? உணர்ந்த உணர்வுகளா? வௌிப்புற சுத்தமான சாலையா? உள்புற நிர்வாக கட்டமைப்பா? கண்இமைக்கும் நேரத்தில் பிடி சாம்பலாய் கைகளில் தரும் அடங்கிப்போகும் இந்த வாழ்கையை திருப்பூர் நண்பர் திரு. சாமிநாதன் இன்று அவருடைய இடுகையில் உணர வேண்டும் என்று எழுதி என்னுடைய உணர்ச்சி குவியலை அதிகமாக்கியுள்ளார். உங்களில் உணர்ந்தவர் அளிக்கும் பதில் அவரை பரமாத்வாக ஆக்கட்டும்.

மரணம் –
எனக்கு பிடித்த சொல்
மரணம் –
சொல்லா..
முக்தியா..
மோட்சமா..
விமோசனமா..
முடிவா..
தொடக்கமா..
இருளா..
ஒளியா..

உணர்ந்திருக்கின்றீரா..
பயமா..

எது எப்படி இருந்தாலும்
மரணம் எனக்கு
ரொம்பவே பிடிக்கின்றது…

லாரி மோதி..
நீரில் மூழ்கி..
கொலையாகி..
விமானம் வெடித்து..
தண்டவாளத்தில்..

எது எப்படி இருந்தாலும்
மரணம் எனக்கு
ரொம்பவே பிடிக்கின்றது…

உங்களுக்கு..?

http://eeravengayam.blogspot.com/

Advertisements

3 responses to “மரணம்

 1. நமக்கு இப்போதைக்கு மரணம் பற்றிய பயம் இல்லை. ஒருவேளை கல்யாணம் ஆனால் வரலாம். மற்றபடி, பிடித்திருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது.

  என்ன நண்பா,
  //லாரி மோதி..
  நீரில் மூழ்கி..
  கொலையாகி..
  விமானம் வெடித்து..//

  எல்லாம் சொன்னீங்க, இயற்கையா போறதப் பத்தி சொல்லலியா?

  பிடிக்கிறது என்கிறீர்களே… இதன் பின்னால் ஏதும் விளக்கம் இருக்குமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s