வாழும் மகாத்மா நடிகர் சிவகுமார் (இரண்டாவது காதல்)

வயது 30. இளமையாய் எந்த எதிர்பார்ப்பும் விளம்பரமும் இல்லாமல்.

வயது 30. இளமையாய் எந்த எதிர்பார்ப்பும் விளம்பரமும் இல்லாமல்.

திருப்பூர் கம்பன் கழக முதலாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிக்காக வந்த சிவகுமார் “கம்பன் என் காதலன் ” உரை நிகழ்த்திய ஓலி ஓளி குறுந்தகடு முடிவுக்கு வந்த போது குளிர்ச்சியான இருண்ட அரங்கம் வௌிச்சமாய் தொடங்கப்போகும் நிகழ்ச்சிக்கு வந்தது.

ஆச்சரியங்களும் அணிவகுத்தது.

இன்று இந்தியா டூடே எத்தனையோ கல்லூரிகளை பாடல் பத்து போல் தரம் பிரித்து தகுதிகளை பறைசாற்றுவதை பார்க்கும் போதே படித்த அழகப்பச் செட்டியார் கல்லூரியின் நினைவு வந்து போய்க்கொண்டே இருக்கும்?

சிதம்பரம் தவிர வேறு எங்கும் அனைத்து வசதிகளும் உள்ள கல்லூரிக்குச் செல்ல வேண்டுமானால் அப்போதைய காலகட்டத்தில் சென்னைக்குத் தான் வரவேண்டும். ஒரு பொட்டல் காட்டில், குடிக்கும் கஞ்சிக்கே வக்கற்ற அத்தனை பேர்கள் வாழும் மக்களுக்கு மத்தியில் அத்தனை ஆயிரம் ஏக்கரில் தனி ஒரு மனிதனாக கட்டிய கட்டங்களில் இன்று வரை ஒரு விரிசல் கூட இல்லை.

குறுக்குத்தூண்கள் போன்ற இன்றைய நவீன கட்டிட சித்தாத்தங்கள் இல்லாமல் அகன்ற அறையில் குறுக்கில் போய்க்கொண்டுருக்கும் அத்தனை எடை உள்ள இரும்பு சமாச்சாரங்கள் என்னை நுழைந்து படித்துக்கொண்டுருக்கும் காலத்தில் திடுக்கிட வைத்தது உண்மை தான்?

கல்லூரியா? சோலைவனமா?

வகுப்புறை முழுமையுமே நூலகமாக காட்சியளிக்கும் போது சரஸ்வதி வாசிக்கும் கருவியாய் மொத்தத்திற்கும் ஒரு பெரிய நூலகம்.

குழந்தைகளின் மாமா ஜவர்கஹால் நேருவுடன் கொண்ட தனிப்பட்ட நட்பு அனைத்தையுமே கல்விக்கூடத்தை கல்விக்கடலாய் மாற்றி எதிரி நாடுகள் கவனிக்கும் வரைபடத்தில் முக்கிய ஒரு புள்ளியாய் ஆக்கி பல லட்ச குடும்ப குழந்தைகளை பெரும்புள்ளியாக்கிய புனிதர்.

ஏழைகளுக்கு, எளியவர்களுக்கென்ற பிறப்பெடுத்த மனித அவதாரம். நன்கொடை ஏதும் எதிர்பார்க்காமலே இருந்த எல்லாவற்றையுமே கொடையாய் கொடுத்துச் சென்ற வள்ளல்.

அத்தனை வசதிகளையும் மட்டுமே பார்த்து வந்தவன் அதுபோலவே எல்லா கல்லூரியில் இருக்கும் என்று கற்பனையில் இருந்தவன் திருப்பூரில் உள்ள எல்.ஆர்.ஜி. பெண்கள் கலைக்கல்லூரியில் படிக்க வரும் பெண்கள் அனைவரும் தரையில் அமர்ந்து படித்துக்கொண்டுருப்பதை திரு. சிவகுமார் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அறிவிக்க ஆச்சரியத்தின் முதல் உச்சம்.

ஓரே ஒரு உத்தரவில் அவர் மேடையில் அழைத்த அழைப்பில் கல்லூரிக்கு 24 அறைகளுக்கு தேவையான மரச்சாமான்கள் வாங்க 7.2 லட்சத்தில் தனது குடும்ப 3 பேர்கள் சார்பாக ஒரு லட்சம் கொடுத்து தொடங்க பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்த மொத்த தொகையின் காசோலைகள் அடுத்த ஆச்சரியம்.

திருப்பூர் ஒரு நல்ல ஏற்றுமதியாளரை இழந்து விட்டது?

திருப்பூர் ஒரு நல்ல ஏற்றுமதியாளரை இழந்து விட்டது?


ரௌத்தரம் பழகு. அதை வௌியே காட்டாதே?

ஏற்றுக்கொள்ளக்கூடிய அவஸ்யமான அறிவுரை தான். கல்லூரிக்குத் தேவையான திரட்டப்பட்ட நன்கொடையை கொடுப்பதற்காக வரவழைக்கப்பட்ட மொத்த மாணவிகளுக்காகவே குளிர்சாதன வசதியுள்ள அரங்கத்தில் முன்னுரிமை கொடுத்து ஓலி ஓளி குறுந்தகடு நிகழ்ச்சியை பார்க்க வைத்த திரு. சிவகுமார், வந்த மாணவிகளின் தொடர்ந்து கொண்டேயிருந்த சொந்தக்கதை இரைச்சலை அவர் ரௌத்திரமாய் ஆகி மேடையில் கர்ஜித்ததை பார்த்தபோது எனக்கு சற்று திருப்தியாய் இருந்து. அப்போது தான் பின்னால் கத்திக்கொண்டுருந்த இரண்டு மாணவிகளுடன் சண்டை போட்டு முடித்துருந்தேன்?

திருப்பூர் நிறுவன அதிபர்கள் அதிகபட்சம் 80 வயது ஆனால் என்ன செய்வார்கள்? கணக்கு பார்த்துக்கொண்டுருக்கும் தணிக்கையாளர்களுடன் தொடர்ந்த கலந்துரையாடலில் மூலம் தான் ஒப்படைத்த நிர்வாகத்தை தன்னுடைய வாரிசு சரியான பாதையில் கொண்டு செல்கிறாரா? என்று நாளோரு பொழுதும் அவஸ்த்தையில் கழித்துக்கொண்டுருப்பார்கள்?

ஆனால் மண்டப உரிமையாளர் அந்த 80 வயது கணவான் தனது வாழ்வின் கடைசி நாட்களை பின்தொடர்ந்து வந்து கொண்டுருக்கும் இளைஞர்களுக்காக நிகழ்ச்சி நடந்த ஒரு நாள் முழுமையும் இலவசமாக கொடுத்ததை விட தினந்தோறும் ஒரு மணிநேரம் கம்பனைப்பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டுருப்பதாகவும் பல புத்தகங்கள் படித்துக்கொண்டுருப்பதாக சொன்னது ஆச்சரியம் என்றால் அதை விட பெரிய ஆச்சரியம் அவர் அங்கு இருந்த அனைவருக்கும் சொன்ன அறிவுரை.

” பொன் மான் தேடுவதை நிறுத்தி சற்று கலை மானையும் தேடுங்கள். அந்த மான் கைக்கு சிக்காமலே போய்க்கொண்டுருக்கும். சிக்கும் இந்த கலைமானாவது உங்கள் ஆரோக்கியத்திற்கு உறுதுனையாய் இருக்கும்”.

நிகழ்ச்சியில் உரையாற்றிய தலைமை நீதியரசர் அறிவாய், ஆழமாய், பேசியது அவர் கடந்து முப்பது ஆண்டுகளாக கம்பனை காதலித்த விதம் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவரின் அத்தனை சொற்களும் வாழ்வின் வாலிபம் தாண்டி வாழ்க்கையின் வசந்தத்தை வரவேற்றுக்கொண்டுருப்பவர்களிடம் எளிதில் சேரக்கூடியவை?

அதனால் தான் என்னவோ கம்பனை காதலித்த ஒரு வருடத்திற்குள் திரு. சிவகுமார் முயற்சி இத்தனை எளிதில் அத்தனை தமிழர்களுக்கும் எளிமையாய் போய் சேர்ந்துள்ளது. கடல் தாண்டி கலங்கரை விளக்கமாய்.

நடிகராக வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் சொந்த வாழ்க்கை சோகத்தில் ஊடக வௌிச்சம் அதிகமாக படுவதற்குக்காரணமே அவர்களின் நடிப்பு நிஜ வாழ்க்கையிலும் இருந்து தொலைப்பதினால் தானே? கற்றுக்கொள்வதை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதால் தானே நாம் பார்த்துக்கொண்டுருக்கும் அத்தனை வளர்ச்சிகளும் வீழ்ச்சிகளும்?

மாற்றத்தை மட்டுமே எதிர்பார்த்து ஹிந்தி பாடல்களைப்போல் வேண்டும் என்ற போதுதான் இரட்டையராய் சிம்மசானம் போட்டு அமர்ந்தவர்களின் ராஜ்யத்தை சுருக்க முடிக்க முடிந்தது. அதனால் தான் ஒவ்வொருத்தரின் உள் மனத்தில் ஊறிக்கொண்டுருந்த மண்சார்ந்த வௌிப்பாடுகள் உற்சாகமாய் பீறிட்டது. இந்த உலகம் இசைக்கு இவர் மட்டும் தான் ஞானி என்று போற்றியது. அந்த ஞானியே விளங்க முடியாத விஞ்ஞானியாய் போனதால் விடிவௌ்ளியாய் முளைத்து உலகமெங்கும் “எல்லாப் புகழும் இறைவனுக்குகே ” என்று தமிழில் பறைசாற்றி தலைகுனிந்து தலைக்கனம் இல்லாததையும் வரவு வைத்துக்கொண்டது.

விதைத்த விதை வீணாகி விடுமா என்ன? முகவரி ... சி. சரவணன். வயது . 34

விதைத்த விதை வீணாகி விடுமா என்ன? முகவரி ... சி. சரவணன். வயது . 34

அக்மார்க் நாத்திகரான வாழ்க்கையில் வயோதிகத்தில் இருக்கும் திரு. கவிஞர் புவியரசு உச்சிமுகர்ந்து ஆசிர்வதித்தது, தமிழருவி மணியன் சங்கடத்துடன் சந்தோஷப்பட்டது, சாலமன் பாப்பையாவை “பின்னிட்டேய்யாாாாா……” என்று சொல்ல வைக்கக் காரணம் எளிமை என்பதை விட பாடல்களை உச்சரித்த விதம், உச்சரித்த வார்த்தைகள் உணர்வாய் சொன்ன விதம், உணர்ந்த உள்வாங்கிய விஷயங்களை நிகழ்கால நிகழ்வாய் நிகழ்த்திக் காட்டிய அற்புதம் என்று எல்லாமே ஏற்றத்துக்கான வழிகோலாய் அமைந்ததில் என்ன ஆச்சரியம்?

தான் நடத்திக்கொண்டுருக்கும் உள்நாட்டு வர்த்தக நிறுவனமான ராம ராஜ்யத்தின் (தலைமைக்கு தான் எத்தனை பொருத்தம்?) வாயிலாக வழங்கிக் கொண்டுருக்கும் வேஷடி சட்டையைப் போலவே மொத்த நிகழ்ச்சியின் நிகழ்வுகளுமே சமூக பங்களிப்பாகத்தான் இருந்தது. அதனால் தான் கவுண்ட ராமாயணமாக இல்லாமல் நிஜ கம்ப ராமாயணமாக இருந்தது (?) ஆனால் அவர் முகம் மட்டும் தான் அந்த குளிர் அரங்கில் கூட கருப்பாக இருந்தது.

உழைத்த உழைப்பு.

நடந்த நிகழ்ச்சி மொத்தமும் அவர் வாரிகளுக்கு அவரால் சேர்த்துக்கொண்டுருக்கும் புண்ணிய வரவு?

வாழ்க்கையில் உச்சத்தில் இருந்த போதும் இன்று அதன் மிச்சமாய் வாழ்ந்து கொண்டுருக்கும் போதும் கூட, பதின்ம வயதினரை கூட்டம், சங்கம் என்று அவர்களின் வாழ்க்கையை பரிதவிக்க விடாமல், சாராயக்கடையில் வேலை பார்த்துக்கொண்டே பழகிக்கொண்ட சுய ஒழுக்கத்தினால் பாதை மாறி போய்விடாமல், அரசியலில் இரு துருவமாய் இருந்து கொண்டுருப்பவர்களை தன்னுடைய திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு நா அடக்கத்துடன் வாழ்ந்து கொண்டுருக்கும் நாகரிக வாழ்க்கை பெற்றவரை, தான் சென்னையில் தங்கி படித்த காலத்தில் குளியல் சோப் கூட வாங்க முடியாத அந்த வறுமை சோகத்தை மறைக்க விரும்பாமல் கல்விக்கென்று கண்களுக்குத்தெரியாமல் நீண்டு கொண்டுருக்கும் வள்ளல் கைகளை பெற்றவர், பெற்றவர்களையும் பேணிக்காத்து வந்த பாதையை காட்டி வாழ்ந்து கொண்டுருப்பவரை, 67 வயதில் பெற்ற இளமை வாலிபம் கம்பனை காதலிக்கச் சொன்னது என்றால் 80 வயது ஆகும் போது புற நானூறு அக நானூறு என்று புகுந்து வருவாரோ?

திரு. சிவகுமார் அவர்களை பெருமைப்படுத்த தலைப்பில் சொன்ன வார்த்தையை விட வேறு எந்த வார்த்தையும் எனக்குத் தெரியவில்லை? வேறு எந்த வார்த்தைகள் பொருத்தமாய் இருக்கும்?

Advertisements

8 responses to “வாழும் மகாத்மா நடிகர் சிவகுமார் (இரண்டாவது காதல்)

 1. // கவுண்ட ராமாயணமாக இல்லாமல் நிஜ கம்ப ராமாயணமாக இருந்தது (?) //

  ம்… ம்….

 2. சிவக்குமாரின் தயாள குணத்துக்கு தலை வணங்குகிறேன்.

 3. Thanks Mr.Selvam

  Go to Moserbaer web and purchase on-line, if possible means?

  Jothig

 4. அன்பு சகோதரருக்கு. வணக்கம்.

  திருப்பூர் மண்ணின் மனத்தை அப்படியே வெப்பில் வார்த்தெடுக்கும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  நான் திரு. மாரிசெல்வம். பெங்களூரில் பணியாற்றி வருகிறேன்.

  உங்கள் பதிவில் திரு. சிவகுமார் கம்பராமாயணம் குறித்த சி.டி. கவர் படம் போட்டுருந்தீர்கள்?

  அந்த சி.டி. விற்பனையில் உள்ளதா?

  தாய் மனைவி மகள் சி.டி யும் தேவைப்படுகின்றது?

  அன்புடன்

  ஜி.மாரிச்செல்வம்.

  பெங்களூர்.

 5. சும்மா இருப்பவனையும் நீங்கள் கௌப்பி விட்டுருவீங்க போல?. உங்கள் அணிவகுப்பு வரிசை மாறியுள்ளதைப்பற்றி? ம்ஹம்…..வாயை திறக்க மாட்டேன். போதுங்களாண்ணா?

 6. கல்வி கொடுப்பதற்கு மேல் உயர்ந்த தர்மம் வேறு எதுவும் எல்லை, அறிவு கண்ணை திறப்பதற்கு கல்வியை விட மேல் வேறொன்றுமில்லை.

  அந்த விதத்தில் தமிழ் நாட்டை பொறுத்த வரை, ஆண்ட எல்லா முதல்வர்களுமே , கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆர், காமராஜ் …எல்லாருமே போற்ற தகுந்தவர்கள். பள்ளி கல்வியில் நம் தமிழ் நாட்டை போல் வேறு ஒரு மாநிலமும் இலக்கை அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

  நல்ல பதிவு, பதிவின் போக்கு சாடுவதில் இருந்து சற்று விலகி ..போற்றுகிறது. இது ..இது தான் வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s