தொலைத்த வாழ்க்கையும் படம் தந்த பரிதவிப்பும்?

காட்சியாய் காணக்கிடைப்பவரே எங்கள் வாழ்க்கையிலும் ஜெயந்தி வர கருணையை எங்க பக்கம் காட்டப்பா?

காட்சியாய் காணக்கிடைப்பவரே எங்கள் வாழ்க்கையிலும் ஜெயந்தி வர கருணையை எங்க பக்கம் காட்டப்பா?

தொடர வேண்டிய கலாச்சாரம் தொலைவில் கல்லறைக்குள் உறங்கிக்கொண்டுருக்கிறது. மேல் நாட்டு கனவுகளில் உள்ள கண்கள் இன்னமும் விழிக்க மாட்டேன் என்கிறது.

விடை தெரியாத வினாக்களையும், கனாக்களையும் மட்டுமே கருத்தாய் வைத்துக்கொண்டு அனைவருமே இன்னமும் கனவுலகில் வாழ்ந்து கொண்டுருப்பதால் தான் மேலே உள்ள படம் காட்டும் அவஸ்யம் உணர்ந்து இதை பதிவில் எழுத வேண்டிய சூழ்நிலை.

விமானதளங்கள் அனைத்தும் விளையாட்டு மைதானமாய் ஆகிப்போனதால் இன்று வினையை அறுத்துக்கொண்டுருக்கிறோம்?

இந்தியாவிற்குள் ஒரே ஒரு சின்ன சலசலப்பு நடந்து இருக்கும்.

அமெரிக்கா,கனடா,இங்கிலாந்து நாட்டு அதிகார வர்க்கம் அறிவுறுத்தும்.

” இந்தியாவுக்கு பயணம் செய்வதை தள்ளிப்போடுங்கள்”.

அம்சமாய் கொட்டை எழுத்தில் இங்கு அச்சில் ஏற்றி அவரவர்களின் அடிவருடி தனத்தை நிரூபித்துக்கொள்வார்கள்.

கார்கில் முதல் தாஜ்மஹால் வசிப்பிட தாக்குதல் வரை எத்தனை இழப்புகள் வந்தாலும் நமக்குத்தான் ஆத்தா கொடுத்து வளர்த்த ஆற வைத்த கஞ்சி தான் ரொம்ப பிடிக்குமே?

இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் இங்குள்ள அனைவரும் மகாத்மா கற்றுக்கொடுத்துள்ள அகிம்சையே இறுதியில் ஜெயிக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்வோம்.

ஒரே ஒரு இரட்டை கோபுர தாக்குதல்?

வெறியின் வெற்றியையும் விஞ்ஞானத்தின் தோல்வியையும் ஒப்புக்கொள்ள வைத்தது.

ஆயிரம் காரணங்கள். மனித தவறுகள் என்று ஏதேதோ?

அதற்குப்பிறகு இன்று வரையில் அவர்களின் தௌிவான சித்தாந்தத்தில் கொசு கூட ………. விடமுடியவில்லை.

உன்னுடைய குழந்தையும் என்னுடைய குழந்தையும் நம்முடைய குழந்தைகளுடன் விளையாடட்டும் என்ற அவர்களின் கலாச்சாரத்தைப்போலவே அத்தனையுமே ஆச்சரியம் தான்.

அதிகார வரிசையில் திரு. ரத்தன் டாடா பத்துக்குள் முத்தாய் முதன்மையைாய் இடம் பிடித்தாலும் எறிவதை வேடிக்கைக்கொண்டு இருப்பதை தவிர வேறு ஓன்றும் செய்ய முடியவில்லை.

இன்று வரையில் செய்தி தாள்களுக்கு மட்டும் தான் உதவி முடிந்துருக்கிறது.

தனது தேசபக்தியை அங்குலம் அங்குலமாய் நேரிடை ஒளிபரப்பாக தந்து இந்திய மானத்தை கப்பலேற உதவிய சிருங்கார பெண்மணிகளுக்கு தான் நாம் சபாஷ போட வேண்டும்.

காரணம் அவர்களுக்கு மட்டும் தான் முந்தித்தருவதில் அத்தனை அக்கறை.

அன்று ஒலித்த உலக அத்தனை சர்வதேச அழைப்புகளும் அங்கு இருந்த யூதர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் மட்டும் தான் மனிதாபிமனத்தின் கோர முகத்தை வௌிக்காட்டாமல் பல் இளித்து பரிகாசம் செய்தது?

துருக்கியில் உள்ள இறக்குமதியாளர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.

“ஐயோ இந்தியாவே பற்றி எறிகிறது. இப்போதைக்கு நம் தொடர்பு வேண்டாம்”.

அவர்களுக்கு திரு. ஜார்ஜ் பெர்ணான்டாஸ் ம் ஒன்று தான் திருமிகு ஐயா அப்துல்கலாமும் ஒன்றுதான்.

அவர்களுக்கு அவர்களின் உயிர் பாதுகாப்பு அத்தனை சக்கரைக்கட்டி.

அவர்கள் உள்ளே வரும் போது நம்முடைய அத்தனை பாதுகாப்பும் பழைமையாய் மாறி ஓதுக்கப்பட்டுவிடும். அவர்களின் நவீனங்கள் நம் வீரர்களை நட்டாத்தில் நிறுத்திவிடும். ஆனால் நாம் அங்கு இறங்கும் போது “பாதுகாப்பு சோதனை என்பது அனைவருக்கும் பொதுவானது”

கண்ணியவான்களின் கருத்தைப்போலவே கலங்கி போய்விடாத நம்மவர்களின் அதிகார ஆசையும் ஆச்சரியம் அளிப்பது இல்லை. விமான தளங்கள் அத்தனையும் வெறும் காட்சிப்பொருளாய் ஆகிவிட்ட கொடுமை இன்று திருப்பூர் தரகர்களைத்தவிர அத்தனை பேரையும் பன்றிக்குட்டி (?) படாய் படுத்திக்கொண்டுருக்கிறது.

அம்மா அடிக்கடி சொல்லும்

” அடப் போடா போக்கத்தவனே, கொடுக்ற கை எப்போதுமே மேல தாண்டா இருக்கும். வாங்குற நம் கை கீழே தான் இருக்கும் ”

என்ன செய்வது?

வடிவேல் தான் நம்மைப்பற்றி ஏற்கனவே சொல்லிட்டாரே?

” ரொம்ப நல்லவன்டா. எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கொள்கிறான்.”

அதனால் என்ன?

இலங்கை, ஆஸ்திரேலியா என்று எத்தனை பிரச்சனை என்றாலும் மறக்காம 15ந்தேதி கொடியை ஏத்தி புள்ள குட்டிகளோட இனிப்பு வாங்க மறக்காதிங்க.

நமக்கு நம்முடைய “கௌரவம்” பெரிசு.

Advertisements

4 responses to “தொலைத்த வாழ்க்கையும் படம் தந்த பரிதவிப்பும்?

 1. ஜோதிஜி
  சென்ற வருடம் பறவை காய்ச்சல் இந்த வருடம் பன்றி காய்ச்சல் அடுத்த வருடம் எந்த காய்ச்சலோ, அருமை உங்கள் பதிவு
  நட்புடன்
  T.S.MUTHU

 2. மோதிரத்தை தொலைத்து விட்டு முழங்குவதால் தேவியர்களுக்கு கூட ரெண்டு மிட்டாய் கிடைக்கிறது. கணக்கு புரியும் என்று நினைக்கின்றேன். அதனால் என்ன அவர்களின் சந்தோஷம் போல் 120 கோடி பேர்களின் சந்தோஷமும். குசேலன் வைத்த நம்பிக்கை அவரை அவரின் வாழ்கையை மாற்றவில்லையா? எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வோம். கூடவே நிச்சயம் ஒரு நாள் மாறும் இங்கு எல்லாமே என்ற நம்பிக்கையில்.

 3. சுதந்திர தின வாழ்த்துக்கள் சார், …

  காலைல கிளம்பி மூவர்ணக் கொடிஎல்லாம் ஏத்திட்டு , ஆரஞ்சு மிட்டாய் மென்று கொண்டே வந்த நாட்கள் ஞாபகம் வருதா…. வந்தே மாதரம், வந்தே மாதரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s