” இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை?”

இருட்டுக்குள் இருக்கும் பிரம்ம சூத்திரமாய் இருப்பதால் தானே இங்கு பல பேரின் வாழ்க்கை பரிதாபத்தில் முடிகின்றது?

இருட்டுக்குள் இருக்கும் பிரம்ம சூத்திரமாய் இருப்பதால் தானே இங்கு பல பேரின் வாழ்க்கை பரிதாபத்தில் முடிகின்றது?

பார்த்தும் பார்க்காதது போல் ஓடி ஓளிபவரை என்ன செய்வது? கூப்பிட்ட இரண்டு முறையும் கூட்டத்திற்குள் தன்னை மறைத்துக்கொள்ள விரும்புவது தூரத்தில் இருந்து பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகின்றது?

மனம் கேட்கவில்லை. தைரியமாக தன்னை மட்டுமே முன்னிறுத்த விரும்பும் ஆவன்ரூனா என்றழைக்கப்படும் ஆறுமுகத்தை பார்த்தே விட வேண்டும் என்று கூட்டத்திற்குள் மறைவது போல் மறைந்து பின்னால் போய் நின்று முதுகை தொட்டபோது, திடுக்கிட்டு திரும்பிய ஆறுமுகத்தின் முகம் எனக்கு ஏராளமான அதிர்ச்சியையும் தந்தது.

ஓட்டிய கன்னத்தில் ஓடுங்கிய பள்ளத்தில் பல நாட்கள் சவரம் செய்யப்படாத தாடி. கண்களைச் சுற்றி கரு வளையம். சிரிக்க முடிந்த வாயில் தெரிந்த பல்லில் நிக்கோடின் தந்த பரிசு. போட்டுருந்த ஆடைகள் அவரின் வாழ்க்கை அவசரத்தை பறைசாற்றியது.

என்ன நடந்தது?

என்னுடைய நிறுவன தணிக்கையாளர் அறிவுறுத்தலின் பேரில் வணிகவரி அலுவலகத்தில் கையொப்பம் விடுவதற்காக திருப்பூர் டவுன்ஹறால் அருகே மொத்த அரசு அனைத்து அலுவலகமும் ஒருங்கே இருக்கும் அந்த நீண்ட வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புக்காக எப்போதும் நிறுத்தும் காவல் நிலைய வேப்ப மரநிழலுக்கு கீழே வண்டியை நிறுத்த முற்படும் போது தான் ஆறு முகத்தைக் கண்டேன். காவல் நிலையத்தின் முன்னால் கூடியிருந்த கூட்டத்திற்குள்.

திருப்பூருக்குள் உள்ளே நுழைந்த காலம்

அது. அம்மா கடிதம் மூலம் தெரிவித்துருந்தார். ” உன்னுடன் படித்த முருகேசனும் நீ இருக்கும் அதே கொங்கு நகரில் தான் பணிபுரிகின்றான். பழகி வைத்துக்கொள் “. கடிதம் படித்ததும் வியப்பாய் இருந்தது. பள்ளி மேல்நிலை இறுதியில் இரண்டு வருடங்கள் கணக்கு பாட பிரிவில் சேர்ந்து படித்தவன். எங்களுடைய அறிவியல் பிரிவு அவர்களுடன் அவ்வப்போது கைகுலுக்கும். முக்கியமாக தமிழும், ஆங்கிலமும் மொத்த பிரிவுகளும் ஒன்றாய் அமரும் போது பாடத்தை விட எனக்கு படபடப்பு தான் அதிகமாய் இருக்கும். மொத்த முரட்டுக்கூட்டமும் முரண்டு பிடித்துக்கொண்டு பாடம் நடத்துபவரை உண்டு இல்லை என்று ஆக்கிக்கொண்டுருப்பார்கள். கவனிக்க முடியாது. கேட்டால் கேலிப்பொருளாய் ஆக்கி விடுவார்கள்.

இந்த முருகேசனும் அந்தக்கூட்டத்தில் ஒருவன். மொத்த அந்த கூட்டமும் விளையாட்டுப் போட்டிகளில் வீரனாய் இருப்பவர்கள். ஆனால் கூட்டத்தில் முருகேசன் ஒருவனாக இருந்தாலும் பேசும் வார்த்தைகள் கூட மென்மையாகத் தான் வௌியே வரும்.

ஞாயிறுக்கிழமை அன்று தனலெஷமி திரை அரங்கு பின்னால் சென்று உள்ளே அழைந்து திரிந்து அவனுடைய இருப்பிடம் கண்ட போது திகைப்பாய் இருந்தது.

முத்து முத்தாய் கையெழுத்தை பெற்று மொத்த ஆசிரியர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றவன் முக்கி முக்கி துணி மூட்டையை தூக்கிக்கொண்டுருந்தான்?

அன்று தான் முதல் முதலாக அந்த எந்திரத்தை பார்த்தேன்.

சாயமேற்றிய துணியை சுருக்கம் நீக்கி, தேவையான அளவிற்கு சுத்தமும் அளவுமாய் மடிப்பு கலையாமல் பனியன்களை, ஜட்டிகளை எளிதாக வெட்டுவதற்காக முன்னேற்பாடு செய்து தரும் எந்திரம். உள்ளே அருகே விறகால் மொத்த தீயினால் கொதிக்க வைக்கப்பட்ட சுடுநீர் ஆவியால் எந்திரம் சொன்ன சொல் கேட்டுக்கொண்டுருந்தது. ஏற்றுமதிக்கென ஏராளமான எந்திர வரிசைகள் போல் இது உள்நாட்டு வர்த்தகத்திற்கென எளிமையாக வடிவமைக்கப்பட்ட எந்திரம்.

என்னைக் கண்டதும் ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டான். ஊரில் காணாத பாசம். பரவசமாயிருந்தது. மேல்நிலை இறுதி தேர்வில் மிக தைரியமாக ஊருக்குள் இருந்த திரையரங்கத்தில் கமல் படத்தை கலைக்கண்களோடு பார்த்து இழந்த மதிப்பெண்கள் தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள தொழில் நுட்ப பயிற்சி கூடத்தில் ஒரு வருடங்கள் படித்து எங்கங்கோ சுற்றி கடைசியில் இங்கு வந்து சேர்த்த கதை சொன்ன போது எங்கள் இரண்டு பேரின் வாழ்க்கை பாதைகளுக்கும் அதிக வித்யாசம் இருப்பதாக தெரியவில்லை. பயணித்த வகையில் மட்டுமே வெவ்வேறு?

பேசிக்கொண்டுருந்த ஒரு மணி நேரத்தில் முடித்த போது அவனுடைய முதலாளி என்று அறிமுகம் செய்தவரை பார்த்த போது மயங்கி விழாத குறைதான்.

பள்ளியில் மூன்று வருடங்கள் பின்னால் படித்துக்கொண்டுருந்த ஆறுமுகம். ஊர்ப்பழக்கத்தில் முதல் இரண்டு எழுத்துக்களை வைத்து அழைப்பது போல் ஆவன்ரூனா.

குட்டை உருவமும் அதே உருண்டை முகமும் சுருண்ட கேசமும். என்னைப் பார்த்ததும் ஊர் வழக்கப்படி குடும்பப் பெயரைச் சொல்லி மரியாதையாய் அழைத்து சாப்பிட அழைத்துச் சென்றது அடுத்த ஆச்சரியம்.

பள்ளியின் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு அறையில் இருந்து அடுத்த அறைக்கு அவசர காரணங்களால் மாற்றப்படும் போது, சென்ற வரிசையில் வௌியே வெயிலில் முட்டி போட்டுக்கொண்டுருக்கும் மாணவர்கள் கண்களுக்குத் தெரிவார்கள்.

எல்லா நாட்களும் இந்த ஆறுமுகம் மட்டும் ஒருமுகமாக நின்று கொண்டுருப்பார்.

தமிழ் கூட ததிங்கிணித்தோம் போடும் மாணவர்கள் வரிசையில் இருந்த ஆறுமுகம் ஒரு நிறுவனத்தின் முதலாளி என்ற போது வாழ்க்கை என்னைப் பார்த்து சிரித்தது?

படித்த படிப்பு என்பதற்கும், வாழ்க்கை கொடுக்கும் அனுபவ படிப்பிற்கும் உள்ள வித்யாசங்களை அன்று தான் முதல் முதலாக நுழைந்த புது மாணவனாக கற்கத் தொடங்கினேன்.

ஒன்பது பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற கலந்தர், காளீஸ்வர ஜெயக்குமார் இருவரும் இன்று வாழ்ந்து கொண்டுருந்த வாழ்க்கை எனக்கு வேறொரு வித்யாச பாடத்தைக் காட்டியது.

கலந்தர் ரோட்டுக் கடை மூலமாக பிரயாணி விற்றுக்கொண்டுருக்கிறார். ஜெயக்குமார் துரித அஞ்சல் சேவையை தனியாக நடத்த முற்பட்டு வாழ்க்கையை தொலைத்து கடன் தொல்லைக்கு பயந்து டெல்லியில் தலைமறைவாய் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருக்கிறார்.

அவர்கள் கற்ற கல்வி எந்தப் பாதையுமே காண்பிக்க வில்லை. பெற்ற அனுபவக் கல்வி மட்டுமே இங்கு பல பேருக்கு வசந்த வாயிலை அறிமுகப்படுத்தியுள்ளது?

அதுவும் திருப்பூரில் வருட வருடம் எகிறிக்கொண்டுருக்கும் மில்லியன் பில்லியன் அந்நியச்செலவாணி வரைபட குறியீடு அத்தனையுமே அனுபவம் மட்டுமே தந்த வெற்றி.

எந்த நிர்வாக மேலாண்மைக் கல்லூரியும் இவர்களுக்கு தந்த பாடங்கள் அல்ல?

உழைப்பு. திட்டங்கள். உறக்கம் மறந்த செயல்பாடுகள், அத்தனை நாளுமே அர்பணிப்பான வாழ்க்கை தந்த வசதிகள் தான் இன்றைய திருப்பூர்.

வாழ்க்கையில் வெற்றி மட்டுமே முக்கியம். வந்த பாதைகள் எதுவும் இங்கு முக்கியம் அல்ல. வரவாய் இருப்பதும் உறவாய் வருபவர்களுக்கு தேவையானது நீ வெற்றியாளனா? இல்லை வெற்றி பெற்றபவனைப் பார்த்து புழுங்கிக்கொண்டுருப்பவனா?

இரண்டே கேள்விகள் தான்?

பதில்கள் சாதகமாய் இருந்தால் சமூகத்தில் சமரசமாய் உலாவ முடியும்? இல்லாவிட்டால் சங்கடங்களை பதிவாய் உருவாக்க முடியும்?

இடையில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், உள்ளம் பரிதவிக்கும் போதெல்லாம் அந்த முருகேசன் தான் என்னுடைய காத்தருளும் குலதெய்வம்.

கணக்கில்லா காசு தந்தவன். கவலைகளை மறக்க பலவற்றையும் “கற்று” தந்தவன். தௌியாமல் இருந்த நாளில் உணர்வாய் மாற்றியவன்.

கணக்கு வழக்கே இல்லாமல் தந்த பணம் காசெல்லம் இன்று வரை எந்த வம்பு வழக்கையுமே தராமல் எங்களின் நட்பு மட்டும் புதிதாய், புதிராய், புனிதமாய் தொடர்ந்து கொண்டுக்கிறது.

என்னைப்போல் வாழ்க்கையை படபடப்பும், பரபரப்புமாய் அனுகாத குணமே இன்று வரையில் தௌிந்த நீரோடை போல் ஓடிக்கொண்டுருக்கிறது. ஒவ்வொரு முறையும் சந்தித்து விடைபெறும் போது ஆறுமுகத்தின் வளர்ச்சிகள் வியப்புக்கு மேலே கொண்டு போய்க்கொண்டுருக்கும்?

மும்பை நாரிமன் பகுதி போல் இருக்கும் திருப்பூர் லஷமி நகரில் கிடைத்த ஒட்டுச்சந்தில் ஆறுமுகம் தொடங்கிய அலுவலகம் அதிர்ஷடத்தின் தொடக்கமாய் இருந்தது.

வௌிநாட்டு வர்த்தகம் போல் இங்கு ஈரோடு சந்தைக்கென்றே இங்கு ஒரு தனியான உலகம். எளிமையான விலை. தரமோ தராதரமோ தேவையில்லை. ஒரு தடவை துவைத்தாலே உதிர்ந்து விடும் சாயம் பற்றிக் கூட கவலைப்பட தேவையில்லை.

ஏற்றுமதியின் எச்சமும் மிச்சமுமான அனைத்து கச்சடா சமாச்சாரமும் இங்கு பல பேருக்கு ஏற்றமான வாழ்வை தந்துள்ளது என்றால் அதில் எள்ளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை?

மின் அஞ்சல் கேள்வி பதில் தேவையில்லை. நாட்டின் வேறுபாடுகள் உள்ள கால நேரத்தில் கண் முழித்து அவஸ்த்தை வேண்டாம். போட்ட முதல் மோசமாகிவிடுமா? சரக்கு சென்ற கப்பல் கரை சேர்க்குமா? என்று கண்ணீர் விட வேண்டியது இல்லை.

கையில் காசு? வாயில் தோசை?

எளிமையான எதார்த்தமான தொழில் சூத்திரங்கள்.

கையில் பணம் இருந்தால், நிறுவனத்தில் ஏறி இறங்கி வாங்கிக் கொள்ளும் அவமானங்கள் தாங்கிக் கொள்ளும் மனம் இருந்தால் மிக விரைவில் ஏற்றமான வாழ்க்கையை அதிர்ஷடம் முகவரியாக்கிவிடும்?

ஆனால் ஆறுமுகத்தின் பார்வை அதிலும் வித்யாசமாய் இருந்தது.

கச்சடா வகைகளுக்கு ஒரு பங்குதாரர் கூட்ட அலுவலகம். ஈரோடு சந்தைக்கென்று ஒரு தனியான அலுவலகம். இரட்டை மாட்டை வண்டியில் வேகம் சற்று அதிகமாகத்தான் இருந்தது.

வண்டிகள் வந்தது. புதிதாய் வந்து இறங்கிய வௌிநாட்டு வாகனங்கள் வந்தது. அலுவலகம் தொழிற் கூடத்தை அறிமுகப்படுத்தியது. கையால் ஓட்டிக்கொண்டுருந்து சாயமேற்றும் எந்திரம் மாறி கணக்கற்ற கிலோக்களை கண்இமைக்கும் நேரத்தில் உலர் சலவைத்துணியை துப்பும் எந்திரத்தை வாங்கும் துணிவை தந்தது.

எல்லவாற்றிலும் வந்த துணிவு வீட்டுக்கு அருகில் இருந்த அடுத்தவன் மனைவி மேல் ஆசையையும் தந்தது?

15 வருடத்திற்குள் ஒருவனின் சொத்து மதிப்பு 100 கோடி என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

போன மாதம் முருகேசன் சொன்ன போது என்னால் வியக்க முடியவில்லை. அவனுடைய பார்வையில் பரவசமாய் இருந்தது. என்னுடைய பார்வையில் உள்நாட்டு வர்த்தகத்தில் வந்த தொகை என்பதாகத்தான் ஆச்சரியம் அளித்தது.

எத்தனை அதிர்ஷடங்கள் என்றாலும், தொட்ட அனைத்தும் துலங்கிய கால காட்டத்தில் அமைந்தது என்றபோதிலும் அத்தனைக்கும் பின்னாலும் படிப்பு அறிவே இல்லாத கற்றுணர்ந்த பட்டறிவு கொண்டே வளர்ந்த ஆறுமுகம் எனக்கு ஆதர்ஷ கடவுளாக ஆகிப்போனதில் ஆச்சரியம் இல்லை?

தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயம் செய்யக்கூடிய ஒரு பத்திரிக்கையின் உறவாய் உள்ளவர் நடத்திக்கொண்டுருக்கும் அலுவலகத்திற்கு அன்று அழைத்துருந்தார்.

“சென்னையில் இருபது வருடங்களாக நடத்திக்கொண்டுருக்கிறேன். இதே தொழில் தான் என்றாலும் இரண்டு மணி நேர மேற்பார்வையில் எல்லாவற்றையும் முடித்து விட்டு அடுத்த வேலைக்குச் சென்ற எனக்கு இங்கு வந்தால் 24 மணி நேரமும் அலுவலகத்தில் இருந்தாலும் எதுவுமே புரிபடமாட்டேன் என்கிறது? போன வருடம் பத்து கோடி என்கிறார்கள்? ஆனால் இந்த வருடமோ தெருக்கோடி என்கிறார்கள்? பயமும் பரிதவிப்பாய் இருக்கும் இந்த தொழிலை மூடி விடலாம் என்றால் முடியமாட்டேன் என்று இழுத்துக்கொண்டே செல்கிறது? ”

சிரித்துக்கொண்டேன்.

சகோதரர்கள், மாமாக்கள், உறவினர்கள் அனைவருமே வேண்டாம் என்றபோதிலும் விடாப்பிடியாக உள்ளே வந்தவர்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் உள்ளே நுழைத்தால் முதல் மாத சம்பளம் வாங்காமல் ஊரில் இருந்து தொலைபேசியில் அழைப்பார்கள்.

“போதுமடா சாமி. சாப்பிட்ட சாப்பாடு கூட ஓட்டாது போல”

தென் மாவட்டங்கள் அனைத்துக்குமே திருப்பூர் என்றால் சொர்க்கலோகம்.

ஆனால் உள்ளே வந்தவர்களுக்குத் தான் தெரியும் 24 மணிநேரமும் உழைக்கத் தைரியம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் சொர்க்கலோகமாய் இருக்கும்.

இல்லாவிட்டால் நினைத்து மட்டுமே பார்க்கக்கூடிய சொறி சிந்தனையாய் மனதிற்குள் இருந்து விடும்?

கூடா நட்பும், பிறன்மனை நோக்கலும் அந்த ஆறுமுகத்திற்கு புரியவில்லை. காரணம் அவருக்குப் புரியாத தமிழ் பாடத்தைப் போலவே இருந்ததால்.

கழுதையாய் சுமந்த கல்லீரல் ஒரு நாள் உன் கணக்கு முடிந்து விட்டது என்று சொல்லி துப்பிய எச்சிலில் இரத்தம் வடிந்தது.

பிறன் மனையாள் தந்த சுகம் தொழில் வாழ்க்கையை பிழைக்க வைத்துக்கொண்டுருந்த இடங்கள் அனைத்தும் அவளின் வாழ்க்கைத் தடங்களாக மாற்றி விட்டது.

ஒதுக்காமல் தொடர்ந்து கொண்டுருக்கும் வீட்டு மனைவியும், ஒத்துழைத்துக்கொண்டுருக்கும் குடும்ப மருத்துவரும் சேர்த்துதான் அவரை தைரியமாக காவல் நிலையத்தில் காத்துக்கொண்டுருக்கும் திருப்பி அனுப்பப்பட்ட காசோலை வழக்கில் ஆஜராக வைத்துக்கொண்டுருக்கிறது.

ஓடுங்கிய முகமென்று ஒதுக்கி வைத்த புரட்சித்தலைவர் முகம் உயிர் போயும் இன்று வரை உலகை ஆளவில்லையா?

ஆறுமுகமும் ஒரு நாள் ஆள்வார்? மீள்வார்?

இந்தப் பதிவு திரு சுந்தர் ராமன் பாத கமலங்களின் சமர்ப்பிக்கின்றேன்.

Advertisements

6 responses to “” இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை?”

 1. உழைப்பு. திட்டங்கள். உறக்கம் மறந்த செயல்பாடுகள், அத்தனை நாளுமே அர்பணிப்பான வாழ்க்கை தந்த வசதிகள் தான் இன்றைய திருப்பூர்.

  Unmai nanbare mutrilum unmai

  T.S.MUTHU

 2. நீங்க கண்டு பிடிக்கற பொருள் குற்றம் / எழுத்து பிழை போதாதுன்னு சாமிநாதன் சாரும் ….போட்டு தாக்கு- இருந்தாலும் விளக்கேறேன் துக்ளக்ல சில சமயம் ஒரு விளம்பரம் வரும், ஒரு 97 வயது ஜோதிடம் பார்ப்பவர், விளம்பரத்தில் ஏதாவது ஒரு கதையும் / செய்தியும் இருக்கும். ஒரு முறை அவர் சொன்னது, பாவத்திலேயே பெரும் பாவம் பிறர் மனை நோக்குதல் … இப்போ சொல்லுங்க நம்ம கதையின் நாயகனுக்கு தெய்வத்தின் அநுக்ரஹம் எப்படி கிடைக்கும் ?

 3. அனுக்ரஹத்திற்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கின்றதா..?

  • அப்பாாாாாாாா…….. (என் பெருமூச்சு உங்களுக்கு கேட்கிறதா?). என்னைச் சொல்லிவிட்டு “க்கு” வைத்து? எழுத்துப்பிழையா? வார்த்தை பிழையா? இல்லை என் பதிவு பொருள் பிழையா? புரிந்த உங்கள்(உங்களுக்குமட்டும்) ரகஸ்யத்தை எதிர்பார்க்கின்றேன்?
   texlords@aol.in

 4. பதிவு நல்லாத்தான் இருக்கு, ஆனால் பாத கமலம் …. கொஞ்சம் ஓவரு !!!!!!!!

  ஆட்களை எடை போடுவதில் நீங்கள் வல்லுநர் தான், என்னா நுணுக்கமா அந்த ரெண்டு பேத்தையும் சொல்லி இருக்கீங்க … மேல போனாலும், வீழ்ந்திட்டார்… எப்போதுமே BACK TO BASICS ன்னு சொல்வாங்க, அது ரொம்ப முக்கியம்… அப்பா/ அம்மா ஆசிர்வாதம், குரு பார்வை, தெய்வத்தின் அநுக்ரஹம், ( பாவம் செய்யாமை )… இது வேணும் மொதல்ல, செல்வம்/புகழ் எல்லாம் தானே வரும் … இது தான் எனக்கு தெரிஞ்சது உங்க பதிவில …

  • என்ன செய்வது ரௌத்திரம் அதிகமாகும் போது திருத்த முயற்சிப்பது போல் அதிகமான சந்தோஷம் கூட குட்டு வாங்க வைத்து விடுகின்றது. போட்ட எடைகள் அனைத்தும் இன்று பதிவு உடையாக?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s