வாழும் மகாத்மா நடிகர் சிவகுமார் ( முதல் காதல் )

சுய ஓழுக்கத்தால் வாழ்க்கையை காதலித்தவர்க்கு கம்பனை காதலிப்பது கடினமா என்ன?

சுய ஓழுக்கத்தால் வாழ்க்கையை காதலித்தவர்க்கு கம்பனை காதலிப்பது கடினமா என்ன?

திருப்பூரின் எல்லைப்புறத்தில் இருந்தது அந்த திருமண மண்டபம். ஒரு ஊர் விட்டு வேறொரு ஊருக்கு பயணிப்பது போல் மையப்பகுதி போக்குவரத்தில் ஊர்ந்து உள்ளே நுழைவதற்கு முன்பே சற்று பயமும் உடன் வந்து தொலைத்தது.

கடைக்கோடி கிராமத்தில் சராசரிக்கு கீழே வாழ்ந்துகொண்டுருப்பவர்கள் செய்யக்கூடிய மொத்தச் திருமணச் செலவு அந்த மண்டபத்திற்கு திருமண வைபோகத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செலுத்த முடிந்தவர்களால் உபயோகிக்கப்படும் மண்டபம்.

தாராபுரம் சாலையில் அதைக் கடந்து செல்லும் போதே அதன் பிரமாண்டமும் உள்ளேயிருந்த வசதிகளும் வியப்பையும் ஆச்சரியத்தையும் உருவாக்கும். இன்று உள்ளே அழைத்த போது சற்று தயக்கத்துடன் கால்கள் முன்னேறியது.

” கம்பன் என் காதலன் ” திருப்பூர் கம்பன் கழகத்தினரால் நடத்தப்படுவதாக சுவரொட்டிகள் கண்ட போது மூளை மனதிற்குள் வரவு வைத்துக்கொண்டது. ஆனாலும் ஊருக்குள் உள்ளே நடக்கும் எந்த இலக்கிய கூட்டங்களும்
முடியும் போது தனிப்பட்டவர்களின் முன்னிறுத்தல்கள் மட்டுமே மிஞ்சுவதால் தயக்கத்துடன் குறிப்பிட்டபடி நான்கு மணிக்கு பத்து நிமிடம் முன்னதாக நுழைந்த போது ஆச்சரியம் காத்துருந்தது?

முக்கிய அரங்கத்திற்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு பக்கத்து அரங்கினுள் நுழைய வைக்க ஆழியாறு மனவளக்கலை சங்க மக்கள் முயற்சிக்க ஏமாற்றத்துடன் போய் அமர அடுத்த அதிர்ச்சி காத்துருந்தது.

ஓலி ஓளியாக ஏற்கனவே பேசிய குறுந்தகட்டின் மூலமாக நிகழ்ச்சி நடத்தப்பட இருக்க வௌியேறி விடலாம் என்ற எண்ணம் மாறியது உள்ளே திரு. சிவகுமார் நுழைந்த நேரம். குறிப்பிட்டபடி சரியாக 4.00 மணி. ஓரு நிமிடம் முன்னதாகவே?

குளிரூட்டப்பட்ட அரங்கத்திற்கு இரு பக்கமும் இருந்த அரங்க வேறுபாடுகள் வேதனையளித்தாலும் வௌியேற முடியவில்லை. காரணம் வழி நடத்திக்கொண்டுருப்பர்களில் ஒருவராக இருப்பவர் நிஜத்தில் எப்படி நிகழ்ச்சியை நடத்தப்போகிறார்? என்ற ஆவல் அதிகரித்ததால் அமைதியாய் அமர்ந்துருந்தேன்.

கதர்ச்சட்டை கண்ணியவான்களுடன் கணவானாக திரு. சிவகுமார் உள்ளே வந்ததும் ஓலிநடா உயிர் பெற்று இருண்ட அரங்கம் என்னை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது.

தாய் மொழியை போற்றுதல் வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தாலும் போற்றத்தக்க எந்த விஷயங்களும் என்னுள் இல்லை. பள்ளி இறுதியில் வந்த தமிழாசிரியர்கள் திரு. அண்ணாமலை, திரு. மீனாட்சி சுந்தரம் (மீனவன்) இருவருமே தந்த தமிழ், தங்க தாம்பாளத்தில் கல்லூரியில் நுழைந்த போது சமஸ்கிருதம் வந்து உட்கார்ந்து கொண்டது. கல்லூரி முடிந்து வாழ்க்கை வந்து வழங்கி ஹிந்தி வந்து அமர ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு ஆங்கிலத்தை அசரவையில் அமர்த்திவிட்டு அவரவர்கள் அக்கடா என்று விலகிவிட்டார்கள்.

நானும் இதிகாசங்களை படித்தவன் தான். ஆனால் அத்தனையும் ஐந்து மற்றும் பத்து மதிப்பெண்கள் வாங்கும் கேள்விகளுக்குத் தான் பயனாய் இருந்தது. வகுப்புகள் கூடக்கூட அது கூட மறந்து ஆதரவு அற்ற இல்லத்தில் குடிபுகுந்தவனாய் ஆகிவிட்டது.

ஓளி ஓலி நாடா ஓடிக்கொண்டுருந்தது. கதாநாயக சகோதர்கள், சிறை பிடித்ததால் கலக்கமடைந்த கதாநாயகி, பன்ச் டயலாக் பேசாத வில்லன் என்று எல்லோரையும் நூறு பாடல்கள் மூலம் திரு. சிவகுமார் சொல்லி முடித்த போது பிரமிப்பாய் இருந்தது.

இரண்டு மணி நேர முடிவதற்குள் தொன்மை வரலாறு, வாழ்வியல் சம்பவங்கள், வாழ்க்கை சூத்திரங்கள், இடர்பாடுகளையும் இன்னல்களை எடுத்துக்கொள்ள வேண்டிய விதங்கள் போன்ற விகிதாசாரங்களை விளக்கவுரையாய் விளங்கும் உரையாய், நடைமுறை வாழ்க்கையாய் வாழ்ந்து காட்டிய திரு. சிவகுமார் ஒரு விளங்கிக்கொள்ள முடியாத புதிர் தான்.

வரலாறு என்று இங்கு வாசிக்கப்பட்டவைகள் எல்லாமே வாழ்ந்து முடித்தவர்களின் வானளாவ புகழ்ச்சியுரையாய் தான் இருந்து தொலைக்கின்றது. இதிகாசங்கள் என்றவைகள் எல்லாமே எச்சத்தின் மிச்சமாய் திரித்து கூறப்பட்டவைகளாகத்தான் முடிகின்றது.

இன்று ஆங்கில அறிஞர்களின் பொன்மொழிகள் வைத்து பிழைக்க வருவர்கள் அனைவருமே, அவர்களின் பார்வைக்கும், பாடங்களாக படித்து தொலைக்க வேண்டிய மாணவர்களுக்கும் இந்த இதிகாசங்கள் இன்னலாகத்தான் தெரிகின்றது.

எழுதிய நடை விளங்கிக்கொள்ள முடியாதது என்பதை விட அதன் விளக்கங்கள் அத்தனையும் விபரீதத்தை தான் வினாக்குறிகளாக விட்டுச் செல்கின்றது.

அதனால் தான் என்னவோ ஏன் இந்த வீர விளையாட்டு என்று அனைவருமே திருட்டு விசிடி பின்னால் போய்க்கொண்டுருக்கிறார்கள்.

பதிந்து வைத்துள்ள எத்தனையோ துறை சார்ந்த மின் அஞ்சல்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் வந்து விடுதலை பெருமகன் ஒளி ஓவியா மின் அஞ்சல் வாசித்த போது விபரிதமாய் இருந்தது.

நாலைந்து தலைப்புகளில் ஒன்று.

……………….. பார்த்தால் இங்கே வாடா விலைமகள் பெற்ற மகனே? எழுதுவதற்குக்கூட தயங்கும் வார்த்தைகள் தலைப்பாய் வைத்து சேவை செய்துகொண்டுருக்கிறார்.

தன்னை, தன் சொத்துக்களை, கருத்துக்களையே தானமாக தந்தவர் தந்தை பெரியார். மூடம் மட்டுமே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டுருந்தவர்களை விடுதலை பெற வைப்பதற்காக தொடங்கிய காலத்தில் வந்த வார்த்தைகள் இன்று தேவையா? எந்த வசதிகளும் எட்டிப்பார்க்காமல், எல்லாவற்றுக்கும் இறைவன் மட்டுமே என்று தன் அன்றாட கடமையைக் கூட கவனிக்காமல் இருந்த கூட்டத்தை வைத்து பிழைத்துக்கொண்டுருந்த கூட்டத்தை விரட்ட அவர் எடுத்த ஆயுதங்கள் அனைத்தும் இன்று தனி மனித ஏகபோகமாக்கி திசை திரும்பி கூர் முனை மழுங்கி கத்தியாய் இருக்கின்றது.

வசதிகள் கூடியுள்ளது. வாழ்க்கைத் தரம் ஓரளவுக்கேனும் உயர்ந்துள்ளது. சிந்தனைகள் மாறியுள்ளது. சிறகுகள் கூட முளைத்துள்ளது.

மூடத்தை அழிக்கின்றோம் என்று மூர்க்கத்தை வளர்ப்பதால் இந்த சமூகம் எதைப்பெறுகின்றது? வருட வருடம் பழனி பாதயாத்திரையும், சரணம் ஐயப்பா என்ற கோஷமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

எங்கே போச்சு உங்கள் விடுதலைக்கான வேட்கை. இது வரை என்ன சாதித்துள்ளீர்கள்? எதைத்தான் சாதிப்பீர்கள்?

அவர்களின் பொறியல் கல்லூரியில் படிக்கும் அக்கா மகளிடம் கேட்டேன்.

“மாமா அவர்கள் தௌிவாக இருக்கிறார்கள்? கொள்கை வேறு. தொழில் வேறு? “. சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

சமீப ஊர் பயணத்தில் அதிசமாய் ரெங்கராஜனை சந்திக்க முடிந்தது. பள்ளி இறுதி வரையில் எங்கள் மூவர் கூட்டணிக்குப் பின்னால் உள்ள வரிசை நாற்காலியில் அமர்ந்து கொண்டு அடுத்தவர்களை காலால் நோண்டிக்கொண்டுருக்கும் “நோண்டி” ரெங்கராஜன்.

வயதுக்கு மீறிய வழுக்கை. மொத்தத்தில் வயோதிக தோற்றம்.

அவனின் தளர்ந்த வார்த்தைகள் என்னை தடுமாற வைத்தது.

“இல்ல மாப்ள. முடியலடா? உன்ன மாதிரியே மூனுமே பொட்டப் புள்ளைங்க. அப்பா இருந்தவரையில் கோயில் வருமானம் போதுமானதாய் இருந்தது. இப்ப அரசாங்கம் எடுத்துக்கொண்டதால் பாதி நேரம் பிரசாதம் தான் உணவாக இருக்கிறது. வர்ற வருமானத்தில் படிக்க வைக்க முடியாமல் பாதி நேரம் சாவு வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் போய்க்கொண்டுருக்கிறேன். நீங்க மூன்று பேருமே படிச்சீங்க. நான் படிக்கிறதை தவிர அத்தனையும் செய்தேன். என்ன செய்றது?”

அவனுடைய எல்லா முயற்சிகளுக்கும் அவனின் முற்பட்ட ஜாதியே தடையாய் போக சாவை எதிர்பார்த்து சங்கடமாய் வாழ்ந்து கொண்டுருக்கின்றான். விளங்க முடியா அவன் வாழ்க்கை எனக்கு விரக்தியைத்தான் பரிசாகத் தந்தது?

அனைவருமே நடந்து வந்த சமூக வாழ்க்கையில் பெற்றவைகள் லட்சங்கள் என்றால் இழந்தவைகள் கோடிக்கு அதிகமானவைகள். அதனால் தனி மனிதர்கள் இன்று தெருக் கோடிக்கு வந்து தொலைந்து போய்க்கொண்டுருக்கிறோம்?

காதல் தொடரும்,,,,,……????

Advertisements

8 responses to “வாழும் மகாத்மா நடிகர் சிவகுமார் ( முதல் காதல் )

 1. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

 2. நீங்கள் சொன்ன அறிவுரை உண்மை தான்.

  எனக்கே சற்று வருத்தமாக இருக்கத் தான் செய்கின்றது. தேவியர்கள் வளரும் போது நிச்சயம் ரௌத்ரத்தை திருத்தி நிறுத்தி விடுவார்கள்?

  மேலும் நான் நடிகர் சிவகுமாரின் ரசிகன் இல்லை. அவர் படங்கள் கூட அதிகம் பார்த்தது இல்லை. சிந்து பைரவி பார்த்தது தான் அதிக நினைவில் உள்ளது.

  ஆனால் அவர் கொங்கு மண்டல பள்ளிகளில் எந்த விளம்பரமும் எவர் கண்களுக்கும் தெரியாமல் செய்து கொண்டுருக்கும் சேவைகள் நண்பர்கள் வட்டாரத்தின் மூலமாக தெரிய வந்த போதும் மற்ற அவரால் முடிந்த சமூக பங்களிப்புகளும்,

  வேறு சில தனிப்பட்ட அவரின் சிறப்பான விஷயங்கள் தான் என்னை அங்கு உந்து தள்ளியது?

  கடைசியாக உங்களின் கேள்விக்கும் திரு. வெயிலான் கேள்விக்கும் இரண்டாவது காதலில் பதில் உள்ளது?

 3. செய்திகளில் இதை பற்றி படித்தேன், தாய் மொழி கல்வி எவ்வளவு அவசியம் என்று ( சிவகுமார்) பேசியதாக செய்திகளில் வந்தது…உங்களுக்கென்ன, கம்பன் மணி மண்டபம், விழா , போட்டி , …அந்த ஊர்லேந்து வர்றீங்க, உங்களால் ரசிக்க முடியும். நன்றாக எழுதி இருக்கிறீர்கள்…. ரொவ்த்ரம் பழகு, ஆனால் வெளியில் காண்பிக்காதே !!!!

 4. Pingback: வாழும் மகாத்மா நடிகர் சிவகுமார் ( முதல் காதல் ) ஆகஸ்ட்3, 2009 | Seidhivalaiyam

 5. நீங்கள் சொல்வதில் பாதி உண்மையிருந்தாலும், உண்மையிலேயே நீங்கள் தவற விட்டு விட்டீர்கள். உங்கள் உண்மையான குணத்தை நீங்கள் எழுதும் பதில் பின்னுட்டத்தை வைத்து தான் இதை சொல்கிறேன்?

 6. கவுண்ட ராமாயணம் கேட்க போனீங்களா? நான் ஊருக்குப் போயிட்டேன்.

  பாவம்! நண்பர் 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s