பொக்கிஷம் (நினைவில் நீக்கமற நிறைந்து இருக்கும் காலப்பெட்டகம்)

தேக்கு மரங்கள் பேசும் கதைகளுடன் கூடி வாழ்ந்த கூட்டத்திற்கு எத்தனை அறைகள்.

தேக்கு மரங்கள் பேசும் கதைகளுடன் கூடி வாழ்ந்த கூட்டத்திற்கு எத்தனை அறைகள்.

நண்பர் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். அவருடைய தொலைபேசி உரையாடலே மிக சந்தோஷமாய் இருந்தது.

“இனிமே கவலைப்பட வேண்டியதில்லை. இந்த வீட்டை உடைத்து முடித்தாலே என் கடன் பிரச்சனை முழுவதும் தீர்ந்து விடும்”.

அவருடைய தொழிலே பழைய சாமான்கள் விற்பது. இது போக பழைய வீடுகளை உடைத்து அதில் கிடைக்கும் அத்தனை சமாச்சாரங்களையும் தரம் வாரியாக விற்பது.

ஒவ்வொரு முறை ஊருக்குள் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக தங்க வேண்டிய நேரத்தில் மாலை நேரத்தில் ஒவ்வொரு சந்தாக புகுந்து வௌியே வருவதுண்டு.

அனந்த ராமனுடன் குரங்கு பெடல் சைக்கிள் கற்ற யெ.மு வீதி மறக்க முடியாத நினைவு. அமைதியாய் நடக்கும் போதே அத்தனை நினைவுகளும் உள்ளே வந்து போகும்.

யூனஸ்கோ, படப்பிடிப்பு என்று ஏதோ ஒரு வகையில் புத்தாடையில் புதுப்பொழிவாய்

யூனஸ்கோ, படப்பிடிப்பு என்று ஏதோ ஒரு வகையில் புத்தாடையில் புதுப்பொழிவாய்

தொடக்கத்தில் அவர்கள் குடும்பம் தான் ஊரில் உள்ள அத்தனை நல்ல விஷயங்களுக்கும் பொருளாதார உதவிகளை தராளமாய் தானமாய் வழங்குவர். அவர் கட்டி வைத்திருந்திருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் அடியேனைப்போல அத்தனை பேருக்கும் அவதார இடம். கட்டி வைத்த பள்ளிக்கூடமும் கடைசியாக இறுதி மயானம் வரைக்கும் அவர்களின் பொருளாதார கைகள் வெகுவாக நீண்டுருந்தது.

அனந்த ராமன்,, கோபிநாதன் வீட்டுக்கு போகும் போதெல்லாம் மறக்காமல் ஆச்சி உள்ளே அழைப்பார்கள் . மொத்த கூட்டத்திற்கும் டின்னில் அடுக்கி வைத்துள்ள நெய் முருக்கு வினியோகம் நடக்கும். வீட்டுக்கு உள்ளே போக அச்சமாய் இருக்கும்.

சந்தில் ஒரு முனையில் தொடங்கி நான்கு புறமும் மொத்தமாய் வளைத்து எழுப்பியிருக்கும் பிரம்மாண்டமான அந்த அரண்மனையை எத்தனை வருடங்களில் கட்டியிருப்பார்கள்? எத்தனை பேர்களின் கூட்டு முயற்சி? பர்மா, மலேசியா, சிங்கப்பூர் மொத்த உழைப்பும் அங்கு கதவாய், நிலைப்படியாய், மாடமாய் மாறியிருக்கும்.

ஒரு முனையில் இருந்து பார்த்தால் அடுத்த முனையில் இருந்து பேசும் வேலைக்காரர்களின் கூச்சல் கூட கேட்காது. அத்தனை வாஸ்தும் அடக்கமாய் இருக்கும். அத்தனை வாழ்க்கை கலை நுனுக்கமும் அம்சமாய் இருக்கும்.

உள்ளே நுழையும் போதே உங்கள் உள்ளமும் மாறிவிடும்?

உள்ளே நுழையும் போதே உங்கள் உள்ளமும் மாறிவிடும்?

இறைபக்தியும், கலை பக்தியயும் மொத்தமாய் சேர்ந்த கூட்டுக்கலவை.

திரைகடலோடியும் தேடி திரவியமெல்லாம் திகட்டாத தேன் அமுதம் போல் இன்று வரையிலும் பெரும்பாலான இடங்களில் காலத்தின் சாட்சியாய் இருந்து கொண்டுருக்கிறது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பண்பாடு. ஒரு கூட்டம். ஒரு பிரிவு. மொத்தமாய் ஒரே கூரையில் வந்தாலும் கலாச்சாரம் ஒரே மாதிரி என்றாலும் எல்லைக்கோடு போல் அங்கங்கே ஏதேதோ உணர்த்துவதாய் . சாமி கும்பிடுவதை வைத்து பிரித்து இருப்பர்.

இன்று வரையில் எந்த ஆர்ப்பாட்டமும் நான் பார்த்தது இல்லை. எந்த இடத்திலும் முன்னிறுத்தல் இருக்காது. ஆனால் எல்லா இடத்திலும் தான தர்மத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்கள். மூன்று தலைமுறைகள் தாண்டியும் ஒரு விரிசல் இல்லாத கட்டிடங்கள் ஒரு வியப்பு என்றால் வாழ்க்கையின் முதன்மை பண்பே சேமிப்பு என்பதை உணர்த்தும் வாழ்க்கை இன்னோரு வியப்பு.

விளையாட்டுத்தனத்தை விட்டு உற்றுப்பாருங்கள் ஏதாவது விரிசல் தெரிகின்றதா? வயது 150.

விளையாட்டுத்தனத்தை விட்டு உற்றுப்பாருங்கள் ஏதாவது விரிசல் தெரிகின்றதா? வயது 150.

சந்தில் இளமையில் பார்த்த ஆச்சியும், அப்புத்தாவும் தெரு வாயிலில் வேடிக்கை பார்த்துக்கொண்டுருப்பார்கள். அத்தனை பெரிய வீட்டுக்குள் அவரைத் தவிர அவ்வப்போது வந்து போய்க்கொண்டுருக்கும் வேலைக்காரர்கள் மட்டும்.

என்றைக்கோ ஒரு நாள் அத்தி பூத்தாற்போல் திருடன் என்ற பெயரில் யாரோ ஒரு நுழைந்து விடுவார்கள். பெரிய அளவிற்கு எந்த அசம்பாவிதங்களையும் நான் பார்த்தது கேட்டது இல்லை. பொறுமை, சகிப்புத்தன்மை, சமாதானம், வரவுக்கு ஏற்ற செலவு, நிச்சயமான சேமிப்பு, மொத்தத்தில் வாழ்க்கை முழுவதும் நிறைந்து இருக்கும் நிதானம்.

வாழையடி வாழையாக அத்தனை பேர்களும் அப்படித்தான் வாழ்ந்தார்கள். இருக்கிறார்கள். இளமைப்பருவத்தில் காவல் நிலைய அதிகாரிகள் அத்தனை பேரும் ஐந்து வருடங்கள் நிச்சயமாய் ஓய்வு எடுத்துக்கொண்டு தான் மாற்றலாகி போனார்கள்.

நடந்து வரும் போது பல முகங்கள்.

மாங்காயும், நெல்லிகாயும் திருடி உள்ளே நுழைந்தவர்ககளை கம்பால் விரட்டிக்கொண்டு வரும் அத்தனை பேரும் பல் இழந்து பார்வை குறைந்து அருகில் போய் சொன்ன போதிலும் பொக்கை வாய் சிரிப்பாய் செல்ல குட்டு வைத்து சிரித்தார்கள்.

எத்தனை அறைகள், எத்தனை மாடங்கள், எத்தனை முற்றங்கள் எண்ணிக்கையில் அடங்காமல் உள்ளே நுழைந்து வௌியே வர திணறிய காலமுண்டு. திருப்பூரில் மூன்றரை சென்டில் வீட்டுடன் கட்டித்தருகிறோம் என்று வீட்டுக்கு வருவபவர்களை பார்க்கும் போது காலம் ஏதோ எனக்கு மறைமுகமாக கூறுவது போல் தெரிகின்றது.

மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், மாப்பிள்ளைகள் அத்தனை உறவுகளும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஈரேழு உலகமாய் பிரிந்து வாழ இங்கு வசதி குறைந்தவர்களின் வீடுகள், பராமரிக்க முடியாத வீடுகள் என்று எத்தனையோ காரணங்களால் ஏற்றம் குறைந்து மாறிக்கொண்டுருக்கிறது.

கிளம்பி வரும் போது எப்போது போல அக்கா வீட்டுக்குச் சென்றேன். எப்போது போனாலும் பொட்டலம் மடித்துக்கொண்டுருக்கும் கூட்டத்துக்குள் தலைகாட்டி பேசும் அக்காவைச்சுற்றி இன்று சற்று கூட்டம் அதிகமாக இருக்கிறது.

திரைப்பட வௌிப்புற படப்பிடிப்பு சமையல் மளிகை சீட்டை சரிபார்த்துக்கொண்டுருந்தார்.

பத்து பெண் குழந்தைகள் இருந்தாலும் பழையை சாமானை வைத்து கரை சேர்த்து விடலாம்.

பத்து பெண் குழந்தைகள் இருந்தாலும் பழையை சாமானை வைத்து கரை சேர்த்து விடலாம்.

http://tirupurjothigee.blog.co.in/about/contact/

Advertisements

4 responses to “பொக்கிஷம் (நினைவில் நீக்கமற நிறைந்து இருக்கும் காலப்பெட்டகம்)

 1. விட்டுப்போனவைகளைப் பார்க்கலாம் என்று இங்கே வந்தால்…… ஆஹா……..என்ன ஒரு இன்ப அதிர்ச்சி.

  யானைவரும் முன்னே அதன் பெயர் வந்துட்டுப்போய் இருக்கு:-))))

  சுந்தருக்கு என் நன்றிகள்.

 2. இது தான் அந்த பதிவு ( துளசி டீச்சரின் ) – அனந்த பத்மநாப சுவாமி பள்ளி கொண்டுள்ளதால் அந்த ஊருக்கு அந்த பேர் – இரண்டும் ஒன்று தான்

  http://thulasidhalam.blogspot.com/2009/04/2009-12.html

 3. நன்றி. ஒப்பந்தம் இருக்கட்டும். கிடைத்தது படிக்கும்போதே ஒப்பந்தங்களின் உண்மையான நிலை உங்களுக்குப் புரியும். திருவனந்தபுரம் தான் உங்கள் வார்த்தைக்கு அர்த்தமா? அல்லது வேறு ஏதாவது ஊர் இருக்கிறதா? துளசி டீச்சர் இ அனுப்பவும். வேறுபாடுகள் உணர வாய்ப்பாய் இருக்கும்?

 4. நிறய முறை இந்த படங்களை பார்த்தாலும் , அண்மையில் துளசி டீச்சரின் பதிவில் மறுபடியும் காரைக்குடி – அந்த மாளிகைகளை பார்த்த பொழுது, அடுத்த முறை இந்தியா வந்தால் நிச்சயம் இந்த இடங்களை பார்க்க வேண்டும் என்று மனதில் குறித்து கொண்டேன் ..உங்களின் இந்த பதிவு அதை மீண்டும் உறுதி படுத்துகிறது.

  முடிந்தால் இந்த உடன்படிக்கை – நீங்கள் காரைக்குடியை காட்டுங்கள், நான் திருஅனந்தபுரத்தில் இது போன்ற சில வீடுகளை உங்களுக்கு காண்பிக்கிறேன்

  பொக்கிஷம் ..இன்னும் எத்தனை நாள் பாதுக்காக போகிறோமோ ???

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s