நடிகர் சிவகுமார் ” இது ராஜபாட்டை அல்ல” விமர்சனம் (பாட்டை 3)

உலகப்பொதுமறை அறம்,பொருள்,இன்பம்

உலகப்பொதுமறை அறம்,பொருள்,இன்பம்

நடிகர் சிவகுமார் ” இது ராஜபாட்டை அல்ல”

புத்தக விமர்சனம்.

நீங்கள் ஓவியராக வாழ்ந்து உலகமெங்கும் ஒளிவீச வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? உள்ளத்தில் உள்ள உங்களின் ஆத்ர்ஷண நாயகர்கள் எம்.ஜி.ஆர். முதல் கமல்ஹாசன் வரை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா? அத்தனை பழைய கதாநாயகிகளையும் இன்று வரையில் உங்கள் தூக்கத்தை கெடுத்துக்கொண்டுருக்கிறார்களா? கல்லூரியில் படித்துக்கொண்டுருக்கும் உங்களின் கனவுகள் மொத்தத்தையும் திரைப்பட உலகம் ஆக்ரமித்து உள்ளதா? சாதித்த பிறகு தான் சாவு என்று கங்கணம் கட்டிக்கொண்டுருக்கிறீர்களா? எனக்கு கிசு கிசு மட்டும் தான் பிடிக்கும் என்கிறீர்களா? பழைய திரைப்பட (புகைப்பட) பெட்டகத்தை கண்குளிர பார்த்து மகிழ வேண்டும் என்ற ஆசை உள்ளவரா?

நீங்கள் அவஸ்யம் படிக்க வேண்டிய புத்தகம் திரு. சிவகுமாரின் ” இது ராஜபாட்டை அல்ல”.

தங்க பஸ்பம் வாங்க எனக்கு வசதியில்லை. ஆனால் என்றுமே இளமையாய் இருக்க ஏதாவது வாய்ப்பு இருக்கான்னு கேட்டீங்கன்னா உங்களுக்கு மார்க்கண்டேயன் உதவ தயாராய் இருக்கிறார்.

இதற்கு மேலும்,

முதல் இரண்டாம் மூன்றாம் தலைமுறை நடிகர்கள் தன்னுடைய தொழிலுக்காக பட்ட பாடுகள், மொத்த படத்தின் வசனமும் ஒரே ஒரு பக்கத்தில் முடித்து விடக்கூடிய வளர்ந்த தொழில் நுட்பம் இல்லா காலத்தில் தூயதமிழ் (தீந்தமிழ்) பக்கம் பக்கமாக படித்து முடிக்கவே பல மணிநேரம் ஆனதை தங்கள் பயிற்சினால் மட்டுமே உங்களை நெகிழ்ச்சியடையச் செய்த நடிகர் நடிகைகளின் உழைப்பு பற்றி தெரிய வேண்டுமா?

ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் வைத்து அசர அடித்த வசனகர்த்தாக்களைப்பற்றி அத்தனையும் வெற்றியாக்கிய இயக்குநர்களைப்பற்றி இதற்கு மேலும் சுய ஒழுக்கமாகத்தான் வாழ விரும்புகிறேன். ஆனால் சுற்றி உள்ளவர்களைப் பார்க்கும் போது, சூழ்நிலைகள் அத்தனை சாதகமாக இல்லை. என்னை எப்படி மாற்றிக்கொள்வது என்று மறுகிக்கொண்டுருக்கிறீர்களா?

“நடிக்க தொடங்கும் போதே இளவயது கதாநாயகியிடம் முன்பே என்னைப்பற்றி சொல்லி விடுவேன் ” என்று அவர் சொல்வதை நீங்கள் அவஸ்யம் படிக்கத்தான் வேண்டும்?

ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆண்களுக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்ற பழமொழி இங்கு சற்று மாறி விடுகின்றது.

இவருக்குப்பின்னால் இரண்டு பெண்கள்.

விதவையாய் வாழ்ந்து தனிமரமாய் கிராமத்தில் கையொடிந்து இருந்தபோதிலும் ” எனக்குப்பாத்துக்க தெரியாதடா. இவ்வளவு தூரம் எல்லா வேலையையும் விட்டு விட்டு நீ வரவேண்டுமா? ” என்று கடைசிவரை ஜான்சிராணியாய் வாழ்ந்து இறந்த பெற்ற தாயும், திருமணம் ஆகி பதினைந்து வருடங்கள் கழித்து ஆசையாய் புடவை வாங்கி தந்த போது “எப்போதும் போல நீங்களாகவே இருங்கள் ” என்று மனதிற்குள்ளே அனைத்தையும் பூட்டி வைத்து புண்ணிய மனைவியும் இருந்ததால் தான் என்னவோ அவர் வாழ்க்கை இன்று பூ விரித்த பாதையில் குழந்தைகளுடன் பயணிக்கிறது.

சினிமாகாரனுக்கு யார் பெண் தருவார்கள்? என்று பெரும் போராட்டத்திற்குப்பிறகு கண்டெடுத்த மனைவியை பெற்ற திரு. சிவகுமார் தன்னுடைய மகனுக்கு தயாராய் தானாகவே தேடி வந்து அவரின் கண் அசைவுக்காக காத்துருந்த மருமகளும் நம்முடைய வாழ்க்கைக்கு எதையோ உணர்த்துகிறது?

ஜாலியாகவே வாழ்ந்த ஜெய்சங்கரும், கவுச்சி இல்லைண்ணா செத்துருவேன் என்று சொல்லி வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறுதி வாழ்க்கையும் நாம் அவஸ்யம் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை குறிப்புகள்.

டூரிங்க் டாக்ஸியில் நகம் கடித்து, அருகில் குவித்து வைத்துருந்த மணலில் கையை விட்டு தொட்ட அசிங்கத்தை மறந்து எதிரே வெண் திரையில் பின்னால் நின்று பட்டாக்கத்தியுடன் எம்.ஜி.ஆரை போட்டுத்தள்ள காத்திருந்த போது ” தலவரே பட்டுக்கிடப்பான் ஒழிஞ்சுருக்கான். வராதீங்க ” என்று உங்களை கத்த வைத்த அத்தனை வில்லன்களின் நிஜ வாழ்க்கையை, அவர்கள் கடைபிடித்த நெறிமுறைகளை படிக்கும் போது நமக்கு தோன்றுவது அவர்களின் வில்லத்தனம் அல்ல.

விளங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கை சூத்திரங்கள்.

கவிஞர்கள் வைரமுத்துவை, வாலியை உச்சிமுகர்ந்து உள்ளே புகுந்து வௌி வந்தவர் கவித்தலைவன் கண்ணதாசன் பற்றி பட்டும் படாமலே செல்வது சொல்வது சூரியனுக்கு பாராட்டுத் தேவையில்லை என்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வசதிகள் வந்த பிறகு இங்கு பலபேர்கள் நான் மட்டும் இந்த துறைக்கு வராவிட்டால் மாட்டு டாக்டராகியிருப்பேன், கம்பவுண்டர் ஆகியிருப்பேன் என்று மனதிற்குள் சிரித்துக்கொள்வோம் என்று தெரிந்தும் புழுகியவைகள் அனைத்தையும் பார்த்து விட்டு மறந்து விடுவோம் என்று தெரிந்தும் கொஞ்சு தமிழில் விளிப்பது போலில்லாமல் பழைய ஆசிரியர், நண்பர்கள், நாவிதர், கோவில், குளத்தங்கரை, ஊர் நிணைவுகள் அனைத்தையும் படத்துடன் விளக்கி இருப்பதில் இருந்தே (நன்றி திரு. பருத்திவீரன்) பழசை மறக்காத ஆளாக இருப்பதால் தான் என்னவோ எல்லாவிதத்திலும் பெற்ற புகழை இன்றுவரையிலும் பேணிக்காத்துக்கொண்டுருக்கும் விதம் நமக்கு எளிதாக புரிகின்றது.

நாலரைக்கோடி தமிழ்ர்கள் பார்த்த “சித்தி” தொடர் எனக்கு தந்த அதிர்ச்சி போல் நடிகை திருமதி ராதிகாவின் ஆளுமை திறன் அடுத்த ஆச்சரியம்.

வௌிப்புற படபிடிப்பு அவஸ்த்தைகள், பழகும் பெண்கள் “பாடுகள்” பாவத்தை நம் மனதில் உருவாக்கினாலும் வளர்ந்த நடிகைகள் கூட இயக்குநர்களிடம் ” இதெல்லாம் ராத்திரி வச்சுக்க ” என்று பாராட்டு பத்திரம் வாங்கிக்கொண்டு தன் சுயத்தை இழந்து கண்ணீருடன் வாழும் பாவாத்மாக்கள் என்று பலவற்றையும் நமக்கு உணர்த்துகிறது.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் ஆசிர்வாதத்தை பெற்று இலக்கிய உலகில் அத்தனை பெருமக்களின் பெருமதிப்பை பெற்ற அல்லயன்ஸ் நிர்வாகத்தின் மூலமாக திரு சீனிவாசன் அவர்களின் முயற்சியினால் மலிவு விலையில் தந்து மகத்தான் புண்ணியத்தை தேடியதை வைத்தே இதன் முக்கியத்துவம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இதற்கு மேலும் முத்தமிழ் ஆசான் கலைஞர் சொன்ன ” ஒவ்வொரு வரியும் ஐவரி ” என்பதை படித்து விட்டு உங்களுக்கு திரைப்பட ஆசை விடவில்லை. சாதிக்கவே நான் பிறந்தவன் என்ற உங்கள் நினைப்பை தடுக்க விரும்ப வில்லை. சென்னைக்கு பயணிக்கும் போது இந்த புத்தகத்தையும் உங்கள் மஞ்சள் பைக்குள் வைத்துக்கொள்ளுங்கள். அவஸ்யம் உங்களுக்கு உதவும்.

வாழ்ந்தால் எப்படி அதை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் வீழ்ந்தால் எப்படி மீள வேண்டும் என்பதையும் உணர்த்தும் காலப்பெட்டகம் இது.

மொத்த பக்கங்கள் 552.. மலிவு விலையாக ரூபாய் 220.00

புண்ணியம் தேடியவர்கள்

அல்லயன்ஸ் கம்பெனி,
ப. எண். 244, ராமகிருஷண மடம் சாலை,
தபால் பெட்டி எண் 617
மயிலாப்பூர், சென்னை 600 004,

தொலைபேசி 044 24641314
இணைய தளம் …. http://www.alliancebook.com
தொலைநகல் …. srinivasan@alliancebook.com

தேவியர் இல்லம். திருப்பூர்.
12.08.2009

Advertisements

5 responses to “நடிகர் சிவகுமார் ” இது ராஜபாட்டை அல்ல” விமர்சனம் (பாட்டை 3)

 1. வைரமுத்துவினையும் வாலியினையும் தொட்ட சிவகுமார கண்ணதாசனைப் பட்டும் படாமலும் எழுதியது – சூரியனின் பிரகாசத்தினைச் சொல்லவும் வேண்டுமோ என்றதால்தான் –

  அருமையான விமர்சனம் – புத்தகத்தினை ஆழ்ந்து படித்து – அழகாக விமர்சனம் எழுதிய – அறிமுகம் செய்த – ஜோதிஜீ – பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்

  ஒவ்வொரு வரியும் ஐவரி – உண்மை

  ராஜபாட்டை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்

 2. சுவாரசித்துடன் சுகமானதும் வாங்கிய பணம் வீணாகாமல் தேவியர்களுக்கும் அவர்கள் காலத்தில் உதவக்கூடிய நூல்.

  நன்றி சுந்தர் முத்து.

 3. வாங்கிட வேண்டியது தான் , …இருந்தாலும் , அதுல நீங்க படிச்சது , ரசித்தது, நினைவில் நின்றது …அப்படின்னு நீங்க எழுதுறதும் சுவாரசியமா இருக்கு

 4. அன்பு ஜோதிஜி
  வாழும் காலத்தில் அரசியலில் தோழர் திரு. நல்லக்கண்ணு, திரு.வைகோ ஆன்மிகத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இசையில் திரு. இளையராஜா, திரு, ரஹ்மான், கதையில் திரு. சுஜாதா கவிதையில் திரு,வைரமுத்து, திரு.வாலி திரைப்படத்துறையில் திரு. ஏவிஏம். சரவணன், பாட்டில் திரு. பாலசுப்ரமணியம், அறிவியலில் திரு. ஐயா அப்துல்கலாம், திரு, மயில்சாமி அண்ணாத்துரை உலக அளவில் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
  எனக்கு பிடித்த அதே தர வரிசை பட்டியல் உங்களுக்கும். மிக்க மகிழ்ச்சி. தமிழ் திரை உலகின் கண்ணியம் காத்த கலைமகன் சிவகுமார் (கண்ணியவான்) பற்றிய உங்களின் கருத்திலும் உடன் படுகிறேன். பாராட்டுக்கள்.
  T.S.MUTHU

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s