நடிகர் சிவகுமாரின் “இது ராஜபாட்டை அல்ல” விமர்சனம் (பாட்டை ஒன்று)

பெயர் ஒன்றே போதும். தரம் எளிதில் விளங்கும்

பெயர் ஒன்றே போதும். தரம் எளிதில் விளங்கும்

நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு பிரபல்ய முகம் நமக்கு பரிச்சயமாகிக்கொண்டே இருக்கிறது.

சமீப கட் அவுட் கலாச்சாரத்தில் அபிஷேகம் ஆராதனை வரைக்கும் நம்மை ஆட்சி செய்கின்றது.

இயல், இசை, நாடகம், ஆட்சி, அதிகாரம், ஆன்மீகம் என்று எல்லா துறைகளிலும் மின்மினி பூச்சிகள் போல் அல்லது நிதர்சனமாய் நம்மை தொடர வைத்துக்கொண்டுருக்கிறார்கள்.

படுக்கையறை வரை ஊடுருவி உள்ள இன்றைய ஊடக வௌிச்சக் கதிர்கள், இவரை ஒழித்து விட வேண்டும் என்று எவரை பூமிக்குள் உள் தள்ளி அமுக்கி விட நினைத்தாலும் வேறொரு வழியில் அவரைப்பற்றி அத்தனை உண்மைகளும் நம்மிடம் எளிதில் வந்து விடுகின்றது.

நிரந்தரமாய் உறங்காது உண்மைகள்.

வாழும் மனிதர்களில் திரு. தலாய்லாமா அவர்கள், அத்தனை பெரிய சீனக்கரங்களில் இருந்து தப்பி இன்று இவருடைய சின்ன கரங்கள் உலகில் உள்ளவர்களை, சார்ந்தவர்களை இன்று வரையிலும் அரவணைத்துக்கொண்டு தான் இருக்கிறது.

வாழந்த, வாழுகின்ற காலம் பார்த்த வரை, கேட்ட வரை, படித்த வரை, உணர்ந்த வரை தமிழகத்தில் எத்தனையோ புண்ணிய ஆத்மாக்கள் சமூக வாழ்க்கை மற்றும் அதன் முன்னேற்றத்துக்கான தங்களால் முடிந்த பங்களிப்பை கண்களுக்குத் தெரிந்த பல ஆயிரம் பேர்களாக, கண்களுக்குத் தெரியாத லட்ச கணக்காய் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த மானிட வாழ்க்கையை வளம் பெற செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

ராமன் இராவணன் காலம் முதல் இலங்கை நார்வே வரையிலும். அழிக்க முயற்சித்துக்கொண்டுருப்பவர்கள் அழிவில் இருந்து காக்க வேண்டும் என்று துடிப்பவர்களுமாய்.

நண்பர் வார்த்தையில் சொல்ல வேண்டுமானல் ஈர்ப்பதென்பதே எதிர் எதிர் விசையாக இருந்தால் மட்டும் தானே?

ஆனால் எத்தனை சிறப்பாய் தங்களால் முடிந்ததை இந்த சமூகத்திற்கு தந்த ஆத்மாக்கள் தங்களுடைய சுய வாழ்க்கை கோட்பாடுகளை, ஒழுக்கத்தை விலை பேசி தான் தங்களை வௌிக்காட்டியிருக்கிறார்கள். காட்டிக்கொண்டுருக்கிறார்கள்?

காரணம் இங்கு வெற்றி மட்டுமே வெற்றி மட்டும் தான் முக்கியம். கொள்கைகள், ஒழுக்கங்கள் என்பதே இரண்டாம் பட்சம் தான்.

வாழும் காலத்தில் அரசியலில் தோழர் திரு. நல்லக்கண்ணு, திரு.வைகோ ஆன்மிகத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இசையில் திரு. இளையராஜா, திரு, ரஹ்மான், கதையில் திரு. சுஜாதா கவிதையில் திரு,வைரமுத்து, திரு.வாலி திரைப்படத்துறையில் திரு. ஏவிஏம். சரவணன், பாட்டில் திரு. பாலசுப்ரமணியம், அறிவியலில் திரு. ஐயா அப்துல்கலாம், திரு, மயில்சாமி அண்ணாத்துரை உலக அளவில் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

இவர்களில் பாடகர் மட்டுமே வளர்ப்பால் தமிழன். மற்ற அனைவருமே பிறப்பால் தமிழர்கள்.

வரிசையில் உள்ளவர்களில் சிலர் குறித்து உங்கள் நினைவில் சில பல வீபரீதங்கள் வந்து போகும். உண்மைதான். பகத்சிங் வீரத்தை ஆங்கிலேயர்கள் பார்த்த பார்வைக்கும் நாம் இன்று படிக்கும் வரலாற்று பாடப்புத்தகங்கள் உணர்த்தும் விசயங்களில் என்ன வித்யாசத்தை நீங்கள் உணர்கிறீர்களோ அந்த உணர்வில் தான் இதை பதிய வைக்க முயற்சிக்கின்றேன்.

இவர்கள் அனைவருக்குமே வேறு வேறு பாதைகள். நோக்கங்கள். லட்சியங்கள்.

வாழ்க்கை முறை கூட வேறு வேறு.

அனைவருமே இவர்களுக்கு முந்தைய தலைமுறைகளில் எவருமே உச்ச புகழை அடைந்தவர்கள் அல்ல என்பதும் ஊடக வௌிச்சம் என்பதே என்னவென்று அறியாத குடும்பத்தில் இருந்து இவர்கள் அனைவருமே வாழ்ந்தவர்களின் வழிதோன்றலாக வந்தவர்கள் என்பதுமே ஆச்சரியத்தின் உச்சம்.

திரு. ஏவிஎம். சரவணன் தவிர.

தான் மட்டும், தன்னுடைய உழைப்பை மட்டுமே கொண்டு உச்சத்தை அடைந்தவர்கள்.

இன்னமும் வாழ்க்கையில் எச்சமாய் மாறாமல் உயிர்ப்புடன் சமூக வாழ்க்கையை அவர்களால் முடிந்த வரையில் அவரவரர் துறை வாயிலாக வளம் பெற செய்து கொண்டுருப்பவர்கள்.

மொத்தமாய் வியந்தது, எத்தனை ஊடக வௌிச்சம் என்ற போதிலும் “தன்னை” இழக்காமல் இன்று வரை நிஜமான வாழ்க்கையை இவர்கள் அனைவருமே வாழ்ந்து கொண்டுருப்பது.

கொண்ட கொள்கைகள் பின்னோக்கி தள்ளப்பட்டுருக்கலாம். உத்தமமான இடத்தை பிடிக்க இன்று வரையிலும் போராடிக்கொண்டு கூட இருக்கலாம். ஆனாலும் ஓழுக்கத்தை விலைமகளாக்காமல் சொந்த மகளாகவே பார்த்துக்கொண்டு பயணிக்கும் அவர்களின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்.

ஒழுக்கத்தை விற்று தான் இன்றைய வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று சொல்லிக்கொண்டுருப்பவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் எச்சரிக்கை?

இறந்தவர்களும், எண்ணிக்கையில் வராதவர்களும் என்னுடைய பார்வை என்பது படாமல் இருக்கலாமே தவிர ஏற்புடையவர்கள் தான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இந்த வரிசையில் சமீபத்தில் வந்து என்னை ஆக்கிரமித்து ஆச்சரியப்படுத்திக்கொண்டுருப்பவர் தான் நடிகர் சிவகுமார்.

அவருடைய சுயசரிதம், திரைப்பட அனுபவம், வாழ்வியல் அனுபவம் என்று பல முகத்தைக் கொண்ட “இது ராஜபாட்டை அல்ல” என்ற புத்தகம் கடந்த வாரம் முழுவதும் என்னை விட்டு பிரிய மனதில்லாமல் செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே வாகனத்தில் வந்து என்னை உயிர்ப்பித்துக்கொண்டுருந்தது.

படிக்க படிக்க முடிக்கவே முடியாமல் உள்ளே இழுத்துக்கொண்டே இருக்கிறது. உள்ளே உள்ள முக்கால் வாசி விசயங்கள் சம காலத்தில் நான் படித்ததும் பார்த்ததுமாய் இருப்பதால் அதன் நம்பகத் தன்மை அதிக ஆச்சரியம் அளிக்கின்றது.

பாகம் 1,2 என்று, இரண்டு பாகமும் ஒரே புத்தமாக உத்தமமான வௌ்ளை மற்றும் வண்ண வண்ண ஏராளமான படங்களைக்கொண்டு காலப் பெட்டகமாய் காட்சியளிக்கிறது.

2004ல் தொடங்கிய ராஜபாட்டை இன்று மலிவு விலை பதிப்பில் மாறி 2008 வரையிலும் ஏழு பதிப்புகளை கடந்து வந்துள்ளது.

மொத்த பக்கங்கள் 552. மலிவு விலையாக ரூபாய் 220.00

புண்ணியம் தேடியவர்கள்

அல்லயன்ஸ் கம்பெனி,
ப. எண். 244, ராமகிருஷண மடம் சாலை,
தபால் பெட்டி எண் 617
மயிலாப்பூர், சென்னை 600 004,

தொலைபேசி 044 24641314
இணைய தளம் …. http://www.alliancebook.com
தொலைநகல் …. srinivasan@alliancebook.com

இத்தனை தாமதத்திற்கு பிறகு ஏன் இந்த அவஸ்யம்?

கேட்பது புரிகின்றது. உண்மைதான். நல்ல விசயங்கள் நம்மிடம் சற்று தாமதமாகத்தான் வரும். காரணம் நாம் அதை உள்வாங்கிக்கொள்ள வேண்டிய காலத்தின் பாடங்களை கற்றுணர்ந்து வைத்துருக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால்.

இவை தொடராக வந்த போது உங்களில் பல பேர்கள் படித்துருக்க முடியும். ஆனால் நீங்கள் படித்த விசயங்கள் உடன் திரு. அல்லயன்ஸ் சீனிவாசன் உடைய அன்புக்கட்டளை ஏற்று தன்னைப்பற்றி, வாழ்ந்த நிகழ்வுகளைப்பற்றி திரு. சிவக்குமார் சற்று அதிக அக்கறையுடன் மேலும் பல அத்தியாயங்கள் எழுதியுள்ளது அடுத்த சிறப்பு.

என்னுடைய விமர்சனத்திற்கு முன்பாக இதில் வௌியீட்டு விழாவில், மதிப்புரையில், வாழ்த்துரையில் பங்கெடுத்துக்கொண்ட “ஊடக வௌிச்சம்” அதிகம் பெற்றவர்கள் சொன்ன வார்த்தைகள் அடுத்த பதிவில்.

காரணம் கோவிலுக்குள் நுழைவதற்கு முன்னாலே குட்டிக்கொண்டு செல்வது தான் முறை. குட்டியவர்கள் சொன்னது?

Advertisements

8 responses to “நடிகர் சிவகுமாரின் “இது ராஜபாட்டை அல்ல” விமர்சனம் (பாட்டை ஒன்று)

 1. அருமையான அறிமுகம் அன்பின் ஜோதிஜீ

  பாராட்டுகளுடன் கூடிஅய் நல்வாழ்த்துகள்

 2. அன்பு ஜோதிஜி
  வாழும் காலத்தில் அரசியலில் தோழர் திரு. நல்லக்கண்ணு, திரு.வைகோ ஆன்மிகத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இசையில் திரு. இளையராஜா, திரு, ரஹ்மான், கதையில் திரு. சுஜாதா கவிதையில் திரு,வைரமுத்து, திரு.வாலி திரைப்படத்துறையில் திரு. ஏவிஏம். சரவணன், பாட்டில் திரு. பாலசுப்ரமணியம், அறிவியலில் திரு. ஐயா அப்துல்கலாம், திரு, மயில்சாமி அண்ணாத்துரை உலக அளவில் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
  எனக்கு பிடித்த அதே தர வரிசை பட்டியல் உங்களுக்கும். மிக்க மகிழ்ச்சி. தமிழ் திரை உலகின் கண்ணியம் காத்த கலைமகன் சிவகுமார் (கண்ணியவான்) பற்றிய உங்களின் கருத்திலும் உடன் படுகிறேன். பாராட்டுக்கள்.
  T.S.MUTHU

 3. ஸ்ஸ்ஸ்……ப்பாடா. இந்த முறை தப்பித்து விட்டேன் போலிருக்கு சுந்தர்.

 4. எழுத தொடங்குங்கள் …. காத்திருக்கிறோம். பட்டியல் சரியாகத்தான் இருக்கு …கொள்கையில் தான் இருவருக்கு சிறிய சரிவு – திரு வை ,கோ & திரு வைரமுத்து ( பழமை பேசி பதிவின் மூலம் தான் இதை அறிந்தேன் ) …

  ,// கொண்ட கொள்கைகள் பின்னோக்கி தள்ளப்பட்டுருக்கலாம். உத்தமமான இடத்தை பிடிக்க இன்று வரையிலும் போராடிக்கொண்டு கூட இருக்கலாம். ஆனாலும் ஓழுக்கத்தை விலைமகளாக்காமல் சொந்த மகளாகவே பார்த்துக்கொண்டு பயணிக்கும் அவர்களின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்.//

  அதேன்னோவோ உண்மை தான் …எல்லோரும் ஒழுக்கமானவர்களே. … தொடங்குங்கள் திரு சிவகுமாரை பற்றி …ஆவுலுட்ன் இருக்கோம் .

 5. புத்தகம் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.

  • உங்கள் பெயர் ஒன்றே போதும். தரம் எளிதில் விளங்கும். நெல் மணிகளில் கற்றுத்தந்த அ ஆ இ மறக்க முடியுமா? எவ……. ஒருவன் அல்ல. என்னில் ஒருவன். சூசகம் புரிகின்றது. பதில் உங்கள் “கவர்ந்த வார்த்தைகள்”
   *இதைப் பற்றித்தான் என்றில்லை*

 6. சிவகுமார் அவர்களைப்பற்றி நல்ல ஒரு மனிதரின் நல்லியல்புகள் பற்றி அவர் எழுதிய புத்தகத்தைப் பற்றி அடுத்த வாரம் வரை இல்லை அடுத்த பதிவு வரை —நாங்களும் குட்டிக் கொள்கிரோம். சொல்ல ஆரம்பியுங்களேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s